உனக்கு வாயில சனி! செல்லூர் ராஜூவை டோஸ்விட்ட எடப்பாடி!

see

துரையைப் பொறுத்தவரை பரபரப்புக்கும், நகைச்சுவைக்கும் பஞ்சமில்லாத பெயர் செல்லூர் ராஜூ! கடந்த 2017ஆம் ஆண்டில், 10 லட்ச ரூபாய் செலவில் தெர்மாகூல் அட்டைகளை லாரிலாரியாக எடுத்துவந்து வைகை அணையில் மிதக்கவிட்டு, தண்ணீர் வெப்பமாகாமல் தடுக்கப்போவதாகக்கூறி விஞ்ஞானியைப்போல் சீரியஸ் காமெடி செய்திருந்தார். 2024ஆம் ஆண்டில் அவருக்கெதிராக எடப்பாடியிடம் புகாரளித்த கட்சி நிர்வாகியை, "தொலைச்சுப்புடுவேன் நாயே! எனக்கு எதிராகவா புகார் கொடுக்கிற?'' என போனில் மிரட்டியது பெரும் வைரலாகியது.

தற்போது, "எல்லையில் ராணுவ வீரர்கள் என்ன சண்டையிட்டார்கள்? அதிநவீன கருவிகளை பிரதமர் மோடி வாங்கிக் கொடுத்திருக்கிறார். ராஜ்நாத், அமித்ஷா ஆகியோர் தான் எதிரிகளை எப்படித் தாக்குவது எனச் சொன்னார்கள். எனவே பாராட்ட வேண்டியது பிரதமரைத்தான். ஆனால் மோடியை பாராட்டாமல், ஆளும் கட்சியினர் ராணுவ வீரர்களுக்காக பேரணி போவதா?'' என்று கிண்டலடிக்க, அது இராணுவத்தினர் மத்த

துரையைப் பொறுத்தவரை பரபரப்புக்கும், நகைச்சுவைக்கும் பஞ்சமில்லாத பெயர் செல்லூர் ராஜூ! கடந்த 2017ஆம் ஆண்டில், 10 லட்ச ரூபாய் செலவில் தெர்மாகூல் அட்டைகளை லாரிலாரியாக எடுத்துவந்து வைகை அணையில் மிதக்கவிட்டு, தண்ணீர் வெப்பமாகாமல் தடுக்கப்போவதாகக்கூறி விஞ்ஞானியைப்போல் சீரியஸ் காமெடி செய்திருந்தார். 2024ஆம் ஆண்டில் அவருக்கெதிராக எடப்பாடியிடம் புகாரளித்த கட்சி நிர்வாகியை, "தொலைச்சுப்புடுவேன் நாயே! எனக்கு எதிராகவா புகார் கொடுக்கிற?'' என போனில் மிரட்டியது பெரும் வைரலாகியது.

தற்போது, "எல்லையில் ராணுவ வீரர்கள் என்ன சண்டையிட்டார்கள்? அதிநவீன கருவிகளை பிரதமர் மோடி வாங்கிக் கொடுத்திருக்கிறார். ராஜ்நாத், அமித்ஷா ஆகியோர் தான் எதிரிகளை எப்படித் தாக்குவது எனச் சொன்னார்கள். எனவே பாராட்ட வேண்டியது பிரதமரைத்தான். ஆனால் மோடியை பாராட்டாமல், ஆளும் கட்சியினர் ராணுவ வீரர்களுக்காக பேரணி போவதா?'' என்று கிண்டலடிக்க, அது இராணுவத்தினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ss

அவரைச் சுற்றியுள்ள நிர்வாகிகள் சிலர் கூறுகையில், "செல்லூர் ராஜூ தன்னைச் சுற்றியுள்ள கட்சிகாரர்களிடம் 'ஏம்பா நான் எது பேசினாலும் தப்பா போயிடுது? எப்படியிருந்த நான் இப்படி ஆகிட்டேன்!'' என்றவர், திடீரென யாருக்கும் தெரியாம முன்னாள் அமைச்சர் உதயகுமார் வீட்டிற்கு காலையில் 7 மணிக்கெல்லாம் போய் சந்தித்திருக்கிறார்'' என்றனர். அங்கு என்ன நடந்ததென்று சோர்ஸ் மூலமாக விசாரித்தோம். அவரோ உதயகுமாரிடம், "எனக்கு மனசே சரியில்லப்பா. தேர்தல் வேலையை வேற முடுக்கிவிடச் சொல்றார் எடப்பாடியார். எனக்கென்னமோ மீண்டும் என் தொகுதியில் நின்று ஜெயிப் பேனான்னு தெரியல. மூர்த்தி வேற என் தொகுதியில வேலையை தொடங்கி யிருக்கார்பா. பேசாம இந்த முறை தொகுதி மாறிடலாமான்னு இருக்கேன். தெற்கு அல்லது வடக்கு கேட்கலாமுன்னு இருக்கேன். நீதான் எடப்பாடி அண்ணனிடம் சிபாரிசு பண்ணனும்பா" எனக் கெஞ்ச, உதயகுமாரோ "அண்ணே சொல்றேனேன்னு கோவிச்சுக் காதீங்க. இப்ப இருக்கிற நிலைமையில எதையாவது கேட்டுவைக்காதீங்க. உங்க மேல எடப்பாடிக்கு நல்ல அபிப்ராயம் இல்ல. ஏண்ணே, கடந்த 25 வருடமா அ.தி.மு.க.வின் நகர் மாவட்ட செய லாளராக இருக்கீங்க. இரண்டுமுறை அமைச்சரா இருந்திருக்கீங்க. 3 முறை எம்.எல்.ஏ. நீங்க போய் மூர்த்திக்கு பயந்து வேறு தொகுதி கேக்கிறத விடக் கேவலம் எதுவுமில்லை. போய் தொகுதி வேலை யை முடுக்கிவிடுங் கண்ணே. தைரிய மாக இருங்க'' என்று சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு தன் சகாக்களிடம், "இது தான் நேரம்ங்கறது. ஒரு காலத்தில் நான் மாணவரணியில் இருக்கும்போது இவர் வீட்டிற்கு போனால், "உன்னை யாரு வீட்டிற்கு வரச் சொன்னது? அலுவலகத்திற்கு வாப்பா' என்று திருப்பியனுப்புவார். இப்ப காலங்காத் தால வீடு தேடி வந்திருக்கார்! இதான் வாழ்க்கை ஒரு வட்டம்ங்கறது!'' என்று கமெண்ட் அடித்திருக்கிறார்.

செல்லூர் ராஜூ கூடவே பயணித்தாலும் இதுவரை எந்தவிதப் பயனும் அனுபவிக்காத விரக்தியிலிருக்கும் ர.ர.க்களை சந்தித்தோம்.

அவர்கள் கூறுகையில், "உதயகுமார் சொல்லியும் கேட்காமல் எடப்பாடியிடமே செல்லூர் ராஜூ, 'நான் தொகுதி மாறலாம்னு இருக்கேன், அங்க வேலை பார்க்கட்டுமா?' என்று கேட்க, எடப்பாடியோ, "இது உனக்கே கேவலமா இல்லை? மதுரையில போனமுறை அவ்வளவு எதிர்ப்புக்கிடையேயும் ஜெயிச்சிருக்கோம். போய் உன் தொகுதியில் வேலையை பாரு. உனக்கு வாய்ல தான்பா சனி'' என்று செல்லூர் ராஜூவின் டயலாக்கையே அவரிடம் ரிபீட் செய்து டோஸ்விட, இப்ப தொகுதியில் நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி பணத்தை வெளியே எடுத்திருக்கிறார் ராஜூ.

ss

இவர் தன்கூட இருந்த யாருக்குமே இதுவரை ஒன்றுமே செய்யவில்லை. கூவத்தூர் பிரச்சனையில் நிறைய பணத்தை போட்டுவிட்டார். இதில் தெற்கு தொகுதி முன்னால் எம்.எல்.ஏ. சரவணன், சோழவந்தான் மாணிக்கம், அவரோடு இருந்த பகுதி செயலாளர் கள், வட்ட செயலாளர்கள் அனைவரும் இப்ப உதயகுமார் பக்கம்.

இவர் அமைச்சராக இருக்கும்போதே சசிகலாவை சின்னம்மா என்று மரியாதையாக ஒவ்வொரு பேட்டியிலும் சொன்னது எடப்பாடிக்கு பிடிக்கவில்லை. அதை திண்டுக்கல் சீனிவாசனை விட்டு அப்போதே எச்சரித்திருக்கிறார். இப்போது டாக்டர் சரவணன் எங்க கட்சிக்கு வந்தபிறகு நிர்வாகிகள் அவரைப் பார்க்கச் செல்ல, அதனால் கோபமான செல்லூர் ராஜூ, நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கெதிராக வேலை பார்க்க, அது எடப்பாடிவரை ஆதாரத்தோடு செல்ல, அதிலும் எடப்பாடியிடம் கெட்ட பெயர்.

வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில், மதுரையிலிருக்கும் 10 தொகுதிகளில் எட்டை மட்டும் வைத்துக்கொண்டு இரண்டு தொகுதிகளை கூட்டணிக்கு விட்டுவிடப் பேச்சு அடிபடுகிறது.

மதுரை மேற்கை மீண்டும் செல்லூர் ராஜூவுக்கு கொடுத்து தோற்கடிப்பதுதான் அவரோடிருக்கும் கட்சி நிர்வாகிகளின் ஆசை! இதனால் ஆடிப்போன செல்லூரார், அவர் தொகுதியிலுள்ள வட்டச் செயலாளர்கள், பகுதிச் செயலாளர்களின் வீட்டிற்கே சென்று சந்தித்து அவர்களை சமாதானப்படுத்தியிருக்கிறாராம். இருந்தாலும் அவருக்கு ஆப்பு வைக்கக் காத்திருக்கிறார்கள்'' என்றார்கள்.

nkn210525
இதையும் படியுங்கள்
Subscribe