Advertisment

ராங்கால் வேடிக்கை பார்க்கமாட்டேன்! -அமைச்சர்களிடம் முதல்வர் காட்டிய அதிரடி முகம்! "பா.ஜ.க.வின் ரூம் அட்டகாசம்! பொளக்கும் போலீஸ்! தப்பியோடும் அமைச்சர் தம்பி! துரத்தும் அமலாக்கத்துறை!

gg

"ஹலோ தலைவரே, பரபரப்பான சூழலில் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் முதல்வர்.''”

Advertisment

"ஆமாம்பா... அதில், தன் அதிரடி முகத்தையும் அமைச்சர்களிடம் முதல்வர் காட்டியிருக்கிறாரே?''

rr

"உண்மைதாங்க தலைவரே, கடந்த 22ஆம் தேதி, முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார். அமலாக்கத்துறை மூலம் மாநில அரசுக்கு டெல்லி நெருக்கடி கொடுத்துவரும் நிலையில் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதால், அதுகுறித்த எதிர்பார்ப்பு பலமாக வே இருந்தது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியம் உள்பட பல்வேறு ஓய்வூதியங்களை அரசு வழங்கி வரு கிறது. மாதந்தோறும் ரூ.1000 வீதம் வழங்கப் பட்டுவரும் இதை, இனி ரூ.1,200 ரூபாயாக உயர்த்தி வழங்கலாம் என்று, இந்த அமைச்ச ரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கு. இதன் மூலம், அரசுக்கு ஏறத்தாழ 846 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்னு கணக்கிடப் பட்டிருக்கு. அதேபோல, பெரியார் பிறந்த நாளில் தொடங்கப்படவிருக்கும், மகளிருக்கான உரிமைத் தொகைத் திட்டத்தில், தகுதியுள்ள பயனாளிகள் ஒருவர்கூட விடுபட்டுவிடக் கூடாது என்றும் அதை அமைச்சர்கள் முழுமை யாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர் களிடம் வலியுறுத்தினா ராம் முதல்வர்.''”

"அதன் பிறகுதான் அவ ரது அதிரடி எச்ச்சரிக்கையா?''

Advertisment

"ஆமாங்க தலைவரே, அமலாக்கத்துறையின் அத்துமீறிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் சுட்டிக் காட்டிய முதல்வர், நம் அரசைக் கவிழ்க்க ஒன்றிய அரசு வாய்ப்பு களைத் தேடிக்கொண்டிருக்கிறது. அப்படியிருந்தும் உங்களில் இன்னும் சிலர் மாறலை. உங்களில் சிலர் செய் கிற தவறுகள் குறித்த செய்திகள் எனக்கு இப்போதும் வந்துக்கிட்டு தான் இருக்கு. தவறுகள் நேராமல் எச்சரிக்கையாக செயல்படுங்கள்னு பலமுறை உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். இருப்பினும், அதனை அலட்சியப்படுத் தியபடியேயிருக்கிறீர்கள். உங்கள் துறைகளில் தவறு கள், குற்றங்கள் இனியும் நடந்தால், இதற்கு மேலும் பொறு மையாக அட் வைஸ் செய்து கொண்டிருக்க மாட்டேன். தவறு செய் பவர்களை, அமைச்சரவையிலிருந்து நீக்கவும் தயங்கமாட்டேன் என்றெல்லாம். இதுவரை இல்லாத அளவுக்கு, முதல்வர் காட்டிய அதிரடி முகம், அமைச்சர் களைத் திகைக்க வச்சிருக்

"ஹலோ தலைவரே, பரபரப்பான சூழலில் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் முதல்வர்.''”

Advertisment

"ஆமாம்பா... அதில், தன் அதிரடி முகத்தையும் அமைச்சர்களிடம் முதல்வர் காட்டியிருக்கிறாரே?''

rr

"உண்மைதாங்க தலைவரே, கடந்த 22ஆம் தேதி, முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார். அமலாக்கத்துறை மூலம் மாநில அரசுக்கு டெல்லி நெருக்கடி கொடுத்துவரும் நிலையில் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதால், அதுகுறித்த எதிர்பார்ப்பு பலமாக வே இருந்தது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியம் உள்பட பல்வேறு ஓய்வூதியங்களை அரசு வழங்கி வரு கிறது. மாதந்தோறும் ரூ.1000 வீதம் வழங்கப் பட்டுவரும் இதை, இனி ரூ.1,200 ரூபாயாக உயர்த்தி வழங்கலாம் என்று, இந்த அமைச்ச ரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கு. இதன் மூலம், அரசுக்கு ஏறத்தாழ 846 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்னு கணக்கிடப் பட்டிருக்கு. அதேபோல, பெரியார் பிறந்த நாளில் தொடங்கப்படவிருக்கும், மகளிருக்கான உரிமைத் தொகைத் திட்டத்தில், தகுதியுள்ள பயனாளிகள் ஒருவர்கூட விடுபட்டுவிடக் கூடாது என்றும் அதை அமைச்சர்கள் முழுமை யாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர் களிடம் வலியுறுத்தினா ராம் முதல்வர்.''”

"அதன் பிறகுதான் அவ ரது அதிரடி எச்ச்சரிக்கையா?''

Advertisment

"ஆமாங்க தலைவரே, அமலாக்கத்துறையின் அத்துமீறிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் சுட்டிக் காட்டிய முதல்வர், நம் அரசைக் கவிழ்க்க ஒன்றிய அரசு வாய்ப்பு களைத் தேடிக்கொண்டிருக்கிறது. அப்படியிருந்தும் உங்களில் இன்னும் சிலர் மாறலை. உங்களில் சிலர் செய் கிற தவறுகள் குறித்த செய்திகள் எனக்கு இப்போதும் வந்துக்கிட்டு தான் இருக்கு. தவறுகள் நேராமல் எச்சரிக்கையாக செயல்படுங்கள்னு பலமுறை உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். இருப்பினும், அதனை அலட்சியப்படுத் தியபடியேயிருக்கிறீர்கள். உங்கள் துறைகளில் தவறு கள், குற்றங்கள் இனியும் நடந்தால், இதற்கு மேலும் பொறு மையாக அட் வைஸ் செய்து கொண்டிருக்க மாட்டேன். தவறு செய் பவர்களை, அமைச்சரவையிலிருந்து நீக்கவும் தயங்கமாட்டேன் என்றெல்லாம். இதுவரை இல்லாத அளவுக்கு, முதல்வர் காட்டிய அதிரடி முகம், அமைச்சர் களைத் திகைக்க வச்சிருக்கு.''”

"இந்த நிலையில், அமைச்சர் ராஜகண்ணப்ப னுக்கும் முதல்வர் ஷாக் கொடுத்திருக்கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை, அந்தப் பொறுப்பில் இருந்து விடுவித்திருக்கிறார் ஸ்டாலின். அவருக்கு பதில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் நெல்லை மாவட்ட பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்றபோது, போக்கு வரத்துத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட ராஜகண்ணப்பன் மீது, ஏகப்பட்ட குற்றச்சாட்டு கள் எழுந்ததால், அவரை போக்குவரத்துத் துறையிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் துறைக்கு அமைச்சராக்கினார் ஸ்டாலின். அதிலேயே அப்செட்டாகி இருந்தார் கண்ணப்பன். பிறகு அவரது தளர்ச்சியைப் போக்கும் வகையில், மூன்று மாதங்களுக்கு முன், அமைச்சர் காந்தி வசமிருந்த கதர் மற்றும் கிராமத்தொழில்கள் துறையை எடுத்து, கண்ணப்பனிடம் கொடுத்தார் ஸ்டாலின். இப்போது, மாவட்டப் பொறுப்பு பிடுங்கப்பட்டு, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்பட்டிருக்கிறது.''”

"ராஜகண்ணப்பன் மீதான இந்த நட வடிக்கைக்கு என்ன காரணம்?''”

"நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், அந்த மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகளைக் கவனிக்காமல், அதற்கு மாறாக, அந்த மாவட்ட அரசியலில் அதிகமாக மூக்கை நுழைத்தாராம். மா.செ.க்களான ஆவுடையப்பன், அப்துல் வகாப் உள்ளிட்டவர் களுக்கு இடைஞ்சல் கொடுத்து வந்ததோடு, டெண்டர் விவகாரங்களிலும் தலையிட ஆரம்பித்து விட்டாராம் . மேலும், சபாநாயகர் அப்பாவு உட னும் மோதல் போக்கினைக் ராஜகண்ணப்பன் கடைப்பிடித்தாராம். இந்த நிலையில், ‘"பொறுப்பு அமைச்சராக உள்ளவர், மாவட்ட அரசியலில் ஈடுபட்டால் பிறகு, நாங்கள் எதற்கு இருக் கிறோம்?'’என்று ஸ்டாலினிடம் புகார் வாசித் திருக்கிறார் ஆவுடையப்பன். அதோடு நில்லாமல், ராமநாதபுர மாவட்ட பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசுவோடும் தேவையில்லாமல் ராஜகண்ணப்பன் மல்லுக்கட்டினாராம். இதையெல்லாம் பார்த்துதான், ஸ்டாலின் அவருக்கு இப்படியொரு பனிஷ்மெண்ட் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள்.''”

"அமைச்சர் பொன்முடிக்கு எதிராக மற்றொரு பூதம் கிளம்புதே?''”

"ஆமாங்க தலைவரே, அமலாக்கத்துறையின் அதிர்ச்சி வைத்தியத்திலிருந்து அமைச்சர் பொன்முடி இப்போதுதான் மீண்டு வந்திருக்கிறார். அதற்குள் அவருக்கு எதிராக, மற்றொரு சர்ச்சை எழுந்திருக்கிறது. அதாவது, மணக்குள விநாயகர் கல்விக்குழுமத்தில் இருந்து தனியே பிரிந்த ஒருவர், செங்கல்பட்டு டூ திண்டிவனம் சாலையில், ஒரு கல்வி நிறுவனத்தை நிறுவி, அதை நிகர்நிலைப் பல்கலைக்கழகமாய் மாற்றுவதற்காக விண்ணப்பித் திருக்கிறாராம். இதற்காக அமைச்சர் பொன்முடி தரப்புக்கு அவரிட மிருந்து 60’சி’வரை கைமாறி இருப்பதாக இப்போது புகார் கிளம்பியிருக் கிறது. இந்த கல்வித்துறை கலாட்டாவால் அறி வாலயத் தரப்பு திகைத்துப்போயிருக்கிறதாம்.''”

"பத்திரப்பதிவுத் துறையில் நடந்த ஒரு ஏடாகூட வசூல் விவகாரத்தை, துறை அமைச்சரான மூர்த்தி கண்டுபிடித்து, அதிரடி காட்டியிருக்கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, பத்திரப் பதிவுத்துறையைச் சேர்ந்த 129 பேருக்கு, பல்வேறு புகார்களின் அடிப்படையில், தற்காலிகப் பணி நீக்க உத்தரவு ஏற்கெனவே பிறப்பிக்கப் பட்டிருந்தது. இந்த உத்தரவுகளை ரத்து செய்வதோடு, அவர்களை அவர்கள் விரும்பும் பணியிடங்களில் அமர்த்துவதாகச் சொல்லி, அவர்கள் தரப்பிடம் இருந்து பெரும் வசூல் நடத்தப்பட்டிருக்கிறதாம். அது, துறையின் செயலாளரிடம் கொடுக்கப் பட்டிருப்பதாக வும், தற்போது புகார் எழுந்திருக்கிறது. இந்த விவகாரம், துறை அமைச்சரான மூர்த்தியின் கவனத்துக்குப் போக, அவர் அதிரடியாகக் களமிறங்கி, அந்த 129 பேரின் கோப்புகளையும் நிறுத்தி வைத்திருக்கிறாராம்.''”

