மோடி மீண்டும் பிரதமராகியுள்ள நிலையில்... பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தில் நான்கு நாட்களுக்குள் நான்கு பத்திரிகையாளர்கள் மீது கைது நடவடிக்கையும் தாக்குதலும் நடத்தப்பட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
சாமியார் யோகி ஆதித்யநாத் உ.பி. முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்தே ஜனநாயக நடைமுறைக்கு பொருந்தாத அரசு உத்தரவுகள் அதிகரிக்கத் தொடங்கின.
ஜூன் 8-ஆம் தேதி "நேஷன் லைவ்' என்ற செய்தி சேனல் ஒரு பெண்ணின் பேட்டியை ஒளிபரப்பியது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் வீடியோ கால் செய்து பேசியதாகவும், அப்போது அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக அவரிடம் கூறியதாகவும் அந்தப் பெண் தெரிவித்திருந்தார். இந்தப் பேட்டி முதல்வர் ஆதித்யநாத்தின் இமேஜை சிதைப்பத
மோடி மீண்டும் பிரதமராகியுள்ள நிலையில்... பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தில் நான்கு நாட்களுக்குள் நான்கு பத்திரிகையாளர்கள் மீது கைது நடவடிக்கையும் தாக்குதலும் நடத்தப்பட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
சாமியார் யோகி ஆதித்யநாத் உ.பி. முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்தே ஜனநாயக நடைமுறைக்கு பொருந்தாத அரசு உத்தரவுகள் அதிகரிக்கத் தொடங்கின.
ஜூன் 8-ஆம் தேதி "நேஷன் லைவ்' என்ற செய்தி சேனல் ஒரு பெண்ணின் பேட்டியை ஒளிபரப்பியது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் வீடியோ கால் செய்து பேசியதாகவும், அப்போது அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக அவரிடம் கூறியதாகவும் அந்தப் பெண் தெரிவித்திருந்தார். இந்தப் பேட்டி முதல்வர் ஆதித்யநாத்தின் இமேஜை சிதைப்பதாகக் கூறி, நொய்டா போலீஸ் அதிகாரி தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவுசெய்து, சேனல் உரிமையாளர் இஷிதா சிங்கையும், ஆசிரியர்களில் ஒருவரான அனுஜ் சுக்லாவையும் கைது செய்தார். அதுமட்டுமின்றி, இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்து பதிவிட்டதாக டெல்லியைச் சேர்ந்த பிரசாந்த் கனோஜியாவையும் போலீஸார் கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்ட விவரத்தை அவருடைய மனைவியிடம்கூட தெரிவிக்கவில்லை. அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதையும் கூறவில்லை.
அதையடுத்து, தனது கணவர் எங்கிருக்கிறார் என்று கேட்டு, பிரசாந்தின் மனைவி ஜகிஷா அரோரா உச்சநீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவை தாக்கல் செய்தார்.
இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் இந்தச் சம்பவத்தை வன்மையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டது. “""பாதிக்கப்பட்டவரின் புகார் இல்லாமல், போலீஸாரே வழக்குப் பதிவு செய்து, நேஷன் லைவ் உரிமையாளர் உள்ளிட்ட மூவரை கைது செய்திருக்கிறார்கள். இது சட்டத்துக்கு புறம்பானது. செய்தி தவறு என்றால் சம்பந்தப்பட்டவர் மீது அவதூறு வழக்குத் தொடருவதே சரியாகும். அதைவிடுத்து கைது செய்வது மீடியாவை அச்சுறுத்தும் நடவடிக்கையாகும்''’என்று அதில் கூறப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் தனது ட்வீட்டில், “"எனக்கு எதிராக பா.ஜ.க. ஆதரவு மீடியாக்கள் வெளியிடும் அவதூறுகளுக்கு நடவடிக்கை மேற்கொள்ள நினைத்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஊழியர் பற்றாக்குறையில் திண்டாட வேண்டியிருக்கும். உ.பி. முதல்வரின் நடவடிக்கை முட்டாள்தனமானது'’என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ஜூன் 12-ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி என்ற இடத்தில் பயணிகள் ரயில் தடம்புரண்டது. இதுகுறித்து செய்தியை சேகரிக்க சென்ற "நியூஸ் 24' செய்தியாளரை ரயில்வே போலீஸ் குழு சரமாரியாக தாக்கி, அவருடைய கேமராவை உடைத்திருக்கிறது. பின்னர் ஒரு இடத்தில் அடைத்துவைத்து, உடைகளைக் களைந்து அடித்து உதைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல... செய்தியாளரின் வாயில் சிறுநீர் கழித்து சித்ரவதை செய்தனர்.
ஊடக சுதந்திரம் கேள்விக்குறியான நிலையில், பிரசாந்த் கனோஜியின் மனைவி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பேனர்ஜி, “""பிரசாந்த் கனோஜியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். நமக்கென்று அரசியல் சட்டம் இருக்கிறது. இங்கு சட்டப்படியே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எதற்கெடுத்தாலும் கைதுசெய்து சிறையில் அடைக்கக்கூடாது. சமூக வலைத்தளங்களில் வெளியிடும் எல்லாவற்றையும் மக்கள் நம்புகிறார்கள் என்று நினைக்கக்கூடாது. அவர்களும் படித்தவர்கள்தான். இப்படிச் சொல்வதால் சம்பந்தப்பட்ட ட்வீட்டை நீதிமன்றம் ஏற்பதாக அர்த்தமில்லை. அதேசமயம், பேச்சுரிமையையும் தனிநபர் சுதந்திரத்தையும் பாதுகாப்பதில் நீதிமன்றம் உறுதியாக இருக்கிறது''’என்றார்.
இதையடுத்து, மேற்குவங்க முதல்வர் மம்தாவின் போட்டோவை மார்பிங் செய்த பா.ஜ.க. நிர்வாகியை மன்னிப்புக் கேட்கும்படி கூறியதை அரசு வழக்கறிஞர் நினைவுபடுத்தினார். அதற்கு பதிலளித்த இந்திரா பேனர்ஜி, “""இதுவும் அதுவும் வேறுபட்டது. அது ஒரு போட்டோ''’’ என்று பதிலளித்தார். தீர்ப்பைக் கேட்ட கனோஜியாவின் மனைவி, தனது கணவரின் ட்வீட்டை ஆதரிப்பதாக கூறியிருக்கிறார். அடுத்த 5 ஆண்டுகள் ஊடக சுதந்திரம் எப்படி இருக்கும் என்பதற்கான டீசர்தான் உ.பி. நிகழ்வு.
-ஆதனூர் சோழன்