Advertisment

நேற்று ஈழம்...! இன்று பாலஸ்தீன்! நாளை தமிழகம்...!?

ff

மிழகத்தில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ரெய்டுகள் மிக அதிகமாக நடைபெறுகின்றன. இந்தியாவில் நடைபெறும் மத்திய அரசின் ரெய்டுகளில் 70 சதவிகிதம் தமிழகத்தில்தான் நடைபெறுகிறது. சாதாரண ரியல் எஸ்டேட் தரகர்கள், அரசாங்க ஒப்பந்தக்காரர்கள், அதிகாரிகள், வியாபாரிகள், முதலாளிகள், அரசியல்வாதிகள் என கடந்த இரண்டு வருடங்களில் 3000 பேர் வரை மத்திய அரசின் ஏஜென்சிகளின் மூலம் ரெய்டுக்குள்ளாகி இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இவர்கள் தி.மு.க. ஆதரவாளர்கள். அதில் இரண்டு அமைச்சர்களும் அடக்கம். அதில் செந்தில்பாலாஜி சிறையில் இருக்கிறார். பொன்முடி, ஜெகத்ரட்சகன், ஆ.ராசா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் மாநில தி.மு.க. அரசு இதுவரை பா.ஜ.க.வை ஆதரிக்கும் வட இந்தியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Advertisment

tt

மாநில அரசின் வணிக வரித்துறை இவர்கள் மீது பாயவில்லை. ஏன் இந்த பாரபட்சம் என்கிற கேள்வி தமிழகத்தில் எழுந்துள்ளது! வட இந்திய வியாபாரிகள் ஜி..எஸ்.டி. கட்டு வதில் முறைகேடு செய்கிறார்கள். சுரேஷ் தெவாசி என்கிற வட இந்தியர் 2000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தார் என மத்திய ஜி.எஸ்.டி. வாரியம் அவரைக் கைது செய்தது. ஆனால், மாநில வணிகவரித்துறை சார்பாக இதுவரை வட இந்திய வியாபாரிகள் மீது பெரிய அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

Advertisment

தமிழகத்தி

தமிழகத்தில் ஒன்றரைக்கோடி வட இந்தியர்கள் வசிக்கிறார்கள். அதில் 35 லட்சம் பேர் புலம்பெயர் தொழி லாளர்கள். ஹோட்டல் தொழிலில் 55 சதவிகிதம் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். சிவகாசி போன்ற வெடிமருந்துகள் சம்பந்தப்பட்ட பட்டாசுத் தொழில் செய்பவர்களும், கட்டுமானம், மில்கள், சாயப்பட்டறைகள், ஜவுளி என அனைத்துத் துறைகளிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் நிறைந்திருக்கிறார்கள். வங்காள மொழியில் பாட்டுப்பாடி நாற்று நடும் அளவிற்கு விவசாயத் துறையிலும் அவர்கள் ஆதிக்கம் வந்துவிட்டது. வணிகத் துறையிலும் 3 லட்சம் பேர் வரி செலுத்து பவர்களாக தங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். பிரிட் டிஷ்காரனுக்கே கொடுக்கல் வாங்கல் செய்த லேவாதேவிக் காரர்களாக சென்னை சவுக்கார்பேட்டையில் நுழைந்த அவர்கள், இன்று சென்னை நகரில் ஓடக்கூடிய இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் வாடகைக் கார்கள், லாரிகள், கனரக ஏற்றுமதி இறக்கு மதி வாகனங்களின் பைனான்சியர்களாக மாறிவிட்டார்கள்.

சென்னையில் உள்ள துறைமுகத்துக்கு போட்டி யாக குஜராத்தைச் சேர்ந்த அதானி ஒரு தனித் துறை முகமே அமைத்து விட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழிற்சாலைகளில் 90 சதவிகிதம் வட இந்தியர்களின் தொழிற்சாலைகள்தான். அந்த தொழிற்சாலைகள் நிலத்தடி நீரைக் கெடுக்கின்றன என பல ஆண்டுகளாக மக்கள் போராடி வருகிறார்கள். அதே மாவட்டத்தில் முந்திரி ஏற்றுமதியில் 80 சதவிகிதம் வட நாட்டவர்கள்தான். சேலம், ஈரோடு பகுதி களில் மஞ்சள் வணிகம் முழுவதுமே வட நாட்டவர்கள் கைகளுக்குள் அடங்கிப்போய் விட்டது.

tt

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தங்க வணிகத்தையும் வட நாட்டவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். இரும்பு உற்பத்தி, விநியோகம் அனைத்தும் அவர்கள் கையில். செல்போன், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் என அனைத்துத் துறைகளிலும் அவர்களது ஆதிக்கம் நிறைந்து நிற்கிறது. தமிழகத்தில் இயங்கும் பல தனியார் வங்கிகளின் இயக்கமும் அவர்களைச் சார்ந்தே உள்ளது.

“இதைத்தான் நான் கேள்வி கேட்கிறேன். ஈழத்தில் தமிழர்களை வஞ்சித்த சிங்களர் களைப் போல பாலஸ்தீனத்தில் அகதிகளாக நுழைந்து இன்று அமெரிக்க ஆதரவுடன் அவர்களையே குண்டு வீசி கொலை செய்யும் இஸ்ரேலியர்களைப்போல ஒரு நிலைமை தமிழ்நாட்டிற்கு அடுத்த ஐம்பது ஆண்டுகளில் வட இந்தியர்களால் வந்துவிடும்” என எச்சரிக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன்.

"நெடுஞ்சாலைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் ஐந்து சோதனைச்சாவடிகளில் மட்டும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் முறைகேடுகள் நடந்திருக்கின்றன என மத்திய அரசின் கணக்காய அதிகாரி சொல்கிறார் என்றால் எத்தனை சோதனைச்சாவடிகள் இருக்கின்றன. எவ்வளவு கோடிகள் கொள்ளை நடக்கின்றன. வட இந்தியர்கள் கைகளில் இருக்கும் இந்த சோத னைச்சாவடிகளில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி மாநில அரசு ஏன் கேள்வி கேட்பதில்லை? இந்த மோசடிகளைத் தடுக்க மாநில அரசு என்ன செய்தது?''’என்று கேள்வி எழுப்புகிறார் வேல் முருகன்.

tt

யார் ஆட்சிக்கு வந்தாலும் வட இந்திய வியாபாரிகள் அவர் களுக்கு நெருக்கமாகி விடுவார்கள். அதற்கு வட இந்திய அதிகாரிகள் பக் கத் துணையாக நிற்பார் கள். தமிழகத்தின் தலை மைச் செயலாளர் ஒரு வட இந்தியர். தமிழக டி.ஜி.பி. வட இந்தியாவைச் சேர்ந்தவர். வட இந்தி யர்களின் ஸ்டெர்லைட் ஆலையோ, கடலூர் சிப்காட் தொழிற்சாலை களோ சுற்றுச்சூழல்களுக்கு கேடு விளை வித்தால் கேள்வி கேட்கமுடியாது. ஏனென்றால், சுற்றுச்சூழல் துறை செயலாளரும் ஒரு வட இந்தியர். இந்தியாவின் மற்ற பகுதிகளில் தமிழ் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் இருக்கிறார்கள். அதில் ஒடிசா மாநிலத்தில் பாண்டியன், குஜராத்தில் இறையன்புவின் சகோதரர் திருப்புகழ் ஐ.ஏ.எஸ். போன்ற ஒரு சிலருக்கே வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது.

“தமிழகத்தில் வட இந்திய அதி காரிகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப் படுகிறது. அதிகாரிகள் அமைச்சர்களையும், ஆட்சியாளர்களையும் வளைத்துப் போட்டு விடுகின்றனர் வட இந்திய முதலாளிகள். இது வட இந்தியர்களின் வளர்ச்சிக்கு அடிப்படை யான காரணம்''’என்கிறார்கள் தலைமைச் செயலகத்தைச் சேர்ந்தவர்கள்.

"நிலைமை இப்படியே போனால் வட இந்தியர்களுக்குப் போட்டியாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கக்கூடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழி லதிபர்கள் முற்றிலும் காணாமல் போய்விடுவார்கள். அதற்குத்தான் அமலாக்கத்துறை நடத்தும் ரெய்டுகள் உதவுகின்றன' என்கிற குரல் தமிழகத்தில் பலமாகக் கேட்க ஆரம்பித்திருக்கிறது.

_______

இறுதிச் சுற்று!

ffவர்னர் மாளிகையான ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ராஜ்பவன் பதட்டமடைந்தது. இந்த சம்பவத்தில் தி.மு.க. மீது குற்றம்சாட்டி கவர்னர் தரப்பில் இருந்து தமிழக டி.ஜி.பி. மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து, கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் எந்த விளக்கத்தையும் ராஜ்பவனுக்கு தெரிவிக்காத நிலையில், சென்னை தெற்கு போலீஸ் இணைஆணையர் சிபி சக்கரவர்த்தி, கவர்னரை சந்தித்து விளக்கமளித்தார். அதில் திருப்தியில்லாத நிலை யில், கமிஷனரை 26-ந் தேதி வியாழக்கிழமை ராஜ்பவ னுக்கு அழைத்திருந்தார் கவர்னர் ரவி. அவரை சந்தித்த கமிஷனர் சந்திப்ராய் ரத்தோர், பெட்ரோல் குண்டு வீசிய கிரிமினல் கருக்கா வினோத்தை கைது செய்திருப்பதையும், கிரிமினலிடம் நடத்திய விசாரணையில், அவரது விடுதலைக்கு ராஜ்பவன் தடையாக இருந்ததால் குண்டு வீசியதாக கிரிமினல் கூறியதையும் விளக்கமளித்திருப்பதாக தெரிகிறது. ஆனால், மத்திய உளவுத்துறையிடமிருந்து தனக்கு கிடைத்த தகவல்களை வைத்து, சந்திப்ராய் ரத்தோ ரிடம் கவர்னர் விசாரணை நடத்தியதாகவும், ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசுமளவுக்கு தலைநகரிலேயே சட்டம்-ஒழுங்கு கெட்டுக் கிடக்கிறதா? என கவர்னர் கேள்வி எழுப்பியதாகவும் ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-இளையர்

nkn281023
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe