"ஹலோ தலைவரே, வரலாறு காணாத கனமழை, காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவுன்னு நீலகிரி மாவட்டமே தண்ணீரிலும் கண்ணீரிலும் மிதக்குது.''’
""ஆமாம்பா, கடந்த 100 வருடகாலத்தில் பெய்யாத அளவில், அங்க 3 ஆயிரம் மி.மீ. அளவுக்கு மழை பெய்திருக்கு. பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு இன்னும் போதுமான உதவிகள் போய்ச் சேரலையாமே?''’
""உண்மைதாங்க தலைவரே, அதிகாரிகளும் அமைச்சர்களும் அங்கே விசிட் அடிச்சும் கூட அரசுத் தரப்பில் இருந்து போதுமான உதவிகள் இன்னும் முழுசா கிடைக்கலைன்னு வீடிழந்தும் உடைமைகள் இழந்தும் தவிக்கும் மக்கள் குமுறு றாங்க. நீலகிரிக்குப் போய் நேரில் பார்வையிட்ட எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் அளவிற்கு நிவாரணப் பணிகளுக் காகச் செலவிடப்படும்ன்னு அறிவிச்சிருக்கார். நீலகிரி எம்.பி.யான ஆ.ராசா தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கிய 3 கோடி ரூபாயும் இதில் அடக்கம். இருந்தும், ஆ.ராசாவை நோக்கியும் மக்கள் கேள்வி கேட்குறாங்க. அந்தளவுக்கு பாதிப்பு இருக்கு.''.“
""எதிர்க்கட்சிகிட்டேயே கேள்வி கேட்குறாங் கன்னா, ஆளுங்கட்சியை சும்மாவா விடுவாங்க?''’’
""நீலகிரியே ஒட்டுமொத்தமா நிலைகுலைஞ்சு போயிருக்கும் நிலையிலும், அங்கே முதல்வர் எடப்பாடி உடனடியா போகலைங்கிற கோபம் மக்கள்கிட்ட இருக்கு. இதைத் தெரிஞ்சுகிட்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ்., எடப்பாடிக்குத் தகவல் தராமலேயே நீலகிரிக்குப் போனார். நிவாரண உதவிகளை வழங்கிய அவர், கிட்டத்தட்ட ஒரு முதல்வர் ரேஞ்சில் செயல்பட்டிருக்காரு. மாவட்ட நிர்வாகத்தினரையும் வருவாய்த் துறையினரையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் போட்ட ஓ.பி. எஸ்., சேதத்தின் மதிப்பு எவ்வளவு இருக்கும்ன்னு கேட்டிருக்கார். அதிகாரிகளோ குறைந்தபட்சம் 3,500 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருக்கு. இப்ப நிலச்சரிவையும் சேதமான சாலைகளையும் சரிபண்ணவே 200 கோடி ரூபாய் இருந்தாத்தான் சமாளிக்க முடியும்ன்னு சொல்லியிருக்காங்க. உடனே இதுகுறித்து முயற்சிப்பதாகச் சொல்லிவிட்டு ஓ.பி.எஸ். அங்கிருந்து கிளம்பியிருக்கார். இந்தத் தகவல் த
"ஹலோ தலைவரே, வரலாறு காணாத கனமழை, காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவுன்னு நீலகிரி மாவட்டமே தண்ணீரிலும் கண்ணீரிலும் மிதக்குது.''’
""ஆமாம்பா, கடந்த 100 வருடகாலத்தில் பெய்யாத அளவில், அங்க 3 ஆயிரம் மி.மீ. அளவுக்கு மழை பெய்திருக்கு. பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு இன்னும் போதுமான உதவிகள் போய்ச் சேரலையாமே?''’