"இலங்கை அதிபர் ரணில், இரண்டுநாள் பயணமாக இந்தியாவுக்கு வந்திருந்தாரே?''”

"ஆமாங்க தலைவரே, இந்தியா வந்த ரணில், இங்கே, ஜனாதிபதி திரௌபதி முர்மு, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் ஆகியோ ரை சந்தித்துப் பேசி இருக்கிறார். அடுத்து பிரதமர் மோடியையும் சந்தித்திருக் கிறார் ரணில். தனது இரண்டு நாள் பயணத் தில், இரு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்து வது குறித்தும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிகளுக்கு இந்தியாவின் உதவி மேலும் தேவைப்படுவது குறித்தும் விவாதித்திருக்கிறார். இரு நாட்டுக்கிடையிலான போக்குவரத்து மேம் பாடு மற்றும் பாலம் அமைப்பது தொடங்கி, பல் வேறு வளர்ச்சி நிலை குறித்து பிரதமர் மோடி யிடம் விவாதித்தாராம். இந்தியாவின் தொழில் நுட்ப அறிவை பயன்படுத்திக்கொள்வது தொடர் பான சில ஒப்பந்தங்களும் போடப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, இலங்கை மீனவர்கள் இந்திய எல்லையைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும், அவர் கோரிக்கை வைத்தா ராம். இதற்கு அனுமதி கொடுத்தால், இந்திய கடல் பரப்பிற்கு ஆபத்து வரலாம் என்றும், நமது மீன் வளம் கொள்ளையடிக்கப்படலாம் என்றும் தமிழக மீனவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.''”

"அமலாக்கத்துறை இப்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கைத் துரத்துகிறதே?''”

ff

"ஆமாங்க தலைவரே, அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்கிற்கு மூன்றாவது முறையாக கடந்த 4ஆம் தேதி சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை. அதில், ஜூலை 27 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அசோக்கோ, தனக்கு உடல் நலம் சரியில்லாததாலும், ஆயுர்வேத சிகிச்சையில் இருப்பதாலும், தனக்கு 6 மாத கால அவகாசம் வேண்டும் என்று ஒரு கடிதத்தை அமலாக்கத் துறைக்கு அனுப்பினார். ஆனால், அந்தக் கடிதத்தை அமலாக்கத்துறை நிராகரித்து விட்டது. இந்த நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார் அசோக். ஆனால், அவர் எங்கிருக்கிறார் என்பதை சமீபத்தில் அமலாக் கத்துறை கண்டுபிடித்துள்ள தாம். அதனால் 27ஆம் தேதி வரை அசோக்கிற்கு கெடு விதித்திருக்கிறதாம் அமலாக் கத்துறை. அந்த தேதியில் அவர் ஆஜராகாத பட்சத்தில், அவ ரைத் தேடப்படும் குற்றவாளி யாக அறிவித்து விட்டு, அதி ரடியாகக் கைது செய்யும் நட வடிக்கையில் அமலாக்கத்துறை ஈடுபடத் திட்டம் வகுத்திருக்கிறதாம்.''”

"தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் ஒன்றுக்கும் மேற்பட்ட அரசு வாகனங்களை பயன்படுத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்களே?''”

"ஆமாங்க தலைவரே, இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆர்.டி.ஐ. செயற்பாட்டாளர்கள் சிலர், அரியலூர் மாவட்ட ஆட்சியராக ரமண சரஸ்வதி இருந்தபோது, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசுக்குச் சொந்தமான காரை, சென்னையிலுள்ள தனது வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அந்த கார், ரமண சரஸ்வதியின் குழந்தைகளை பள்ளிக்கூடத் துக்கு அழைத்துச் செல்லவும், காய்கறி மார்க்கெட் டுக்கு சென்று வரவும், பீச் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்குச் சென்று வரவும் பயன்படுத்தப் பட்டது. இதற்கான பெட்ரோல் செலவு முழுவதும் அரியலூர் கலெக்டர் அலுவலகக் கணக்கில் எழுதப்பட்டது. அதேபோல, சென்னை மாநக ராட்சியின் 5ஆவது மண்டலத்தில் டெபுடி கமி ஷனராக இருக்கும் சிவகுரு பிரபாகரன், அரசுக்குச் சொந்தமான வாகனத்தைத் தனது குடும்பத்தின் தனிப்பட்ட காரியங்களுக்காகப் பயன்படுத்தி வருகிறார். மாநகராட்சி வாகனங்கள், மாநகராட்சி எல்லையை தாண்டக்கூடாது என்ற போதும், தஞ்சை மாவட்டத்திலுள்ள தனது ஊருக்கு, தனது குடும்பத்தினர் சென்று வர சிவகுரு பிரபாகரனின் வாகனம் பயன்பட்டுவருகிறது. இதற்கான எரிபொருள் செலவெல்லாம் மாநகராட்சி தலை யில்தான் ஏறுகிறது. இப்படிப்பட்ட ஏடாகூடங் களைத் தடுக்கவேண்டும் என்றால், அதிகாரி களுக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் கொடுப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அரசாங்கம், அதிகாரிகளின் உபரி வாகனங்களுக்கான செலவினங்களைத் தடுத்தாலே பல கோடிகள் அரசுக்கு மிச்சமாகும் என்கிறார்கள்.''”

"பா.ஜ.க. தரப்பு நடத்திவந்த ’வார்ரூம்’ ஊழியர்கள் மீது கர்நாடக காங்கிரஸ் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறதே?''”

fg

”"பா.ஜ.க.வின் செல்வாக்குமிக்க பிரமுகரான பி.எல்.சந்தோஷின் வார் ரூம்கள், சமூக ஊடகங்களில் விருப்பம் போல் விளையாடி அட்டகாசம் செய்து வந்தன. இதைக் கவனித்த கர்நாடகக் காவல் துறை, அந்த வார் ரூம்களில் பணியாற்றிய ஊழியர் களை அண்மையில் அதிரடியாகக் கைது செய் திருக்கிறது. அங்குள்ள கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராகத் தேவையற்ற அவதூறுகளைப் பரப்பி வருவதாகவும், அங்கே மக்கள் மத்தியில் கலவரத் தைத் தூண்ட முயற்சிப்பதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றன. இதைப் பார்த்த தமிழக காவல்துறை, அவர்கள் பாணியிலேயே தமிழகத்தில் செயல்படும் பா.ஜ.க. அண்ணாமலை யின் மூன்று வார் ரூம்கள் மீதும் அதிரடி நடவடிக்கை யில் இறங்கலாமா? என்று ஆலோசித்து வருகிறது. இந்தத் தகவல் அண்ணாமலை தரப்பை மிரள வைத்திருக்கிறதாம். இந்த நிலையில், அண்ணாமலை யின் "என் மண்; என் மக்கள்'’ பிரச்சாரப் பயணத் துக்கு உதவுமாறு, தமிழக பா.ஜ.க.வில் இருக்கும் பிராமண சமூகப் பிரமுகர்களுக்கு. பி.எல்.சந்தோஷ் போன் செய்து ஆதரவு கேட்டு வருகிறாராம்.''”

"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். அமைச்சர் ரகுபதி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தன் மகனை சிவகங்கை தொகுதியில் நிறுத்த நினைக்கிறாராம், அதனால், இப்போதே தனது வாரிசை, அரசியல் நிகழ்ச்சிகளில் தலைகாட்ட வைத்து வருகிறார் என்கிறார்கள் லோக்கல் உடன்பிறப்புகள்.''

nkn260723
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe