Advertisment

யோக்கியன் வர்றான்... சொம்ப எடுத்து உள்ள வை! அரவக்குறிச்சி 'ஆடு' ஆதாயக் கதை!

ss

ssதிண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் அருகே அமரபூண்டி -புளியம்பட்டி கிராமத்தில், சமீபத்தில் அண்ணாமலையார் சேம்பர் என்ற பெயரில் ஒரு செங்கல் சேம்பர் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. 2022-ல் நிலம் வாங்கப்பட்டு சுடச்சுட வேலைகள் நடந்து விற்பனையைத் தொடங்கியுள்ள இந்தச் செங்கல் சூளையைப் பற்றியும் அதன் உரிமையாளர் குறித்தும் நமது காதில் சில விறுவிறுப்பான தகவல்கள் விழுந்தன.

Advertisment

2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்டுக்குட்டி புகழ், இன் றைய பா.ஜ.க. மாநிலத் தலைவர், அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிட்டு, தி.மு.க.வின் ஆர்.இளங்கோவிடம் கிட்டத் தட்ட 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

Advertisment

அன்றைக்கு தேர்தலில் அரவக் குறிச்சி தொகுதியில் அவரை நிறுத்திய பா.ஜ.க., அவரை

ssதிண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் அருகே அமரபூண்டி -புளியம்பட்டி கிராமத்தில், சமீபத்தில் அண்ணாமலையார் சேம்பர் என்ற பெயரில் ஒரு செங்கல் சேம்பர் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. 2022-ல் நிலம் வாங்கப்பட்டு சுடச்சுட வேலைகள் நடந்து விற்பனையைத் தொடங்கியுள்ள இந்தச் செங்கல் சூளையைப் பற்றியும் அதன் உரிமையாளர் குறித்தும் நமது காதில் சில விறுவிறுப்பான தகவல்கள் விழுந்தன.

Advertisment

2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்டுக்குட்டி புகழ், இன் றைய பா.ஜ.க. மாநிலத் தலைவர், அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிட்டு, தி.மு.க.வின் ஆர்.இளங்கோவிடம் கிட்டத் தட்ட 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

Advertisment

அன்றைக்கு தேர்தலில் அரவக் குறிச்சி தொகுதியில் அவரை நிறுத்திய பா.ஜ.க., அவரை வெற்றிபெற வைக்க வேண்டியது அ.தி.மு.க.வின் பொறுப்பு என பா.ஜ.க. வின் டெல்லி தலைமை மூலம் அன்பாக வேண்டு கோள் வைத்ததால் அர வக்குறிச்சி மீது தீவிர கவனம் செலுத்தப்பட் டது. அ.தி.மு.க. அந்தத் தேர்தலில் அந்த ஸ்பெஷல் வேட்பாளருக்கு மட்டும் கிட்டத்தட்ட 15 கோடி வரை செலவிட்டது. பிரச்சாரத்திலும் அத்தொகுதி மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டது.

அ.தி.மு.க.வின் பணத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், ஆட்டின் குருவானவரும் அன்றைய பா.ஜ.க. தேசியச் செயலாளருமான பி.எல். சந்தோஷும் தேர்தல் பணிக்கென கர்நாடகத்திலிருந்து கணிசமான ஆட்களை இறக்கியதோடு, நிறைய நிதி ஆதாரங்களையும் ஏற்பாடு செய்து சிஷ்யனுக்கு துணை நின்றதாக செய்தி நம் காதுகளில் விழுந்தது.

அ.தி.மு.க. பணமே ஆறாக ஓடியதால், கர்நாடகத்திலிருந்து வந்துசேர்ந்த பணத்தை எதற்கு வீணாகச் செலவழிக்கவேண்டு மென யோசித்த ஆடு கம் அரசியல்வாதி, அதில் கணிசமான தொகையை மிச்சம்பிடித்து தன் பையை நிறைத்துக்கொண்டார். இத்தனைக்குப் பிறகும் தொகுதி மக்கள் அந்த வேட்பாளருக்கு "அரோகரா' பாடிவிட்டனர்.

தேர்தல் இழப்பில் முடிந்தாலும், தேர் தலில் நிற்பதைக் காரணம் காட்டிச் சேர்த்த பணம் ஆதாயமானது. பணம் சும்மாயிருந்தால் எப்படி லாபம் கிடைக்கும்?

ss

கரூரில் குவாரிகள் நடத்திவரும் சிவக்குமாரிடம் அந்தத் தொகையை கொடுத்து அதை உரிய வழியில் முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார் அந்த ஆபீசர். இந்த சிவக்குமார், வேறு யாருமல்ல… "ஆடு'மலையின் தங்கையின் கணவர். சிவக்குமார், தனது நட்பு வட்டத் திலுள்ள திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி பகுதியில் பைனான்ஸ் தொழில் நடத்திவரும் செந்தில் குமாரிடம் கலந்தாலோசித்ததில், செங்கல் சேம்பர் நடத்தலாம் அதில் நல்ல சில்லறை என ஆலோசனை சொல்லியிருக்கிறார்.

உரிய காதுகளில் யோசனையைச் சொல்லி, திட்டத்தை உறுதிப்படுத்திக்கொண்ட நிலையில் 2022-ல் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே புளியம்பட்டி, அமரபூண்டி பகுதியில் விரைவாக 24 ஏக்கர் நிலம் (சர்வே நம்பர் 169/இ, 20/1ஆ2, 20/1இ2 மற்றும் 168) வாங்கப்பட்டு மின்னல் வேகத்தில் செங்கல் சூளைக்கான பூர்வாங்க வேலைகள் தொடங்கின.

கோடிகளை விழுங்கி, செங்கல் சூளை, சூளைப் பணிகளின் நீர்த்தேவையை நிவர்த்திசெய்ய உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, மின்னிணைப்பு, அலுவலக அறை, பணியாளர் தங்குமிட வசதியுடன் செங்கல் சூளை விரைந்து கட்டியெழுப்பப்பட்டது.

ss

செங்கல் சூளைக்கான மண் தேவையை நிவர்த்தி செய்ய, மணல் கரிகாலனை அணுகிய ஆடு, ஒரு அதிகாரம் கலந்த கோரிக்கையை முன்வைக்கிறார். எவருக்கும் கிடைக்காத குறைந்த விலையில் 10 லட்சம் யூனிட் மண் தரவேண்டும் என்பதுதான் அவரிடம் அழுத்தம் தரப்பட்ட கோரிக்கையாம்.

தற்சமயம் சேம்பர் பணிகள் நிறைவுபெற்று விற்பனையும் தொடங்கியாகிவிட்டது. சேம்பருக்கான பணியாட்கள் பெரிதும் கரூரிலிருந்து பணி யமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

கட்சிப் பொறுப்பைத் தவிர எந்தப் பதவியிலும் அமராத போதே கோடிக்கணக்கான ரூபாய் செலவில் மச்சான் பெயரில் செங்கல் சூளை சொந்தமாகிவிட்டது. நாளை பொறுப்பில் அமர்ந்தால் ஆட்டுக்கு என்னவெல்லாம் சொந்தமாகுமோ என ஏக்கப் பெருமூச்சு விட்டபடி. "யோக்கியன் வர்றான், சொம்பத் தூக்கி உள்ள வை' என புளியம்பட்டி ரகசியம் தெரிந்தவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

-சூர்யன்

nkn170424
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe