Advertisment

கமல் கட்சி! அரசு நெருக்கடி ஆரம்பம்! சசி உறவுகளின் பவர் பாலிடிக்ஸ்!

kamalhassan

""ஹலோ தலைவரே, தமிழக அரசியல் களத்தில் நடக்கும் புதிய கட்சிகளின் உதயத்தை, இங்கிருக்கும் பெரியகட்சிகள் தொடங்கி சிறிய கட்சிகள்வரை, எல்லாக் கட்சிகளுமே உற்று கவனிக்கிது.''’

Advertisment

""ஆமாம்பா… தி.மு.க.வினருடனான களஆய்வு பற்றிய அனுபவத்தை நெகிழ்ச்சியான கடிதமா எழுதுன மு.க.ஸ்டாலின் அதில் "தமிழக அரசியல் களத்தில் பூக்கும் கவர்ச்சிகரமான காகிதப்பூக்கள் மணக்காது'ன்னு சொல்ல, கமலை குறிவச்சித்தான் அவர் இதைச் சொல்றாருன்னு ஊடகங்களில் விவகாரம் பெரிதாக, புதுக்கட்சி முஸ்தீபுடன் மதுரை விமானநிலையத்தில் மீடியாக்களை சந்தித்த கமலும், "நான் பூ அல்ல.. விதை… விதைத்துப் பாருங்க'ன்னு பட்டையக் கௌப்புனாரே.''

Advertisment

kamal

""தலைவரே.. கட்சி தொடங்குவதற்கு முன்பே கவனம் பெறணும்ங்கிற நோக்கத்தில் கமல் கச்சிதமா காய் நகர்த்துனாரு. தோழர் நல்லகண்ணுவைத் தொடர்ந்து தன்னோட தமிழ் ஆசான் கலைஞர், நண்பர்கள் ரஜினி, விஜயகாந்த்துன்னு பலரையும் சந்திச்சார் கமல். மற்ற தலைவர்களையும் சந்திக்க நேரம் கேட்டார். ’நாம் தமிழர் கட்சி’ சீமானோ, "நானே உங்களை நேர்ல வந்து வாழ்த்தறேன்னு, கமலை சந்திச்சி வாழ்த்துனாரு. ரஜினியை எதிர்க்கும் சீமான், கமலின் அரசியல் வருகையை வரவேற்றதும், கலைஞரை கமல் சந்தித்த நிலையில், காகிதப்பூங்கிற ஸ்டாலினோட உவமையும் அரசியல் வட்டாரத்தில் கமலின் புதுக்கட்சி மீதான பார்வையை அதிகமாக்கியிருக்கு.''

""இதையெல்லாம் ஆளுங்கட்சி கவனிக்காமலா இருக்கும்?''’’

""சும்மா விட்டுவிடுமா? ஏற்கெனவே கமலை அமைச்சர்கள் விமர்சனம் பண்ணிக்கிட்டிருக்காங்க. அதிகாரத்தை காட்டாமல் இருப்பாங்களா? கமலோட புதுக்கட்சி தொடக்கம்ங்கிறது முதலில் அப்துல்கலாம் பிறந்த வீடு, அப்புறம் கலாம் படித்த பள்ளி என புரோகிராம் போடப்பட்டது. கலாம் வீட்டுக்கு கமல் சார்பில் பேராசிரியர் ஞானசம்பந்தன் நேரில் போய் அவரோட உறவினர்கள்கிட்டே பேசி அனுமதி கேட்டிருந்தார். பலரும் வர்றாங்க.. அவரும் வரட்டும்னு பொதுவா சொல்லிட்டாங்க. இருந்தாலும், கட்சி தொடங்குறதுக்கு முன்னாடி ரசிகர்கள் தரப்பிலிருந்தே சந்தேகம் கிளம்ப, சுற்றுப்பயணத்தை வடிவமைத்த டீமில் உள்ளவர்களில் ஒருவரான கபிலன், மறுபடியும் கலாம் வீட்டாரிடம் பேச, "அவர் தாராளமா வரட்டும்.. ஆனா அரசியல் பேசக்கூடாது'ன்னு கலாம் வீட்டார் சொல்லியிருக்காங்க. அரசியல் அறிவிப்பெல்லாம் மதுரையில்தான்னு கமல் தரப்பில் சொல்லப்பட்டிருக்கு. கலாம் பிறந்த வீடு அவரது குடும்பத்தினர் சம்பந்தப்பட்டதுன்னாலும், அவர் படித்த

