கவர்னரின் புது வேலை! தனி அணி வியூகம்!

governor

""ஹலோ தலைவரே, நாங்கள் நினைத்தால் சொடக்குப்போடும் நேரத்தில் எடப்பாடி ஆட்சியைக் கவிழ்ப்போம்னு, ஈரோடு தி.மு.க. மாநாட்டில் ஸ்டாலின் சவால்விட, கோவையில் ஜெ.’ பிறந்தநாள் விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி, கடப்பாரையை வைத்து நெம்பினாலும் எங்கள் ஆட்சியை எதுவும் செய்யமுடியாதுன்னு அதுக்கு பதில் கொடுத்திருக்கார். இந்த நேரத்தில் கவர்னர் மாளிகையில் இருந்து ஸ்டாலினுக்கு வந்த அழைப்பு, அரசியல் களத்தில் ஏக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு.''’

governor

""சட்டப் பல்கலைக் கழகத் துணைவேந்தரா ஆர்.எஸ்.எஸ்.காரரான சூரிய நாராயண சாஸ்திரி நியமிக்கப்பட்டது தொடர்பா விளக்கம் தரத்தான் கவர்னர் மாளிகை ஸ்டாலினை அழைத்ததாகச் செய்திகள் வந்திருக்கே?''’

""தலைவரே, அதுவும் ஒரு காரணம்னாலும் இந்த ராஜ்பவன் சந்திப்பு, பல ராஜதந்திரங்களை உள்ளடக்கியதுன்னு சொல்லப்படுது. ஈரோடு மாநாட்டில் இருந்து ஸ்டாலின் சென்னை திரும்பிய 26-ந் தேதி, ஸ்டாலினைத் தொடர்பு கொண்ட ராஜ்பவன், "நாளை மாலை டீ டயத்தில் உங்களை கவர்னர் சந்திக்க விரும்பறார்'ன்னு சொன்னது. "என்ன காரணத்துக்காக?'ன்னு ஸ்டாலின் கேட்க, பொதுவான அழைப்புதான்னு பதில் சொல்லப்பட்டிருக்கு. மறுநாள் 27-ந் தேதி காலை தி.மு.க. சீனியர்களிடம் இது சம்பந்தமா விவாதிச்ச ஸ்டாலின், இந்த சந்திப்பின் போது கவர்னரிடம் எதை எதைப் பேசுவதுன்னு ஆலோசிச்சார். இதைத் தொடர்ந்து அன்று மாலை கட்சி சீனியர்களில் ஒருவரான துரைமுருகன் சகிதமா, ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை ஸ்டாலின் சந்திச்சார்.''’

""சந்திப்பில் என்ன பேசப்பட்டதாம்?''’

stalin""சந்திப்பின் போது ஸ்டாலினிடம் கவர்னர், சென்னை சட்டப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக சாஸ்திரியை நியமித்ததில் தன் தலையீடு எதுவும் இல்லைன்னும், பல்லைக் கழகத் தேர்வுக்குழு கொடுத்த 3 பேர் கொண்ட பட்டியலில் இருந்துதான் அவரை டிக் அடித்ததாகவும் விளக்கம் கொடுத்தார். சாஸ்திரி மீது ஏற்கனவே புகார் இருந்ததேன்னு ஸ்டாலின் சொல்ல, கவர்னரோ, விசாரணையில் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு விட்டார்ன்னு சொல்லியிருக்கார். இதைக்கேட்ட ஸ்டாலின் அவர் தொடர்பான ஆவணங்களை மறுபடியும் பரிசீலித்துவிட்டு இது தொடர்பாகப் பேசுவதாகச் சொன்னார். இதன்பிறகு ஸ்டாலின், மாவட்டம் தோறும் கவர்னர் நடத்திவரும் ஆய்வை, தி.மு.க. கடுமையாக எதிர்ப்பதாக கவர்

""ஹலோ தலைவரே, நாங்கள் நினைத்தால் சொடக்குப்போடும் நேரத்தில் எடப்பாடி ஆட்சியைக் கவிழ்ப்போம்னு, ஈரோடு தி.மு.க. மாநாட்டில் ஸ்டாலின் சவால்விட, கோவையில் ஜெ.’ பிறந்தநாள் விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி, கடப்பாரையை வைத்து நெம்பினாலும் எங்கள் ஆட்சியை எதுவும் செய்யமுடியாதுன்னு அதுக்கு பதில் கொடுத்திருக்கார். இந்த நேரத்தில் கவர்னர் மாளிகையில் இருந்து ஸ்டாலினுக்கு வந்த அழைப்பு, அரசியல் களத்தில் ஏக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு.''’

governor

""சட்டப் பல்கலைக் கழகத் துணைவேந்தரா ஆர்.எஸ்.எஸ்.காரரான சூரிய நாராயண சாஸ்திரி நியமிக்கப்பட்டது தொடர்பா விளக்கம் தரத்தான் கவர்னர் மாளிகை ஸ்டாலினை அழைத்ததாகச் செய்திகள் வந்திருக்கே?''’

""தலைவரே, அதுவும் ஒரு காரணம்னாலும் இந்த ராஜ்பவன் சந்திப்பு, பல ராஜதந்திரங்களை உள்ளடக்கியதுன்னு சொல்லப்படுது. ஈரோடு மாநாட்டில் இருந்து ஸ்டாலின் சென்னை திரும்பிய 26-ந் தேதி, ஸ்டாலினைத் தொடர்பு கொண்ட ராஜ்பவன், "நாளை மாலை டீ டயத்தில் உங்களை கவர்னர் சந்திக்க விரும்பறார்'ன்னு சொன்னது. "என்ன காரணத்துக்காக?'ன்னு ஸ்டாலின் கேட்க, பொதுவான அழைப்புதான்னு பதில் சொல்லப்பட்டிருக்கு. மறுநாள் 27-ந் தேதி காலை தி.மு.க. சீனியர்களிடம் இது சம்பந்தமா விவாதிச்ச ஸ்டாலின், இந்த சந்திப்பின் போது கவர்னரிடம் எதை எதைப் பேசுவதுன்னு ஆலோசிச்சார். இதைத் தொடர்ந்து அன்று மாலை கட்சி சீனியர்களில் ஒருவரான துரைமுருகன் சகிதமா, ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை ஸ்டாலின் சந்திச்சார்.''’

""சந்திப்பில் என்ன பேசப்பட்டதாம்?''’

stalin""சந்திப்பின் போது ஸ்டாலினிடம் கவர்னர், சென்னை சட்டப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக சாஸ்திரியை நியமித்ததில் தன் தலையீடு எதுவும் இல்லைன்னும், பல்லைக் கழகத் தேர்வுக்குழு கொடுத்த 3 பேர் கொண்ட பட்டியலில் இருந்துதான் அவரை டிக் அடித்ததாகவும் விளக்கம் கொடுத்தார். சாஸ்திரி மீது ஏற்கனவே புகார் இருந்ததேன்னு ஸ்டாலின் சொல்ல, கவர்னரோ, விசாரணையில் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு விட்டார்ன்னு சொல்லியிருக்கார். இதைக்கேட்ட ஸ்டாலின் அவர் தொடர்பான ஆவணங்களை மறுபடியும் பரிசீலித்துவிட்டு இது தொடர்பாகப் பேசுவதாகச் சொன்னார். இதன்பிறகு ஸ்டாலின், மாவட்டம் தோறும் கவர்னர் நடத்திவரும் ஆய்வை, தி.மு.க. கடுமையாக எதிர்ப்பதாக கவர்னரிடமே நேருக்கு நேராகச் சொன்னார்.''’

""தி.மு.க.வினர் ஒவ்வொரு மாவட்டத்திலும் காட்டுற கருப்புக் கொடியை கவர்னரும் நேரடியா சந்திக்கிறாரே?''’

""கவர்னரிடம் ஸ்டாலின் "நீங்கள் திடீர் திடீர்ன்னு ஆய்வு செய்வதால்தான் உங்களை எதிர்த்துப் போராட்டங்களை நாங்கள் நடத்தவேண்டி இருக்குது. இந்த மாநிலத்தில் அரசாங்கம் என்று ஒன்று இல்லை என்று அறிவித்துவிட்டு அதன்பிறகு வேண்டுமானால் நீங்கள் ஆய்வு நடத்துங்கள். நாங்கள் எதிர்க்கமாட்டோம். ஒரு மாநில அரசு இருக்கும் போது கவர்னர் ஆய்வு நடத்துவது என்பது, தி.மு.க. வலியுறுத்தும் மாநில சுயாட்சிக் கொள்கைக்கு எதிரானது'ன்னு ஸ்டாலின் சொல்லியிருக்காரு. இதைக் கேட்ட கவர்னர் புரோகித், "நான் ஆய்வு நடத்தவில்லை. அங்கேங்கே பார்வை இடுகிறேன்'னு மழுப்பலா சொல்லி, இதில் தன் தனிப்பட்ட தவறு இல்லை என்பதுபோல் விளக்கம் கொடுத்திருக்காரு.''’

dinakaran

""தினகரன் தரப்பின் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எப்ப வேண்டுமானாலும் வரலாம்ங்கிற நிலையில், அந்தத் தீர்ப்பு எடப்பாடி அரசுக்கு நெருக்கடியை உருவாக்கலாம்ன்னு கருத்து வெளியாகும் நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினை, வெறுமனே டீ குடிக்க மட்டுமா கவர்னர் கூப்பிட்டிருப்பார்?''’

""சரியான கேள்விதாங்க தலைவரே, இங்கே கவர்னர் மூலம்தான் மத்திய பா.ஜ.க. அரசு எல்லாத்திலும் காய்களை நகர்த்திக்கிட்டிருக்கு. கூட்டணி அசைன்மெண்ட் கூட கவர்னரிடம் கொடுக்கப்பட்டிருக்குன்னு டெல்லி வட்டாரங்கள் சொல்லுது. பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, தங்கள் கூட்டணிக்குள் தி.மு.க.வைக் கொண்டுவர முடியாட்டியும், தி.மு.க. தயவில் எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் ஜெயிச்சிடக்கூடாதுங்கிற வியூகத்தோடு வேலை செய்யுது. ஏற்கனவே பா.ஜ.க. கூட்டணியில் இருந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மூலம், தி.மு.க.வுக்கு சில சிக்னல்களைக் கொடுத்தது டெல்லி. ஆனால் அதுக்கு தி.மு.க. ரெஸ்பான்ஸ் பண்ணலை. இப்ப நாயுடுவே பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை அமைப்பதில் தீவிரம் காட்டறதால், தி.மு.க. பற்றிய புது வேலை கவர்னரிடம் கொடுக்கப்பட்டிருக்குன்னு சொல்றாங்க.''’

""ஓஹோ''’

""ஏற்கனவே காங்கிரஸ் , பா.ஜ.க. இல்லாத கூட்டணியை உருவாக்கப் போறதா சொன்ன மேற்குவங்க முதல்வரான மம்தா, தி.மு.க.வையும் அந்த அணியில் சேர்த்துடணும்ன்னு ஸ்டாலினிடம் முன்பே போன்ல கேட்டுக்கிட்டார். இந்த நிலையில் தி.மு.க. எம்.பி. கனிமொழியும் மம்தாவும் டெல்லியில் சந்திச்சிப் பேசிய அதே நாள்லதான், இங்கே கவர்னர் புரோகித்தும் ஸ்டாலினும் சந்திச்சிப் பேசியிருக்காங்க. அதனால் இந்த ரெண்டு சந்திப்பும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமலா நடந்திருக்கும்ன்னு டெல்லித் தரப்பு அர்த்தத்தோடு சொல்லுது.''’

""அப்படின்னா காங்கிரஸை கூட்டணியில் இருந்து தி.மு.க. கழற்றிவிடப் போகுதா?''’

""தினகரன் டீமைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்க வழக்கில், எடப்பாடி அரசுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தால், தி.மு.க. உடனே ஆட்சி அமைக்க நினைக்குமா? இல்லை, தேர்தலைச் சந்திக்க நினைக்குமா?ன்னு உளவுத்துறை மூலம் மோடி அரசு தகவல்களை சேகரிச்சிக்கிட்டிருக்கு. ஒருவேளை தி.மு.க. ஆட்சி அமைக்க முன்வந்தால், அதுக்கு டெல்லியின் சட்ட ஒத்துழைப்பும் தேவைப்படும். அந்த சமயத்தில், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க.வை விலக வச்சிடலாம். எம்.பி. தேர்தல்ல தி.மு.க. தனிச்சி போட்டியிட்டு, அதிக தொகுதியைக் கைப்பற்றும் அளவுக்கு கள நிலவரம் இருக்கான்னும் டெல்லி, தகவல் சேகரிக்குது. பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு ஒரு எம்.பி. சீட் கூட கிடைச்சிடக் கூடாதுன்னு நினைக்குது. அதற்கான வேலைகளை இங்கே கவர்னர் மூலம் செய்யத் தொடங்கியிருக்கு. இந்த நேரத்தில்தான் கவர்னர் ஸ்டாலினை சந்திச்சது போலவே, மம்தா டெல்லியில் கனிமொழியை சந்திச்சிருக்கார்.''’

kanomozhi

""கனிமொழியிடம் மம்தா என்ன சொன்னாராம்?''’

""மூன்றாவது அணிக்கு தி.மு.க. வரணும்ன்னு மம்தா சொல்ல, கனிமொழியோ, "இதில் நான் எந்த முடிவும் எடுக்கமுடியாது; இது கட்சியின் கொள்கை முடிவு. அதை கட்சித் தலைமைதான் தீர்மானிக்கனும்னு தலைமையிடம் சொல்றேன்'னுட்டாராம். அப்ப மம்தா, கலைஞரின் உடல் நிலைபற்றி அக்கறையா விசாரிச்சதோட, அவரை விரைவில் நேரில் சந்திச்சி நலம் விசாரிப்பேன்னும் சொல்லியிருக்கார். கனிமொழியை சந்திச்ச மம்தா, மேலும் சில கட்சி பிரமுகர்கள டெல்லியில் சந்திச்சதோடு சோனியாவை சந்திக்கவும் அப்பாயின்ட்மெண்ட் கேட்டிருக்கார். அவருக்கு உடல் நிலை சரியில்லாததால் நேரம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.''’

""மம்தாவின் வியூகம்தான் என்ன? காங்கிரஸுக்கு எதிரான அணியை அமைக்கும் அவர் எதுக்கு சோனியாவை சந்திக்கணும்?'' ’

""மம்தாவைப் பொறுத்தவரை தனது மேற்கு வங்க மாநிலத்தில், பா.ஜ.க. ஒரு பலமான சக்தியா வளர்ந்துடக் கூடாதுன்னு நினைக்கிறார். அதனால் நாடு பூரா பா.ஜ.க.வுக்கு எதிரான சக்திகளை வலிமையாக்கணும்னு நினைக்கிறார். உ.பி.யில் எதிர் எதிர் துருவங்களாக இருந்த சமாஜ்வாடி கட்சியும் பகுஜன் சமாஜும் நெருங்கி வரும் நேரத்தில், இந்தியா முழுவதும் யாரையும் தனிமைப்படுத்தாமல், அந்தந்த மாநிலத்திலும் இருக்கும் ஒரு பலமான கட்சியின் கீழ் மற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து, பா.ஜ.க.வை எதிர்க்கணும் என்பது மம்தாவின் நிலைப்பாடு. மாநிலத்துக்கு ஒரு தேர்தல் நிலைப்பாட்டை எடுக்கும் பா.ஜ.க.வோ இதையெல்லாம் தன் அதிகாரத்தின் மூலம் சமாளிச்சிக்கலாம்ன்னு நினைக்குது. காங்கிரஸுக்கு இன்னொரு வாய்ப்பைக் கொடுத்துடக் கூடாதுங்கிற ஒரே எண்ணத்தோடும் பா.ஜ.க காய் நகர்த்துது.''’

""ஈரோடு மாநாட்டில் யார் தயவும் இல்லாமல் ஆட்சி அமைப்போம்ன்னு ஸ்டாலின் சொன்னதால், தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள், த.மு.மு.க., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கம்யூனிஸ்டுகள் போன்ற கட்சிகள், தினகரனோடு சேர்ந்து ஒரு புது அணியை உருவாக்கப் போவதாக பரபர செய்திகள் வந்ததே?''’

""அந்த செய்தி எனக்கும் வந்ததுங்க தலைவரே, தஞ்சை மாவட்ட அம்மாபேட்டையில் ஓ.என்.ஜி.சி.யை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தில், சி.பி.ஐ. பாலகிருஷ்ணன், சிறுத்தைகள் திருமா, த.மு.மு.க. ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் போன்றோர் கலந்துக்கிட்டு கைதானப்ப ஒரு திருமண மண்டபத்தில் வச்சிருந்தாங்க. இதைக் கேள்விப்பட்ட தினகரன், அங்கே போய், விவசாயிகளுக்குத் தனது ஆதரவைத் தெரிவிச்சதோட, அங்கிருந்த அனைத்துக்கட்சித் தலைவர்களிடமும், "மக்கள் பிரச்சினைகளை மையப்படுத்தி நீங்கள் களமிறங்கும் போராட்டத்தில், அரசியல் கடந்து நாங்களும் பங்கேற்போம்'ன்னு சொன்னார். இதுதான் தி.மு.க.வுக்குப் பதிலா தனி அணின்னு பரவிடிச்சி.''’

""தஞ்சாவூரில் பரோல்ல இருக்கும் சசிகலா தரப்பில் என்னப்பா இருக்கு?''’

""சசிகலா சோகம் நீங்காமத்தான் இருக்காராம். அவரிடம் தினகரன் தரப்பு பத்தின புகாரை எல்லாம் விவேக் போட்டுக் கொடுப்பதோட, சசிகலாவை யாரும் எளிதில் நெருங்காத படி, ’பிளாக் கேட்ஸ்’ என்கிற பாதுகாப்புப் படையினரை நிறுத்தியிருக்காராம். அதனால் அவர்மேல், தினகரன் தரப்பினர் ஏகக் கடுப்பில் இருக்காங்க. அதேபோல் திவாகரன் தரப்பும், விவேக் எடுத்துக்கொள்ளும் முக்கியத்துவத்தைக் கண்டு எரிச்சலில் இருக்குதாம். இந்த நிலையில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில், போலி ஆவணங்களைக் காட்டி, என்.ஆர்.ஐ. கோட்டாவில் விவேக் பி.பி.எல். சீட் வாங்கிருக்கார்ன்னு லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுபிடிச்சிருக்கு. குற்றம் நிரூபிக்கப்பட்டால் விவேக் விரைவில் சிறைக்குப் போகவேண்டி இருக்கும்ன்னு அமைச்சர் ஜெயக்குமார் வரிஞ்சி கட்ட ஆரம்பிச்சிட்டார். இதுவும் குடும்பத்துக்குள்ள விவேக்குக்கு எதிரான நிலையை அதிகப்படுத்தியிருக்கு.''’

""நானும் ஒரு தகவலைச் சொல்றேன். விவேக்கின் சட்டப்படிப்பு சர்ச்சையை போன வருஷமே சொன்னது நக்கீரன்தான். இப்ப இன்னொரு தகவல்... டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வில் பல்வேறு உயரதிகாரிகளின் பிள்ளைகள் முறைகேடாகத் தேர்ச்சி பெற்றிருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், டி.சி. சியாமளா தலைமையிலான மத்திய குற்றப்பிரிவு டீம் விசாரணை நடத்திக்கிட்டிருக்கு. முதற்கட்டமா மாநிலக் கல்லூரி முதல்வர் பிரம்மானந்த பெருமாளின் மகளும் இ-கவர்னன்ஸில் துணை கலெக்டராக இருப்பவருமான ஃபெர்மி வித்யாவிடம் இது விசாரணையைத் தொடங்கியிருக்கு. இதைக் கண்டு மிரண்டுபோன சம்பந்தப்பட்ட சிலர், இந்த விசாரணையைத் தடுத்து நிறுத்தணும்ன்னு சென்னை சிட்டி கமிஷனர் ஏ.கே.விசுவநாதனை அணுகியிருக்கிறார்கள். கமிஷனரோ, இந்த விவகாரத்தைத் தீவிரமாக விசாரிக்கும் படி உத்தரவிட்டிருக்காராம்.''’

---------------------

தற்கொலை செய்வோம்’’-அ.தி.மு.க.எம்.பி.ஆவேசம்!

navanedhakrishnanகாவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிவடையும் தருணத்தில், ""28-ஆம் தேதி, நாடாளுமன்றத்தின் ராஜ்யசபையில் ஆவேசமாகப் பேசி, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார் அ.தி.மு.க.எம்.பி.நவநீதகிருஷ்ணன். “""எங்களை ராஜினமா பண்ணச் சொல்லி தமிழகத்தில் இருந்து குரல்கள் எழ ஆரம்பித்த்விட்டன. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே மதிக்கவில்லை என்றால் அரசியல் சாசனம் எதற்கு? பா.ஜ.க. சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் எம்.பி.க்களாகிய நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம்''’என்ற நவநீதகிருஷ்ணனின் பேச்சு, தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளிடமும் வரவேற்பைப் பெற்றது.

dinakaran governor stalin
இதையும் படியுங்கள்
Subscribe