Skip to main content

மகாராஷ்ட்ரா பாணியில் பேரணி! எம்.பி.க்களை சமாதானப்படுத்திய முதல்வர்!

Published on 01/04/2018 | Edited on 02/04/2018
""ஹலோ தலைவரே, காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் சண்டித்தனம் பண்ணும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, சனிக்கிழமையன்று திடீரென மெரீனாவில் இளைஞர்களும் பொதுமக்களும் போராட்டத்தில் இறங்கியதால் அரசும் காவல்துறையும் பதறிடிச்சி. உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொண்டு, பாதுகாப்பையும் பலப்படுத்திடிச்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு...அதிமுக எம்.பி இஸ்லாமிய மத அமைப்பிலிருந்து நீக்கம்...!

Published on 18/12/2019 | Edited on 18/12/2019


அதிமுக எம்.பி முகமது ஜான் அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் காப்பாளர் பொறுப்பில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

 

 MP mohmad john dismissed from jamath

 

 

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்தது. இந்த சட்டம் இஸ்லாமிய மக்களை பெரும் மனத்துயரத்துக்கு கொண்டுவந்துள்ள நிலையில், இதற்கு ஆதரவு தெரிவித்த அதிமுக மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில் மாநிலங்களவையில் அதிமுக எம்.பி முகமது ஜான் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார். இதனால் அவர் மீது அதிருப்தி அடைந்த இஸ்லாமிய அமைப்புகள், அவரை ஜமாத் கூட்டமைப்பின் காப்பாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

Next Story

"முத்தலாக் தடை மசோதா" விவாதத்தில் அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது- தி.மு.க கனிமொழி எம்.பி!

Published on 30/07/2019 | Edited on 30/07/2019

மக்களவையில் "முத்தலாக் தடை மசோதா" ஏற்கனவே நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் இன்று முத்தலாக் தடை மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீதான விவாதம் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த மசோதாவுக்கு அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் 'முத்தலாக் தடை மசோதா' மீதான வாக்கெடுப்பு மாலை 06.00 மணிக்கு தொடங்கியது. இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு "வாக்கெடுப்பு சீட்டு" முறையில் நடைபெற்றது. இதில் மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப 84 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், 99 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

 

parliamnet triple talaq bill passes in rajya sabha dmk kanimozhi mp tweet

 


மேலும் 29 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த வாக்கெடுப்பில் தெலுங்கு தேசம், டி.ஆர்.எஸ், பி.எஸ்.பி கட்சிகளின் எம்.பிக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இருப்பினும் வாக்கெடுப்பின் முடிவில் மசோதாவிற்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்ததால் முத்தலாக் தடை மசோதா நிறைவேறியதாக மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவித்தார். அதனை தொடர்ந்து முத்தலாக் மசோதா குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். பிறகு குடியரசுத்தலைவரின் ஒப்புதல் கிடைத்தவுடன், முத்தலாக் தடை சட்டம் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதன் மூலம் மத்திய அரசு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாஜக அரசுக்கு உறுப்பினர்களின் ஆதரவு அதிகரித்துள்ளது என்பதை நிரூபித்துள்ளது.

 

parliamnet triple talaq bill passes in rajya sabha dmk kanimozhi mp tweet

 


இந்நிலையில்  "முத்தலாக் தடை சட்ட மசோதா" மீதான வாக்கெடுப்பில் அதிமுக வெளிநடப்பு செய்ததை திமுகவின் கனிமொழி எம்.பி விமர்சித்துள்ளார். இது குறித்து கனிமொழி எம்.பி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் "முத்தலாக் மசோதா வெற்றி பெறுவதற்கு வசதியாக ராஜ்ய சபாவில் அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது" என குறிப்பிட்டுள்ளார்.