Advertisment

இங்கே மஞ்சள்! இலங்கையில் தங்கம்! விவசாயிகளை வஞ்சிக்கும் மாஃபியா

far

மிழக விவசாயிகள் பயிர் செய்து விளைவிக்கும் மஞ்சள், மாஃபியாக்களால் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டு பண்டமாற்று முறையில் தங்கக்கட்டிகளாக மாற்றப்படுவது அதிரவைக்கிறது.

Advertisment

டிச-08 முதல் டிசம்பர் 14 வரை ஒரு வாரத்தில் மட்டும் தூத்துக்குடி சுற்று வட்டாரங்களில் வாகனம் மற்றும் படகுகளில் கைப்பற்றப்பட்ட மஞ்சளின் எடை 12 டன். இந்தியக் கரன்சியில் இதன் மொத்த மதிப்பு 26 லட்சம்.

farmers

தூத்துக்குடி பகுதியிலிருந்து இலங்கைக்குக் கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட ராமநாதபுரம் தெற்கு நரிப்பையூரின் முப்தி முகம்மது, வாழ முகைதீன், சீனி, தூத்துக்குடியின் முத்துராஜா, நாகூர் மீராசா டிரைவர் அன்புராஜ் உள்ளிட்ட ஒன்பது பேர்கள் கைது செய்யப்பட, மற்றவர்கள் தப்பியுள்ளனர். பிடிபட்ட 12 டன் மஞ்சள் மூட்டைகள் அந்தந்தப் பகுதியின் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Advertisment

கைதான அனைவரும் சரக்குகளைக் கொண்டுசெல்லும் லோடுமேன்களே தவிர, கடத்தப்படுகிற விரளி மஞ்சள் உரிமையாளர்கள் சி

மிழக விவசாயிகள் பயிர் செய்து விளைவிக்கும் மஞ்சள், மாஃபியாக்களால் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டு பண்டமாற்று முறையில் தங்கக்கட்டிகளாக மாற்றப்படுவது அதிரவைக்கிறது.

Advertisment

டிச-08 முதல் டிசம்பர் 14 வரை ஒரு வாரத்தில் மட்டும் தூத்துக்குடி சுற்று வட்டாரங்களில் வாகனம் மற்றும் படகுகளில் கைப்பற்றப்பட்ட மஞ்சளின் எடை 12 டன். இந்தியக் கரன்சியில் இதன் மொத்த மதிப்பு 26 லட்சம்.

farmers

தூத்துக்குடி பகுதியிலிருந்து இலங்கைக்குக் கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட ராமநாதபுரம் தெற்கு நரிப்பையூரின் முப்தி முகம்மது, வாழ முகைதீன், சீனி, தூத்துக்குடியின் முத்துராஜா, நாகூர் மீராசா டிரைவர் அன்புராஜ் உள்ளிட்ட ஒன்பது பேர்கள் கைது செய்யப்பட, மற்றவர்கள் தப்பியுள்ளனர். பிடிபட்ட 12 டன் மஞ்சள் மூட்டைகள் அந்தந்தப் பகுதியின் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Advertisment

கைதான அனைவரும் சரக்குகளைக் கொண்டுசெல்லும் லோடுமேன்களே தவிர, கடத்தப்படுகிற விரளி மஞ்சள் உரிமையாளர்கள் சிக்கவில்லை.

முன்னெப்போதுமில்லாமல், தொடர்ந்து விரலி மஞ்சள் கடத்தப்படுவதைப் பற்றி கடலோர மரைன் காவல் அதிகாரிகளிடத்தில் பேசியபோது கிடைத்த தகவல்கள் அதிர வைக்கின்றன.

""இலங்கையில் மஞ்சள் என்பது விளைச்சல் பொருளல்ல. அங்கு அற்ப சொற்பமாக விளையும் மஞ்சளும் அந்நாட்டின் தேவைக்குப் போதுமானதல்ல. எனவே இலங்கை, தன் நாட்டிற்குத் தேவையான விரளி மஞ்சளை வெளிநாடுகளிலிருந்தான் இறக்குமதி செய்துவருகிறது. தமிழகத்தில் வேளாண்பொருளான விரலி மஞ்சளுக்குத் தற்போது தரையில் தடையில்லை. இங்கு ஒரு கிலோ விரலி மஞ்சளின் சில்லரை விலை 120 ரூபாய் மட்டுமே. முறைப்படி மஞ்சளை இலங்கைக்கு அனுப்ப வேண்டுமெனில் அதன் மதிப்பிலிருந்து ஒன்றரை மடங்கு சுங்கத் தீர்வை செலுத்தியாக வேண்டும்.

இங்கு 120 ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ மஞ்சளின் விலை, இலங்கையில் அதன் கரன்சியில் மூவாயிரத்திற்கும் மேலான விலை கிடைப்பதால் கொள்ளை லாபம். மேலும் சுங்கவரியை ஏமாற்றிக் கடத்தப்பட்டால் கூடுதல் லாபம் கிடைக்கும்.