""ஹலோ தலைவரே, தமிழக அரசியல் களத்தில் நடக்கும் புதிய கட்சிகளின் உதயத்தை, இங்கிருக்கும் பெரியகட்சிகள் தொடங்கி சிறிய கட்சிகள்வரை, எல்லாக் கட்சிகளுமே உற்று கவனிக்கிது.''’

Advertisment

""ஆமாம்பா… தி.மு.க.வினருடனான களஆய்வு பற்றிய அனுபவத்தை நெகிழ்ச்சியான கடிதமா எழுதுன மு.க.ஸ்டாலின் அதில் "தமிழக அரசியல் களத்தில் பூக்கும் கவர்ச்சிகரமான காகிதப்பூக்கள் மணக்காது'ன்னு சொல்ல, கமலை குறிவச்சித்தான் அவர் இதைச் சொல்றாருன்னு ஊடகங்களில் விவகாரம் பெரிதாக, புதுக்கட்சி முஸ்தீபுடன் மதுரை விமானநிலையத்தில் மீடியாக்களை சந்தித்த கமலும், "நான் பூ அல்ல.. விதை… விதைத்துப் பாருங்க'ன்னு பட்டையக் கௌப்புனாரே.''

Advertisment

kamal

""தலைவரே.. கட்சி தொடங்குவதற்கு முன்பே கவனம் பெறணும்ங்கிற நோக்கத்தில் கமல் கச்சிதமா காய் நகர்த்துனாரு. தோழர் நல்லகண்ணுவைத் தொடர்ந்து தன்னோட தமிழ் ஆசான் கலைஞர், நண்பர்கள் ரஜினி, விஜயகாந்த்துன்னு பலரையும் சந்திச்சார் கமல். மற்ற தலைவர்களையும் சந்திக்க நேரம் கேட்டார். ’நாம் தமிழர் கட்சி’ சீமானோ, "நானே உங்களை நேர்ல வந்து வாழ்த்தறேன்னு, கமலை சந்திச்சி வாழ்த்துனாரு. ரஜினியை எதிர்க்கும் சீமான், கமலின் அரசியல் வருகையை வரவேற்றதும், கலைஞரை கமல் சந்தித்த நிலையில், காகிதப்பூங்கிற ஸ்டாலினோட உவமையும் அரசியல் வட்டாரத்தில் கமலின் புதுக்கட்சி மீதான பார்வையை அதிகமாக்கியிருக்கு.''

""இதையெல்லாம் ஆளுங்கட்சி கவனிக்காமலா இருக்கும்?''’’

""சும்மா விட்டுவிடுமா? ஏற்கெனவே கமலை அமைச்சர்கள் விமர்சனம் பண்ணிக்கிட்டிருக்காங்க. அதிகாரத்தை காட்டாமல் இருப்பாங்களா? கமலோட புதுக்கட்சி தொடக்கம்ங்கிறது முதலில் அப்துல்கலாம் பிறந்த வீடு, அப்புறம் கலாம் படித்த பள்ளி என புரோகிராம் போடப்பட்டது. கலாம் வீட்டுக்கு கமல் சார்பில் பேராசிரியர் ஞானசம்பந்தன் நேரில் போய் அவரோட உறவினர்கள்கிட்டே பேசி அனுமதி கேட்டிருந்தார். பலரும் வர்றாங்க.. அவரும் வரட்டும்னு பொதுவா சொல்லிட்டாங்க. இருந்தாலும், கட்சி தொடங்குறதுக்கு முன்னாடி ரசிகர்கள் தரப்பிலிருந்தே சந்தேகம் கிளம்ப, சுற்றுப்பயணத்தை வடிவமைத்த டீமில் உள்ளவர்களில் ஒருவரான கபிலன், மறுபடியும் கலாம் வீட்டாரிடம் பேச, "அவர் தாராளமா வரட்டும்.. ஆனா அரசியல் பேசக்கூடாது'ன்னு கலாம் வீட்டார் சொல்லியிருக்காங்க. அரசியல் அறிவிப்பெல்லாம் மதுரையில்தான்னு கமல் தரப்பில் சொல்லப்பட்டிருக்கு. கலாம் பிறந்த வீடு அவரது குடும்பத்தினர் சம்பந்தப்பட்டதுன்னாலும், அவர் படித்த பள்ளி, தமிழக அரசின் கல்வித்துறை சம்பந்தப்பட்டதாச்சே.. அதனால ஆளுந்தரப்பு வேற வகையில் கமலின் நெருக்கடியை ஆரம்பிச்சிடிச்சி.''

""எந்த வகையில்?''

govt.letter

""ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் படித்த மண்டபம் ஊராட்சி நடுநிலைப்பள்ளிக்கு கமல் வருவதை எதிர்த்து இந்து முன்னணி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் மத்தியில் அரசியல் என்பது அவர்களது கல்வியையும் எதிர்காலத்தையும் பாதிக்கும். இதனைத் தடுத்து நிறுத்தவேண்டும்னு கலெக்டர் நடராஜன்கிட்டே மனு கொடுக்கப்பட்டது. பொதுவா, அரசியல் நிகழ்ச்சிகளுக்குத்தான் தடை கொடுக்கப்படும். ஆனா, கட்சி தொடங்குறதுக்கு முன்னாடி கமல் விசிட் செய்யும் நிலையிலும், மண்டபம் பகுதி உதவி கல்வி அதிகாரி சுதா, கலாம் படித்த பள்ளிக்கு கமல் விசிட் அடிக்க அனுமதி மறுத்துட்டாரு. அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரிச்சப்ப, "இதெல்லாம் மேலிடத்து உத்தரவு. இந்து முன்னணி மூலம் புகார் வாங்கி, அதைக் காரணம் காட்டி தடை விதித்ததே ஒரு செட்டப்தான். கமலைவிட எடப்பாடி அரசாங்கத்துக்கு ஸ்க்ரீன்ப்ளே நல்லா பண்ணத் தெரியும். அதோடு, மத்திய அரசோட கையும் இதில் இருக்கு. இது ஆரம்பம்தான்.. கமலுக்கு தொடர் நெருக்கடி கொடுக்க மத்திய-மாநில அரசுகள் ரெடியாயிடிச்சி'ன்னு சொல்றாங்க. கமலுக்கு கறுப்புக்கொடி காட்டவும் இந்து அமைப்புகள் ப்ளான் போட்டது. இதுக்கிடையில் 20-ஆம் தேதி இரவு, ரிடையர்டு போலீஸ் அதிகாரி மௌரியா அந்தப் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத்துடனும் மற்ற சிலருடனும் சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தினார். அனுமதி தொடர்பான பேச்சுவார்த்தை நள்ளிரவு தாண்டியும் தொடர்ந்தது. இது இப்படி இருக்க, கமல் நற்பணி இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள், தலைமையைத் தொடர்பு கொண்டு, கட்சிப் பெயரை தெரிந்து கொள்ளும் ஆவலில் இருந்தனர். "திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயர் சீரியஸாக ஓடிக் கொண்டிருந்தது. இதுதவிர, "நமது தமிழகம்', "தமிழக மக்கள் கழகம்' என பல்வேறு பெயர்களும் அடிபட்டன.''

police

""கமலுக்கு நெருக்கடி கொடுக்கிற ஆளுங்கட்சியிலேயே ஏகப்பட்ட சலசலப்புகள் தெரியுதே?''’

""உண்மைதாங்க தலைவரே, தினகரன் ஆதரவாளர்கள்ன்னு ஆளுங்கட்சியான இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். டீம், வடசென்னை, தஞ்சாவூர், வேலூர், தேனின்னு 7 மா.செ.க்கள் உட்பட பலரையும் நீக்க ஆம்பிச்சிது. இப்படி நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டிடிச்சி. இப்ப என்னன்னா, வடசென்னையில் நீக்கப்பட்டவங்களோ "நாங்க மதுசூதனன் ஆதரவாளர்கள். எங்களை ஜெயக்குமார் டீம் பொய்யாப் போட்டுக்கொடுத்து எங்களை நீக்க வச்சிடுச்சு'ன்னு ஒரு தரப்பும், "நாங்க ஜெயக்குமார் ஆதரவாளர்கள். எங்களை மதுசூதனன் டீம், பொய்யா போட்டுக்கொடுத்து நீக்க வச்சிடுச்சி'ன்னு இன்னொரு தரப்பும் சொல்லுது. இதேபோல் மற்ற பகுதிகளில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை எடப்பாடி டீம், புகார் சொல்லி நீக்கியதாவும், எடப்பாடி ஆதரவாளர்களை ஓ.பி.எஸ். டீம் புகார் சொல்லி நீக்கியதாவும் அவங்களுக்குள்ளேயே பிரச்சினைகள் பரவலா வெடிச்சிக்கிட்டிருக்கு. மொத்தத்தில் நீக்கப்பட்ட பலரும், "நாங்க தினகரன் ஆதரவாளர்கள் இல்லை'ன்னு சொல்றாங்க.''’

""அப்ப நீக்கப்பட்ட இடங்களுக்கு, புதுப் பொறுப்பாளர்களைப் போடறதும் சிக்கல்தானா?''’

sasikala

""ஆமா.. 7 மா.செ.க்கள் பதவிகள் உட்பட அ.தி.மு.க.வில் இருக்கும் காலி பொறுப்புகளுக்கு புதிய பொறுப்பாளர்களை அறிவிக்கமுடியலை. அதனால் உச்சகட்ட குளறுபடி தமிழகம் முழுக்க இருக்கு. இந்த நிலையில் முத்தரையர்கள் நிறைந்த திருச்சி புறநகர் மாவட்டத்தை இரண்டாப் பிரிச்சி ஒன்றுக்கு பரஞ்ஜோதியும் இன்னொன்றுக்கு சிவபதியும் நியமிக்கப்படுவாங்கன்னும், கள்ளர் சமூகத்தின் செல்வாக்கைக் காட்டி, திருச்சி மாநகர் மா.செ.பதவியை எம்.பி.குமார் கேட்ச் பண்ணுகிறார்ன்னும் பரபர டாக் அடிபடுது. இது எல்லாத்தையும் விட ஓ.பி.எஸ். ஆதரவாளர்களான மைத்ரேயன் எம்.பி., மனோஜ் பாண்டியன் போன்றோர், "நம்மை ஓரங்கட்டும் எடப்பாடிக்கு எதிரா நீங்க, தர்மயுத்தத்தைத் தொடங்கணும்'ன்னு ஓ.பி.எஸ்.சை வலியுறுத்தறாங்களாம். ''’

""சசிகலா தரப்பிலும் சலசலப்பாமே?''

""சிறையில் இருக்கும் சசிகலாவை 18-ந் தேதி, தினகரனும் விவேக்கும் போய்ப் பார்த்தாங்க. அப்ப, சசிகலா, ஜெயா டி.வி.யின் சி.இ.ஓ. பொறுப்பை தினகரன் மனைவி அனுராதாவிடமே ஒப்படைச்சிடுன்னு விவேக்கிடம் சொல்லியிருக்கார். ஆனால் விவேக்கோ, "அந்தப் பொறுப்புல இருந்து என்னால் விலக முடியாது. இது என் தன்மானப் பிரச்சினை'னு மறுத்திருக்காரு. இதனால், கட்சியின் இளம்பெண்கள் பாசறைப் பொறுப்பை ஏற்க இருந்த விவேக்கின் சகோதரி கிருஷ்ணப்பிரியா, கொஞ்சம் விட்டுக்கொடுக்கும் வகையில், தன் முடிவில் இருந்து பின்வாங்கிட்டாராம். இப்படி சசி குடும்பத்திலேயே தினகரனுக்கு எதிரான "பவர் யுத்தம்' நடக்குது. தன்னிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய எடப்பாடி தரப்பிடம், "தினகரனை என்னால் விட்டுக்கொடுக்க முடியாது'ன்னு சொன்ன சசிகலா, இப்போது தன் குடும்ப உறவுகளிடமே தினகரனை நிலைநிறுத்தப் போராடிக்கிட்டிருக்கார்.''’

""சிறையில் இருக்கும் சசிகலா, தன் வெளியுலகத் தொடர்பாளர்களையும் மாற்றிவிட்டாரமே?''’

""ஆமாங்க தலைவரே, அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி உதவியுடன், வெளியிலிருந்து தேவையானதை வாங்கியனுப்பவும், வெளியில் உள்ளவர்கள், கொடுக்கும் பொருட்களை உள்ளே பத்திரமா கொண்டுபோய்ச் சேர்க்கவும் ஆனந்த், விவேக்குன்னு இரண்டுபேர் சிறை வாசல்லயே நிறுத்தப்பட்டிருந்தாங்க. இந்த ரெண்டுபேரும் போயஸ் கார்டனில் வேலைபார்த்தவங்களாம். இந்த ஒரு வருசத்துல இரண்டுபேரும் திடீர் வசதியாயிட்டதா உள்ளுக்குள்ளே புகார்கள் போக, அவர்களை நீக்கிட்டு, புது ஆட்களை சசி நியமிச்சிருக்காராம்.''’

""காங்கிரஸ் கட்சியிலும் புது நியமனங்களாமே?''’

rang

""அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல், ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சிக்குள், ஆராய்ச்சித்து றைங்கிற பிரிவை உருவாக்கியிருக்கார். அந்தந்த மாநிலத்திலும் காங்கிரஸின் வளர்ச்சியைக் கருதி, அதன் இயக்கம், செயல்பாடு, அதன் தேர்தல் அணுகுமுறை, தேர்தல் கூட்டணிக்கான சாதக பாதக நிலைன்னு பலவற்றையும் ஆராய்ந்து மூன்று மாதத்திற்கு ஒருமுறை ராகுலுக்கு ரிப்போர்ட் கொடுக்குமாம். குஜராத் மாநிலத் தேர்தல் சமயத்தில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு தந்த ரிப்போர்ட் அடிப்படையில் ராகுல் வகுத்த வியூகத்தால்தான், அந்த மாநிலத்தில் கட்சிக்கு சரியான தலைமையே இல்லாத நிலையிலும், பா.ஜ.க.வுக்கு டஃப் ஃபைட் கொடுக்கிற ரிசல்ட் கிடைச்சுதாம். அதனால் எல்லா மாநிலத்திலும் இப்படி ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கிறாராம். தமிழகத்தில் இந்த அமைப்பின் தலைவராக நாசே ராமச்சந்திரன் மகன் நாசே ராஜேஷ் நியமிக்கப்பட்டிருக்காரு.''’

""ஓ..''’’

""காங்கிரஸில் இன்னொரு மாற்றமும் நடந்திருக்கே. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் அமைத்த குழு, இங்கே கட்சிக்கு சொந்தமான ஏறத்தாழ 1000 கோடி மதிப்பிலான சொத்துகள் பல வகை ஆக்கிரமிப்புகளில் இருப்பதைக் கண்டுபிடித்து, ரிப்போர்ட் கொடுக்க, அதை ராகுலின் பார்வைக்கு அனுப்பிவச்சி ஆலோசனையும் கேட்டிருக்காராம் திருநாவுக்கரசர்.''

""கோட்டைத் தகவல் ஏதாவது இருக்கா?''’

""அண்மையில், எக்ஸ் எம்.எல்.ஏ. டாக்டர் நல்லமுத்துவின் சொத்து விவகாரத்தில் அரியலூர் கலெக்டர் லஷ்மி பிரியா நடத்திய அடாவடிகள்பத்தி "நக்கீரன்'ல செய்தி வந்திருந்தது. இதைப்பார்த்த முதல்வர் அலுவலகம், உளவுத்துறையையும், சி.பி.சி.ஐ.டி.யும் விசாரிக்க சொன்னது. அவர்கள், கலெக்டர் லஷ்மி பிரியா அடாவடியாக நடந்துகொண்டது உண்மைதான்னு சொன்னதோடு, மேலும் பல புகார்கள் பற்றியும் ரிப்போர்ட் கொடுத்திருக்காங்க. கலெக்டரோடு, எக்ஸ் எம்.எல்.ஏ., விவகாரத்தில் முறைகேடாக நடந்துகொண்ட மற்ற அதிகாரிகள் மீதும் வழக்கு தொடரும்படி உத்தரவிட்டிருக்கிறது முதல்வர் அலுவலகம். இதைத் தொடர்ந்து, 19-ந் தேதி 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் டிரான்ஸ்பர் பட்டியலை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மூலம் தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. அதில் அரியலூர் கலெக்டரா இருந்த லஷ்மி பிரியாவும் மாற்றப்பட்டிருக்காரு.''’

""நானும் அந்த டிரான்ஸ்பர் பட்டியலை பார்த்தேன்.. ஆளுங்கட்சிக்கு அனுசரணையானவர்னு பெயரெடுத்த தேனி கலெக்டர் வெங்கடாசலம், மகளிர் ஸ்கூட்டி திட்டம் சம்பந்தமா கொடுத்த பேட்டியிலே, ஆளுந்தரப்பு பரிந்துரைக்கும் முக்கியத்துவம் கொடுப்போம்னு சொல்லியிருந்தாரு. "நக்கீரன்' இதழ் வெளியான சாயங்காலமே அவரும் மாற்றப்பட்டிருக்காரே..'' ’’

பின்குறிப்பு: பஞ்சாயத்துக்கு வருபவர்கள் இந்த அழைப்பிதழை கண்டிப்பாக எடுத்து வர வேண்டும்.

இறுதிச் சுற்று

கலெக்டர் மாநாடு! தள்ளிப்போகும் பட்ஜெட்!

ஜெ. ஆட்சியிலிருந்தே கலெக்டர்கள் மாநாடு எனப்படும் ஐ.ஏ.எஸ்.-ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு கூட்டப்படாமல் இருந்தது. இது தொடர்பாக கவர்னர் முதல் டெல்லி வரை எடப்பாடி அரசிடம் கேள்வி கேட்கப்பட்டுவந்த நிலையில், பட்ஜெட்டுக்கு முன் கலெக்டர்கள் மாநாட்டை நடத்துவது பற்றி ஆலோசித்தார் எடப்பாடி. ஆனால் சீனியர் அமைச்சர்களே, "நாம்தான் எல்லா கலெக்டர்களிடமும் உரிய ரிப்போர்ட்டுகளை வாங்கி பட்ஜெட்டை ரெடி பண்ணுகிறோமே' எனச் சொல்லி மாநாட்டை தவிர்க்கக் கோரினர். ஆனாலும் தொடர்ச்சியான மேலிட நெருக்கடிகளால், மார்ச் 5,6,7 ஆகிய 3 நாட்கள் ஐ.ஏ.எஸ்.-ஐ.பி.எஸ். மாநாடு முதல்வர் தலைமையில் நடைபெறுகிறது. இதன்பிறகே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

-இளையர்

அமைச்சரின் செல்போன் அபேஸ்!

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலைப் பகுதியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை திறப்பு விழா நடைபெற்றது. வங்கிக் கிளையைத் திறந்து வைத்து வழக்கம்போல், தனது பாணியில் பேசி முடித்துவிட்டு, கிளம்பிச் செல்லும்போதுதான், தனது காஸ்ட்லியான செல்போன் திருடு போயிருப்பதை உணர்ந்தார் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு. ""சீக்கிரம் என் செல்போனை கண்டுபிடிச்சுக் கொடுங்க. மெமரிகார்டிலும் வாட்ஸ்-ஆப்பிலும் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருக்கு. வெளியில லீக் ஆச்சுன்னா வில்லங்கமா போயிரும்''’என திருவண்ணாமலை கலெக்டரிடம் கூறிவிட்டு மதுரைக்கு வந்துவிட்டார் செல்லூரார்.

-ஷாகுல்

tamilnadugoverment sasikala kamalhaasan kamal
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe