ராங் கால் : வெல்கம் பிரியங்கா! சோனியாவிடம் வலியுறுத்திய மன்மோகன்சிங்!

ff

"ஹலோ தலைவரே, "பொள்ளாச்சி கொடூரம்! புது வீடியோ! எடப்பாடி ஷாக்!' என்ற தலைப்பில், கடந்த நக்கீரன் இதழில் வந்த அட்டைப்படக் கட்டுரை, பல தரப்பிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கு.''’

""ஆமாம்பா, பொள்ளாச்சி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், எந்த அனுமதியும் பெறாமல் சொகுசு விடுதிகள் இருப்பதையும், அங்கே கெட்ட காரியங்கள் அதிகம் நடப்பதையும் விவரிச்ச அந்தக் கட்டுரை, அதுபற்றி விசாரிக்க கலெக்டரால் அனுப்பப்பட்ட வட்டார வளர்ச்சி அதிகாரி ரவீந்திரன், அந்தப் பகுதியில் மொத்தம் 63 விடுதிகள் இருப்பதைக் கண்டு பிடித்ததையும் சுட்டிக் காட்டியிருந்தது. இதைத் தொடர்ந்து அந்த விடுதிகளின் உரிமையாளர்கள் முதல்வர் எடப்பாடியிடமே, "எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், விடுதி கேமராக்களில் பதிவான பலான வீடியோக்களை வெளியிடுவோம். குறிப்பாக, பொள்ளாச்சியில் நடந்த காமக்கொடூரங்கள் தொடர்பான புதிய வீடியோக்கள் வெளிவரும்'ன்னு அவர்கள் எச்சரிச்சதையும் அந்தக் கட்டுரை அதிரடியாக அம்பலப்படுத்தி இருந்ததே?''’

""உண்மைதாங்க தலைவரே, இந்த செய்தி நக்கீரன் மூலம் அம்பலமானதால் எடப்பாடி அரசு பதட்டமாயிடிச்சி. இந்த செய்திகள் எல்லாம் எப்படி நக்கீரனுக்குப் போனதுன்னு ஒருபக்கம் அதிகாரிகளைத் துருவுவதோடு, நாம் நேர்மையானவங்கன்னு காட்ட, ஏதேனும் ஒருசில விடுதிகள் மீதாவது நடவடிக்கை எடுங்கன்னு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கு எடப்பாடி அரசு. இதைத் தொடர்ந்து பொள்ளாச்சி அருகிலுள்ள வாளையாறில் இருக்கும் ’ வெஸ்டர்ன் வேலி ரிசார்ட்டை’ சோதனையிட்ட அதிகாரிகள், அதுக்கு சீல் வச்சிருக் காங்க.''’

""நக்கீரன் செய்தினாலே ஆட்சியாளர்கள் நடுங்குவது 31 வருட வரலாறாச்சே..''

rr""இப்ப உள்ள ஆட்சியாளர்கள் மத்திய அரசின் பெயரைக் கேட்டாலே தொடை நடுங்குறாங்க.. பா.ஜ.க. ஆட்சியில்லாத மாநிலங்களில் இருக்கும் அரசாங்கங் களைக் குதிரை பேரங்கள் மூலமாவோ அல்லது அதிரடி ஊழல் மற்றும் ரெய்டு நடவடிக்கைகள் மூலமாவோ கலைச்சி, அவற்றில் பா.ஜ.க. அரசுகளை நிறுவணும்னு மத்தியில் இருப்பவங்க துடியாத் துடிக்கிறாங்க. அதனால், ம.பி., மேற்குவங்கம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களின் கவர்னர்களை விரைவில் சந்திக்க இருக்கிறாராம் பா.ஜ.க.வின் தேசியத் தலைவரான உள்துறை அமைச்சர் அமித்ஷா. அந்த சந்திப்பில் அவர்களுக்கு சில அதிரடிக் கட்டளைகள் பிறப் பிக்கப்பட இருக்குதாம். அந்த வகையில்

"ஹலோ தலைவரே, "பொள்ளாச்சி கொடூரம்! புது வீடியோ! எடப்பாடி ஷாக்!' என்ற தலைப்பில், கடந்த நக்கீரன் இதழில் வந்த அட்டைப்படக் கட்டுரை, பல தரப்பிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கு.''’

""ஆமாம்பா, பொள்ளாச்சி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், எந்த அனுமதியும் பெறாமல் சொகுசு விடுதிகள் இருப்பதையும், அங்கே கெட்ட காரியங்கள் அதிகம் நடப்பதையும் விவரிச்ச அந்தக் கட்டுரை, அதுபற்றி விசாரிக்க கலெக்டரால் அனுப்பப்பட்ட வட்டார வளர்ச்சி அதிகாரி ரவீந்திரன், அந்தப் பகுதியில் மொத்தம் 63 விடுதிகள் இருப்பதைக் கண்டு பிடித்ததையும் சுட்டிக் காட்டியிருந்தது. இதைத் தொடர்ந்து அந்த விடுதிகளின் உரிமையாளர்கள் முதல்வர் எடப்பாடியிடமே, "எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், விடுதி கேமராக்களில் பதிவான பலான வீடியோக்களை வெளியிடுவோம். குறிப்பாக, பொள்ளாச்சியில் நடந்த காமக்கொடூரங்கள் தொடர்பான புதிய வீடியோக்கள் வெளிவரும்'ன்னு அவர்கள் எச்சரிச்சதையும் அந்தக் கட்டுரை அதிரடியாக அம்பலப்படுத்தி இருந்ததே?''’

""உண்மைதாங்க தலைவரே, இந்த செய்தி நக்கீரன் மூலம் அம்பலமானதால் எடப்பாடி அரசு பதட்டமாயிடிச்சி. இந்த செய்திகள் எல்லாம் எப்படி நக்கீரனுக்குப் போனதுன்னு ஒருபக்கம் அதிகாரிகளைத் துருவுவதோடு, நாம் நேர்மையானவங்கன்னு காட்ட, ஏதேனும் ஒருசில விடுதிகள் மீதாவது நடவடிக்கை எடுங்கன்னு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கு எடப்பாடி அரசு. இதைத் தொடர்ந்து பொள்ளாச்சி அருகிலுள்ள வாளையாறில் இருக்கும் ’ வெஸ்டர்ன் வேலி ரிசார்ட்டை’ சோதனையிட்ட அதிகாரிகள், அதுக்கு சீல் வச்சிருக் காங்க.''’

""நக்கீரன் செய்தினாலே ஆட்சியாளர்கள் நடுங்குவது 31 வருட வரலாறாச்சே..''

rr""இப்ப உள்ள ஆட்சியாளர்கள் மத்திய அரசின் பெயரைக் கேட்டாலே தொடை நடுங்குறாங்க.. பா.ஜ.க. ஆட்சியில்லாத மாநிலங்களில் இருக்கும் அரசாங்கங் களைக் குதிரை பேரங்கள் மூலமாவோ அல்லது அதிரடி ஊழல் மற்றும் ரெய்டு நடவடிக்கைகள் மூலமாவோ கலைச்சி, அவற்றில் பா.ஜ.க. அரசுகளை நிறுவணும்னு மத்தியில் இருப்பவங்க துடியாத் துடிக்கிறாங்க. அதனால், ம.பி., மேற்குவங்கம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களின் கவர்னர்களை விரைவில் சந்திக்க இருக்கிறாராம் பா.ஜ.க.வின் தேசியத் தலைவரான உள்துறை அமைச்சர் அமித்ஷா. அந்த சந்திப்பில் அவர்களுக்கு சில அதிரடிக் கட்டளைகள் பிறப் பிக்கப்பட இருக்குதாம். அந்த வகையில் இங்கிருக் கும் முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் மேல் எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் ஜரூரா தூசு தட்டப்படுது. அதேபோல், வருமான வரித் துறையிடமிருந்தும், சி.பி.ஐ.யிடமிருந்தும் இவர்கள் தொடர்பான கனமான கோப்புகள் கடந்த வாரம் அமித்சாவுக்குப் போயிருக்கு. இதை மையப்படுத்தி ஆலோசிக்கத்தான் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தையும் சந்திக்க இருக் கிறாராம் அமித்ஷா. கவர்னரும் ரிப்போர்ட் ரெடி பண்ணிட்டாராம். இந்தத் தகவல் எடப்பாடியின் கவனத்துக்கு வந்ததால், அவர் திகிலடிச்சிப் போயிருக்காராம்.''’

""எனக்கு கிடைச்ச டெல்லி தகவல்படி, விரைவில் மத்திய அமைச்சரவை விரிவாக்கப் படும்னு சொல்றாங்களே?''’

""நாடாளுமன்றக் கூட்டத் தொடர் 7-ந் தேதி வரை நடக்கும். அதுக்குப் பிறகுதான் மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்னு சொல் லப்படுது. இந்த நிலையில் பா.ம.க. அன்புமணிக்கு எதிரான சி.பி.ஐ. வழக்கில், கீழ்க்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையை உயர்நீதிமன் றம் ரத்து பண்ணிடிச்சி. இதைத் தனக்குச் சாதக மான அம்சமாகக் கருதும் அன்புமணி, மத்திய அமைச்சரவையில் தனக்கு ஒரு இடத்தை வாங்கி யாகணும்னு தீவிரம் காட்றாராம். இது தொடர் பாக அமித்ஷாவிடம் அப்பாயின்ட்மெண்ட் கேட்டு காத்திருக்காரு. அதே போல ஓ.பி.எஸ்.சும் தன் மகனுக்கு மத்திய மந்திரி பதவியை வாங்கியே ஆகணும்னு டெல்லித் தொடர்புகளை வைத்து, லாபி பண்ணிக் கொண்டிருக்கிறார். பா.ஜ.க.வோ, தமிழகத்தில் தங்களை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வைக்காத, இந்தக் கூட்டணிக் கட்சிகளுக்கு எதுக்கு மந்திரி பதவியைத் தூக்கிக் கொடுக்கணும்னு நினைக்கிதாம்.''’

""தலைவர் இல்லாத காங்கிரஸின் நிலைமை என்ன?''’

aa

""பா.ஜ.க.வின் அதிகார மூவ்கள் வேகம் பெற்றிருக்கும் நிலையில், தன்னை நிமிர்த்திக்க வேண்டிய நிர்பந்தத்தில் காங்கிரஸ் இருக்கு. மீண் டும் தலைவர் பொறுப்புக்கு வரமாட்டேன்கிற சோனியாகாந்தி உறுதி யோட இருப்பதால், கடைசி கடைசியா மன்மோகன்சிங்கும், அகமது படேலும் 31-ந் தேதி சோனியாவை சந்திச்சி, வேறு சீனியர்கள் யாரும் தலைமைப் பதவியை ஏற்க விரும்பலை. இளைஞர் களுக்கு தலைமைப் பதவி தர்றதையும் ஏத்துக்கமாட்டாங்க. நேரு குடும்பத்தில் இருந்து யாராவது ஒருத்தர் தலைமைப் பொறுப்பை ஏற்றால்தான் கட்சியைக் காப்பாற்ற முடியும். அதனால் மீண்டும் ராகுலையே சமாதானப்படுத்தி தலைவர் பொறுப்பை ஏத்துக்கச் சொல்லுங்க. இல்லைன்னா பிரியங்காதான் தலைமைப் பொறுப்பை ஏற்றாகணும்னு அழுத்தமா சொல்லியிருக்காங்க. ஒரு நிமிடம் யோசிச்ச சோனியா, வெகு சீக்கிரமா கட்சியின் காரியக் கமிட்டியைக் கூட்டி ஒரு நல்ல முடிவை எடுப்போம்னு சொல்லியிருக்காராம். காங்கிரஸ் தொண்டர்கள் பார்வை பிரியங்கா பக்கம் திரும்பியிருக்கு.''’

""ம.தி.மு.க.விலிருந்து புதுக்குரல் கேட்டிருக்கே?''

vv

""வைகோவின் ஊரான கலிங்கப்பட்டிக்கு அருகில் இருக்கும் தேவதானத்தில் 60 கிளைச் செயலாளர்களைக் கூட்டி வைத்துக்கொண்டு, ராஜபாளையம் மேற்கு ஒன்றிய ம.தி.மு.க.வின் சார்பில், அதன் செயலாளரான வேல்முருகன், வைகோவின் மகனான துரை வையாபுரிக்கு கட்சியில் பதவி வழங்கவேண்டும் என்று ஒரு அதிரடித் தீர்மானத்தை நிறைவேற்றி, அதைத் தங்கள் கட்சியின் தலைமைக்கும் மா.செ.க்களுக்கும் அனுப்பி வச்சிருக்கார். இது வைகோ குடும்பத்தின ரின் விருப்பம் இல்லாமல் எழுப்பப்பட்ட குரலல்லன்னு பலரும் சொல்ல, இந்தத் தீர்மானக் குரல், பல தரப்பிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருது. இது தொடர்பாக வருத்தம் தொனிக்கப் பேசிய வைகோ, தடாவில் ஓராண்டு சிறைவாசம் அனுபவித்த என் தம்பி ரவிச்சந்திரனையே, நான் கட்சிப் பதவிக்குள் கொண்டு வரவில்லை. அப்படிப்பட்ட நான் என் மகனையா கொண்டுவருவேன். இதுபோன்ற வேல் போன்ற தாக்குதல்களை இதயத்தில் தாங்கி எனக்கு மரத்துப் போய்விட்டது என்று சொல்லியிருக்கிறார். வைகோ மகனுக்கு பதவி தரப்படணும்னு தீர்மானம் போட்ட ஒ.செ. வேல்முருகனிடம் கேட்ட போது, இது எங்கள் கட்சி யினர் அனைவரின் ஒட்டு மொத்த விருப்பக் குரல். இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதற்காக தலை மையின் கோபத்துக்கு ஆளாகித் திட்டும் வாங்கினோம்னு பரிதவிப்போடு சொல்றாரு. ஆனாலும், நிர்வாகிகள் மத்தியில் வரவேற்பு இருக்குது. வைகோவின் வாரிசு அரசியலுக்கு வரக்கூடாதான்னு கேட்குறாங்க.''

""வேலூர் பிரச்சாரத்துக்கு உதயநிதி போனாரு, கனிமொழி போகலைன்னு சர்ச்சை புகையுதே?''’

f""இதுகுறித்து தி.மு.க. தரப்பிலேயே விசாரிச்சேங்க தலைவரே, வேலூரில் 31, 1 ஆகிய தேதிகளில் கனிமொழி பிரச்சாரம் செய்வதா முதலில் முடிவாச்சு. அதன்பிறகுதான் நாடாளுமன்றக் கூட் டத்தொடர் 7-ந் தேதி வரை நடக்கும்னு அறிவிக்கப்பட்டது. பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்றிடனுங்கிற திட்டத்தோடுதான் இந்தக் கால நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கு. அப்படிப்பட்ட நேரத்தில் மக்களவைக்குப் போகாமல் இருக்கக் கூடாதுங்கிற நிலை ஏற்பட்டிருக்கு. ஏன்னா, என்.ஐ.ஏ. தொடர்பான மசோதாவின் மீது உரிய எதிர்ப்பைக் காட்டலைங்கிற விமர்சனம் தி.மு.க. .மீது எழுந்திருக்கும் நிலையில், மக்களுக்கு எதிரான மசோதாக்கள் எதுவும் வைக்கப்பட்டால், அதற் குரிய எதிர்ப்பைக் கடுமையாகத் தெரிவிக்கணும்னு கட்சித் தலைவர் ஸ்டாலினிடமிருந்து கனிமொழி உள்ளிட்டவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கு. அதனால்தான் கனிமொழி வேலூருக்கு வரமுடியலைன்னு சொல்றாங்க.''’

""முத்தலாக் மசோதா பாஸான விவகாரத்தில் அ.தி.மு.க. பலத்த எதிர்ப்பை சம்பாதிச்சிருக்கே?''

""ஆமாங்க தலைவரே, லோக் சபாவில் பெரும்பான்மை பெற்றி ருக்கும் பா.ஜ.க.விற்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை பலம் கிடையாது. அதனால், அது கொண்டு வரும் பல மசோதாக்கள், ராஜ்யசபாவில் ஜெயிக்கிறதில்லை. அப்படியிருந்தும் அ.தி.மு.க.வின் மறைமுக ஆதரவால், அந்த முத்தலாக் மசோதாவை இரு அவையிலும் வெற்றிகரமா நிறைவேத்தியிருக்கு பா.ஜ.க. இதில் வேடிக்கை என்னன்னா, பா.ஜ.க.வின் முத்தலாக் தடை சட்டத்தை தி.மு.க மற்றும் தேசிய அளவிலான எதிர்க் கட்சிகள் கடுமையாக எதிர்த் தன. அதேசமயம், லோக்சபாவில் இதனை அ.தி.மு.க ஆதரித்தது. ஆனால், ராஜ்யசபாவில் அந்த சட்டத்தை எதிர்ப்பதாகச் சொல்லிவிட்டு, அ.தி.மு.க எம்.பி.க்கள், எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செஞ்சுட்டாங்க. இதுபோல் மேலும் சில கட்சிகள், வெளிநடப்பு என்ற பெயரில், எதிர்த்து வாக்களிக்காமல், பா.ஜ.க.வுக்கு மறைமுக ஆதரவு தந்ததாலதான், மசோதா வெற்றி பெற்றது. பா.ஜ.க. தலைமை சொல்ற ஐடியாப்படிதான் அ.தி.மு.க. நடந்துக்குச்சாம்.''

tt

""நானும் ஒரு தகவலைச் சொல்றேன். ஜெ.வின் அண்ணன் மகளான தீபா, ஜெ.வின் அப்பல்லோ காலத்தில் அரசியல்ல குதிச்சி, ’"எம்.ஜி.ஆர். அம்மா ஜெ. தீபா பேரவை'ங்கிற பெயரில் கட்சியையும் தொடங்கி, ஜெ.வின் வாரிசு தான்தான்னு சொல்லிக்கிட்டு, பரபரப்பை உண்டாக்கினார். இந்த நிலையில், தான் அரசிய லில் இருந்தே விலகறதா இப்ப அறிவிச்சிருக்கார். காரணம் என்னன்னா, அவரோடு இருக்கும் அவர் கணவர் மாதவன் உள்ளிட்ட நபர்கள், பல்வேறு விவகாரங்களில் மூக்கை நுழைத்து, புகார்களுக்கு ஆளாகியிருக்காங்களாம். அதனால், காவல்துறை உயரதிகாரிகள் சிலர் தீபாவைத் தொடர்பு கொண்டு, உங்க பெயரைச் சொல்லித்தான் ஆட்டம் போடுறாங்க. அதனால் உங்க மீதும் கடுமையாக நடவடிக்கை எடுப்போம்னு எச்சரிச்சாங்களாம். ஏற்கனவே கொஞ்ச நாட்களாக மனக்குழப்பத்திலும் சஞ்சலத் திலும் இருந்த தீபா, எதற்கு வம்பு என்று அரசியல் துறவுங்கிற முடிவுக்கு வந்து விட்டாராம்.''’

__________

இறுதிச்சுற்று

சர்ச்சையைக் கிளப்பிய ஊடுருவல்!

aaகடந்த ஜூலை.11-ல் கட்டு மானப் பொருட்களைக் கொண்டு செல்ல பயன்படும் விர்கோ 9 கப்பலில், தூத்துக்குடி கப்பல் ஊழியர் போஸ்கோ எனும் தமிழர், 8 இந்தோனேஷிய ஊழியர்களைக் கூட்டிக்கொண்டு மாலத்தீவுக்கு புறப்பட்டார்.

27 ஆம் தேதி அவர்கள் தூத்துக்குடி திரும்பியபோது நடுக் கடலில் மத்திய, மாநில உளவுத் துறையினர் அந்தக் கப்பலைச் சோதனையிட்டனர். அதில் 10-வது நபராக மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் காபர் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

2015 ஆம் ஆண்டு மாலத் தீவின் துணை அதிபராக பொறுப் பேற்ற அகமது அதீப், சில மாதங் களிலேயே அப்போதைய அதிபர் அப்துல்லா யமீன் மீதான வெடி குண்டுத் தாக்குதல் விவகாரத்தில் பதவிபறிக்கப்பட்டு, 33 ஆண்டுகள் சிறைத் தண் டனை விதிக்கப் பட்டார்.

டொனியோ சிறையில் இருந்த அவர், புதிய அரசு பதவியேற்றதும் ஜூன் மாதம் விடு விக்கப்பட்டார். இனி வெளியில் இருந்தால், முன்னாள் அதிபரின் ஆட் களால் கொல்லப்படுவோம் என்ற அச்சத்தில் இந்தியா தப்பிவந்திருக் கிறார். சட்டவிரோதமான இந்த செயல், சர்வதேச அளவில் விவாதத் தைக் கிளப்பியிருக்கிறது.

-நாகேந்திரன்

ராஜ்யசபா எம்.பி. வீசும் குண்டு!

தமிழகத்தின் இரு பெரும் கட்சிகள் தொடர்பாக புகார் மனுக் களைத் தரும் ராஜ்யசபா எம்.பி. சசிகலாபுஷ்பாவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது பா.ஜ.க. அரசு. அவர் கேட்டபடி, நாடாளுமன்ற கூட்டம் முடிந்ததும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் ஒதுக் கப்படும் என உள்துறை அமைச்சக அதிகாரி மூலம் தகவல் தரப்பட்டி ருக்கிறதாம். தமிழக அரசுக்கு முட்டை உள்ளிட்ட பொருட்கள் சப்ளை செய்யப்பட்டதில் கிறிஸ்டி ஃபுட் நிறுவனம் நடத்திய ஊழல் களில் அ.தி.மு.க. -தி.மு.க. கட்சிகளின் தலைமைகள் சம்பந் தப்பட்டிருப்பதையும், ப.சிதம்பரத்தின் குடும்பத்தினருக்கு சொந்தமான சென்னை கிழக்கு கடற்கரை சாலை யில் இருந்த பல கோடி மதிப்பிலான நிலம், கிறிஸ்டி ஃபுட் நிறுவனத்துக்கு விற்கப்பட்டதில் புழங்கிய கருப்பு பண விவகாரத்தையும் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என புகார் கொடுக்க சசிகலா புஷ்பா திட்ட மிட்டுள்ளாராம்.

-இளையர்

nkn060819
இதையும் படியுங்கள்
Subscribe