தூத்துக்குடியின் கடல் மார்க்கமாக திறமையான படகோட்டிகள் ஒரு மணி நேரத்தில் இலங்கையை அடைந்துவிடுவர் என்பதால் வல்லம் மூலமாக விரளி மஞ்சள் கடத்தல் தொடர்ந்து நடக்கிறது. இவற்றில் ஒருசிலர் மட்டுமே மரைன் மற்றும் கடலோரக் காவல் படையிடம் சிக்குகின்றன. மற்றவை தப்பிவிடுகின்றன.

இங்கு கிலோ 120 விலை என்றால் இலங்கை கரன்சியில் அதற்கு மூவாயிரத்திற்கும் கூடுதலான விலை, இங்கு இலங்கைக் கரன்சியின் இந்திய மதிப்போ ஆயிரத்து ஐந்நூறு. எனவே மஞ்சள், கடத்தல் மாஃபியாக்களின் முக்கிய தொழிலாகிவிடுகிறது. மேலும் கைமாற்றப்படும் சரக்கிற்காக அவர்கள் இலங்கைக் கரன்சியை வாங்குவதில்லை. அதனை முறைப்படி இங்குள்ள வங்கிகளில் திடீரென இந்தியக் கரன்சியாக்க முடியாது. அதில் பல்வேறு அக்கவுண்ட் சிக்கல்களிருப்பதால், அதை விடுத்து கடத்தல் மாஃபியாக்கள் பண்டமாற்றாக கரன்சிக்கு பதில் தங்கக் கட்டிகள் அல்லது வைரமாகப் பெற்றுவிடுகின்றனர். மதிப்புமிக்க இவற்றின் மூலம் கூடுதல் லாபமடைகின்றனர். இவையே மஞ்சள் கடத்தலை ஊக்கப்படுத்தும் காரணிகள்.

பிடிபடும் இந்த மஞ்சள் மூட்டைகளையும், படகுகளையும் முறைப்படி சுங்க இலாகாவில் ஒப்படைப்பதில்லை. “அப்படி ஒப்படைக்கப்பட்டால் சரக்கும் படகுகளும் மீட்கமுடியாமல் போய்விடும் கடத்துபவர்களுக்குப் பெருத்த நட்டம். ஆனால் ஏதோ ஒரு அண்டர்ஸ்டாண்ட்டிங் கில் அவை, காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படுவதால், தமிழக மஞ்சளுக்குத் தரையில் தடையின்மை காரணமாக, நீதிமன்றத்தில் அதற்கான செட்டப்பில்களைக் காட்டி குறைந்தபட்ச அபராதமான இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் தண்டத் தொகையைக் கட்டிவிட்டு சரக்குகளையும் வாகனத்தையும் மீட்டு விடுவதால் சொற்ப நஷ்டத்தில் தப்பிக்கும் கடத்தல்காரர்கள், நட்டத்தை அடுத்த கடத்தல் கன்சைன் மெண்ட்டில் சுளுவாகத் தேற்றி விடுகின்றனர்.

farmers

பிடிபடுகிற சரக்குடன் சிக்கும் சல்லி வேர்களைக் கொண்டே போலீஸ் கேஸை முடித்துவிடுவதால் ஆணிவேர்கள் பல ரூட்களில் தப்பிவிடுகின்றனர். கடத்தலும் தொய்வின்றி நடக்க ஆரம்பித்துவிடுகிறது. தப்புகிற கடத்தல் விலங்குகள்மீது கை வைக்காதவரை, தமிழக வேளாண்பொருட்கள் வெளிநாட்டிற்குக் கடத்தப் படுவது, கட்டுப்பாட்டிற்குள் வரச் சாத்திய மில்லை''’என்றார் அந்த அதிகாரி.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமாரிடம் பேசியதில். ""பல கன்சைன் மெண்ட்கள் சிக்கியுள்ளன. இதில் சரக்கை நடுக்கடல் கொண்டுபோய் அங்குள்ள படகுகளில் மாற்றுபவர்கள் இவர்கள். வேறு இரண்டு வழக்குகளில் மீனவர்கள் இருவர்கூடச் சிக்கியுள்ளனர். தரையில் நடப்பவை தடுக்கப்படுகின்றன. தண்ணீரில் நடப்பவற்றை அதற்குரிய துறைதான் கவனிக்கவேண்டும், ஸ்ரீலங்காவுக்கு கொண்டுசெல்வதாகச் சொல்கிறார்கள். ஆனால் இந்தக் கடத்தலில் சங்கிலித் தொடர்புகள் இருக்கின்றன''’ என்கிறார் எஸ்.பி.

தமிழக விளைபொருட்கள் பிக் ஷாட்களால் தாராளக் கடத்தலாகிறது. ஆனாலும் விவசாயிகளுக்கோ போதிய விலை கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுகின்றனர் வேளாண் மக்கள். ""உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சுவதில்லை'' மாஃபியாக்களோ அதில் மஞ்சக் குளிக்கிறார்கள்.

-பரமசிவன்

படங்கள் : ப.இராம்குமார்

nkn020121
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe