சும்மாவே கொரோனா நடுக்கத்தில் இருக்கும் தமிழகத்தில், கொரோனா தொற்றுள்ள ஒருவர் தப்பிச்சென்று விட்டது வேறு அச்சத்தைக் கிளப்பியுள்ளது. அதிலும் விழுப்புரம் மாவட்டத்திருந்து தப்பிச்சென்றிருப்பதால், விழுப்புரம் பகுதி மக்கள் கூடுதல் அச்சமடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் பாதிப்புள்ளதாகக் கண்டறிய பட்டவர்கள் இன்றுவரை 20 பேர். இப்படிப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என 30-க்கும் மேற்பட்டவர்கள் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். முதல்கட்ட மருத்துவ அறிக்கையில் இவர்களில் 26 பேருக்கு நோய்த் தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டது. அவர்களில் டெல்லியைச் சேர்ந்த சர்மாவும் ஒருவர்.
இதனால் அதிகாரிகள் அவரை ஏப்ரல் 7-ஆம் தேதி 28 நாட்கள் பிறருடன் தொடர்பில்லாமல் தனியாக இருக்குமாறு அறிவுறுத்தி அனுப்பியுள்ளனர். ஆனால் அவரின் இறுதியான மருத்துவப் பரிசோதனை அறிக்கை மறுநாள் கிடைத்தபோது அவருக்கு கொரானா நோய் இருப்பது உறுதியாகியி
சும்மாவே கொரோனா நடுக்கத்தில் இருக்கும் தமிழகத்தில், கொரோனா தொற்றுள்ள ஒருவர் தப்பிச்சென்று விட்டது வேறு அச்சத்தைக் கிளப்பியுள்ளது. அதிலும் விழுப்புரம் மாவட்டத்திருந்து தப்பிச்சென்றிருப்பதால், விழுப்புரம் பகுதி மக்கள் கூடுதல் அச்சமடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் பாதிப்புள்ளதாகக் கண்டறிய பட்டவர்கள் இன்றுவரை 20 பேர். இப்படிப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என 30-க்கும் மேற்பட்டவர்கள் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். முதல்கட்ட மருத்துவ அறிக்கையில் இவர்களில் 26 பேருக்கு நோய்த் தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டது. அவர்களில் டெல்லியைச் சேர்ந்த சர்மாவும் ஒருவர்.
இதனால் அதிகாரிகள் அவரை ஏப்ரல் 7-ஆம் தேதி 28 நாட்கள் பிறருடன் தொடர்பில்லாமல் தனியாக இருக்குமாறு அறிவுறுத்தி அனுப்பியுள்ளனர். ஆனால் அவரின் இறுதியான மருத்துவப் பரிசோதனை அறிக்கை மறுநாள் கிடைத்தபோது அவருக்கு கொரானா நோய் இருப்பது உறுதியாகியிருக்கிறது. இதையடுத்து அவரை மீண்டும் அழைத்து வந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ப்பதற்காக தேடிச்சென்றபோதுதான் அவர் தலைமறைவானது தெரியவந்திருக்கிறது.
தலைமறைவானவர் புது டில்லியைச் சேர்ந்த நிதின் சர்மா. முப்பது வயதான இவர் கடந்த டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி புதுச்சேரியிலுள்ள ஒரு கம்பெனிக்கு நேர்முகத்தேர்வுக்கு வருகை தந்துள்ளார். மேலும் அவர் புதுச்சேரியில் தங்கியிருந்தபோது வாகன விபத்து ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். இதனால் புதுச்சேரி போலீசார் நிதின்சர்மாவை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் அவர் கடந்த 16-ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையாகி வெளியில் வந்துள்ளார். அப்படி வெளியே வந்த நிதின் சர்மா புதுச்சேரியிலிருந்து வேலைதேடி விழுப்புரம் வருகை தந்துள்ளார் . விழுப்புரத்தில் டெல்லி செல்லும் லாரி டிரைவர்கள் நான்கு பேர்களுடன் சேர்ந்து தங்கியுள்ளார்.
இந்த நிலையில் கொரோனா நோய் பரவல் சம்பந்தமாக காவல்துறை டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களை தீவிரமாக தேடிவந்த நிலையில், இவர்கள் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்பதால் நிதின்சர்மா உள்ளிட்ட நான்கு லாரி டிரைவர்களையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொண்டுபோய் மருத்துவ பரிசோதனைக்காக சேர்த்தனர். இவருடன் சேர்த்து மேலும் 26 பேருக்கு நோய்த்தொற்று இருக்குமா என மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி நிதின் சர்மா உட்பட 26 நபர்களுக்கு கொரானா நோய்த்தொற்று இல்லை என முதல்கட்ட அறிக்கைவர, அந்த 26 நபர்களை மருத்துவ அதிகாரிகள் வெளியே அனுப்பியுள்ளனர். எனினும் அனைவரும் 28 நாட்கள் தொடர்ந்து தனிமையில் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பியுள்ளனர். இந்தநிலையில் நேற்று மேற்படி 26 நபர்களின் மருத்துவப் பரிசோதனை அறிக்கை மருத்துவ அதிகாரிகளிடம் கிடைக்கப்பெற்றுள்ளது. அதில் நான்கு பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த நான்கு பேர்களில் நிதின் சர்மாவும் ஒருவர்.
இவர்கள் நால்வரையும் மீண்டும் மருத்துவமனை அழைத்துவந்து மருத்துவமனையில் கொரானா நோய் தனிப்பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக்குழு தேடிச் சென்றது. அதில் மூன்று பேர்கள் மட்டும் அவரவர் வீட்டில் இருந்தனர். ஆனால் நிதின் சர்மா தங்கியிருந்த இடத்தில் இல்லை.
இதையடுத்து மற்ற மூவரையும் அழைத்துவந்து சிறப்பு சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். காணாமல் போன நிதின்சர்மாவை காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது. பாண்டிச்சேரி பகுதியிலிருந்து அவர் விழுப்புரம் வந்ததால் மீண்டும் பாண்டிச்சேரிக்கு சென்றிருக்கலாம் என காவல்துறை அலசிவருகிறது. நிதின் சர்மாவின் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் ஒருபக்கம் தேடிவர, சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியிலும், வளவனூரிலும் நிதின் ஷர்மா சாயலில் ஒருவர் இருப்பதாகத் தகவல்வர, நேரில்சென்ற காவல்துறை அது நிதின்ஷர்மா இல்லையென உறுதிசெய்துள்ளது.
சம்பந்தப்பட்டவரின் மருத்துவ அறிக்கை வருவதற்குள் அவர் எப்படி வெளியே அனுப்பப்பட்டார், ஒருநாள் முன்பின்னாக வந்த இரு மருத்துவ அறிக்கைகள் ஏன் முரண்பட்டன, இது அதிகாரிகளின் அலட்சியமா- மருத்துவர் அலட்சியமா, அனுப்பியவர் முகவரி, செல்போன் எண் ஏன் சேகரிக்கப்படவில்லை, அவர் பாதுகாப்பாக வீட்டிலிருக்கிறாரா என்பதை கண்காணிக்கவேண்டிய குழுவினர் என்ன செய்தார்கள்… இப்படிப் பலவிதமான கேள்விகள் நிதின்ஷர்மா விவகாரத்தில் எழுந்துள்ளன.
நிதின் ஷர்மாவின் புகைப்படத்தை வெளியிட்டு இவரை அடையாளம் கண்டால் உடனடியாக காவல்துறைக்குத் தெரிவிக்குமாறு மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. நோய்த்தொற்றுள்ள ஒருவர் தலைமறைவாகி உள்ளதால், அவரால் மற்றவருக்கு நோய் பரவும் அபாயத்தை எண்ணி பொதுமக்கள் மத்தியில் பதட்டமும் பீதியும் கிளம்பியுள்ளது.
ஏற்கெனவே மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிக நோய்த்தொற்றுடைய மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டில், இத்தகைய அலட்சியங்கள் மேலும் அதிக நோய்த்தொற்றையே ஏற்படுத்தும்.
எஸ்.பி.சேகர்