Advertisment

ஓ.பி.எஸ். ஒப்பாரி! தி.மு.க. புலம்பல்!

ops

""ஹலோ தலைவரே முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு, ஒரு வருடத்தைத் தொட்டிருக்கும் நேரத்தில், துணை முதல்வர் ஓ.பி.எஸ்., பிரதமர் மோடி சொன்னதால்தான் நான் எடப்பாடியுடன் இணைஞ்சேன்னு சொல்லியிருப்பதைக் கவனிச்சீங்களா?''’

Advertisment

""கவனிச்சேம்ப்பா. தேனி மாவட்டத்தில் பேசிய ஓ.பி.எஸ்., மோடியால்தான் எடப்பாடியோடு இணைஞ்சேன்னு சொன்னதோட, சசிகலா எனக்குக் கொடுத்த டார்ச்சருக்கு வேறு யாராவதென்றால், தற்கொலை செய்துகொண்டிருப்பார்கள்னும் ஒப்பாரி வச்சிருக்காரே!''’

Advertisment

ops""தலைவரே, இணைப்பின் போது தரப்பட்ட உறுதிமொழிகள் சரிவர நிறைவேற்றப்படலை என்கிற ஆதங்கம் ஓ.பி.எஸ்.சை விட அவரோட ஆதரவாளர்களுக்கு அதிகமா இருக்கு. உரியபலன் கிடைக்கலைன்னு ஓ.பி.எஸ்.சை விட்டு அவரது ஆதரவாளர்களான மைத்ரேயன் எம்.பி., மனோஜ் பாண்டியன், நத்தம் விசுவநாதன் உள்ளிட்டவர்கள் இப்ப விலகி நிக்கிறாங்க. இதனால் மைத்ரேயன் மூலம் ஓ.பி.எஸ்.சுக்கு கிடைத்த டெல்லித் தொடர்புகளும் கட் ஆயிடிச்சி. இதெல்லாம்தான் அவரை புலம்ப வச்சிருக்கு. இந்த நிலையில், தகுதி நீக்க வழக்குகளில் தங்களுக்கு எதிரா தீர்ப்பு வந்தா, எடப்பாடியை விட தான்தான் அதிகம் பாதிக்கப்படுவோம்ன்னு ரொம்பவும் குழம்பிப்போயிருக்கார் ஓ.பி.எஸ். எடப்பாடியும் அவரது அரசும் தீர்ப்பை நினைச்சு திக்திக்னு இருக்கு.''’

""ஏன் இந்த அவ நம்பிக்கை?''’

""சட்டப்பேரவையில் ஜெ.’ படம் திறந்து வைக்கப்பட்டது தொடர்பான வழக்கில், அதை விசாரிக்கும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தண்டிக்கப்பட்ட ஒருவரின் படம் அரசு கட்டடங்களில் இடம்பெறக் கூடாது என்பது தன் தனிப்பட்ட கருத்துன்னு தெரிவிச்சிருக்கார். இந்த நிலையில், தினகரன் தரப்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள், ஓ.பி.எஸ். தரப்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 11 எம்

""ஹலோ தலைவரே முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு, ஒரு வருடத்தைத் தொட்டிருக்கும் நேரத்தில், துணை முதல்வர் ஓ.பி.எஸ்., பிரதமர் மோடி சொன்னதால்தான் நான் எடப்பாடியுடன் இணைஞ்சேன்னு சொல்லியிருப்பதைக் கவனிச்சீங்களா?''’

Advertisment

""கவனிச்சேம்ப்பா. தேனி மாவட்டத்தில் பேசிய ஓ.பி.எஸ்., மோடியால்தான் எடப்பாடியோடு இணைஞ்சேன்னு சொன்னதோட, சசிகலா எனக்குக் கொடுத்த டார்ச்சருக்கு வேறு யாராவதென்றால், தற்கொலை செய்துகொண்டிருப்பார்கள்னும் ஒப்பாரி வச்சிருக்காரே!''’

Advertisment

ops""தலைவரே, இணைப்பின் போது தரப்பட்ட உறுதிமொழிகள் சரிவர நிறைவேற்றப்படலை என்கிற ஆதங்கம் ஓ.பி.எஸ்.சை விட அவரோட ஆதரவாளர்களுக்கு அதிகமா இருக்கு. உரியபலன் கிடைக்கலைன்னு ஓ.பி.எஸ்.சை விட்டு அவரது ஆதரவாளர்களான மைத்ரேயன் எம்.பி., மனோஜ் பாண்டியன், நத்தம் விசுவநாதன் உள்ளிட்டவர்கள் இப்ப விலகி நிக்கிறாங்க. இதனால் மைத்ரேயன் மூலம் ஓ.பி.எஸ்.சுக்கு கிடைத்த டெல்லித் தொடர்புகளும் கட் ஆயிடிச்சி. இதெல்லாம்தான் அவரை புலம்ப வச்சிருக்கு. இந்த நிலையில், தகுதி நீக்க வழக்குகளில் தங்களுக்கு எதிரா தீர்ப்பு வந்தா, எடப்பாடியை விட தான்தான் அதிகம் பாதிக்கப்படுவோம்ன்னு ரொம்பவும் குழம்பிப்போயிருக்கார் ஓ.பி.எஸ். எடப்பாடியும் அவரது அரசும் தீர்ப்பை நினைச்சு திக்திக்னு இருக்கு.''’

""ஏன் இந்த அவ நம்பிக்கை?''’

""சட்டப்பேரவையில் ஜெ.’ படம் திறந்து வைக்கப்பட்டது தொடர்பான வழக்கில், அதை விசாரிக்கும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தண்டிக்கப்பட்ட ஒருவரின் படம் அரசு கட்டடங்களில் இடம்பெறக் கூடாது என்பது தன் தனிப்பட்ட கருத்துன்னு தெரிவிச்சிருக்கார். இந்த நிலையில், தினகரன் தரப்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள், ஓ.பி.எஸ். தரப்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 11 எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க. தரப்பில் நடவடிக்கைக்கு ஆளான 21 எம்.எல்.ஏ.க்கள்ன்னு, இந்த மூன்று விவகார வழக்குகளின் தீர்ப்பு விரைவில் வர இருக்குது. இதில் அரசுத் தரப்புக்கு எதிரான தீர்ப்பு வந்தால்... தான்தான் முதலில் பாதிக்கப்படுவோம்ன்னு நினைக்கிறார் ஓ.பி.எஸ். அதனால் அப்படியொரு நிலை வந்தால், இப்ப டெல்லியோட நெருக்கமா இருக்கிற ஜக்கி வாசுதேவ் மூலம் பா.ஜ.க.விலேயே ஐக்கியமாயிடலாம்கிற திட்டத்தில் அவர் இருக்காரு. இதற்காக சிவராத்திரி அன்னைக்கு அவர் ஜக்கி வாசுதேவை சந்திச்சாரு.''’

""எடப்பாடியின் மனநிலை என்னவாம்?''’

sasi-deepa-jaianand""ஆட்சிக்கு ஆயுள் ஸ்தானம் சரியில்லைங்கிறதால, சசிகலாவை முழுசா பகைச்சிக்கவேணாம்னு நினைக்கிறார். அதனால்தான், தன் மகன் மிதுன், சேலம் இளங்கோவன் போன்றோர் மூலம் சசி தரப்போட நல்லிணக்கப் பேச்சுவார்த்தைகளை ரகசியமா நடத்திக்கிட்டு இருந்தார். தினகரன் மட்டும் வேணாம்ங்கிறது எடப்பாடி ஃபார்முலா. ஆனால் சசிகலாவோ, தினகரனை விட்டுக் கொடுக்க முடியாதுன்னு உறுதியா சொல்லிட்டதால, அதனால் இரு தரப்பிற்கும் இடையில் இப்போது இறுக்கம் நிலவுது. சிறைத் தண்டனையுடன் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட 10 கோடி அபராதத்தொகையை அவர் இன்னும் கட்டலை. கட்டாட்டி, மேலும் 6 மாத சிறைவாசத்தை அவர் அனுபவிச்சாகணும். அபராதப் பணத்தை எப்படி வெள்ளையாக்கிக் கட்டறதுன்னு அவர் தரப்பு குழம்பிக்கிட்டிருக்கு.''’

""ஆமாம்ப்பா. வருமான வரித்துறை முன்பைவிட, இப்ப புதுவேகம் எடுத்திருக்கு போலிருக்கே?''’

""இளவரசி மகன் விவேக்கின் பினாமியான சுனில் கேட்பாலியா பத்தியும், சென்னை பின்னிமில் வளாகத்தில் இவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சொத்துக்கள் பற்றியும் நக்கீரன்தான் முதன்முதலில் ஸ்மெல் பண்ணி, அம்பலப்படுத்துச்சு. இந்த நிலையில் வருமான வரித்துறைக்குப் புதுசா வந்திருக்கும் முரளிங்கிற அதிகாரி, அதிரடியா களமிறங்கி, விவேக், சுனில் கேட்பாலியா ஆகியோர் பெயரில் இருக்கும் 500 கோடி மதிப்பிலான சொத்து விபரத்தையும் எடுத்து, நடவடிக்கையில் இணைச்சிருக்கார். இது சசி தரப்புக்கு விழுந்திருக்கும் பலத்த அடி.''’

""ம்...''’

""தலைவரே, வர்ற 24-ந் தேதி ஜெ.’வின் 70 ஆவது பிறந்தநாள். இதை எப்படி சிறப்பா கொண்டாடறதுன்னு அ.தி.மு.க.வில் இருக்கும் 14 அணிகளும் தனித்தனியா கூட்டங்களைக் கூட்டுது. 16-ந் தேதி அமைச்சர் உதயகுமார் தலைமையில் ஜெ.’ பேரவையினர் கூடி, அ.தி.மு.க. தலைமைக்கழக கட்டடத்துக்கு அம்மா மாளிகைன்னு பெயர் சூட்டணும்னு தீர்மானம் நிறைவேற்றினாங்க. 17-ந் தேதி எம்.பி.விஜயகுமார் தலைமையில் கூடிய மாணவரணிக் கூட்டத்தில் பேசிய, கட்சியின் சிறுபான்மைப் பிரிவு மாநிலத் துணைச் செயலாளரான ஜே.சி.டி. பிரபாகரனோ, "நம் தலைமைக் கழகக் கட்டடத்துக்குப் பெயர் வைக்கும்போது, எம்.ஜி.ஆர்.பெயரும் இருக்கணும். ஏன்னா, அவரது வியர்வையில் உருவான கட்டடம்'னு சொல்லியிருக்காரு.''’

""அரசு கொண்டாடிய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவும் ஊழல் சர்ச்சையில் சிக்கியிருக்கே?''’

""உண்மைதாங்க தலைவரே, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை மாவட்டம்தோறும் அரசு சார்பில் நடத்தினாலும், அதற்கான தொகையை அரசு ஒதுக்கலை. ஆனால் ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குநர்கள் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் காண்ட்ராக்டர்கள், தொழிலதிபர்கள், பி.டி.ஓ.க்கள், பொறியாளர்கள்ன்னு பலரிடமும் இஷ்டத்துக்கும் வசூல் செய்யப்பட்டிருக்கு. தர்மபுரி மாவட்ட திட்ட இயக்குநர் காளிதாசன், ஏறத்தாழ 3 "சி' வரை இதற்காக வசூலிச்சதாவும் அதில் 30 "எல்' மட்டுமே செலவிட்டாருன்னும் கோட்டை நோக்கிப் புகார்கள் போயிருக்கு. இதேபோல் பல மாவட்டங்களிலும் புகார் பூதங்கள் புறப்படுதாம்.''’

""லஞ்சமும் ஊழலும் மலிந்த இந்த ஆட்சியை, எதிர்க்கட்சியான தி.மு.க. இன்னும் எவ்வளவு நாளைக்கு வேடிக்கை பார்க்கப் போகுதுன்னு மக்கள் மத்தியிலேயே கேள்விகள் எழுதே?''’

""ஆட்சியைக் கவிழ்ப்பதைவிட, கட்சியை பலப்படுத்தி, பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு, தி.மு.கவின் பலத்தை உயர்த்தணும்னு நினைக்கிறார் ஸ்டாலின். அதற்காகத்தான் தி.மு.க.வின் கள ஆய்வுக் கூட்டங்களை விறுவிறுப்பா நடத்திக்கிட்டிருக்காரு.''’

""அங்கேயும் சலசலப்புகள் கேட்குதே?''’

dmk

""ஆமாங்க தலைவரே, ஒரு நாளைக்கு இரண்டு மாவட்டங்கள்னு கள ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுது. அதனால் குறிப்பிட்ட சிலர் மட்டுமே பேச அனுமதிக்கப்படறாங்க. இதில் மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகளை ஆதரித்தும் எதிர்த்தும் பேசக் கூடியவர்களை, செலக்ட் பண்ணுறாங்க. இந்த லிஸ்ட்டை ஃபைனல் பண்ணுவதில் அன்பகம் கலையும், அன்பில் மகேஷும் கவனம் செலுத்தி ஸ்டாலின்கிட்ட ஓ.கே.வாங்குறாங்க. ஆனாலும் முழு உண்மை நிலவரத்தையும் சொல்ல நினைப்பவர்களுக்கு பேசுறதுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலைங்கிற புகார் எழுந்திருக்கு. அதிலும், மா.செ.க்களை எதிர்த்துப் பேசக்கூடியவர்கள் ஓரங்கட்டப்படறதா சலசலப்பு ஏற்பட்டிருக்கு. குறிப்பா மூன்றாகப் பிரிக்கப்பட்ட சேலத்தில், தி.மு.க. தலைமையே ஒன் சைடு அடிக்கிதுன்னு ஏற்கனவே புலம்பல் வெளிப்பட்டுது. இந்த நிலையில் கள ஆய்வுக் கூட்டத்துக்கு வீரபாண்டி ராஜா, மாஜி செல்வகணபதி போன்றோரின் ஆதரவாளர்கள் அழைக்கப்படலைங்கிற குற்றச்சாட்டும் பெருசாக் கிளம்புச்சு.''’

""இதெல்லாம் ஸ்டாலின் கவனத்துக்குப் போயிருக்குமே?''’

""அவர் விசாரிச்சப்ப அறிவாலயத் தரப்பிலிருந்தே குழப்பமான பதிலே கிடைச்சிருக்கு. மாவட்ட நிர்வாகிகள் பலரும் அறிவாலய நிர்வாகிகளுக்கு நெருக்கமானவங்களா இருக்காங்க. அதனால் தங்களுக்கு எதிராப் பேசக்கூடியவர்கள், பேசுவோர் பட்டியலில் இல்லாதபடி பார்த்துக்கறாங்க. இதுக்கு அறிவாலய நிர்வாகத்தில் இருக்கிற சிலரும் ஸ்டாலினுக்கு நெருக்கமான சிலரும் உதவுறாங்களாம். கள ஆய்வுக் கூட்டத்துக்கு எங்களை அழைக்கவே இல்லைன்னு வெளியூர்களிலிருந்து நிர்வாகிகள் பலரும் அறிவாலயத்துக்கே வந்து புலம்புனாங்க. அதனால்தான் தி.மு.க. தலைமையே, "ஏதேனும் காரணத்தால் கள ஆய்வுக் கூட்டத்திற்கான அழைப்பிதழ்கள் கிடைக்கப் பெறாத நிர்வாகிகள், தங்களது பிரதிநிதிச் சீட்டுகளை உரிய ஆவணங்களுடன் கொண்டுவந்தால் கூட்டத்தில் அனுமதிக்கப்படுவார்கள்'ன்னு முரசொலியிலேயே அறிவிப்பு வெளியிட்டது.''’

""கள ஆய்வுக் கூட்டத்தில் பேச முடியாட்டியும் புகார்ப் பெட்டி இருக்கே?''’

""கூட்டத்தில் பேசறதிலேயே இவ்வளவு குழப்பம்னா, புகார்ப் பெட்டி மனுக்களும் என்னாகுமோங்கிற யோசனை இருக்கு. இது ஸ்டாலின் கவனத்துக்குப் போனதால், பெட்டியில் போடப்பட்ட புகார்களை எல்லாம் வரிசைப்படுத்தி, அதை எழுதியவர்கள் பெயர்கள் லீக் ஆகாதபடி, அதன் சாராம்சத்தை மட்டும் தொகுத்து, விசாரணைக்காக கட்சி அமைச்சிருக்கும் குழுவிடம் ஒப்படைக்க, ஒரு டீமையும் அவர் அமைச்சிருக்கார். இருந்தாலும், மாவட்ட கள ஆய்வுகள் முடிந்தபிறகு, அறிவாலய நிர்வாகிகள் வட்டாரத்திலும், தனக்கு நெருக்கமானவங்க வட்டாரத்திலும் கள ஆய்வுப் பணியில் தனியா, ஸ்டாலின் ஒரு விசாரணைûயை நடத்தினால்தான் அவர் நினைக்கிற மாதிரி கட்சி வளரும்னு சீனியர்கள் சொல்றாங்க.''’

""நானும் ஒரு முக்கிய தகவல் சொல்றேன். ஏகப்பட்ட மோசடிப் புகார்களுக்கு ஆளாகியிருக்கும் ஜெ.’அண்ணன் மகள் தீபா, தனது பெரும்பகுதி பணத்தை அமெரிக்காவில் இருக்கும் தன் சித்தி மகன் மூலம், அங்கே கொண்டுபோய் விட்டாராம். போயஸ்கார்டன் தொடர்பான பிரச்சினைகள் முடிந்ததும் தீபாவும் அமெரிக்காவிலேயே போய் செட்டிலாகத் திட்டமிட்டிருக்காராம்.''’

jaiananth Deepa sasi ops
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe