""ஹலோ, தலைவரே, தி.மு.க.வினருக்கு கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதி எப்படி கொண்டாட்ட நாளோ, அதேபோல் மு.க.ஸ்டாலின் பிறந்த மார்ச் 1-ம் தேதியும் கொண்டாட்ட நாளா மாறியிருக்கு.''’

""தலைவருக்கு இருக்கும் முக்கியத்துவம், செயல் தலைவருக்கு இருக்காதா?''’

""ஆமாங்க தலைவரே, 65 ஆவது பிறந்த நாளான அன்றைக்கு அண்ணா, பெரியார் நினைவிடங்களில் வணங்கிவிட்டு, கோபாலபுரத்தில் கலைஞரிடமும் தயாளு அம்மாளிடமும் வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்ட ஸ்டாலின், பொதுச் செயலாளரான பேராசிரியர் அன்பழகனையும் சந்திச்சி வாழ்த்து பெற்றார். தோழமைக் கட்சித் தலைவர்களும் நேரில் வந்து ஸ்டாலினை வாழ்த்தினாங்க. "ஸ்டாலினை முதல்வராக்காமல் ஓயமாட்டேன்'னு அண்மைக்காலமாக முழங்கிவரும் வைகோ மகிழ்ச்சியோடு வந்து வாழ்த்தினார். திருநாவுக்கரசர், திருமான்னு கூட்டணி தலைவர்கள் பலரும் வந்தாங்க. அரசியல் களத்தில் காகிதப் பூக்களாக வர்ணிக்கப்பட்ட கமல், ரஜினியிடமிருந்தும் ட்விட்டர்- ஃபோன் மூலமா வாழ்த்து மணம் வீசியது. கருத்து வேறுபாடுகள் கடந்து, எல்லாத் தரப்பினரிடமும் நட்பு பாராட்டக் கூடியவர் ஸ்டாலின் என்பதால், கட்சி வேறுபாடு இல்லாமல் எல்லோரும், அவரை மனதார வாழ்த்தியிருக்காங்க''’

stalin

Advertisment

""கட்சிப் பிரமுகர்களும் தொண்டர்களும் ஆர்வமா வந்து ஸ்டாலினை வாழ்த்தியிருக்காங்களே?''’

""ஆர்வத்தைவிட அவங்களுக்கு எதிர்பார்ப்பு கூடுதலா இருக்குங்க தலைவரே... போன பிறந்தநாளின்போது, ஸ்டாலின் "தனக்கு மாலைகள், பொன்னாடைகளுக்கு பதிலா, புத்தகங்களைப் பரிசாகக் கொடுங்கள்'னு தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டதால், நிறைய நூலகங்களுக்கு புத்தகங்கள் கிடைச்சிது. இந்தமுறை ஸ்டாலின், "தி.மு.க. கிளைகள்தோறும் படிப்பகங்களைத் தொடங்குங்கள்'னு கட்சியினரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். அதோடு, மக்கள் விரோத மத்திய மாநில அரசுகளால் தமிழகம் இடர்களை எதிர்கொண்டுவரும் நிலையில், அதிலிருந்து மீளும் வகையில் சுயமரியாதை உணர்வோடு மக்கள் மத்தியில் திராவிட இயக்க கொள்கைகளை எடுத்துவைக்கணும். அதன் மூலம் கட்சியை பலப்படுத்தணும். இதையே தனது தொண்டர்களிடம் கிஃப்டா எதிர்பார்க்கிறார் ஸ்டாலின். அதேபோல், கட்சித் தொண்டர்களும், கட்சிக்குள் அதிரடி நடவடிக்கைங்கிற ரிட்டர்ன் கிஃப்டை ஸ்டாலினிடம் இருந்தும் எதிர்பார்க்கறாங்க''’

stalinb'day""ஈரோட்டு தி.மு.க. மாநாட்டில் அந்த கிஃப்ட் தொண்டர்களுக்கு கிடைக்குமா?''’

Advertisment

""மாநாடு முடிந்ததும் கிடைக்கலாம். தி.மு.க. கள ஆய்வுக் கூட்ட புகார் பெட்டியில் குவிந்த புகார்களில், மொட்டைக் கடித பாணி புகார்களை மட்டும் ஓரங்கட்டிவிட்டு, ஏற்கெனவே நாம் சொன்னதுபோல், புகார்களின் சாராம்சங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, அவற்றில் உண்மைத் தன்மையின் அடிப்படையில் நடவடிக்கைகள் அதிரடியாவே இருக்குமாம். இதில் புகார் தெரிவித்தவர்களின் பெயர் வெளியாகிவிடக் கூடாதுங்கிறதில ஸ்டாலின் கவனமா இருக்காரு. அதேபோல், 4 மாவட்டங்களா இருக்கும் சென்னையை ஏற்கெனவே இருந்ததுபோல் வட சென்னை, தென் சென்னைன்னு இரண்டே பிரிவா ஒருங்கிணைக்கவும், அவற்றிற்கு சேகர் பாபுவையும், மா.சுப்பிரமணியத்தையும் மா.செ.க்களாக நியமிக்கவும் தலைமை முடிவு செஞ்சிருக்குதாம். இதன்படி பார்த்தால், இப்ப மா.செ.க்களாக இருக்கும் ஜெ.அன்பழகன், சுதர்சனம் ஆகியோரின் பதவிகள் பறிபோகும். சேகர் பாபுவும், மா.சு.வும் மா.செ. பதவிகளிலேயே தொடருவாங்களா? பதவியைப் பறிகொடுப்பவர்கள் வேறு முக்கிய பதவிக்கு வருவார்களா? என்பதும் விரைவில் தெரிந்துவிடும்''’

""என்ன மாற்றமா இருந்தாலும் ஆட்சிக்கு வரக்கூடிய வலிமையை, அது கட்சிக்குக் கொடுக்கணும். அப்பதான் கொண்டுவர நினைக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும்''’

""சரியா சொன்னீங்க தலைவரே, தி.மு.க. எம்.பி., கனிமொழி, தான் தத்தெடுத்திருக்கும் தூத்துக்குடி மாவட்ட வெங்கடேசபுரத்தில், மக்கள் விருப்பப்படி, மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளியைக் கொண்டுவரணும்னு, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகரிடம் கோரிக்கை வச்சார். அங்கே இடத்துக்கு ஏற்பாடு செஞ்சா, பள்ளிக் கூடத்தை உருவாக்க 49 கோடி ரூபாயை ஒதுக்குறோம்ன்னு உறுதிமொழி கொடுத்தார் அமைச்சர். ஆனால், இடத்தைக் காட்டி, இங்கே பள்ளி உருவாக அனுமதி கொடுங்கன்னு மாவட்ட நிர்வாகத்திடம் ஊர்மக்கள் 3 மாதமா போராடிக்கிட்டு இருக்காங்க. இன்னும் அனுமதி கிடைக்கலை. தி.மு.க. ஆட்சி இருந்திருந்தா இப்படி அனுமதிக்குத் தொங்கிக்கிட்டு இருக்கத் தேவையில்லையே’''’

""காங்கிரஸ் பக்கமும் பரபரப்பு தெரியுதே?''’

kanimoli""கைது பரபரப்புகள் ஒரு பக்கம்னா... அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவரான தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவீந்திரதாஸை, நான்காவது முறையாக அதே பதவியில் அமர்த்தியிருக்கிறார் ராகுல். குஜராத் தேர்தலில் அவர் செய்த பணிகளைப் பாராட்டிய ராகுல், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் இளைஞர் காங்கிரஸை வலுப்படுத்தும் பொறுப்பையும் இவரிடம் ஒப்படைச்சிருக்காரு.''’

""நானும் ஒரு தகவலைச் சொல்றேன். சேலம் கலெக்டர் அலுவலக பி.ஆர்.ஓ. சாமிநாதன் பற்றிய கசமுசா செய்திகள் கோட்டைவரை பரபரப்பை ஏற்படுத்திக்கிட்டிருக்கு. சேலம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் சிங்கிளாகத் தங்கியிருக்கும் அவர், அடிக்கடி பெண்களை அழைச்சிக்கிட்டு வர்றார்னு கோபப்பட்ட ஏரியாவாசிகள், அண்மையில் ஒரு வருவாய்த்துறை பெண் அதிகாரியோடு, அவர் வீட்டுக்குள் இருந்தபோது, வெளியே பூட்டைப் போட்டு பூட்டிட்டாங்களாம். அஸ்தம்பட்டி போலீஸ்காரங்க வந்துதான் அவர்களைப் பத்திரமா மீட்டு அனுப்பி வச்சாங்களாம். இந்த பி.ஆர்.ஓ. பற்றிய புகார்கள் சூறாவளியை எழுப்பிக்கிட்டிருக்கு.''