Advertisment

ஈழ மக்களுக்காக "எல்லாளன்' படை!

eelam army

ELAN army

Advertisment

""ஹலோ தலைவரே, போர் முடிந்தும் துயரம் தீராத தமிழீழ மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமா ’"எல்லாளன்'ங்கிற பேர்ல மேற்கத்திய நாடுகளில் விறுவிறுப்பா ஒரு வேலை ஆரம்பிக்கப்பட்டிருக்கு.''’

""தமிழீழப் போரில் மறக்கமுடியாத அத்தியாயங்கள்ல ஒண்ணா 2007-ல் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கம் நடத்திய எல்லாளன் ஆபரேசன்தான் நினைவுக்கு வருது. சிங்களர்களின் அனுராதபுர விமானப் படைத் தளத்துக்குள்ள அதிரடியா புகுந்த கரும்புலிகள், அதிரடித் தாக்குதல் நடத்தி 18 சிங்கள வானூர்திகள் உட்பட பலவற்றையும் தகர்த்ததையும் அதில், 21 புலிகள் வீரமரணம் எய்தியதையும் மறக்கமுடியாதே.''’

prabhakaran""உண்மைதாங்க தலைவரே, தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்துச் சென்று அனுராதபுரத்தைக் கைப்பற்றி அங்கே 44 ஆண்டுகள் அறநெறி தவறாமல் ஆண்ட சோழ மன்னன்தான் எல்லாளன். வயதான காலத்தில், அவனைத் தென்னிலங்கையை ஆண்ட துட்டகைமுனுங்கிற மன்னன் வீழ்த்தினான். வீழ்த்

ELAN army

Advertisment

""ஹலோ தலைவரே, போர் முடிந்தும் துயரம் தீராத தமிழீழ மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமா ’"எல்லாளன்'ங்கிற பேர்ல மேற்கத்திய நாடுகளில் விறுவிறுப்பா ஒரு வேலை ஆரம்பிக்கப்பட்டிருக்கு.''’

""தமிழீழப் போரில் மறக்கமுடியாத அத்தியாயங்கள்ல ஒண்ணா 2007-ல் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கம் நடத்திய எல்லாளன் ஆபரேசன்தான் நினைவுக்கு வருது. சிங்களர்களின் அனுராதபுர விமானப் படைத் தளத்துக்குள்ள அதிரடியா புகுந்த கரும்புலிகள், அதிரடித் தாக்குதல் நடத்தி 18 சிங்கள வானூர்திகள் உட்பட பலவற்றையும் தகர்த்ததையும் அதில், 21 புலிகள் வீரமரணம் எய்தியதையும் மறக்கமுடியாதே.''’

prabhakaran""உண்மைதாங்க தலைவரே, தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்துச் சென்று அனுராதபுரத்தைக் கைப்பற்றி அங்கே 44 ஆண்டுகள் அறநெறி தவறாமல் ஆண்ட சோழ மன்னன்தான் எல்லாளன். வயதான காலத்தில், அவனைத் தென்னிலங்கையை ஆண்ட துட்டகைமுனுங்கிற மன்னன் வீழ்த்தினான். வீழ்த்தியபோதும், எல்லாளனின் அளப்பரிய வீரத்துக்கு மதிப்பளிக்கும் வகையில், எல்லாளன் புதைக்கப்பட்ட இடத்தை எவர் கடந்தாலும், அவர்கள் எல்லாளனை வணங்கிவிட்டுத்தான் போகணும்னு அந்த எதிரி மன்னனே உத்தரவு போட்டான். அப்படிப்பட்ட வீரத்துக்குச் சொந்தக்காரன் பெயரில் ‘"எல்லாளன் ஆபரேசன்'னு புலிகளின் ஆதரவு டீம், அமெரிக்காவில் களமிறங்கியிருக்கு. ஏற்கெனவே புலிகள் பல நாடுகளிலும் திரட்டி வச்சிருந்த பல ஆயிரம் கோடி நிதி, பலரிடமும் இருப்பதால், அவற்றையெல்லாம் திரட்டும் வேலையில் இறங்கியிருக்கு. அதை வைத்து தமிழீழ உரிமைக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமாம்.''’

Advertisment

""இருளில் தவிக்கும் தமிழீழ மக்களுக்கு சர்வதேச துணையுடன் வெளிச்சம் பரவட்டும். இங்கே தமிழகத் தமிழர்களுக்கு ஏதேனும் நல்லது நடக்க வாய்ப்பிருக்கா?''’

""தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், பல மாவட்டங்களுக்கும் போய் ஆய்வுகளை மேற்கொண்டப்ப, மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அவரிடம், "தமிழ்நாட்டில் வழக்கமா ஆண்டுக்கு இரண்டுமுறை முதல்வர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடக்கும். ஆனால் கடந்த 4 வருடமா இது நடக்காததால் மக்களின் குறைகளையும் தேவைகளையும் அரசின் கவனத்துக்கு முழுதா எடுத்துச்செல்ல முடியலை'ன்னு குறைபட்டுக்கிட்டாங்க. இதன் அடிப்படையில், கவர்னர் அலுவலகம், அந்த மாநாட்டை ஏன் கூட்டலை? அதில் உங்களுக்கு என்ன சிரமம்?'ன்னு அண்மையில் எடப்பாடி அரசிடம் கேள்வி எழுப்புச்சு.''’

""தமிழக அரசின் ரியாக்ஷன் என்ன?''’’

governor""இதைக்கேட்டுத் திகைச்சுப்போன முதல்வர் எடப்பாடி 31-ந் தேதி, அமைச்சர்களை அழைத்து, இதுபத்தி விசாரிச்சார். சில அமைச்சர்கள் அந்த மாநாட்டை பிப்ரவரி முதல் வாரமே, நடத்திடலாமேன்னு சொன்னாங்க. சில சீனியர் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்களின் ரிப்போர்ட்டுகளை வாங்கித்தான் நாம இப்ப பட்ஜெட் தயாரிப்புப் பணிகள்ல இருக்கோம். இப்ப அந்த மாநாட்டைக் கூட்டினோம்னா, கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகமாகும். செலவினங்களும் அதிகமாகும். அதனால் பிறகு பார்த்துக்கலாம்ன்னு சொன்னாங்க. இதைத் தொடர்ந்து அந்த மாநாட்டு ஐடியாவை கிடப்பில் போட்டுவிட்டது எடப்பாடி அரசு.''’

""மற்ற ஏரியாக்களில் என்ன நடக்குது?''’’

""குஜராத் தேர்தல் சமயத்துல, மோடியை விமர்சனம் செய்த மணிசங்கர் அய்யர், அவரை "நீச மனிதர்'னு காட்டமா விமர்சனம் செய்தார். இது பா.ஜ.க. மத்தியில் பலத்த விமர்சனத்தையும் கண்டனத்தையும் ஏற்படுத்துச்சு. அதனால் மணிசங்கரை தற்காலிகமாகக் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிச்சார் ராகுல். இந்த நிலையில் அண்மையில் நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த தன் ஆதரவாளர்களின் கூட்டத்தை ரகசியமாகக் கூட்டினார் மணிசங்கர். அதில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அவர்மீது கட்சி எடுத்த நடவடிக்கையைத் திரும்பப் பெறாட்டி, தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராகச் செயல்படுவதுன்னு ஏகமனதாக அந்தத் தரப்பு முடிவெடுத்திருக்கு.''’

""இதுவும் காங்கிரஸ் செய்திதாம்ப்பா... 2-ந் தேதி நெல்லை முக்கூடல்ல காங்கிரஸின் ஐம்பெரும் விழா நிகழ்ச்சியில் கலந்துக்க குஷ்பு போனார். அப்ப அந்த விழாவுக்கு சரியா எங்களுக்குத் தகவல் கொடுக்கலைன்னு ஒரு தரப்பினர் கொந்தளிச்சதோட, நெல்லை காங்கிரஸ் அலுவலகத்தையே இழுத்துப் பூட்டி, பரபரப்பை ஏற்படுத்திட்டாங்க. குஷ்புவோ, காங்கிரசை அழிக்க காங்கிரசிலேயே செயல்படுறாங்கன்னு காட்டமா பேசிட்டுப் போனார்.''

""நான் ஒரு தகவல் சொல்றேன். ஜனவரி 23-25ம் தேதி இதழில் வெளியான ராங்-கால் செய்தியில், ஜெயிலில் உள்ள சசிகலாவுக்கு எடப்பாடி தன்னோட மகன் மிதுன் மூலமா பொங்கல் கிப்ட் அனுப்பியதாகவும் அப்போது வாழ்த்தை விட, நிறுத்தப்பட்ட மிடாஸ் கொள்முதலை மறுபடியும் ஆரம்பிக்கும்படி உத்தரவு குரலில் சசிகலா சொல்லியிருக்காருன்னும் வெளியாகியிருந்தது. இது தவறான தகவல்னும் அப்படி எந்த நிகழ்வும் நடக்கலைன்னும் சசிகலாவின் வக்கீல் உறுதியாக மறுக்கிறார்..''

eelam elanarmy
இதையும் படியுங்கள்
Subscribe