நவீன மருத்துவத்தின் வளர்ச்சிக்குப் பிறகு கொள்ளை நோய்களை வெற்றிகொண்ட மனிதன் நீண்ட நாட்களாக தன் கையே ஓங்கியிருக்கும்படி வைத்திருந்தான். கொரோனா கொள்ளை நோயின் கை ஓங்க, மனிதனின் கை தற்காலிகமாகப் பின்தங்கியிருக்கிறது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் மட்டும் மரண எண்ணிக்கை மூன்று லட்சத்துக்கு நெருக்கமாகச் சென்றுகொண்டிருக்கிறது. தமிழகமும் தன் பங்காக 18,000 பேரை பலிகொடுத்துள்ளது.
இந்திய அளவில் கொரோனா பலி எண்ணிக்கையில் தமிழகம் நான்காவது இடத்தில் இருக்கிறது. சென்னையில் சமீபமாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் அதிக அளவில் தென்படுகின்றன. கொரோனா பலி மட்டுமின்றி மற்ற காரணங்களுக்காக இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது. இது ஏன் என களப்பணியைத் தொடங்கியது நக்கீரன்.
சென்னை திருவொற்றியூர் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ் டர்களில் குறிப

சென்னை திருவொற்றியூர் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ் டர்களில் குறிப்பிட்டிருக்கும் முகவரி மற்றும் இறுதிச் சடங்கு நடக்கும் நேரத்தைக் குறித்துக்கொண்டு நேரில் சென்றால், அப்படி எந்த ஒரு இறுதிச் சடங்கும் நடக்கவில்லை.
அதே தெருவில் வசிக்கும் கிரி என்பவரிடம், “"இங்கு ஏன் இறுதிச் சடங்கு நடக்கவில்லை?'’என்று கேட்டதற்கு, "கொரோனா பாடியெல்லாம் வீட்டுக்குத் தரமாட்டாங்க''’என்று கூறினார். "பிறகு ஏன் இறுதிச் சடங்கு நடப்பதுபோல போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது' என்று கேட்டதற்கு, "கொரோனா டெத் என்று சொன்னால் எல்லோரும் ஒதுக்கிவிடுவார்கள். அதனால்தான் சாதாரண இறப்பு போன்று காட்டுவதற்கு போஸ்டர்கள் ஒட்டியுள்ளார்கள். இது வழக்கமாக நடப்பதுதான்'' என்று கூறினார்.
போஸ்டர் முகவரிகளைப் பார்த்து நாம் விசிட் அடித்த 7 வீடுகளில் 3 வீடுகள் கொரோனா இறப்பாக இருந்தது, அதிர்ச்சியளித்தது. இதுகுறித்து இறுதிச்சடங்கிற்கு குளிர்சாதனப் பெட்டிகளை வாடகைக்கு விடும் நபரிடம் கேட்டபோது, “"கொரோனா இல்லாத காலகட்டத்தில் ஒரு நாளைக்கு சுமார் 10 முதல் 12 பிணங்கள் வந்தன. ஆனால் தற்போது 25 பிணங்களுக்கு மேல் பெட்டியை வாடகைக்கு விடுகிறோம். இதில் வேதனை என்னவென்றால், கடைசியாக ஒரு அம்மா கொரோனா வார்டிலிருந்து உயிரிழந்தார். அவருக்கு நெகடிவ் என்று வந்துவிட்டதால் உடலை வீட்டுக்குக் கொடுத்தாங்க. நாங்களும் குளிர்சாதனப் பெட்டியைக் கொடுத்தோம். ஆனால் அவரது கணவர், மகன், இரு மகள்கள் என அனைவருக்கும் கொரோனா பாசிட்டிவ் என்பதை எங்களிடம் சொல்லவேயில்லை. அவங்க உறவினர்கள் அனைவருக்கும் கொரோனா இருந்துள்ளது. அந்த இறுதிச்சடங்கில் சுமார் 60 பேருக்குமேல் இருந்தார்கள். அதில் கலந்துகொண்ட அனைவருக்கும் கொரோனா பரவ அதிக வாய்ப்பு இருக்கிறது. பாடியை எடுக்கும்போதுதான் சொல்றாங்க என்னசெய்வது என்றே எங்களுக்கு தெரியவில்லை. எங்களுக்கும் குடும்பம் குட்டி எல்லாம் இருக்கிறது என்பது இவர்களுக்குத் தெரியாதா?''” என வேதனையாகக் கூறினார்.
ஊரடங்கு காலத்தில் போஸ்டர் டிசைனிங் மற்றும் அச்சிடும் கடைகள் மட்டும் எப்படி செயல்படுகின்றன என்று கிரா பிக்ஸ் டிசைனிங் கடை வைத்திருக்கும் கௌசிகன் என்பவரிடம் விசாரித்தபோது, “"நாங்கள் எல்லாம் சின்னக்கடை வைத்துள்ள வர்கள். அதனால் எங்களால் கடைகளைத் திறக்க முடியவில்லை. சென்னை முழுக்க கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்துதான் விநியோகம் செய்யப் படுகிறது. இன்று ஒருவர் இறக்கிறார் என்றால் அவருக்கு கண்ணீர்அஞ்சலி போஸ்டர் இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் ஒட்டப்படுகிறது..
கொரோனோவின் தாக்கத்தால் சாதாரண இறுதி நிகழ்வு களில்கூட மக்கள் அதிகளவில் கலந்துகொள்வதில்லை. அப்படி யிருக்க, கொரோனா நிகழ்வில் மட்டும் எப்படி மக்கள் கலந்துகொள்வார்கள்? ஆனால் இறப்பு செய்தியை தெரிவிக்க வேண்டுமே! அதனால், இப்பகுதியைச் சேர்ந்த இன்னார் இறந்தார் என்கிற கண்ணீர் அஞ்சலி போஸ்டர் மூலமாகத்தான் உறவினர்களே தெரிந்து கொள் கிறார்கள்''’என்று கூறினார்.
ஆதரவற்ற பிணங்களை அடக்கம் செய்யும் உறவுகள் டிரஸ்ட் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் நிறு வனர் காலித் அஹமத் என்ப வரிடம் விசாரித்தபோது, "நாங் கள் வழக்கமான நாட்களில் ஒரு நாளைக்கு 20 பிணங்கள்வரை அடக்கம் செய்வோம். தற்போது 40 பிணங்களுக்கு மேல் அடக்கம் செய்துவரு கிறோம். அதில் கொரோனா பிணங் களும் அடங்கும். எங்களிடம் 4 வாகனங்கள் உள்ளன. அந்த வாகனங்கள் 24 மணிநேரமும் ஓடிக்கொண்டேயிருக்கின்றன. பொதுவாக மருத்துவமனைகளில் கொரோனாவுக்காக அனுமதிக் கப்படுபவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை முடிந்தபிறகு சாதாரண வார்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அப்படி சாதாரண வார்டுக்கு அனுப்பப் படும் நோயாளிகளில் 50 பேரில் 7 நபர்களுக்குமேல் இறக்கிறார் கள். அப்படி இறப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தால் நெகடிவ் என்று வரும். அதனால் அந்த உடல் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த வகையிலும் தற்போது கொரோ னா கேட்டகிரியில் வராத இறப்புகள் வீதம் அதிகரிக் கிறது''’என்றார்.