""ஹலோ தலைவரே, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமானி ராஜி னாமா தொடர்பா உச்சநீதி மன்ற நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் விளக்கம் கொடுக்க வேண்டிய அளவுக்கு நிலைமை போயிருக்குதே!''
""ஆமாப்பா.. தகில் ரமானியை சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி பதவியி லிருந்து மேகாலயா உயர்நீதி மன்றத்திற்கு மாற்றிய நிலை யிலே, அவர் ராஜினாமா செய் தார். இதன் பின்னணியில் பல அரசியல் நெருக்கடிகள் இருப் பதா வழக்கறிஞர்கள் உள்ளிட் டோர் தொடர் போராட்டங் களை நடத்தினாங்க. அதே நேரத்தில், ரமானி இடமாற்றம் நீதித்துறை நெறிமுறைப்படி தான்னும் கருத்துகள் வெளிப் பட்டன. இந்த சூழ்நிலையில் தான், இது கொலீஜியத்தின் ஒருமித்த முடிவுன்னும், மேலும் சில உயர்நீதிமன்றங்களிலும் இப்படி மாற்றங்கள் நடந்திருக் குன்னும் நீதிபதிகள் குழு விளக்கம் கொடுத்திருக்குது.''
"அதே நேரத்தில் தகில் ரமானியோ, ஒருமுறை ஒரு நீதிபதியிடமிருந்து ஜனாதிபதிக்கு ராஜினாமா கடிதம் அனுப்பப்பட்டுவிட்டால், அது அவ்வளவுதான்னு நீதித்துறை நெறிமுறைகளை சுட்டிக் காட்டியதோடு, தன் முடிவை யாரும் விவாதிக்கவோ பெரிது படுத்தவோ வேண்டாம்னு தெளிவா சொல்லிட்டார். அவர் ராஜினாமா கடிதம் கொடுத்த நேரத்திலேயே தமிழக சட்ட அமைச்சரான சி.வி.சண்முகம் நேரில் சந்திச்சி, உங்கள் ராஜினாமா முடிவைப் பரிசீலனை பண்ணுங்கன்னு வேண்டுகோள் வச்சிட்டு வந்தார். ரமானி கொடுத்த சட்டரீதியான சில தீர்ப்புகள் எடப்பாடி அரசுக்கு இருந்த நெருக்கடிகளைத் தீர்க்கும் வகையில் இருந்துச்சாம்.''
""அரசியல் ஏரியாவில் என்ன நடந்துக்கிட்டிருக்குது?''
""தி.மு.க. முப்பெரும் விழா செப்டம்பர் 15-ல்; இந்தமுறை திருவண்ணாமலையில் நடக்குது. தி.மு.க. போட்டியிட்ட முதல் தேர்தலில் கிடைத்த இரண்டு எம்.பி.க்களில் ஒருவர் திரு வண்ணாமலை தர்மலிங்கம். இப்ப ஒட்டுமொத்தமா நாடாளு மன்றத் தேர்தலில் தி.மு.க. ஜெயித்து மூன்றாவது பெரிய கட்சியாகியிருக்கிற நிலையில், போன முறை விழுப்புரத்தில் நடத்திய மாதிரி இந்த முறை திருவண்ணாமலையில் முப் பெரும் விழா நடக்குது. வழக்கமா தலைவர்கள் பெயரில் சீனியர்களுக்கு கொடுக்கப்படும் விருதுகளோடு, கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர, ஊராட் சிக் கிளை வரை சிறப்பாக செயல்பட்டவர்களுக்கும் கட்சித் தலைவர் ஸ்டாலின் விருது வழங
""ஹலோ தலைவரே, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமானி ராஜி னாமா தொடர்பா உச்சநீதி மன்ற நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் விளக்கம் கொடுக்க வேண்டிய அளவுக்கு நிலைமை போயிருக்குதே!''
""ஆமாப்பா.. தகில் ரமானியை சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி பதவியி லிருந்து மேகாலயா உயர்நீதி மன்றத்திற்கு மாற்றிய நிலை யிலே, அவர் ராஜினாமா செய் தார். இதன் பின்னணியில் பல அரசியல் நெருக்கடிகள் இருப் பதா வழக்கறிஞர்கள் உள்ளிட் டோர் தொடர் போராட்டங் களை நடத்தினாங்க. அதே நேரத்தில், ரமானி இடமாற்றம் நீதித்துறை நெறிமுறைப்படி தான்னும் கருத்துகள் வெளிப் பட்டன. இந்த சூழ்நிலையில் தான், இது கொலீஜியத்தின் ஒருமித்த முடிவுன்னும், மேலும் சில உயர்நீதிமன்றங்களிலும் இப்படி மாற்றங்கள் நடந்திருக் குன்னும் நீதிபதிகள் குழு விளக்கம் கொடுத்திருக்குது.''
"அதே நேரத்தில் தகில் ரமானியோ, ஒருமுறை ஒரு நீதிபதியிடமிருந்து ஜனாதிபதிக்கு ராஜினாமா கடிதம் அனுப்பப்பட்டுவிட்டால், அது அவ்வளவுதான்னு நீதித்துறை நெறிமுறைகளை சுட்டிக் காட்டியதோடு, தன் முடிவை யாரும் விவாதிக்கவோ பெரிது படுத்தவோ வேண்டாம்னு தெளிவா சொல்லிட்டார். அவர் ராஜினாமா கடிதம் கொடுத்த நேரத்திலேயே தமிழக சட்ட அமைச்சரான சி.வி.சண்முகம் நேரில் சந்திச்சி, உங்கள் ராஜினாமா முடிவைப் பரிசீலனை பண்ணுங்கன்னு வேண்டுகோள் வச்சிட்டு வந்தார். ரமானி கொடுத்த சட்டரீதியான சில தீர்ப்புகள் எடப்பாடி அரசுக்கு இருந்த நெருக்கடிகளைத் தீர்க்கும் வகையில் இருந்துச்சாம்.''
""அரசியல் ஏரியாவில் என்ன நடந்துக்கிட்டிருக்குது?''
""தி.மு.க. முப்பெரும் விழா செப்டம்பர் 15-ல்; இந்தமுறை திருவண்ணாமலையில் நடக்குது. தி.மு.க. போட்டியிட்ட முதல் தேர்தலில் கிடைத்த இரண்டு எம்.பி.க்களில் ஒருவர் திரு வண்ணாமலை தர்மலிங்கம். இப்ப ஒட்டுமொத்தமா நாடாளு மன்றத் தேர்தலில் தி.மு.க. ஜெயித்து மூன்றாவது பெரிய கட்சியாகியிருக்கிற நிலையில், போன முறை விழுப்புரத்தில் நடத்திய மாதிரி இந்த முறை திருவண்ணாமலையில் முப் பெரும் விழா நடக்குது. வழக்கமா தலைவர்கள் பெயரில் சீனியர்களுக்கு கொடுக்கப்படும் விருதுகளோடு, கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர, ஊராட் சிக் கிளை வரை சிறப்பாக செயல்பட்டவர்களுக்கும் கட்சித் தலைவர் ஸ்டாலின் விருது வழங்குறாரு. முன்னாள் அமைச் சர் வேலு தலைமையில், முப்பெரும் விழாவுக்காக தி.மு.க. பரபரத்துக்கிட்டு இருக்கும் நேரத்தில், திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி, அனுமதி யின்றி பேனர் வைத்தால் ஒரு வருட சிறைத் தண்டனைன்னு எச்சரித்திருப்பது அரசியலா பார்க்கப்படுது.''’
""செப்டம்பர் 15-ல் ம.தி.மு.க. நடத்தும் அண்ணா பிறந்தநாள் விழாவிலும் மு.க. ஸ்டாலின் கலந்துக்கிறாரே!''‡‡
""ஆமாங்க தலைவரே.. அதே விழாவில் கலந்துக்க வேண்டிய காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா என்ன நிலையில் இருக்காருன்னு தெரி யலை. அவரை வீட்டுக்காவலில் வைக்கலைன்னு நாடாளுமன்றத் தில் அமித்ஷா சொன்னாரு. ஆனா, தன்னை வீட்டுக்காவலில் வைத்திருப்பதா வீட்டு மாடியி லிருந்து மீடியாக்களிடம் பரூக் அப்துல்லா சொல்லியிருந்தாரு. இந்த நிலையில், பரூக் அப்துல் லாவுக்கு விழா அழைப்பிதழ் கொடுக்கணும்னும், அவர் எங்கே என்று தெரியணும்னும் ம.தி.மு.க. சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் தாக்கல் செய்து பா.ஜ.க.வை அதிர வச்சிருக்காரு வைகோ.''’
""காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.சபை கூர்ந்து கவனிச்சிக் கிட்டு இருக்கும் நேரத்தில், தமிழகத்தில் இருந்து தி.மு.க., ம.தி.மு.க.ன்னு தொடர்ச்சியா காஷ்மீர் ஆதரவுக் குரல்கள் கேட்பதை மத்திய அரசு உற்றுக் கவனிக்குமே!''
""ஆமாங்க தலைவரே, காஷ்மீரில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படணும்னு ஐ.நா. எச்சரிச்சிருக்கு. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புச் சலுகை களை மோடி அரசு பறித்தது தவறுன்னு கண்டனம் தெரிவிச்சி, டெல்லியில் தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் செஞ்சாங்க. இப்ப ம.தி.மு.க.வும் பரூக் அப்துல்லா தொடர்பான ஆட்கொணர்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, காஷ்மீர் விவகாரத்தைத் தூக்கிப் பிடிச்சிருக்கு.''
""ம்.. ... தெலங்கானா கவர்னராக தமிழிசை பதவி ஏற்றுக்கொண்ட விழாவுக்கு, ஆளுங்கட்சி சார்பில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். மட் டும்தானே கலந்துக்கறதா இருந்தார்? அவரோட மேலும் 3 மந்திரிகள் திடீர்ன்னு போன தன் பின்னணி என்னவாம்?''
""தமிழிசை தொடர்பான விவகாரம் ஒன்றில் டெல்லியின் கடுமையான எச்சரிக்கையை தமிழக அரசு எதிர்கொண்டது. அதனால், டெல்லியின் மனதை யும் தமிழிசையின் மனதையும் ஒருசேரக் குளிர்விக்கத்தான் தங்கமணி, வேலுமணி, ஜெயக் குமார் ஆகிய மந்திரிகளையும் திடீர்ன்னு தெலங்கானாவுக்கு அனுப்பினார் எடப்பாடி. டெல்லியின் எச்சரிக்கை எதற்கானதுன்னா, முதல்வர் எடப்பாடி போன 28-ந் தேதி ஃபாரின் டூர் கிளம்பியபோது, கூட்டணிக் கட்சிங்கிற கோதா வில், அவருக்கு வாழ்த்துச் சொல்ல, தமிழக பா.ஜ.க. தலைவரா இருந்த தமிழிசை, கோட்டைக்குப் போயிருக்கார். கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரத்துக்கு மேல அலைக் கழிச்சிட்டுத்தான் அவரை சந்திக்க விட்டாங்களாம். இதில் கடுப்பான தமிழிசை, இந்த விசயத்தை டெல்லிவரை கொண்டு போயிட்டாங்க.''’
""அப்புறம்?''’
""இதைக்கேட்டு ரொம்ப வும் எரிச்சலாயிருக்கு டெல்லி. அதனால் பா.ஜ.க.ன்னா உங்களுக்கெல்லாம் எளக்காரமாப் போச்சான்னு அங்கிருந்து சவுண்ட் வாய்ஸ் வந்திருக்கு. இதனால் ஷாக்கான எடப்பாடி, அப்படியெல்லாம் இல் லைன்னு டெல்லியை நோக்கி வெள்ளைக் கொடியைப் பறக்க விட்டதோட, நீங்களும் ஓ.பி.எஸ்.சோட தமிழிசை பதவி ஏற்பு விழாவுக்குப் போங்க. போய், நாம எப்பவும் டெல்லியின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டவங்கதான்னு அவங் களுக்கு உணர்த்திட்டு வாங்கனு, அடிஷனலா மூணு மந்திரிகளையும் ஓ.பி.எஸ். கூடவே தெலங்கானாவுக்கு அனுப்பி வச்சாராம்.''
""ஓ...''
""தமிழிசை விவகாரத்தில் இன்னொரு கூத்தும் நடந்திருக்கு. கவர்னர் பதவியை ஏற்பதற்காக தெலங்கானாவுக்குப் புறப்பட்ட தமிழிசையை, மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் அவர் கூட இருந்தவங்க, வி.வி.ஐ.பி.க்களுக்கான ஸ்பெஷல் வழியில் அழைச்சிக்கிட்டு போக முயற்சி பண்ணியிருக்காங்க. ஆனா அங்கிருந்த அதிகாரிகள், தமிழிசை இன்னும் கவர்னர் ஆகலை. அதனால் அவர் பொது வழியில்தான் விமான தளத்துக்குள் போக முடியும்ன்னு, திருப்பி விட்டுட்டாங்களாம். பதவி ஏற்கிறதுக்கு முன்னாடி இப்படின்னா, தமிழிசை கவர்னரா பதவியேற்ற நிலையில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் பி.ஆர்.ஓ.வே, தமிழிசையின் நியமனத்துக்கு எதிரா விமர்சனக் கட்டுரை எழுதி தெலங்கானாவைப் பரபரப்பாக்கியிருக்கார்.''
""திகார் சிறையில் இருக்கும் ப.சி.யின் பிறந்தநாளான செப்டம்பர் 16ந்தேதி இங்கே விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடாகுதாமே?''’
""ப.சிதம்பரம் கைதுக்குத் தமிழக காங்கிரசார் பலமான எதிர்ப்பைத் தெரிவிக்கலையேங்கிற ஆதங்கத்தில் இருக்கும் அவர் குடும்பத்தினர், இந்தப் பிறந்த நாளையாவது தடபுடலாக் கொண்டாடி, அவருக்கு செல்வாக்கு இருக்குன்னு காட்ட நினைச்சாங்க. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியைத் தொடர்பு கொண்டு, உங்க தலைமையிலேயே ப.சி.யின் பிறந்தநாள் விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்யுங்கள்னு சொல்லியிருக்காங்க. தயக்கத்தோட இதுக்கு ஒப்புக்கொண்ட அழகிரி, இது பற்றிக் கட்சிப் பிரமுகர்களிடம் பேச, அவங்ககிட்டேயிருந்து எதிர்க்குரல்தான் அதிகமா கேட்டிருக்குது. அதேபோல், அழகிரி இந்த விழாவுக்கு பிரபல பத்திரிகையாளரான "இந்து' ராமைத் தொடர்பு கொண்டிருக்கார். "இந்து' ராமோ, ப.சி.க்குப் பிறந்தநாள் விழான்னா அதில் நான் கலந்துக்க மாட்டேன். ப.சி.யின் கைதைக் கண்டிச்சிக் கூட்டம் நடத்தப்பட்டால் அதில் என்னால் கலந்துக்க முடியும்ன்னு சொல்லியிருக்கார்.''’
""சரியான பார்வைதானே!''’
""அதன்பிறகு ப.சி.யின் குடும்பத்தினர் அவர் பிறந்த நாளிலேயே, அவருடைய கைதைக் கண்டிச்சி, ஒரு கண்டனக் கூட்டத்தை நடத்த முடிவெடுத்தாங்க. அதில் காங்கிரஸின் சீனியர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸையும் அழைச்சாங்க. அவர் ஆதர வாளர்கள் சிலரிடம் மாறு பட்ட கருத்து இருந்த போதும், கலந்துக்குறது என் தார்மீகக் கடமைன்னு பீட்டர் அல்போன்ஸ் சம்மதிச் சிட்டார். அடுத்து, ப.சி. தரப்பிலிருந்து சுப.வீ.யைக் கவிஞர் இலக்கியா நடராஜன் தொடர்புகொண்டு அழைக்க, அவரும் கலந்துக்க சம்மதிச் சிருக்கார். இந்தக் கண்டனக் கூட்டத்தைக் காங்கிரஸில் இருக்கும் மனித உரிமைகள் அமைப்பு சார்பில் ஏற்பாடு செஞ்சாங்க. கடைசி நேரத்தில் அன்னைக்கு எனக்கு வேறொரு நிகழ்ச்சி இருக்குன்னு கே.எஸ். அழகிரியே கழன்றுக்கிட்டார். இந்தக் கண்டனக் கூட்டத்தை காமராஜர் அரங்கம் அல்லது கலைவாணர் அரங்கில் நடத்த லாம்ன்னு கூட்ட ஏற்பாட் டாளர்கள் ஆலோசிச்சப்ப, அந்த அரங்கத்துக்கெல்லாம் வாடகை கட்ட முடியாது. அதனால் சத்தியமூர்த்தி பவனிலேயே கூட்டத்தை நடத்துங்கன்னு ப.சி.மகன் கார்த்தி சிதம்பரம் சொல்ல, நிகழ்ச்சி ஏற்பாட் டாளர்களே அப்செட் ஆயிட்டாங்க.''
""ஜெயலலிதா நினைவிடத்தில் திருமண விழா நடந்திருக்குதே?''
""உண்மைதாங்க தலைவரே, முதல்வர் எடப்பாடி, பாரின் டூருக்குக் கிளம்பிய போது, ஜெ.’வின் நினைவிடத்துக்குப் போய் அஞ்சலி செலுத்துவதைத் தவிர்த்துட்டார். இது குறித்து அமைச்சர்கள் கேட்டதற்கு, முதல்வர் பொறுப்பேற்ற பிறகு, இப்பதான் முதல் முதலாக வெளிநாட்டுக்குப் போறேன். இந்த நேரத்தில் சமாதிக்குப் போறது சரியாக இருக்காதுன்னு தன்கிட்ட கேட்டவங்களுக்கு விளக்கமும் கொடுத்தார். இது பத்தி நாம ஏற்கனவே பேசியிருக்கோம். இப்ப எடப்பாடி, தன் வெளிநாட்டு டூரை முடிச்சிக்கிட்டு திரும்பி யிருக்கும் நிலையில், எடப்பாடியால் சமாதின்னு சொல்லப்பட்ட ஜெ.’வின் நினைவிடத்தில், சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பவானி சங்கர் என்பவரோட மகன் திருமணம் நடந்திருக்குது. இதனால் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மேலே கோபமா இருக்காரு எடப்பாடி.''
""கல்யாணத்துக்கும் கோகுல இந்திராவுக்கும் என்ன சம்பந்தம்?''
""கோகுல இந்திரா முன்னிலையில்தான் ஜெ. நினைவிடத்தில் திருமண விழா நடந்திருக்குது. இதைப் பார்த்த சிலர், ஜெ. வால் பதவி சுகத்தை அனுபவிக்கும் எடப்பாடி போன்றவர்களுக்கு, ஜெ.’வின் நினைவிடம் வெறும் சமாதியாகத்தான் தெரியும். தொண்டர்களுக்குத்தான் இது கோயில்ன்னு சொன்னது எடப்பாடியின் காதுவரை போய் இதயத்தை சுட்டிருக்கு. அவருடைய எரிச்சலும் கோகுல இந்திரா பக்கம் திரும்பியிருக்கு. காரணம், கட்சிதாவும் மனநிலையில் இருந்த அவரை, சேலம் இளங்கோவன் மூலம், தன்னோட ஃபாரின் விசிட்டின்போதே வெயிட்டா கவனிச்சிருந்தாராம் எடப்பாடி.''’
___________
இறுதிச்சுற்று
உயிரைப் பறித்த பேனர்!
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட எம்.ஜி. ஆர். மன்ற இணைச் செயலாளர் ஜெய கோபால். இவர் முன் னாள் கவுன்சிலரு மாவார். தனது மகன் திருமணத்துக்காக இவர் சாலையில் அனுமதி யின்றி நிறைய பேனர்களை வைத்திருந்தார். கடந்த செப் 12 ஆம் தேதியன்று, பள்ளிக் கரணை காமாட்சி மருத்துவமனையில் கனடா செல்வதற்கான தேர்வை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார் சுபஸ்ரீ (23). இந்த பேனர்களில் ஒன்று அவர் தலையில் சரியவே நிலைகுலைந்து தண்ணீர் லாரியின் சக்கரங்களில் சிக்கி மரணமடைந்தார். பேனர்கள், கட்அவுட்டுகள் வைப்பதை நீதிமன்றம் எத்தனை முறை கண்டித்தபோதும், கட் அவுட், பேனர் கலாச்சாரம் தொடர்ந்துதான் வருகிறது. ஏற்கெனவே இப்பகுதியில் பேனர் கலாச்சாரத்தால் காயம், உயிரிழப்புகள் நடந்துவருவதால், நீதிமன்றமே இம்மரணத்தை சூமேட்டோ வழக்காக எடுத்துவிசாரிக்க வேண்டுமென பலரும் எதிர்பார்க்கின்றனர்.
-மணி