""ஹலோ தலைவரே, 5-ந் தேதி தி.மு.க. தலைமையேற்று நடத்திய மறியல் போராட்டமும் கடையடைப்பும், தமிழக மக்களின் கோபத்தை பெரிய அளவில் மோடிக்கு உணர்த்தியிருக்கு. போராட்டங்கள் ஓயாமல் தொடர்ந்துக்கிட்டும் இருக்கு.''’
""கல்லூரி மாணவர்கள் களத்தில் இறங்கிட்டாங்க. விவசாயிகளின் போராட்டமும் ஓயலை. ஆற்று மணலில் புதைந்து ஆவேசப் போராட்டம் நடத்தியிருக்காங்க அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாய அமைப்பினர். இந்த நிலையில் தி.மு.க.வோடு எதிர்க்கட்சிகளும் சேர்ந்து புதுப்புது போராட்ட வியூகங்களை வகுத்திருக்குதே.''’
""ஆமாங்க தலைவரே, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 6-ந் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டினார். அதன்படி 7- ந் தேதி ஒரு குழுவாக திருச்சி முக்கொம்பில் இருந்தும், 9-ந் தேதி இன்னொரு குழுவாக அரியலூரில் இருந்தும், காவிரி உரிமை மீட்புப் பயணத் திட்டம் அறிவிக்கப்பட்டது. கடலூரில் பயணம் நிறைவடைந்ததும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் சென்னையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை 10-ந் தேதி சந்திச்சி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தும் கோரிக்கை மனுவைக் கொடுக்கப் போறாங்களாம்.''’
""ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு எதிராவும் காவிரிப் போராட்டம் திசை திரும்பியிருக்கே?''’
""உண்மைதாங்க தலைவரே, சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்தக்கூடாதுன்னு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் உள்ளிட்டவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்ப, மனித நேய ஜனநாயகக் கட்சி தமீமுன் அன்சாரியோ, கிரிக்கெட் போட்டியை நிறுத்தாவிட்டால், விளையாட்டு அரங்கிற்குள் நுழைவோம். கிரிக்கெட் வீரர்களை சிறைப் பிடிப்போம்ன்னு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கார். அதேபோல் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனும், ஐ.பி.
""ஹலோ தலைவரே, 5-ந் தேதி தி.மு.க. தலைமையேற்று நடத்திய மறியல் போராட்டமும் கடையடைப்பும், தமிழக மக்களின் கோபத்தை பெரிய அளவில் மோடிக்கு உணர்த்தியிருக்கு. போராட்டங்கள் ஓயாமல் தொடர்ந்துக்கிட்டும் இருக்கு.''’
""கல்லூரி மாணவர்கள் களத்தில் இறங்கிட்டாங்க. விவசாயிகளின் போராட்டமும் ஓயலை. ஆற்று மணலில் புதைந்து ஆவேசப் போராட்டம் நடத்தியிருக்காங்க அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாய அமைப்பினர். இந்த நிலையில் தி.மு.க.வோடு எதிர்க்கட்சிகளும் சேர்ந்து புதுப்புது போராட்ட வியூகங்களை வகுத்திருக்குதே.''’
""ஆமாங்க தலைவரே, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 6-ந் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டினார். அதன்படி 7- ந் தேதி ஒரு குழுவாக திருச்சி முக்கொம்பில் இருந்தும், 9-ந் தேதி இன்னொரு குழுவாக அரியலூரில் இருந்தும், காவிரி உரிமை மீட்புப் பயணத் திட்டம் அறிவிக்கப்பட்டது. கடலூரில் பயணம் நிறைவடைந்ததும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் சென்னையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை 10-ந் தேதி சந்திச்சி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தும் கோரிக்கை மனுவைக் கொடுக்கப் போறாங்களாம்.''’
""ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு எதிராவும் காவிரிப் போராட்டம் திசை திரும்பியிருக்கே?''’
""உண்மைதாங்க தலைவரே, சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்தக்கூடாதுன்னு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் உள்ளிட்டவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்ப, மனித நேய ஜனநாயகக் கட்சி தமீமுன் அன்சாரியோ, கிரிக்கெட் போட்டியை நிறுத்தாவிட்டால், விளையாட்டு அரங்கிற்குள் நுழைவோம். கிரிக்கெட் வீரர்களை சிறைப் பிடிப்போம்ன்னு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கார். அதேபோல் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனும், ஐ.பி.எல்.லை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பதன் மூலம், இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் எல்லோரின் கவனத்தையும் காவிரிப் பிரச்சினையின் பக்கம் திருப்பலாம்ன்னு, கோரிக்கை வச்சிருக்கார். கார்ப்பரேட் நிறுவனங்களின் பின்னணியில் நடத்தப்படும் ஐ.பி.எல்.லுக்காக, கோடிக்கணக்கில் பணம் கட்டி கிரிக்கெட் வீரர்களை ஏலம் எடுத்து, அதிக கட்டணம் நிர்ணயித்து டிக்கெட்டுகளையும் விற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில், ஐ.பி.எல்.லை மையமாக வைத்து காவிரிப் போராட்டம் நகர்வது, பல தரப்பிலும் பெரிய அளவிலான கவனத்தை உண்டாக்கியிருக்கு.''’
