ந்தியாவில் மக்கள் பயன் படுத்தும் அனைத்து வகையானப் பொருட் களும் நாளுக்கு நாள் விலையேற்றம்தான். அதற்கு, அந்த பொருளின் மூலப் பொருளை பணக்கார கார்ப்பரேட் கம்பெனிகளின் கொள்ளை லாபத்துக்காக அவர்களுக்கு மத்திய பா.ஜ.க. அரசு சிவப்பு கம்பளம் விரிப்பதுதான் முக்கிய காரணம். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, உதிரி பாகங்கள், வேளாண்மைக்குத் தேவையான உரம், பொருட்கள் இவற்றோடு சேர்ந்து ஜவுளி தொழிலையும் கார்ப்பரேட் கம்பெனிகள் விழுங்கிவிட்டது இதன் விளைவு ஜவுளிக்கு மூலப் பொருளாள நூல் விலையை நாளுக்கு நாள் விலையை ஏற்றி... அதன் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், அத்தொழில் சார்ந்த குடும்பத்தினரை நடுவீதியில் நிறுத்துகின்றன, நூல் விலையை நிர்ணயிக்கும் கொள்ளைக்கார பணக்கார நிறுவனங்கள்.

ff

தமிழகத்தில் வேளாண்மைக்கு அடுத்த தொழில் ஜவுளித் தொழில்தான். இப்போது இத்தொழில் சவக்களை படிந்த முகமாக காட்சியளிக்கிறது. காரணம், நாளுக்கு நாள் ஏறும் நூல் விலை ஏற்றம்தான். குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் ஜவுளித் தொழில்தான் பிரதான தொழிலாக உள்ளது. இந்த தொழிலை நம்பி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் தொடர் நூல்விலை உயர்வு காரணமாக, ஜவுளித் தொழில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துவருகிறது. "நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்' என ஜவுளி உற்பத்தியாளர்கள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தியும், எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை மத்திய ஜவுளித்துறை. நூல் விலை உயர்வால் ஜவுளி உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் துணிகளின் உற்பத்தி பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

பல மாநிலங்களில் உள்ள ஜவுளி நிறுவனங்களிடம் ஆர்டர் பெற்று உற்பத்தி செய்து அனுப்புவார்கள். அப்படி ஏற்கனவே எடுக்கப்பட்ட ஆர்டர்களைக்கூட உற்பத்தி செய்து கொடுக்க முடியாமல் விசைத்தறியாளர்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். காரணம், ஆர்டர் எடுக்கும்போது அப்போதுள்ள நூல் விலையை கணக்கிட்டு உற்பத்தி தயாரிப்புச் செலவையும் சேர்த்து... உதாரணத்திற்கு ஒரு வேட்டி அல்லது லுங்கியின் விலை 100 ரூபாய் என பேசி முடிக்கப்பட்டு ஆர்டர் எடுக்கப்படும். ஆனால் அந்த ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யும் கால இடைவெளிக்குள் நூல் விலை ஒரு மடங்கு உயர்த்தப்படுகிறது. இதனால் உற்பத்தி தயாரிப்பு செலவு கூடுகிறது. ஆனால் ஆர்டர் எடுத்த தொகைக்கு ஜவுளி ரகங்களை கொடுத்தால், அதன் மூலம் நஷ்டம்தான் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஏற்படுகிறது. இதில் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளியின் கூலியும் குறைக்கப்படுகிறது.

Advertisment

ff

இப்படி தொடர் வேதனையால், நூல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலி யுறுத்தி ஈரோட்டில் ஜவுளி வியாபாரிகள் இரண்டு நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி னார்கள். அதன்படி, ஈரோடு மாநகர் பகுதியில் திருவெங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜ் நகர், என்.எம்.எஸ். கமவுண்ட், ராமசாமி கவுண்டர் வீதி, சொக்கநாதர் கவுண்டர் வீதி, பிருந்தாசாரி வீதி, அகில் மேடு வீதி, இந்திராநகர் உட்பட பகுதிகளில் உள்ள பத்தாயிரம் ஜவுளிக்கடைகள் மற்றும் குடோன்கள் அடைக்கப் பட்டன.

ddஇதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் கலைச்செல்வன் கூறும்போது, "சென்ற ஒரு மாதத்தில் மட்டும் 40-ஆம் நம்பர் நூல் ஒரு கிலோவுக்கு ரூபாய் 80 வரை உயர்ந்துள்ளது. 30-ஆம் நம்பர் நூல் ரூபாய் 90 வரையும், 20-ஆம் நம்பர் நூல் விலை ரூபாய் 50, வெப்ட் 40-ஆம் நம்பர் ஒரு பாக்கெட் ரூபாய் 11 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 14,200 வரையிலும் உயர்ந்துள்ளது. அதனை ஆர்டர் பெற்ற தொகைக்குள் நிறைவு செய்ய முடியாமல் கடும் நஷ்டத்தை நாங்கள் சந்திக்க வேண்டியுள்ளது. "நூல் விலையை ஒரு மாதம் அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே உயர்த்த வேண்டும்' என்ற எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இரண்டு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் காரணமாக ரூபாய் 150 கோடி வர்த்தகம் முடங்கியுள்ளது. இரண்டு நாட்களாக கடையடைப்பு போராட்டம் நடந்ததில்... மொத்தம் 300 கோடி வர்த்தகம் முடங்கியுள்ளது'' என்றார்.

Advertisment

நூலுக்கு மூலப்பொருள் பஞ்சு. அந்தப் பஞ்சை உற்பத்தி செய்யும் விவசாயிக்கு பஞ்சு விலை ஏறவில்லை. பஞ்சை விலைக்கு வாங்கி பெரும் நிறுவனத்திடம் விற்பனை செய்யும் இடைத்தரகர் என்கிற எஜென்சி ஒருவித லாபம் பார்க்கிறார்கள். பஞ்சை, நூலை பதுக்கும் பணக்கார, கார்ப்பரேட் கம்பெனிகள், அவர்கள் கொள்ளை லாபம் பெறுவதற்கு பங்கு மார்கெட் புள்ளிகளை உயர்த்துவதுபோல நூல் விலையை நாளுக்கு நாள் விலையேற்றி... ஜவுளித் தொழி லில் ஈடுபடும் அனைத்து தரப்பு உழைக்கும் மக்களின் வயிற்றில் அடிக்கிறார்கள். வழக்கம் போல் பராமுகமாக மத்திய மோடி அரசு இருக்கிறது.