லோ தலைவரே, காவிரி விவகாரத்தில் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் அ.தி.மு.க.வோடு ஒருங்கிணைந்து எதிர்க்கட்சியான தி.மு.க.வும் குரல் கொடுப்பதை கர்நாடகா உட்பட பல மாநிலங்களும் வியப்பா பார்க்குதுங்க தலைவரே.''’

Advertisment

""சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு உடையோடு கலக்குனாங்களே?''’

stalin

""தலைவரே, நாடாளுமன்றத்தில் 50 எம்.பி.க்களின் பலத்தோட இருக்கும் அ.தி.மு.க.வும், 4 ராஜ்யசபா உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தி.மு.க.வும் காவிரி உரிமைக்காக இணைந்து நின்று போராடின. அப்படியும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டிக்கும் வகையிலும், இது தொடர்பாக மாநில அரசை வலியுறுத்தும் வகையிலும் தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து, அனைவரது கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்தாங்க. பட்ஜெட் கூட்ட அறிவிப்புக்கு முன்பாகவே, காவிரி உரிமைக்காக மத்திய அரசை வலியுறுத்தி சட்ட சபையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேத்தணும்னு மு.க.ஸ்டாலின் கோரிக்கை வச்சிருந்தார். ஆனால், பட்ஜெட்டைத் தாக்கல் பண்ணிட்டு இதுபத்தி ஆலோசிக்கலாம்ன்னு எடப்பாடி அரசு முடிவுபண்ணியிருந்தது. இது பத்தி நாம் ஏற்கனவே பேசியிருக்கோம். அதேபோல், மானியக் கோரிக்கைகளுக்கு கவர்னரிடமிருந்து அனுமதி கிடைக்கலைன்னு குறிப்பிட்டிருந்தோம். அதனால், 22-ந்தேதிவரை பட்ஜெட் விவாதத்தை நடத்திவிட்டு, கூட்டத் தொடரை சைலண்டா அரசு, தள்ளிப் போட்டிருக்குது.''’

Advertisment

""அதுசரிப்பா, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட காவிரி தீர்மானத்துக்கு வா.''’

""சரிங்க தலைவரே, நக்கீரன் முன்னதாகவே சொன்னபடி, பட்ஜெட் கூட்டத் தொடர் 15-ந் தேதி தொடங்குச்சு. பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய, துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பி.எஸ். எழுந்த போது, கருப்புச் சட்டை போட்டிருந்த ஸ்டாலின் எழுந்திரிச்சி, முதல்ல காவிரி குறித்த சிறப்பு தீர்மானத்தை நிறைவேத்தணும்னு சொல்ல முயன்றார். அதுக்கு சபாநாயகர் அனுமதி தரலை. அதனால், ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வின் கருஞ்சட்டை உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமா வெளிநடப்பு செஞ்சாங்க. இதன்பின் எடப்பாடியிடமிருந்து ஸ்டாலினுக்கு அழைப்புவர, ஸ்டாலினும் துரைமுருகனும் அவர் அறைக்குப் போனாங்க. அப்ப எடப்பாடி, "நீங்க கேட்டுக்கிட்ட மாதிரி, காவிரி உரிமையை வலியுறுத்தும் சிறப்புத் தீர்மானத்தை பிற்பகல் 3.30-க்கு சட்ட சபையில் நிறைவேத்த இருக்கிறோம். நீங்க ஒத்துழைப்பு கொடுக்கணும்'னு கேட்டார்.''’

""அதுக்கு ஸ்டாலின் என்ன சொன்னார்?''’

""ஸ்டாலினோ, "இதில் தனிப்பட்ட அரசியல் எதுவும் பண்ணாம, நாம எல்லோரும் ஒத்துமையா தீர்மானத்தை நிறைவேத்தணுங்கிறதுதான் என் ஆசை'ன்னு சொன்னார். சிறப்புக் கூட்டத்தில், சர்வ அதிகாரத்தோட காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி வழிகாட்டும் குழுவையும் அமைக்கணும்னு மத்திய அரசை வலியுறுத்தி, தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது, முதல்வர் எடப்பாடி, எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் காவிரி விவகாரத்தில் பலவற்றை செய்தார்கள்ன்னு பட்டியல் போட, உடனே துரைமுருகன் எழுந்து, "நீங்க இதில் அரசியல் பண்ணாதீங்க. எங்கள் தலைவர் கலைஞர்தான் உண்மையாக காவிரி விவகாரத்தில் செயலாற்றினார். அதைச் சொல்லவும் எங்களுக்கு இடம்கொடுங்கள்'னு சொன்னார். இதன்பிறகு, ஒருமனதா காவிரித் தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டிருக்கு.''

Advertisment

""மாநில நலனுக்காக ஆளும்கட்சியோட எதிர்க்கட்சியான தி.மு.க. கைகோத்து நிக்கிறது ஆரோக்கியமான அரசியல்ன்னு பலரும் பாராட்டறாங்க’ ’மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தெலுங்கு தேசம் பலமா ஆதரிக்கிது. தென்மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாக இந்திய அளவில் திராவிடக் குரல்கள் ஒலிக்கிது. இந்த நேரத்தில் மு.க.ஸ்டாலினும் அதை ஆதரிச்சி கருத்து தெரிவிச்சிருக்காரே?''’

dmkprotest

""ஈரோட்டில் 24, 25 தேதிகளில் நடக்கும் தி.மு.க. மண்டல மாநாட்டுப் பணிகளைப் பார்வையிடவும், மாநாட்டையொட்டி வைக்கப்படும், திராவிட வரலாற்றுக் கண்காட்சியைத் தொடங்கிவைக்கவும் 16-ந் தேதி ஈரோட்டுக்கு போயிருந்தார் ஸ்டாலின். அங்க செய்தியாளர்களை சந்திச்சப்ப, மோடி அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை வரவேற்றதோட, தென் மாநிலங்களை ஒன்றாகச் சேர்த்து திராவிட நாடு என்ற கோரிக்கை வலுவடைந்து வருவதை வரவேற்கிறேன்னு சொன்னாரு ஸ்டாலின்.''’

""தி.மு.க. மாநாட்டுக்கு முன்பாகவே ஈரோட்டில் கண்காட்சி திறக்கப்பட்டிருக்குதே?''’

""ஆமாங்க தலைவரே, திராவிட அரசியலுக்கு எதிரான கருத்துகள் பல முனைகளிலும் இப்போது வெளிப்படுவதால், திராவிட இயக்கச் சிந்தனைகளையும், அது செய்திருக்கும் சாதனைகளையும் அது ஏற்படுத்திய சுயமரியாதை உணர்வையும், அந்த உணர்வால், தமிழ்ச் சமூகம் எழுந்து நிற்பதையும் இன்றைய இளம் தலைமுறையினர் தெரிஞ்சிக்கணும்ங்கிற எண்ணத்தில்தான், மாநாட்டுக்கு ஒரு வாரம் முன்பாகவே கண்காட்சி திறந்து வைக்கப்பட்டிருக்கு. அதிலும் குறிப்பா, கொங்குமண்டலத்தில் தி.மு.க. ரொம்பவும் வீக்கா இருந்ததால்தான் 2016 தேர்தலில், அது ஆட்சியைப் பிடிக்க முடியலை. அதனால் அந்தப் பகுதி இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் முதல்ல தி.மு.க.வின் சாதனைகளை சொல்லணும்ங்கிறதுதான் தி.மு.க.வின் எண்ணம். அதேபோல் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் மாவட்டங்கள்ல தி.மு.க.வை பெரிய அளவில் அங்க இருக்கும் நிர்வாகிகள் வளர்க்கலைன்னாலும், அவங்க கல்வி நிறுவனங்களை வளர்த்து வச்சிருக்காங்க. அங்க பயிலக்கூடிய மாணவர்களையும், அங்க படிச்சி முடிச்ச இளைஞர்களையும் அவங்க மூலமா கண்காட்சிக்கு வரவழைச்சிடலாம்ங்கிற வியூகமும் தி.மு.க.விடம் இருக்கு.''’

""ஓ...''’

""கண்காட்சியையும் மாநாட்டையும் கவனிக்கவேண்டிய பொறுப்பு முன்னாள் அமைச்சர் முத்துசாமியிடம்தான் இருக்கு. அவர் எப்பவுமே கட்சி அடையாளம் இல்லாமல் தன்னைக் காட்டிக்க நினைக்கிறவர். அது கண்காட்சியிலும் எதிரொலிச்சிருக்கு. மு.க.ஸ்டாலின் முரசொலியில் உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில், திராவிட வரலாற்றை இளைய தலைமுறைக்கு விளக்குவதுடன் இளைஞர்களுக்குத் தேவையான விழிப்புணர்வு அம்சங்களும் கண்காட்சியில் இடம்பெறும்னு குறிப்பிட்டிருந்தார். ஆனால் முத்துசாமியோ, கண்காட்சி அமைப்பாளர்களிடம் பொதுவான விழிப்புணர்ச்சி அம்சங்கள் இடம்பெறணும்னு சொல்ல, அது அறிவாலயத் தரப்புவரை அதிர்வை உண்டாக்குச்சு. திராவிட உணர்வைவிட வேறு என்ன விழிப்புணர்வு இருக்கப் போகுதுங்கிற ஆதங்கம் சீனியர்கள் பலரிடமும் வெளிப்பட்டுச்சு. ஆனால் கண்காட்சியை ஸ்டாலின் தொடங்கிவைத்தபோது நீதிக்கட்சி தொடங்கி தி.மு.க.வின் இன்றைய செயல்பாடுகள் வரை, எல்லாமும் இடம்பெற்றிருந்தது. டாக்குமெண்டரி படமும் கண்காட்சியில் திரையிடப்படுது.''’