""இவ்வளவு நடந்தும் மத்திய அரசு, கொஞ்சமும் அசைந்துகொடுக்காத நிலையில், உச்சநீதிமன்றமாவது காவிரியில் தமிழர்களின் உரிமையை மீட்டுக்கொடுக்குமா?''’
""காவிரி நடுவர் மன்றம் கொடுத்த தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு 6 வாரத்தில் அமைக்கணும்னு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், 15 வருடங்களுக்கு இந்தத் தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லைன்னு அழுத்தமா சொல்லியிருந்தது. அப்படியிருந்தும் 6 வார காலக் கெடுவை அலட்சியப்படுத்தி, கடைசி நேரத்தில், உச்சநீதிமன்றம் உத்தரவிலேயே இருக்கும் ஸ்கீம் என்ற சொல், திட்டம் என்பதைக் குறிக்குமா? இல்லை வாரியம் என்பதைக் குறிக்குமான்னு வழக்கை இழுத்தடிக்கும் நோக்கத்தோடு உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு மனு போடுகிறது. உச்ச நீதிமன்றமோ, ஸ்கீம் என்ற சொல்லுக்கு காவிரி மேலாண்மை வாரியம் என்பது மட்டும் பொருளல்லன்னு சொல்கிறது. இப்படிப்பட்ட சூழலில் காவிரி உரிமையை நீதியின் துணையால் மீட்க முடியும் என்று எப்படி நம்புவது என்ற கேள்வியை சட்டத்துறை நிபுணர்களே எழுப்பறாங்க.''’
‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மிஸ்ராவே, காவிரிக்கான போராட்டத்தை தமிழகம் நிறுத்தவேண்டும். அதற்கு உரிய நீதி கிடைக்கும்ன்னு சொல்லியிருக்காரே?''’
""தலைவரே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சக நீதிபதிகளும் எதிர்க்கட்சிகளும் புகார் வாசிக்குறாங்க. காவிரி தீர்ப்பு விவகாரத்தை பா.ஜ.க. இழுத்தடிக்க நினைக்கையில், வேறு வழக்கொன்றில் ஆஜரான தமிழக அரசுக்கான வழக்கறிஞர் உமாபதியிடம், தமிழகம் தன் போராட்டங்களை நிறுத்திக்கணும். நீதி கிடைக்கும்னு மிஸ்ரா சொல்லியிருக்காரு.''’
""ம்... கிடைக்குமா?''’
""காவிரிக்கான தீர்ப்பை எழுதிய தலைமை நீதிபதி மிஸ்ரா பெஞ்சில் கன்வில்கருடன் அமித்வராய் இருந்தார். இந்த அமித்வராய்தான் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ.’சசிகலாவுக்கான தீர்ப்பை அழுத்தமாக எழுதியவர். அந்தத் தீர்ப்பில் சசி தரப்பு, ஏ1 ஆன ஜெ.’வுக்கு தண்டனை சொல்லப்படாததைச் சுட்டிக்காட்டி, தப்பிக்கும் நோக்கோடு சீராய்வு மனு போட்டபோது, "எங்கள் தீர்ப்பிலேயே உங்களுக்கு சந்தேகம் வருதான்னு? அதைத் தள்ளுபடி செய்துவிட்டார். நீதிபதி அமித்வராய் ஓய்வுபெற்றுச் சென்றுவிட்டார். அவர் இருந்திருந்தால், மத்திய அரசு ’ஸ்கீமில்’ சந்தேகம்ன்னு வந்திருக்க முடியாது. அமித்வராய் அதை அனுமதித்திருக்கமாட்டார் என்று சட்டத்துறை வட்டாரத்திலேயே டாக் ஓடிக்கிட்டு இருக்கு.''’
""காவிரிப் போராட்டம் இங்கே வலுத்திருக்கும் நிலையில் மோடி, 11-ந் தேதி சென்னை வருகிறாரே?''’
""ஆமாங்க தலைவரே, அதனால்தான் டெல்லி சென்ற தமிழக கவர்னர் பன்வாரிலாலிடம், "நான் வரும் போது எந்தப் பிரச்சினையும் போராட்டமும் நடக்காமல் பார்த்துக்கணும்னு மோடி தரப்பு எச்சரிக்கை செய்திருக்கு. இதைத் தொடர்ந்துதான் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய 4-ந் தேதியே, முதல்வர் எடப்பாடியையும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சையும் கவர்னர் ராஜ்பவனுக்குக் கூப்பிட்டு கடுமையாக எச்சரிச்சிருக்கார். "காவிரிக்காகத் தமிழகத்தில் நடக்கும் அமளி துமளியை டெல்லி கூர்மையா கவனிச்சிக்கிட்டிருக்கு. இங்க நடக்கும் போராட்டங்களை அது கொஞ்சமும் விரும்பலை'ன்னு சொன்னதோடு, "போராட்டத்தின் போது இங்கே வன்முறைச் சம்பவங்கள் நடந்திருக்கு. அது தொடர்பாகக் கைதானவர்களையும் சிறைக்கு அனுப்பாமல் வீட்டிற்கு அனுப்பியது சரியா? காவல்துறையின் கைகளைக் கட்டியது யார்னு கடுமையா கேட்டிருக்கார் கவர்னர்.''’
""அதுக்கு முதல்வர் தரப்பின் பதில் என்னவாம்?''’
""இப்படிப்பட்ட நெருக்கடியான கேள்விகளை எதிர்பார்க்காத எடப்பாடி, "காவல்துறை சுதந்திரமாகச் செயல்படுகிறது. வன்முறையாளர்கள் மேல் வழக்குகள் போடப்பட்டிருக்கு. சரியாதான் நடவடிக்கைகளை எடுத்துக்கிட்டு இருக்கோம்னு முடிஞ்சவரை பதில்களைச் சொல்லிட்டு வந்திருக்கார். வெளியே வந்தும் "தமிழக சட்டம்- ஒழுங்குபத்தி கவர்னர் கேட்டார். அவருக்கு திருப்தி ஏற்படும் வகையில் நாங்கள் பதில் சொல்லியிருக்கிறோம்ன்னு சொன்னார். ஆனால் கவர்னர் மாளிகைத் தரப்போ, "தமிழக அரசின் பதிலில் கவர்னருக்கு திருப்தி இல்லை. அவர் எடப்பாடி அரசுக்கு எதிரான எவிடன்ஸுகளைத் தொகுத்துக்கிட்டு இருக்கார். நீளும் காவிரிப் போராட்டங்களால் இன்னும் சில சட்டம்- ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படலாம்' என ராஜ்பவன் எதிர்பார்க்கிறது. அதனால் விரைவில் தமிழக அரசின் நாற்காலிக்கு அடியில் அணுகுண்டை வைக்கும் ரிப்போர்ட்டை அனுப்ப அது தயார் நிலையில் இருக்கு. இதற்கான க்ரீன் சிக்னலும் டில்லியில் இருந்து ராஜ்பவனுக்குக் கொடுக்கப்பட்டுவிட்டதாம்.''’
""இந்த ராஜ்பவன் அணுகுண்டாவது புஸ்வாணம் ஆகாமல் இருந்தால் சரிதான். காங்கிரஸில் காவிரிப் போராட்டம் தொடர்பா ஏதோ சலசலப்பு கேட்டதே?''’
""ஆமாங்க தலைவரே, 5-ந் தேதி வடசென்னை தி.மு.க. மா.செ.வான சேகர்பாபு நடத்திய மறியல் போராட்டத்தில், காங்கிரஸ் எக்ஸ் எம்.எல்.ஏ.வான பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் மாவட்ட தலைவரும் திருநாவுக்கரசரின் ஆதரவாளருமான திரவியத்திடம் சொல்லாமல் கலந்துக்கிட்டாராம். இது தொடர்பான பிரச்சினையின் பஞ்சாயத்து, இரு தரப்பின் உரசலாகி ஸ்டாலின்வரை போனது. 6-ந் தேதி தோழமைக் கட்சிகளின் கூட்டம் நடந்தபிறகு அறிவாலயத்தில் சேகர்பாபுவும் திரவியமும் கைகுலுக்கிக் கிட்டாங்க. இருந்தபோதும், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவரான திருநாவுக்கரசர் மூகளில் காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் டவுட் இருக்கு. அண்மையில் நடராஜன் மறைவிற்கு துக்கம் விசாரிக்கப் போன திருநாவுக்கரசர், சசிகலாவைத் தஞ்சையில் சந்திச்சப்ப, துக்க விசாரிப்பை விடவும் கூட்டணி பத்திதான் அதிகம் பேசியதாக, தகவல் வந்திருக்காம்.''’
----------------------------------
இறுதிச் சுற்று!
கோவள புரட்சி.??
ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு, நெடுவாசல், ஸ்டெர்லைட் மற்றும் காவிரி மேலாண்மை என தொடர் போராட்டங்களை தமிழகம் சந்தித்து வருகிறது.
இதனிடையே மெரினாவில் ஒன்று கூடி வாடிவாசலைக் கைப்பற்றியது போல், கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் கடற்கரையில் மீனவர்கள், சமூக ஒன்றிணைப்பாளர்கள் இவர்களோடு மாணவர்களும் ஒன்றிணைந்து போராடப் போவதாக உளவுப் பிரிவிற்கு ரெட் அலர்ட் வர, நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில் சிரட்கர் தலைமையில் நெல்லை மாநகர இணை ஆணையர்கள் 2 பேர், நெல்லை புறநகர் மாவட்டம், தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்ட எஸ்.பி.க்கள் 5 பேர், ஏ.டிஎஸ்.பி-க்கள் 8, ஏ.எஸ்.பிக்கள் 7 மற்றும் டி.எஸ்.பி.க்கள் 22 பேர் உட்பட மொத்தம் 3000 போலீசார் நாகர்கோவிலில் குவிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நாகேந்திரன்