""ஹலோ தலைவரே, ஜெ.’ மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷனில் சசிகலா கொடுத்ததா வெளியான வாக்குமூலத்தில் 30 சதம் மட்டும்தான் உண்மைன்னு, கமிஷனே மறுத்திருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு''’

""ஆமாம்பா, ஆளாளுக்கு கதைவிட்டு குழப்பியடிச்சி ஜெ.வுக்குத் தரப்பட்ட சிகிச்சையிலும்,’ மரணத்திலும் உள்ள சர்ச்சைகளை மேலும் மேலும் அதிகமாக்கறாங்களே தவிர, நக்கீரனைப் போல் அவங்க மர்மத் திரைகளை விலக்க முயற்சி பண்ணலை''

apolloreddy

""உண்மைதாங்க தலைவரே, சொத்துக் குவிப்பு வழக்கின் போக்கு, ஜெ.’வுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியதையும் அவருக்கு கார்டன்லயே ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்பட்டதையும், அதனால் அவருக்கு சர்ச்க்கரையின் அளவும், ரத்த அழுத்தமும் அதிகரிச்சதையும், அதனால் மயங்கிய நிலையிலேயே அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதையும் நக்கீரன்தான் அப்பவே துல்லியமா சொன்னது. அதேபோல் அவருக்கு தொடர்ந்து கொடுக்கப்பட்ட மருத்துவம் பத்தி விவரிச்சதோட, 2016 டிசம்பர் 4-ந் தேதி அவர், கடைசியா ஜெயா டி.வி.யில் "ஜெய் ஹனுமான்' தொடர் பார்த்ததா சொல்றதையும் அப்பவே நக்கீரன் தெரிவிச்சிது. இதெல்லாம் இப்ப சசிகலா வாக்குமூலத்திலும் இருக்கு. இருந்தபோதும் அவர் தந்த வாக்குமூலம்ன்னு பிற மீடியாக்களில் வெளியான செய்திகளில் 30 சதம்தான் உண்மைன்னு, ஆறுமுகசாமி கமிஷன் சொல்லி, சசி தரப்பின் கதையை மறுத்திருக்கு''’

Advertisment

""ஜெ.வை ஓ.பி.எஸ். பார்த்தாருன்னு சசிகலாவின் வாக்குமூலத்தில் இருப்பதும் ஆள்வோருக்கு சிக்கலாயிடிச்சாம். இந்த நிலையில் 21-ந் தேதி பத்திரிகையாளர்களை சந்திச்ச அப்பல்லோ ரெட்டி... "ஜெ’வுக்கு சிகிச்சையளித்த பகுதியில், சி.சி.டி.வி. கேமராவை அணைத்து வைத்தோம்'னு புதுக்கதை சொல்லியிருக்காரே?''’

""தலைவரே, பத்திரிகையாளர்கள் சந்திப்பில், அப்பல்லோ ரெட்டி பேசும்போது, "ஜெ.’ சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் விசாரணை ஆணையத்தில் ஒப்படைத்து விட்டோம்'னு சொன்னார். அதோட, ஜெ.’ சிகிச்சைபெற்று வந்த பகுதியில், சி.சி.டி.வி கேமராக்களை அணைத்து வைத்தோம்னு சொல்லியிருக்காரு. இப்படி, முக்கிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது அந்தப் பகுதியில் உள்ள கேமராக்களை அணைப்பதற்கு மருத்துவமனை சட்டத்தில் இடம் இருக்காங்கிற விவாதங்கள் இப்போது நடக்குது. சட்டம் தெரிந்தவர்கள் என்ன சொல்றாங்கன்னா, ஒரு நோயாளியே தன்னோட பிரைவஸிக்காக சிகிச்சையின்போது, கேமராவை அகற்றணும்னு விரும்பினால் கூட, அவங்களிடம் முறைப்படியான ஒப்புதலைப் பெற்றிருக்கணும் என்றும், ஜெ.’ தேர்தல் படிவங்களில் கைநாட்டு வைத்ததா சொல்லப்படுவதால், இப்படி முக்கியத்துவம் வாய்ந்த செயல்பாடுகளையாவது ஆதாரங்கள்ன்னு கருதி, கேமரா மூலம் பதிவு செய்திருக்கணும்னு சொல்றாங்க. இல்லைன்னா, இது தொடர்பாக வழக்குகள் பதிவாவதற்கான வாய்ப்புகள் இருக்குன்னும் அழுத்தமா சொல்றாங்க''’

""ஜெ.’மர்ம மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரிக்கணும்னு தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் முன்பு குரல்கொடுத்துச்சு. இப்போது ஆளும்கட்சியும் அதுபற்றிக் கவலைப்படலை. தி.மு.க.வும் இதைக் கண்டுக்கலையே?''’

Advertisment

""எதிர்க்கட்சியான தி.மு.க.வின் கவனம் முழுதும், இப்ப ஈரோடு மண்டல மாநாட்டிலேயே இருக்கு. கடந்த சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனதற்கு காரணமான, "வீக்'கான கொங்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்தணும்ங்கிற நோக்கத்தோடுதான் இந்த மாநாடே நடத்தப்படுது. அதற்கு ஏற்ப அதிக அளவில் தொண்டர்களைத் திரட்டி மாநாட்டை பிரமாண்டமா நடத்தணும்னு, அது களத்தில் விறுவிறுப்பைக் காட்டிக்கிட்டிருக்கு''’

dmk-conference

""மாநாடு நடத்துறதெல்லாம் தி.மு.க.வுக்கு சகஜம்தானே?''

""தலைவரே, ஈரோடு அருகே பெருந்துறை நான்குவழிச் சாலை பகுதியில் 100 ஏக்கரில் மாநாட்டுப் பந்தல் மிகவும் பிரமாண்டமா அமைக்கப்பட்டிருக்கு. 5 லட்சம் பேர்வரை மாநாட்டில் பங்கேற்கும்படியாக வசதிகள் செய்யப்பட்டிருக்கு. வாகனங்களை பார்க்கிங் செய்ய மட்டுமே தனியா 400 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டிருக்கு. சேலத்தில் இருந்து நீலகிரிவரையிலான கொங்குமண்டலப் பகுதிகளில், கொடி தோரணங்கள், பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள்னு அமர்க்களமா ஆக்கியிருக்காங்க. மாநாட்டுப் பொறுப்பாளரான மாஜி மந்திரி முத்துசாமி, கொங்கு பெல்ட் கள நிலவரத்தை நன்கு அறிந்தவர் என்பதால், மாநாட்டுப் பணியை சவாலா எடுத்துக்கிட்டு, ஒரு சாதாரண தொண்டரைப் போல் களத்தில் இறங்கி விறுவிறுப்பா வேலை செய்துக்கிட்டிருக்காரு.''’

""அவரே தொண்டர் போல செயல்பட்டால் தொண்டர்களின் உணர்வை புரிஞ்சிருப்பாரே!''’

dmkconference""ஆமாங்க தலைவரே, ஓரளவாவது வசதியை ஏற்படுத்திக் கொடுத்தால்தான் தொண்டர்கள் களைப்பில்லாமல் வேலை செய்யமுடியும்ங்கிறதால் அவங்க தங்க, திருப்பூர்ல இருந்து ஈரோடு வரையில் 100 திருமண மண்டபங்களை புக் பண்ணியிருக்காங்க. மாநாட்டுக்கு வர்ற பெண்களுக்காக மாநாட்டுத் திடலுக்குப் பக்கத்திலேயே 3 திருமண மண்டபங்கள் தனியா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கு. அதோட 150 மொபைல் டாய்லட்டுகளும் ஒரே நேரத்தில் 50 பேர்வரை குளிக்கும் தற்காலிகக் குளியலறைகளும், 100 உணவகங்களும் அமைக்கப்பட்டிருக்கு. ஏறத்தாழ அங்கே ஒரு மாடல் சிட்டியையே உருவாக்கியிருக்காங்க. வர்றவங்களை கவனிக்க 20 சிறப்புக் குழுக்களும் ஒரு தனி பாதுகாப்புக் குழுவும் கூட அமைக்கப்பட்டிருக்கு.''’

""கட்சி நிர்வாகிகளுக்கும் இதே இடம்தானா? மாநாட்டு செலவுக்கான வசூலெல்லாம் ஆயிடிச்சா?''’

""மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாஜி மந்திரிகள் போன்றோருக்கு ஈரோட்டைச் சுற்றியுள்ள விடுதிகள் பதிவாயிடிச்சி. ஸ்டாலின், பேராசிரியர் போன்ற தலைவர்களுக்காக, மேடையை ஒட்டியே சூட் ரூம் 5 அமைக்கப்பட்டிருக்கு. தனியார் ரெசார்ட்ஸ்சும் புக் பண்ணப்பட்டிருக்கு. வசூலைப் பொறுத்தவரை மேற்கு மண்டலத்தில் இருக்கும் ஏனைய 14 மா.செ.க்களும் தலா 1 "சி' கொடுக்கணும்னு வசூல் டார்கெட் இருந்தும், அவங்கள்ல பலரும், "30 எல்', "40’ எல்'தான் வசூலாச்சுன்னு கை பிசைஞ்சாங்க. அதனால் எல்லா கணக்கு வழக்கையும் மாநாட்டுக்குப் பின்னால பார்த்துக்கலாம்ணு, மாஜி முத்துசாமியே எல்லாத்தையும் வரிஞ்சி கட்டி செய்துக்கிட்டிருக்காரு.''’

""தி.மு.க.வில் அதிகளவில் இளைஞர்களையும் பெண்களையும் சேர்க்கணும்ங்கிறதுதான் ஸ்டாலினின் pccதிட்டம். மாநாட்டில் அவர் போடப்போகும் புது கட்டளைகள் தி.மு.க.வை பலப்படுத்தும்னு சொல்றாங்கப்பா.''

""அ.தி.மு.க. தரப்பில் என்ன நடக்குதுன்னு சொல்லு''’

""அ.தி.மு.க.வில் காலியா இருக்கும் பதவிகள் நிரப்பப்படுது. பதவி கொடுக்கப்பட்டவர்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். போன்றவர்களிடம் வாழ்த்து வாங்கறாங்க. அவங்கக்கிட்ட இந்த ரெண்டுபேரும், இனி கட்சி நிகழ்ச்சிகளுக்கான விளம்பரங்கள்ல, ஜெ.’ படமும் எங்க ரெண்டுபேர் படமும் மட்டும்தான் இருக்கணும்னு சொல்றாங்க. இதனால் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்களான கே.பி.முனுசாமி தரப்பும் மாஜி வைத்திலிங்கம் தரப்பும் புகைச்சல்ல இருக்கு. அவங்க படத்தைப் போட்டு பேனர் வச்ச ஆதரவாளர்கள் ஷாக் ஆகியிருக்காங்க''’

‘""த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தாய் வீட்டிற்கே போகப் போறார்ன்னு தகவல் வருதே?''’

‘""தலைவரே, தனிக்கட்சி நடத்தியும் சோபிக்க முடியாத வாசன், இதுபத்தி குடும்பத்தினரிடமும் முக்கிய நண்பர்களிடமும் ஆலோசிச்சார். ஒரு சிலர் ரஜினி தொடங்க இருக்கும் கட்சிப் பக்கம் போகலாம்னு சொல்ல இன்னும் சிலர், மூப்பனார்ங்கிற முகவரி இருப்பதால் இன்னும் நம்மைக் காங்கிரஸாவே பலரும் பாக்கறாங்க. அதனால் காங்கிரஸ் பக்கமே போறதுதான் சரின்னு சொன்னாங்க. கடைசியில் தாய்க்கட்சியான காங்கிரஸுக்கே போகலாம்னு முடிவெடுத்த வாசன், தன் எண்ணத்தை டெல்லிக்குத் தெரியப்படுத்தினார். வாசனும் ஜெயந்தி நடராஜனும் மறுபடியும் கட்சிக்கு வேண்டாம்னு ராகுல் நினைக்கிறார். தன் விருப்பத்தை பிரணாப் முகர்ஜி, குலாம்நபி ஆசாத் போன்ற சீனியர்கள் மூலம் சோனியாவரை கொண்டுபோயிருக்கார் வாசன். விரைவில் இணைப்புச் செய்தி வரலாம்ன்னு காங்கிரஸ் தரப்பிலேயே டாக் இருக்கு.''’

""தன் மகன் கார்த்தி சிதம்பரத்தை விடுவிக்க ப.சி., தீவிர முயற்சியில் இறங்கியிருக்காராமே?''’

""பா.ஜ.க. அரசின் மத்திய அமைச்சரான அருண்ஜெட்லியும் ப.சி.யும் நெருங்கிய நண்பர்கள். அதனால் வழக்கிற்கு முன்பிருந்தே இருவரும் டெல்லியில் சந்திச்சி அளவளாவுவது வழக்கம். அந்த வகையில், தன் மகனை தேவையில்லாமல் அமலாக்கத்துறை பழிவாங்கறதா, தன் மன ஆதங்கத்தை ப.சி., அருண்ஜெட்லியிடம் சொன்னாராம். இது அப்படியே பா.ஜ.க. தயவை ப.சி. எதிர்பார்க்குறாருன்னு பரவிக்கிட்டிருக்கு. 2 ஜி வழக்கில், கனிமொழியும் ஆ.ராசாவும் விடுதலையானதை எதிர்த்து காலக்கெடு முடிவதற்கு முன் பா.ஜ.க. அரசு மேல்முறையீடு செஞ்சிருக்கு. வழக்கு நடத்தியதில் எங்கெங்கே வீக்குன்னு சி.பி.ஐயும் அமலாக்கத்துறையும் இப்ப தீவிர ஆய்வில் இறங்கியிருக்கு''’

""நானும் ஒரு முக்கியத் தகவலைச் சொல்றேன். கோட்டையிலும் கோட்டைக்கு அப்பாலும் துறைச் செயலாளர்களாகவும், இயக்குநர்களாகவும் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அலுவலக நாட்களில், தினமும் 12 மணியில் இருந்து 1 மணிவரை பொதுமக்களுக்கு நேரம் ஒதுக்கி அவர்களின் குறைகளைத் தீர்க்கணும். இதுதான் நடைமுறை. ஆனா இப்ப பெரும்பாலான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மக்களை சந்திக்கிறதில்லை. அவங்க அந்த நேரத்திலும் பேஸ் புக்கிலும் வாட்ஸ்ஆப்பிலும் பிஸியா இருக்காங்களாம்.''’