""மண்டல மாநாட்டு செலவையெல்லாம் எதிர்க்கட்சியான தி.மு.க. எப்படி சமாளிக்கிது?''’

""மேற்கு மண்டல தி.மு.க.வில் 15 மாவட்டங்கள் இருக்கு. ஒவ்வொரு மா.செ.வும் தலா 1 கோடி ரூபாயை வசூலிச்சித் தரணும்னு கட்சித் தலைமை இலக்கு நிர்ணயிச்சிருக்கு. மற்ற மண்டலத்தில் உள்ள மா.செ.க்கள் தலா 5 லட்சம் தரணும்னு சொல்லி நன்கொடை புத்தகமும் அச்சிடப்பட்டிருக்கு. கோவை மாவட்டத்தில் மட்டும் 4 மா.செ.க்கள் இருக்காங்க. அவங்க, ஒவ்வொரு வார்டு செயலாளரும் தலா 2 லட்சம் வீதம் வசூல் பண்ணித்தரணும்னு சொல்லியிருக்காங்க. அதனால் அவங்க அங்க துணிக்கடை, நகைக்கடை, மில் அதிபர்கள், தொழிலதிபர்கள்ன்னு பலரையும் துரத்திக்கிட்டிருக்காங்க. இப்படி எங்களை அலையவிட்டுட்டீங்களேன்னு வார்டு செயலாளர்கள், மா.செ.க்கள்ட்ட புலம்ப, மா.செ.க்களோ எங்க பாடும் இதே பாடுதான்னு பதிலுக்குப் புலம்பியிருக்காங்க.''’’

""வசூல் ஆகுதா?''’

cvsanmugam""கோவை மாநகர் வடக்கு மா.செ. முத்துசாமி, வசூலுக்குப் போகும் இடங்களில், வழக்கமா வீரகோபால்தானே வசூலுக்கு வருவாருன்னு மாஜி மா.செ.வைப் பத்திப் பலரும் கேட்டிருக்காங்க. கட்சியில் மாவட்ட நிர்வாகம் மாறியதைக் கூட அவங்ககிட்ட விளக்கவேண்டியிருக்கேன்னு புலம்பல் கேட்குது. இப்படி ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள்லயும் இதே நிலைமைதானாம். தேர்தல் நிதி, மாநாட்டு நிதின்னு ஏறியிறங்கும் வழக்கம் தி.மு.க.வினருக்கு மட்டும்தான் இருக்கு. அ.தி.மு.க.வினர் இப்படி நேரடி வசூல்ல இறங்கறதில்லை. மேலிடமே அதையெல்லாம் கச்சிதமா முடிச்சிடுது. தி.மு.க.வினர் பழைய பாணியிலேயே வசூலுக்குப் போகும் போது, "உங்ககிட்ட இல்லாததா? எதுக்கு எங்ககிட்ட கையேந்தறீங்க'ன்னு கிண்டலா கேட்கறாங்களாம். இதையெல்லாம் எப்படி கட்சித் தலைமையிடம் சொல்றதுன்னு வசூல் களத்து உ.பி.க்கள் ஆதங்கப்படறாங்க.''’’

""நானும் ஒரு ஆதங்கச் செய்தியைச் சொல்றேங்க தலைவரே, அமைச்சர் சி.வி.சண்முகம், அண்மைக்காலமாக சசிகலாவையும் தினகரனையும் மேடைகளில் கடுமையாகத் தாக்கிப் பேசிவந்தார். இது தொடர்பான புகார்கள் சசி தரப்பினர் மூலமே எடப்பாடி காதுக்கு போக, சி.வி.சண்முகத்தை அழைத்து, "எனக்குள்ள பிரச்சினையை நீங்க யாரும் புரிஞ்சிக்கிறதில்லை. இனியாவது சின்னம்மா தரப்பை விமர்சிக்காமல் அடக்கி வாசிங்க'ன்னு கறார்க் குரல்ல கண்டிச்சிருக்காரு முதல்வர். "மேடையில் பேசும் உரிமை கூட எனக்கு இல்லையா'ன்னு தன் சகாக்களிடம் சி.வி.சண்முகம் ஆதங்கப்படறாராம்.''