Y பிரிவு பாதுகாப்பா? உள்துறை கண்காணிப்பா? சிக்கலில் விஜய்

ss

த்திய அரசு அறிவித்த "ஒய்' பிரிவு பாதுகாப்பை த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் ஒப்புக்கொண்டதால் மார்ச் 14-ந் தேதி முதல் அவருக்குத் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வீரர்கள் பணியேற்கவிருக்கின்றனர். இந்த பாதுகாப்பிற்கான ஒப்புதலை விஜய்யிடம் பெறுவதற்கு முயற்சித்த சி.ஆர்.பி.எஃப். அதிகாரிகள், விஜய்யை சந்திக்க முடியாமல் தவித்ததும், விஜய்யிடம் அதிகாரிகள் கோபப்பட்டதுமான தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன.

அரசியல் கட்சி ஆரம்பித்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நடிகர் விஜய், சட்ட மன்றத்தேர்தலை எதிர்கொள்வதற்கான தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். இந்த நிலையில், விஜய் செல்லும் இடங்களிலெல்லாம் தனியார் ஏஜென்சி மூலம் பௌன்சர்கள் நியமிக்கப்பட்டு அவருக்கு பாது காப்பு கொடுக்கப்படுகிறது. ஆனால், பௌன்சர்களால் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் விஜய்க்கு எதிரான விமர்சனங்கள் களைகட்டுகின்றன.

குறிப்பாக கட்சி நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என பலரும் பௌன்சர்களின் தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர். சமீபத்தில்கூட, த.வெ.க. சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்வில் விஜய் கலந்துகொள்ள வந்தபோது அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்த முஸ்லீம்கள் சிலரை பௌன்சர்கள் தாக்கியிருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக, விஜய் மீது போலீசில் புகாரும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

vv

இப்படி பௌன்சர்கள் மீதான புகார்கள் சில மாதங்களாக விஜய்க்கு தலைவலியை கொடுத்துவந்தது. இந்த நிலையில், பௌன்சர்களை அடக்கி வைக்க அவர் நினைக்காமல் மாற்று ஐடியாவை யோசித்திருக் கிறார். அந்த யோசனையை செயல்படுத்தும்விதமாக, "தனக்கு மத்திய அரசின் பாதுகாப்பு வேண்டும்; ஏற்பாடு செய்ய இயலுமா?' என்கிற கோரிக்கையை தமிழக கவர்னர் ரவியிடம் வைத்திருந்தார் விஜய்.

இதனை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ராஜ்பவன் தெரிவித்திருந்த நிலையில், உளவுத் துறைய

இதனை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ராஜ்பவன் தெரிவித்திருந்த நிலையில், உளவுத் துறையிடமிருந்து ரிப்போர்ட் கேட்டிருந்தது மத்திய உள் துறை அமைச்சகம். பொதுவாக, நாட்டிலுள்ள அரசியல் தலைவர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள், வி.வி.ஐ.பி.க்கள் உள்ளிட்டவர் களுக்கு அச்சுறுத்தல் இருந்தால், அதனை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உளவுத்துறை ரிப்போர்ட்டாக அனுப்பி வைக்கும். அந்த அறிக்கையின்படி சம்மந்தப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிவருகிறது மத்திய அரசு.

அந்த வகையில், விஜய்க்கு பாதுகாப்பு வழங்கலாம் என உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டினை வைத்து, அவருக்கு மத்திய சிறப்பு காவல் படை (சி.ஆர்.பி.எஃப்.) வீரர்கள் அடங்கிய "ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்க கடந்த மாதம் அனுமதித்தது மத்திய உள்துறை அமைச்சகம்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த பாதுகாப்பை ஏற்றுக்கொள்வதாக விஜய்யிடமிருந்து ஒப்புதல் பெறப்பட வேண்டும். இதுதான் நடைமுறை. அந்த ஒப்புதலை பெறுவதற்காக விஜய்யை சந்திக்க சி.ஆர்.பி.எஃப். அதிகாரிகள் முயற்சித்தனர். ஆனால், விஜய்யை சந்திக்கவே படாதபாடுபட்டிருக்கிறார் கள் அதிகாரிகள்.

இதுகுறித்து உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "ஒய் பிரிவு பாதுகாப்புக்கு மத்திய அரசு அனுமதித்த நிலையில், அதனை விஜய் ஏற்றுக் கொள்வதற்கான ஒப்புதலை முறைப்படி கொடுக்க வேண்டும். அந்த ஒப்புதலை பெறுவதற்கான நடைமுறை உத்தரவில் அவர் கையெழுத்திட வேண்டும். அந்த கையெழுத்தைப் பெறுவதற்காக வும், மூன்று ஷிப்டாக பாதுகாப்பு கொடுக்கப்பட விருப்பதால் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் விஜய்யின் வீட்டு வளாகத்தில் தங்குவதற்கான இட வசதிகளைப் பார்வையிடுவதற்கும் அவரை நேரில் சந்திக்கவேண்டும் என சி.ஆர்.பி.எஃப். அதிகாரிகள் முயற்சித்தனர்.

இதற்காக, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸிஆனந்தை தொடர்புகொண்டு பேசியிருக் கிறார்கள். விஜய்யிடம் கலந்துபேசி, எப்போது சந்திக்க வரலாம் என்பதை கேட்டுச் சொல்வதாகச் சொன்ன புஸ்ஸி ஆனந்த், அது குறித்து விஜய்யிடம் கேட்கவே இல்லை. பலமுறை புஸ்ஸி ஆனந்திடம் சி.ஆர்.பி.எஃப். அதிகாரிகள் நினைவுபடுத்தியும் அதனை கண்டுகொள்ளவே இல்லை புஸ்ஸி. தொடர்புகொள்ளும் போதெல்லாம், "தலைவர் (விஜய்) பிஸியாகவே இருக்கிறார். அவரது மூடு அறிந்துதான் உங்க விசயத்தை ஓப்பன் பண்ணமுடியும். பொறுங்கள். சமயம் பார்த்துக் கேட்டுச் சொல்கிறேன்' என்றே பதில் தந்திருக்கிறார் புஸ்சி ஆனந்த்.

இப்படியே இரண்டு, மூன்று வாரங்கள் கடந்த நிலையில், ஒரு கட்டத்தில் கோபம் கொண்ட அதிகாரிகள், "உங்க தலைவருக்கு (விஜய்) பாதுகாப்பு கொடுக்க மத்திய அரசெல்லாம் தானாக முன்வரவில்லை. உங்க தலைவருதான் பாதுகாப்பு வேணும்னு கொஞ்சினார். அதனை பரிசீலித்து, போனால் போகட்டுமென அவருக்கு பாதுகாப்பு கொடுக்க அனுமதித்தது. நீங்க என்னவோ, அவருக்கு பாதுகாப்பு கொடுக்க மத்திய அரசு அலைஞ்சிக்கிட்டிருக்கிற மாதிரி எகத்தாளம் பேசிக்கிட்டு இருக்கீங்க. 24 மணி நேரம்தான் உங்களுக்கு அவகாசம். அதற்குள் சரியான பதில் வரலைன்னா, பாதுகாப்பை ஏற்க மறுக்கின்றனர் என்று டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்பிவிட்டு ஃபைலை க்ளோஸ் பண்ணிடுவோம்' என அதிகாரிகள் கடுமையாக தெரிவித்துவிட்டனர்.

இதனையடுத்து பயந்துபோன புஸ்ஸி ஆனந்த், "சி.ஆர்.பி.எஃப். அதிகாரிகள் உங்களை சந் திக்க விரும்புகிறார்கள்' என விஜய்யிடம் சொல்ல... "உடனே வரச்சொல்லுங்கள்' என்று சொல்லியிருக் கிறார். அதனையடுத்து சமீபத்தில் விஜய்யை சந்தித்து ஒப்புதல் பெற்றனர் அதிகாரிகள்.

bb

அந்த சந்திப்பின்போது, விஜய்யை சந்திக்க 25 நாட்களாக முயற்சித்தும் முடியவில்லைங்கிற தங்களின் கோபத்தை அவரிடம் வெளிப்படுத்தி யிருக்கிறார்கள் அதிகாரிகள். அதனைக் கேட்ட விஜய், அய்யய்யோ எனக்குத் தெரியவே தெரி யாதே! யாரும் என்னிடம் சொல்லவே இல்லையே. எனது கவனத்துக்கு வந்திருந்தால் உங்களை எதுக்கு காத்திருக்க வைக்கப்போகிறேன்? ரொம்ப ரொம்ப ஸாரிங்க' என சொல்லியிருக் கிறார் விஜய்.

அதற்கு, புஸ்ஸி ஆனந்த் மூலம்தான் உங்களை சந்திக்க விரும்புவதை தெரிவித்தோம். அவர் உங்களிடம் சொல்லவே இல்லை போலிருக்கிறது. நேரடி அரசியலுக்கு வந்து விட்டீர்கள். இப்படி எந்த ஒரு விசயமும் உங்களுக்கு தெரியாமல் இருந்தால் அது உங்கள் வளர்ச்சிக்கு நல்லதில்லை. உங்களுக்கு இன்னும் அதிகாரம் வராத போதே, உங்களை சந்திக்க எங்களாலேயே முடிய வில்லைன்னா…பொதுமக்கள் உங்களை எப்படி சந்திக்க முடியும்?' என்றெல்லாம் விஜய்க்கு அட்வைஸ் செய்து விட்டு வந்துள்ளனர் அதி காரிகள்''’என்று பாதுகாப்பு உத்தரவிற்கு ஒப்புதல் பெறுவதில் நடந்துள்ளதை விவரித்தனர்.

சி.ஆர்.பி.எஃப். அதி காரிகள் சொன்னதைக் கேட்டு ஏகத்துக்கும் டென்ச னாகியிருக்கிறார் விஜய். உடனே புஸ்ஸி ஆனந்தை அவர் கடுமையாகக் கடிந்து கொண்டதாகவும் தகவல் கிடைக்கிறது. இந்த நிலையில், பாதுகாப்பு தருவதற்கு விஜய் ஒப்புக்கொண்டிருப்பதால் 14-ந்தேதி முதல் அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவிருக்கிறது. இனி, மத்திய சிறப்பு காவல் படையை சேர்ந்த துணை ராணுவப்படையினர் விஜய்க்கு பாதுகாப்பு கொடுப்பர். மூன்று ஷிப்டுகளில் சுழற்சி முறையில் இந்த பாதுகாப்பு வழங்கப்படும்

துப்பாக்கி ஏந்திய 8 முதல் 11 கமாண்டோக்கள் இந்த பாதுகாப்பில் இடம் பெறுவார்கள். தமிழகத்தில் இனி விஜய் எங்கு சென்றாலும் அவருடன் இந்த பாதுகாப்பு தொடரும். தமிழகத்தைத் தவிர்த்து வேறு மாநிலங்களுக்கோ, வெளி நாடுகளுக்கோ விஜய் சென்றால் இந்த ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்படாது. தமிழகத்தில் அவர் இருக்கும்போது மட்டுமே இந்த பாதுகாப்பு செல்லும்.

மத்திய அரசின் "ஒய்' பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருப்பதால் இனி பௌன்சர்களின் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. பௌன்சர்களின் தொல்லை இல்லை என்றாலே த.வெ.க. நிர்வாகிகள் ஆனந்தவயப் படுவார்கள்.

மத்திய அரசின் பாதுகாப்பை விஜய் ஒப்புக்கொண்டிருப்பதால், இனி மத்திய அரசுக்குத் தெரியாமல் சீக்ரெட்டாக அவர் எங்கும் சென்று வர முடியாது. மத்திய அரசின் கண்காணிப்பிலேயே விஜய் இருக்கவேண்டும். ஏற்கனவே மத்திய -மாநில அரசுகளின் உளவுத்துறை விஜய்யை ரகசியமாக கண் காணித்து வரும் நிலையில், தற்போது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கண்காணிப்பு வளையத்துக்குள் சிக்கியிருக்கிறார் விஜய்.

"இது, விஜய்க்கு அரசியல் ரீதியாக பலமா? பலவீனமா? என்பது போகப் போகத்தான் தெரியும்' என்கிறார்கள் த.வெ.க.வினர்.

_________________

இறுதிச் சுற்று!

எச்சில் இலை நேர்த்திக்கடனுக்கு தடை!

சதாசிவ பிரம்மேந்திரர், 1756-ஆம் ஆண்டு கரூர் மாவட்டம் காவிரி ஆற்றங்கரையின் அருகிலுள்ள நெரூர் கிராமத்தில் ஜீவசமாதியடைந்தார். அவரது நினைவு நாளான மே 18-ஆம் தேதி அங்கு அன்னதானம் வழங்கப்படும். பின் அந்த எச்சில் இலை மீது பிற சாதியைச் சேர்ந்த பக்தர்கள் உருளும் நிகழ்வு நடைபெறும். இப்படி உருளுவது மனிதர்களின் சுயமரியாதைக்கு விரோதமானது என 2014-ல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடுத்ததால் அந்த நிகழ்வுக்கு நீதிமன்றம் தடைவிதித்தது. இந்நிலையில் அந்த தடையை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நீக்கியதால், 2024 மே 18-ஆம் தேதி அந்நிகழ்வு பத்தாண்டுகளுக்குப் பின் நடைபெற்று தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. "எச்சில் இலையில் உருண்ட பக்தர்கள் -எதிர்க்கும் அமைப்புகள்'’என 2024 மே 29-ஆம் தேதி இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு, அனைத்து சாதி அர்ச்சகர் சங்க மாணவர் சங்க தலைவர் அரங்கநாதன், கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் தாக்கல்செய்த மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் 13-3-2025 (வியாழன்) அன்று வழங்கிய தீர்ப்பில், அந்த நிகழ்ச்சிக்கு தடைவிதித்து உத்தர விட்டுள்ளனர்.

-ராஜா

nkn150325
இதையும் படியுங்கள்
Subscribe