Advertisment

பட்ஜெட்! கடிவாளம் போட்ட கவர்னர்!

ops-eps

""ஹலோ தலைவரே, தமிழக அரசின் ’மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள்’ மாநாடு விரைவில் நடக்கும்னு முன்கூட்டியே சொன்னது நம்ம நக்கீரன்தான். தமிழக அரசின் பட்ஜெட், மார்ச் 15-ந் தேதி தாக்கலாகப் போகுதுன்னும், நம்ம நக்கீரன் மட்டும்தான் முன்னதாகவே ஸ்மெல் பண்ணி சொன்னது.''

Advertisment

budget-ops-eps

""ஆமாம்ப்பா, தமிழக அரசின் பட்ஜெட்டை எடப்பாடி அரசு, பிப்ரவரியிலேயே தாக்கல் செய்ய முயற்சி செஞ்சதையும், ஆனால் கவர்னர் புரோகித்தோ, தினகரன் தரப்பின் 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் மற்றும் ஓ.பி.எஸ். தரப்பின் 12 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்குகளின் தீர்ப்பு வரட்டும்ன்னு சொல்லி, பட்ஜெட் தாக்கலுக்கான அனுமதியைத் தர மறுத்து வந்ததையும் முன்கூட்டியே சொன்ன நம்ம நக்கீரன், அண்மையில் சென்னை வந்த பிரதமர் மோடியின் கவனத்துக்கு இந்த விவகாரத்தை அமைச்சர் தங்கமணி மூலம் எடப்பாடி அரசு கொண்டுபோய், பட்ஜெட்டுக்கான க்ரீன் சிக்னலை கவர்னரிடமிருந்து பெற்றதையும் ரொம்பத் தெளிவாவே சொல்லியிருந்துச்சே.''’

""உண்மைதாங்க தலைவரே, ராஜ்பவன் கொடுத்த சிக்னலைத் தொடர்ந்துதான் துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பி.எஸ். பட்ஜெட் தாக்கலுக்கே ரெடியானார். தமிழக அரசு, ஏற்கனவே 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருப்பதால், இந்த பட்ஜெட்டும் பற்றாக்குறை பட்ஜெட்தான். தி.மு.க. ஆட்சிக் காலத்தில், பட்ஜெட் தாக்கலுக்குப் பின், அதன் மீதான விவாதங்கள், துறை ரீதியான மானியக் கோரிக்கைகள்ன்னு 45 நாட்கள் முதல் 50 நாட்கள்வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடப்பது வழக்கம். இதை ஜெ.’ தன் ஆட்சிக் காலங்களில் 30 நாட்களாகச் சுருக்கினார். இப்போதைய எடப்பாடி அரசோ, 5 நாள் விவாதம், 15 நாள் மானியக் கோரிக்கைகள்ன்னு

""ஹலோ தலைவரே, தமிழக அரசின் ’மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள்’ மாநாடு விரைவில் நடக்கும்னு முன்கூட்டியே சொன்னது நம்ம நக்கீரன்தான். தமிழக அரசின் பட்ஜெட், மார்ச் 15-ந் தேதி தாக்கலாகப் போகுதுன்னும், நம்ம நக்கீரன் மட்டும்தான் முன்னதாகவே ஸ்மெல் பண்ணி சொன்னது.''

Advertisment

budget-ops-eps

""ஆமாம்ப்பா, தமிழக அரசின் பட்ஜெட்டை எடப்பாடி அரசு, பிப்ரவரியிலேயே தாக்கல் செய்ய முயற்சி செஞ்சதையும், ஆனால் கவர்னர் புரோகித்தோ, தினகரன் தரப்பின் 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் மற்றும் ஓ.பி.எஸ். தரப்பின் 12 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்குகளின் தீர்ப்பு வரட்டும்ன்னு சொல்லி, பட்ஜெட் தாக்கலுக்கான அனுமதியைத் தர மறுத்து வந்ததையும் முன்கூட்டியே சொன்ன நம்ம நக்கீரன், அண்மையில் சென்னை வந்த பிரதமர் மோடியின் கவனத்துக்கு இந்த விவகாரத்தை அமைச்சர் தங்கமணி மூலம் எடப்பாடி அரசு கொண்டுபோய், பட்ஜெட்டுக்கான க்ரீன் சிக்னலை கவர்னரிடமிருந்து பெற்றதையும் ரொம்பத் தெளிவாவே சொல்லியிருந்துச்சே.''’

""உண்மைதாங்க தலைவரே, ராஜ்பவன் கொடுத்த சிக்னலைத் தொடர்ந்துதான் துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பி.எஸ். பட்ஜெட் தாக்கலுக்கே ரெடியானார். தமிழக அரசு, ஏற்கனவே 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருப்பதால், இந்த பட்ஜெட்டும் பற்றாக்குறை பட்ஜெட்தான். தி.மு.க. ஆட்சிக் காலத்தில், பட்ஜெட் தாக்கலுக்குப் பின், அதன் மீதான விவாதங்கள், துறை ரீதியான மானியக் கோரிக்கைகள்ன்னு 45 நாட்கள் முதல் 50 நாட்கள்வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடப்பது வழக்கம். இதை ஜெ.’ தன் ஆட்சிக் காலங்களில் 30 நாட்களாகச் சுருக்கினார். இப்போதைய எடப்பாடி அரசோ, 5 நாள் விவாதம், 15 நாள் மானியக் கோரிக்கைகள்ன்னு கூட்டத் தொடரை சட்டுபுட்டுன்னு முடிக்கத் திட்டமிட்டுச்சு. ஆனால் சட்டப்பேரவை செயலக அதிகாரிகள், இவ்வளவு குறைந்த காலத்தில் விவாதத்தை முடிக்க முடியாதுன்னு சொன்னதால், மானியக் கோரிக்கை குறித்த விவாதங்களுக்கு 20 நாட்களை ஒதுக்கலாமான்னு அரசுத் தரப்பில் ஆலோசனை நடக்குது.''’

Advertisment

governor""பட்ஜெட் தாக்கலுக்கு முன்னாடியே பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றணும்னு பிரதான எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லியிருந்தாரே?''’

""அதைப்பற்றியும் எடப்பாடி அரசு ஆலோசிச்சிது. பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னாடி இதைச் செய்தால் பட்ஜெட் பணிகள் பாதிக்கலாம்னு யோசிச்சி, பட்ஜெட்டைத் தாக்கல் செய்த பிறகு சட்டமன்ற சிறப்புக் கூட்டம் நடத்தலாம்னு முடிவெடுக்கப்பட்டிருக்கு. இதுக்கு நடுவில், பட்ஜெட் தாக்கலுக்கு தேதி குறித்த கவர்னர் பன்வாரிலால் புரோகித், பட்ஜெட் குறித்த விவாதங்களையும் நிதி மசோதா தாக்கலையும், எம்.எம்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்குகளின் தீர்ப்பு வந்தபிறகு பார்த்துக்கலாம்ன்னு சொல்கிறார். ஆனால் முதல்வர் எடப்பாடி தரப்போ, நிதி மசோதாவைத் தாக்கல் செய்யவும் அனுமதிக்கணும்னு பட்ஜெட் தாக்கலுக்கு முன்புவரை ராஜ்பவனிடம் கோரிக்கை வச்சது.''’

""அகில இந்திய காங்கிரஸிடமும் இங்கிருக்கும் காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்கள் பலரும் பல்வேறு கோரிக்கைகளை வைக்கிறாங்களே!''’

""தலைவரே, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கான உறுப்பினர்கள் பட்டியல் ஓகே ஆன பிறகும், அது தொடர்பான சச்சரவுகள் நடப்பது பற்றி போனமுறையே நாம பேசிக்கிட்டோம். இந்த நிலையில் சத்யமூர்த்தி பவனிலேயே, தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவரான கராத்தே தியாகராஜன் தலைமையில் போராட்டம் நடந்தது. நடிகை குஷ்பு அகில இந்தியக் கமிட்டியில் உறுப்பினரா ஆக்கப்பட்டதை அவர் கடுமையா விமர்சிச்சதோட, பெண்கள் மது குடிக்கலாம்ன்னு குஷ்பு கொடுத்திருந்த பேட்டியையும் சுட்டிக்காட்டி, இப்படிப்பட்டவருக்கு கட்சியில் முக்கியத்துவமான்னு கொந்தளிச்சார். இதற்குப் பதிலடியாக குஷ்புவும், கராத்தே பற்றி கட்சி மேலிடத்துக்கு புகார் அனுப்பி, அவர்மேல் நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை வச்சிருக்கார். திருநாவுக்கரசர் தரப்பும், ரஜினி கட்சியில் ஐக்கியமாகப் போகிறவர் குஷ்புன்னு மேலிடத்துக்கு புகார் அனுப்ப, ஈ.வி.கே.எஸ். தரப்பும், உறுப்பினர் நியமனங்கள் தொடர்பான புகார்களை அனுப்பியிருக்கு. இப்படி காங்கிரஸின் கோஷ்டித் தலைவர்கள் எல்லோரும், ஒருவர் மீது ஒருவர் புகார் அனுப்பி நடவடிக்கை எடுங்கன்னு கோரிக்கை வச்சிருக்காங்க. இருந்தும் அவங்கவங்களும் அவங்கவங்க ஆட்களுக்கு பதவி வாங்கிக்கொடுப்பதில் முனைப்பாவே இருக்காங்க.''’

""அதுதானே அரசியல்?''’

""அதுவும் வெறும் அரசியல் இல்லை... வாரிசு அரசியல். தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசரும் அவர் மகன் ராமச்சந்திரனும் கட்சியின் அகில இந்தியக் கமிட்டியில் உறுப்பினர்கள். அதேபோல் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், அவர் மகன் திருமகன் ஈ.வெ.ரா.வும், ப.சி.யும் அவர் மகன் கார்த்தி சிதம்பரமும், பொருளாளர் நாசே ராமச்சந்திரனும், அவர் மகன் ராஜேஸும், அன்பரசும் அவர் மகன் அருள் அன்பரசும், எக்ஸ் எம்.பி.ஆரூணும் அவர் மகன் அசன் ஆரூணும்னு உறுப்பினர் ஆகியிருக்காங்க.''’

congress-protest

""கட்சியின் அகில இந்தியக் கமிட்டியில் அப்பாவும் மகன்களுமா உறுப்பினராக ஆகியிருப்பதை, கட்சியை வழிநடத்தும் அம்மாவும் மகனுமான சோனியாவும் ராகுலும் கவனிப்பாங்களா?''’

""சரியான கேள்விதாங்க தலைவரே, திருநாவுக்கரசர் பற்றி கட்சியின் மேலிடத்துக்கு புகார் அனுப்பியிருக்கும் இளங்கோவன் தரப்பு, ப.சி, தன் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு கொடுத்த அதீத சுதந்திரம் இன்று சட்டச்சிக்கலை உண்டாக்கியது போல், திருநாவுக்கரசர் தன் மகன் ராமச்சந்திரனுக்குக் கொடுக்கும் சுதந்திரமும் கட்சிக்கு நாளை நெருக்கடியை உண்டாக்கும்னு குறிப்பிட்டிருக்கு. அதேபோல் கடலூர் மாவட்டத்தில் எக்ஸ் எம்.எல்.ஏ. அழகிரி, மணிரத்தினம், சொத்து மீட்புக் குழுத் தலைவர் சந்திரசேகர்ன்னு 3 பேர் அகில இந்தியக் கமிட்டி உறுப்பினர்களா ஆக்கப்பட்டிருக்காங்க. கட்சியின் சீனியர்கள் பலருக்கும் இடமில்லையாம். கட்சிக்காக உழைப்பவர்களுக்கு, கட்சியின் வட்டாரக் கமிட்டியிலோ, மாவட்ட கமிட்டியிலோ அகில இந்தியக் கமிட்டியிலோ இடம் தரப்படவில்லை. குறிப்பாக 117 பேர் கொண்ட அகில இந்திய கமிட்டி உறுப்பினர்கள் பதவி உட்பட அனைத்துப் பதவிகள்லயும் தலித் சமூகம் அதிகம் புறக்கணிக்கப்பட்டிருக்குன்னும் கட்சி மேலிடத்துக்கு புகார்கள் போயிருக்கு. டெல்லியில் 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கும் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், ராகுல் கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றபின், இப்படிப்பட்ட புகார்கள் அவரிடம் கொட்டப்படுமாம்.''’

pchamdambarm""ப.சி. மகன் கார்த்தி சிதம்பரம் திகார் ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட பிறகும் அவர் மீதான சி.பி.ஐ.யின் பிடி நாளுக்கு நாள் இறுகுது போலிருக்கே?''’

""உண்மைதாங்க தலைவரே, அவர் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் லேசில் வாயைத் திறக்கமாட்டேங்கறார். ஆனால் சி.பி.ஐ.யோ அவருக்கு எதிராக புதிய புதிய ஆதாரங்களைத் தோண்டித் துருவி எடுத்துக்கிட்டே இருக்கு. எப்படியும் அவர் வாயைத்திறப்பார். திறக்க வைப்போம்ன்னு விசாரணை டீம் சொல்லுது. இந்த நிலையில் 2 ஜி தொடர்பான வழக்குகளை 6 மாதங்கள்ல முடிக்கும்படி உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருக்கு. அதனால் ஏர்செல்- மேக்ஸிஸ் வழக்கில் ப.சி.க்கு இருக்கும் தொடர்பை வைத்து அவர் மேல் வழக்கு தொடரணும்னு சு.சாமி கொடுத்த மனுவையும், ப.சி.யை குறிவச்சிபா.ஜ.க. தூசிதட்டி எடுக்குது.''’

""ஆளுங்கட்சி, தங்கள் தரப்பு தொண்டர்களின் இறுக்கத்தை நீக்க, டி.வி.சேனல்களை ஆரம்பிக்கிதே?''’

""அம்மா டி.வி.ங்கிற பெயர்லதான் டி.வி.சேனல்களை ஆரம்பிக்கத் திட்டமிட்டாங்க. கடைசியில் ’பாலிமர் கனடா’ சேனல் மூலம், ஜெ.’மியூசிக், ஜெ.’நியூஸ், ஜெ.’மூவீஸ், ஜெ.’டிவின்னு புதிய சேனல்களை ஏப்ரல் 14 முதல் ஒளிபரப்ப ரெடியாயிட்டாங்க. எடப்பாடி, தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் டீம்தான் இவற்றை நடத்தப்போவுது. சசிகலா குடும்பத்தினரிடம் உள்ள ஜெயா டி.வி.யில் இருக்கும் பலரையும் தங்கள் பக்கம் இழுக்கவும் ரெடியாயிட்டாங்க.''’

""நானும் ஜெ.’ தொடர்பான ஒரு முக்கிய தகவலைச் சொல்றேம்ப்பா. ஜெ.’ நினைவிடத்தில் நினைவு மண்டபம் கட்ட 43.26 கோடி ரூபாயை எடப்பாடி அரசு ஒதுக்கியிருக்கு. இதற்கான வரைபடம், காண்ட்ராக்ட் உள்ளிட்டவைகள் முடிவு செய்யப்பட்டுவிட்டன. இந்த நினைவு மண்டபப் பணியை பொதுப்பணித் துறையின் சூப்பிரண்டண்ட் என்ஜினியர்தான் கண்காணிக்கணும். ஆனால் இந்தப் பதவி கடந்த 6 மாதமாக காலியாவே இருக்கு. தகுதியானவங்க இருந்தும் நியமிக்காம, தன் சமூகத்தைச் சேர்ந்த, தனக்குத் தோதான ஒருவரை உட்காரவைக்கணும்ன்னு முதல்வர் எடப்பாடி லிஸ்ட் எடுத்துக்கிட்டிருக்கார். அதேபோல் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸுக்கு நெருக்கமான சிலரும், அந்தப் பதவிக்கான போட்டியில் குதிச்சிருக்காங்க.''’

budget
இதையும் படியுங்கள்
Subscribe