""உண்மைதாங்க தலைவரே, அதிகாரிகளும் அமைச்சர்களும் அங்கே விசிட் அடிச்சும் கூட அரசுத் தரப்பில் இருந்து போதுமான உதவிகள் இன்னும் முழுசா கிடைக்கலைன்னு வீடிழந்தும் உடைமைகள் இழந்தும் தவிக்கும் மக்கள் குமுறு றாங்க. நீலகிரிக்குப் போய் நேரில் பார்வையிட்ட எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் அளவிற்கு நிவாரணப் பணிகளுக் காகச் செலவிடப்படும்ன்னு அறிவிச்சிருக்கார். நீலகிரி எம்.பி.யான ஆ.ராசா தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கிய 3 கோடி ரூபாயும் இதில் அடக்கம். இருந்தும், ஆ.ராசாவை நோக்கியும் மக்கள் கேள்வி கேட்குறாங்க. அந்தளவுக்கு பாதிப்பு இருக்கு.''.“
""எதிர்க்கட்சிகிட்டேயே கேள்வி கேட்குறாங் கன்னா, ஆளுங்கட்சியை சும்மாவா விடுவாங்க?''’’
""நீலகிரியே ஒட்டுமொத்தமா நிலைகுலைஞ்சு போயிருக்கும் நிலையிலும், அங்கே முதல்வர் எடப்பாடி உடனடியா போகலைங்கிற கோபம் மக்கள்கிட்ட இருக்கு. இதைத் தெரிஞ்சுகிட்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ்., எடப்பாடிக்குத் தகவல் தராமலேயே நீலகிரிக்குப் போனார். நிவாரண உதவிகளை வழங்கிய அவர், கிட்டத்தட்ட ஒரு முதல்வர் ரேஞ்சில் செயல்பட்டிருக்காரு. மாவட்ட நிர்வாகத்தினரையும் வருவாய்த் துறையினரையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் போட்ட ஓ.பி. எஸ்., சேதத்தின் மதிப்பு எவ்வளவு இருக்கும்ன்னு கேட்டிருக்கார். அதிகாரிகளோ குறைந்தபட்சம் 3,500 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருக்கு. இப்ப நிலச்சரிவையும் சேதமான சாலைகளையும் சரிபண்ணவே 200 கோடி ரூபாய் இருந்தாத்தான் சமாளிக்க முடியும்ன்னு சொல்லியிருக்காங்க. உடனே இதுகுறித்து முயற்சிப்பதாகச் சொல்லிவிட்டு ஓ.பி.எஸ். அங்கிருந்து கிளம்பியிருக்கார். இந்தத் தகவல் தெரிஞ்சதும் டென்ஷனான எடப்பாடி, இப்பவே ஓ.பி.எஸ். இப்படின்னா, நான் 28-ந் தேதி வெளிநாடு போன பிறகு, என்னவெல்லாம் செய்வாருன்னு தனக்கு நெருக்கமான அமைச்சர்களிடம் புலம்பினாராம்.''’
""அவங்க பஞ்சாயத்து இருக்கட்டும், நீலகிரி மழை வெள்ள நிவாரணமா முதல் வர்ங்கிற முறையில் எடப்பாடி என்னதான் செய்திருக்கார்?''’
""நீலகிரி நிலவரம் பத்தி அமைச்சர்களிடம் டீப் டிஸ்கஷன் பண்ணியிருக்கார் எடப்பாடி. சேதம் குறித்து முழுமையான ரிப்போர்ட்டை நீலகிரி மாவட்ட நிர்வாகத்திடமும் கேட்டிருக் கார். அந்த ரிப்போர்ட் கிடைச்சதும், மத்திய அரசிடம் நிவாரண நிதி கேட்க அவர் திட்ட மிட்டிருக்காராம். உடனடியாக நீலகிரியில் மேற் கொள்ள வேண்டிய பணிகளை முடுக்கிவிட்டி ருக்கும் எடப்பாடி, தன் கட்டுப்பாட்டிலுள்ள நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளையும் களமிறங்கும்படி அறி வுறுத்தி இருக்கார். இருந்தும் அரசு இயந்திரம் இன்னும் முழுமையா களத்தில் இறங்கவில்லைங் கிற குற்றச்சாட்டுதான் அதிகமா கிளம்புது.''’
""கஜா புயல் நிவாரண நிதியையே இன்னும் மத்திய அரசு தந்தபாடில்லை. இதில் நீலகிரி நிலச்சரிவுக்கு மத்திய அரசு உடனடியா நிவாரணம் தரும்னு எதிர்பார்க்கிறது என்ன கணக்கோ!''
""இருக்கிற பிரச்சினைகளை எப்படியாவது சமாளிச்சா போதும்னு மாநிலத்தை ஆள்பவர்கள் நினைக்கிறாங்க தலைவரே.. திருப்பதி வெங்கடாசலபதியோ, அத்திவரதரோ அருள் பாலிச்சா நல்லதுன்னு நினைக்கிறாங்க. அத்தி வரதர் தரிசன விவகாரத்தில் அங்கிருந்த இன்ஸ் பெக்டரை காஞ்சிபுரம் கலெக்டர் பொன் னையா டோஸ் விட்ட பிரச்சினை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு இடையிலான பவர் யுத்தமாய் பெருசாச்சு. இப்ப அந்த கலெக்டர் மேல் வழக்கு பதியணும்ன்னு இந்து மக்கள் கட்சிப் பிரமுகர் பிரபாகரன் புகார் கொடுக்க, கலெக்டர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவாகியிருக்கு. அதோட அவர் மீது மேலும் பல புகார்கள் கோட்டைக்குப் போயிருக்குதாம்.''’’
""போலீஸ் தரப்பில், மக்கள் பாதுகாப்புக்காக இரவு-பகலா பாடுபடுறதை விளக்கும் வீடியோ ஒண்ணு வெளியிடப்பட்டு அது வைரலா பரவிக் கிட்டிருக்கே!''’’
""ஆமாங்க தலைவரே.. இதற்கிடையில், அத்திவரதரின் தரிசனக் காலம் தொடர்பா முதல்வர் எடப்பாடி அமைச்சர்களோடு விவாதிச்சிருந் தாரு. அமைச்சர்கள் பலரும், சின்ன ஊரான காஞ்சி புரத்தில் அளவுகடந்து கூடும் கூட்டத்தை நம்மால் சமாளிக்கமுடியலை. பலவகையிலும் நிர்வாகச் சிக்கல் ஏற்படுது. அதனால் ஆகம விதிப்படியே நாம் அதை விட்டுவிடலாம்ன்னு சொல்லிட்டாங்க. அதோடு, உயர்நீதிமன்றமும் இதில் தலையிட முடியாதுன்னு சொன்னதால, 16-ம் தேதியோடு அத்திவரதர் தரிசனம் நிறைவடைந்தது. மாவட்ட நிர்வாகத் தரப்பில் இந்த 40 நாள் ஏற்பாடுகளையும் டாக்குமெண்ட் பண்ணியிருக்காங்க. அதாவது 40 வருஷம் கழிச்சி மீண்டும் அத்திவரதர் தரிசனம் நடக்கும் போது, கூட்டத்தை மெயின்டெய்ன் பண்ண வசதியா இருக்கும்னுதான்.''’
""தி.மு.க. இளைஞரணி செயலாளரான உதய நிதி ஸ்டாலின், கார்ப்பரேட் அரசியல் செய்யப் பார்க்கறார்ன்னு ஒரு சர்ச்சை சுழன்றடிக்குதே?''’
""வர்ற 25-ந் தேதி தி.மு.க. இளைஞரணி மாநில நிர்வாகிகளின் கலந்துரையாடல் கூட்டத் தை, சென்னை கிண்டியில் இருக்கும் ஹில்டன்ங்கிற நட்சத்திர ஓட்டல்ல கூட்டி இருக்கார் உதயநிதி. அதற்கான அழைப்புகள் உரிய நிர்வாகிகளுக்குப் போய்க்கிட்டு இருக்கு. இதைப் பார்த்த கட்சி சீனியர்கள் சிலர், இளைஞரணி அலுவலகம்னு அன்பகம் இருக்கு. அதேபோல, அறிவாலயத்தில் கலைஞர் மண்டபம் இருக்கு. பொதுக்குழுவையே அங்கே கூட்டுறப்ப, இளைஞரணி நிர்வாகிகளை எதுக்கு ஸ்டார் ஓட்டலில் கூட்டி செலவு பண்ணணும்னு கேட்குறாங்க.''’’
""சரியான கேள்விதானே.. இளைஞரணி தரப்பில் என்ன சொல்றாங்க?''’’
""உதயநிதி விரைவில் தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்காரு. அதுக்கு முன்பாக இளைஞர் அணியில் இருக்கும் நிர்வாகி களோடு அது சம்பந்தமா ஆலோசனை நடத்துவ தோடு, உயர்தர விருந்தும் கொடுத்து உபசரிக்க ணும்ன்னு ஆசைப்படறார். அதனால்தான் இந்தக் கூட்டம் நட்சத்திர ஓட்டலில் நடக்குது. இது புதுசு இல்லை... 2016-ல் மு.க.ஸ்டாலின் இளைஞரணி செய லாளரா இருந்தப்பவே ஹயாத் ஹோட்டலில் நிர்வாகிகள் கூட்டம் நடந்திருக்கு. தி.மு.க. தொழில் நுட்பத்துறை செயலாளரான பி.டி.ஆர்.பி. தியாகராசன் அவர் அணியின் கூட்டத்தை இப்படி நட்சத்திர ஓட்டலில்தான் நடத்தினார். சிங்கிள் டீ குடிச்சி வேலை செய்த தி.மு.க. இப்ப இல்லை. அதே நேரத்தில், இந்த லக்சரி பட்ஜெட் மீட்டிங் கிற்காக, கட்சியிலிருந்தோ கையில் இருந்தோ பணம் செலவாகப் போறதில்லைன்னு விவரம் தெரிஞ்சவங்க சொல்றாங்க..''’
""ம.தி.மு.க.வை கூட்டணியில் இருந்து தி.மு.க. கழற்றிவிடப் பார்க்குதுன்னு ஒரு டாக் கிளம்புதே?''’
""கலைஞர் நினைவஞ்சலி கூட்டத்துக்கான அழைப்பிதழ்-விளம்பரம் இதனால இந்த சர்ச்சை உருவாகியிருக்கு. தி.மு.கவின் சென்னை கிழக்கு மா.செ.வான சேகர்பாபு, கலைஞரின் ஓராண்டு நினைவஞ்சலி கூட்டங்களை நடத்திக்கிட்டு இருக் கார். அதுக்காக அவர் அடிச்ச போஸ்டர்களில் வைகோவைத் தவிர்த்து, மற்ற கூட்டணிக்கட்சித் தலைவர்களின் படங்கள் இடம்பெற்றிருக்குதாம். இதுதான் சர்ச்சைக்கு காரணம். காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸோடு மோதினார் வைகோ. காங்கிரஸும் அவருக்கு கடுமையாவே பதிலடி கொடுத்துச்சு. அது அவங்க பிரச்சினை. மற்றபடி, தி.மு.க. கூட்டணி வழக்கம்போல தொடருதுன்னும், முரசொலியில் கலைஞர் சிலை திறக்கப்பட்ட விழாவில் வைகோவும் கலந்துக்கிட்டாருன்னும் தி.மு.க. சீனியர்கள் சொல்றாங்க.''’
""அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட வேலூர் வேட்பாளர் ஏ.சி.எஸ்., கூட் டணிக் கட்சியான பா.ஜ.க.வின் நடவடிக்கைகள்தான் தன் தோல்விக்கு காரணம்னு சொல்லியிருக்காரே?’’'’
""அதற்கு தமிழிசையும் பதில் கொடுத்திருக் காரே.. கூட்டணிக்குள் சலசலப்புகள் இருக்கத்தான் செய்யும். உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. பாதி இடத்தை அ.தி.மு.க.விடம் எதிர்பார்க்குதாம். அதே நேரத்தில் அ.தி.மு.க.வும் தன் ஷேரை விட்டுத் தர விரும்பலை. யாரை பலிகடாவாக்கலாம்னு பார்த் தப்ப, தே.மு.தி.க.தான் தெரிஞ்சிருக்கு. தே.மு. தி.க.வால் எந்த லாபத்தையும் உணர முடியலைன்னு எடப்பாடி உள்ளிட்டோர் கருதறாங்களாம். அதனால் கழற்றிவிடும் முடிவுக்கு அ.தி.மு.க. வந்தி ருக்குதாம். இதை விஜயகாந்த்தின் மைத்துனரான சுதீஷிடமே நாசுக்காகச் சொல்லிவிட்டதாம் அ.தி.மு.க.. இது தெரிஞ்சு அப்செட்டான பிரேமலதா, கட்சிக்கு ஏற்பட்ட இந்த சறுக்கல் வெளியில் தெரியாதபடி, வரும் ஆகஸ்ட் 25-ல் விஜயகாந்த்தின் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாட முடிவெடுத்திருக்காராம்.''’
""காஃபி டே உரிமையாளர் சித்தார்த் தற்கொலை செய்துக்கிட்ட பிறகும், அவர் நிறுவனம் தொடர் தலைவலியை சந்திச்சிக்கிட்டு இருக்குதாமே?''
""உண்மைதாங்க தலைவரே, கர்நாடகாவை சேர்ந்த காஃபி டே உரிமையாளர் சித்தார்த், தற்கொலை செய்துகொள்வதற்கு முன், வருமான வரித்துறையின் கெடுபிடியால்தான் இந்த விபரீத முடிவை எடுப்பதாகக் கடிதம் எழுதி வச்சிருந்தார். உண்மையில், அவருடைய தொழிலை வச்சி எந்தக் கெடுபிடியையும் வருமான வரித்துறை காட்டலை. அதேசமயம், கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் உட்பட வெளிமாநில அரசியல்வாதிகள் பலரும், தங்கள் கறுப்புப் பணத்தை சித்தார்த்திடம் கொடுத்து வைக்க, அதை எல்லாம் சித்தார்த் பல் வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தாராம். இதை மோப்பம் பிடித்த வருமான வரித்துறையினர், யார் யாரின் பணம் உங்களிடம் இருக்குதுன்னு கேட்டு நெருக்கடி கொடுத்திருக்காங்க.''
""சித்தார்த்தின் நிலை என்ன?''’’
""யாரையும் காட்டிக்கொடுக்க முடியாத நிலை யில்தான் சித்தார்த் இப்படியொரு மோசமான முடிவைத் தேடிக்கிட்டாருன்னு சொல்றாங்க. இப்போது காஃபி டே மீண்டும் இயங்கத் தொடங் கினாலும், சித்தார்த்திடம் பணம் கொடுத்த அர சியல் புள்ளிகள் ஒருபுறமும், வருமான வரித்துறை யினர் இன்னொரு புறமும் நெருக்கடி தருகிறார் களாம். மேலும் ரெய்டு அபாயத்திலும் சிக்கிக் கொண்டிருக்கிறதாம் காஃபி டே. சித்தார்த் தற் கொலையை வச்சு காங்கிரசுக்கு குறி வைக்கும் வேலையையும் பா.ஜ.க. அரசு கச்சிதமா செய்யுது..''’
""நானும் ஒரு நெருக்கடி பற்றிய தகவலைச் சொல்றேன். பா.ஜ.க.வின் தயவை அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சசிகலா, அதன் மூலம் டிசம்பரில் விடுதலை ஆகிவிடலாம்ன்னு நம்புகிறாராம். வெளியில் வந்தாலும் தினகரனை நெருங்கவிடக் கூடாதுங்கிற அளவுக்கு அவர் மீது அதிருப்தியில் இருக்காராம். அதேபோல் சசிகலாவின் மற்ற சொந்தங்களும் தினகரனை ஒதுக்கிவிட்டதாம். இதனால் கரன்ஸி உள்ளிட்ட நெருக்கடியில் சிக்கியிருக்கும் தினகரன், அரசியலில் தனி ஆவர்த்தனம் செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்காராம்.''