"ஹலோ தலைவரே, ப.சிதம்பரம் கைதான விவகாரம் ஒட்டுமொத்த இந்தியாவையும் பரபரப்பா ஆக்கி யிருக்கு. இந்த நடவடிக்கையை ப.சி.யோடு நிறுத்தாமல் அவர் குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை பேரையும் கம்பி எண்ண வைக்க ணும்னு மோடி அரசு வரிஞ்சிகட்டி நிக்கிது.''’
""ஆமாம்பா, அடுத்து ப.சி. மகன் கார்த்தி சிதம்பரத்தைக் குறிவைச்சிட்டாங்க போலிருக்கே?''’
""ப.சி.யை குறி வச்ச ஐ.என். எக்ஸ் மீடியா கேஸ் சம்பந்தமா ஏற்கனவே கார்த்தி சிதம்பரத்தை அரெஸ்ட் பண்ணி, விசாரிச்சி, ரிமாண்ட்ல வச்சி, ஜாமீன்ல வந்துட்டாரு. ஆனாலும், வேற என்னென்ன வழக்கு இருக்குன்னு தோண்டுறாங்க. இதில் வருமான வரித்துறை சம்பந்தமான ஒரு வழக்கு இப்ப கார்த்தி சிதம்பரத்தையும் அவர் மனைவி ஸ்ரீநிதியையும் ஒருசேர மிரட்டிக்கிட்டு இருக்கு. இவங்க பேர்ல கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள முட்டுக்காட்டுல இருந்த ஒரு நிலம் விற்கப்பட்டிருக்கு. அதில் விற்பனைத் தொகையைக் குறைச்சிக் காட்டி, வரி ஏய்ப்பில் ஈடுபட்டதா இவங்க மேல வருமான வரித்துறை தொடுத்த ஒரு வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்துக் கிட்டிருக்கு. இதற்கிடையில் இப்ப கார்த்தி சிதம்பரம் எம்.பி.யாகி இருப்பதால், அவர் மீதான இந்த வழக்கை, மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு அவசரமாக மாற்றியிருக்கு மோடி அரசு.''
""அங்கே விசாரணை வேகமா போகுமே?''’’
""ஆமாங்க தலைவரே.. இந்த சிறப்பு நீதிமன்றம்தான், அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மீதான ஒரு கிரிமினல் வழக்கில் அவருக்குத் தண்டனை கொடுத்து, அவருடைய மந்திரி பதவிக்கு வேட்டு வச்சிது. அதனால் இந்த சிறப்பு நீதிமன்றம் தன்னைச் சிறைக்கு அனுப்பிடு மோன்னு பயந்து போன கார்த்தி சிதம்பரம், "அந்த வரி ஏய்ப்பு வழக்கு என் மீது தொடரப் பட்ட காலத்தில், நான் மக்கள் பிரதிநிதியாக இல்லை. அதனால் இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது'ன்னு உயர் நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கார். இதற்கு விளக்கம் தருமாறு வருமான வரித்துறைக்கும் உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரலுக்கும் உத்தரவிடப்பட்டிருக்கு. இருந்தாலும் கார்த்தி சிதம்பரம் தலைக்குமேல் ஒரு கூர்மையான கத்தி தொங்கிக்கிட்டுதான் இருக்கு.''’
""நீதி, நேர்மை, சட்டம்ன்னு சொல்லிக்கிட்டு, பழைய வழக்குகளை எல்லாம் தூசி தட்டி, எதிர்க்கட்சித் தலைவர்களைத் துரத்தும் மோடி அரசு, லஞ்சம் கேட்டுக் கெடுபிடி பண்ணுகிற பெரும்புள்ளிகளைக் கண்டிக்க மறுக்குதாமே?''’
""உண்மைதாங்க தலைவரே, சந்திரபாபு நாயுடு காலத்தில் ஆந்திராவில் வெளிநாட்டு முதலீடுகள் ஏகத்துக்கும் குவிஞ்சுது. புதிய புதிய தொழிற்சாலைகள் அங்கே முளைச்சுது. ஆனா, அப்படி ஆந்திராவில் கால்பதிச்ச தொழில் நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் இப்ப, அந்த மாநிலத்தை விட்டே ஓட்டம் பிடிக்க லாமான்னு தவிக்கிதாம். அண்மையில் பிரதமர் மோடியை சந்திச்ச தொழிலதிபர்கள் தரப்பு, இப்ப இருக்கும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்ரெட்டி எங்ககிட்ட அதிகமா கமிஷன் கேட்கறார். ஏற்கனவே நாங்க சந்திரபாபு நாயுடுவுக்குப் போதுமான அளவுக் குக் கொடுத்துட்டோம். ஆனால் ஜெகன்மோகன் ரெட்டித் தரப்போ, அது போன ஆட்சிக்கு நீங்க கொடுத்தது. இப்ப நடக்குறது எங்க ஆட்சி. நிறைய நல்ல நல்ல திட்டங் களைக் கொண்டு வர்றோம். அதனால் எங்களுக்கும் நீங்க மொய் எழுதித்தான் ஆகனும்னு நிர்பந்தம் செய்யுது. நீங்கதான் அந்த ரெட்டிகாருவின் ஆக்டோ பஸ் பிடியில் இருந்து எங்களை மீட்கணும்னு சொல்லி யிருக்கு. இதைக்கேட்ட மோடி, ஜெகன்மோகன்ரெட்டி எங்க ஆட்சியின் ஆதரவாளர். அவரை நாங்க கண்டிக்க முடியாதுன்னு கைவிரிச்சிட்டாராம். அதனால் நொந்து போன முதலீட்டாளர்கள் பலரும் ஆந்திராவில் இருந்து ஓட்டம் பிடிக்கப் பார்க்கறாங்க. இதனால் அங்கே தொழில் வளர்ச்சி கேள்விக்குறியா ஆகுது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஃபாரின் டூரில் பிஸி.''’
""அக்கம் பக்கத்து முதல்வர்களெல்லாம் சொல்லி வச்சித்தான் கிளம்புறாங்களோ.… தமிழக முதல்வர் எடப்பாடியின் வெளிநாட்டு டூருக்கான நாள் நெருங்கிக்கிட்டு இருக்கு. ஆனாலும், அவர் கவனிக்கும் துறைகளை யாருக்கும் கொடுக்கிறதா இல்லை போல தெரியுதே?''’
""28-ந் தேதி வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளப் போறார் எடப்பாடி. அவர் தன்னிடம் இருக்கும் துறைகளைத் தங்களிடம் ஒப்படைச்சிட்டுப் போவார்ன்னு துணை முதல்வர் ஓ.பி.எஸ். மற்றும் தங்கமணி, வேலுமணி ஆகிய அமைச்சர்கள் எதிர்பார்த் துக்கிட்டு இருக்காங்க. முன்னே இருந்த முதல்வர்கள் அப்படி ஒப்படைச்சிருக்காங்க. தமிழக முதல்வரா இருந்த அறிஞர் அண்ணா, முதன்முதலா அமெரிக்காவுக்கு அரசியல் ரீதியா சுற்றுப்பயணம் மேற்கொண்டப்ப கலைஞர், நாவலர் உள்ளிட்ட அமைச்சர்களிடம் தன் இலாகாக்களை ஒப்படைச்சிட்டுப் போனார். அடுத்து சிகிச்சைக்காக அவர் இரண்டாம் முறையாக அமெரிக்கா போன போதும் பழைய மாதிரியே நாவலர் உள்ளிட்டவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. கலைஞரும் அரசுரீதியான வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது நாவலர் உள்ளிட்ட அமைச்சர்களிடம் பொறுப்புகளைப் பகிர்ந்துக்கிட்டாரு.''
""எம்.ஜி.ஆர். ஆட்சியிலும் அப்படித்தானே?''’’
""ஆமாங்க தலைவரே... எம்.ஜி.ஆர். அரசு ரீதியா அமெரிக்கப் பயணம் போனப்ப, அமைச்சரவையில் அவருக்கடுத்து இருந்த நாஞ்சில் மனோகரனிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அப்பு றம், நினைவிழந்த நிலை யில், அமெரிக்காவில் சிகிச் சைக்காக போனபோதும், இரண்டாவது முறை சிகிச் சைக்குப் போனபோதும் நாவலர் உள்ளிட்டவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது. அதேபோல் எடப் பாடியும் தன் துறைகளை ஒப்படைப்பார்ன்னு அவங்க எதிர்பார்த்தாங்க. ஆனா, தன் வசமுள்ள பொறுப்புகளை யாரிடமும் பகிர்ந்துக்கலைன்னு எடப்பாடி உறுதியா இருக்காரு. மேலிடத்துக்கும் இதை தெரிவிச் சிட்டாராம்.''’’
""அமைச்சரவை சகாக்கள் மீது அத்தனை நம்பிக்கையா?''’’
""அண்ணா, எம்.ஜி.ஆர். காலத்தில் இன்னைக்கு இருக்கிற மாதிரி தொலைத்தொடர்பு டெக்னாலஜி வளரலை. அதனால் அவங்க தங்கள் இலாகாக்களை அமைச்சர்களிடம் ஒப்படைச் சிட்டுப் போகவேண்டி இருந்தது. இப்ப நிலைமை அப்படி இல்லை. இருந்த இடத்தில் இருந்தே வீடியோ கான்பரன்ஸிங் மூலம் நிர்வாகத்தை இயக்க முடியும். நீதிமன்றத் தீர்ப்புகளே வீடியோ கான்பரன்ஸிங்கில் சொல்லப் படுது. அதே நேரம் முதல்வராக இருப்பவர்கள் செயல்பட முடியாத நிலையில் இருந்தாலோ, மருத்துவமனையில் அட்மிட்டாகி இருந்தா லோதான் அவங்க துறைகளை மந்திரிகளிடம் ஒப்படைக்க வேண்டிய நிலை வரும். நான்தான் நல்லா இருக்கேனே. அப்படி இருக்கும்போது எதுக்கு என் துறைகளை மத்தவங்ககிட்ட ஒப்படைக்கணும்னு எடப்பாடி கேட்கிறாராம். இது அமைச்சரவை சகாக்களை அப்செட் ஆக்கிடிச்சி. எடப்பாடியோ பி.ஏ.க்கள் மூலமா தன் துறை சார்ந்த அத்தனை ஃபைல்களையும் கொண்டுவரச் செய்து, பெண்டிங் வைக்காமல் எல்லாத்தையம் கிளியர் செய்துட் டாராம். டூருக்கு முன்னாடி அமைச்சரவையைக் கூட்டி சில முக்கிய முடிவுகளை எடுக்கவும் திட்டமிட்டிருக்காராம்.''’’
""இந்த நேரத்தில் எடப்பாடியோடு வெளிநாடு செல்லும் அவருடைய பி.ஏ. ஒருவர் மீது மோசடிப் புகார் எழுந்து சர்ச்சைப் புயலை ஏற்படுத்துதே?''’
""உண்மைதாங்க தலைவரே, அதுபத்தி விரிவாவே சொல்றேன். முதல்வர் எடப்பாடியின் பி.ஏ.க்களில் ஒருவர்தான் கிரிதரன். இவர் எ.வி.ஐ.ஏ.ஆர். என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் ஒன்றையும் பினாமி பெயரில் நடத்திகிட்டு இருக்காராம். திருவள்ளூரில் சிப்காட்டுக்காக அரசு இடம் வாங்க திட்டமிட்டப்ப, கிரிதரன் அதிரடியா களமிறங்கினாராம். திருவள்ளூர் மாவட்ட கலெக்டரான மகேஸ்வரி, அவர் கணவர் ரவிக்குமார் மற்றும் தர்மலிங்கம் ஆகியோரோடு அவர் இதற்காகக் கூட்டணி அமைச்சிருக்கார். கலெக்டர் மகேஸ்வரியும் அவர் கணவர் ரவிக் குமாரும் முதல்வர் எடப்பாடிக்கு உறவினர்களாம். அதனால் இந்த டீம் தைரியமாகக் களமிறங்கி இருக்கு. ஏறத்தாழ 150 சி மதிப்பிலான ஒரு இடத்தை 300 சிக்கு வாங்கிய தாகக் கணக்குக்கு காட்டிவிட்டு, 150 சியை இந்தக் கும்பல் சுவாஹா செய்துவிட்டதாம். இதில் தான் ’லபக்’ செய்த 50 ’சி’யை மேற்கண்ட தன் கட்டு மான நிறுவனத்தில் மூலதனம் ஆக்கிட்டாராம் கிரிதரன். இதையெல்லாம் அந்தப் பகுதியில் இருக்கும் சமூக ஆர்வலர்கள் தோண்டித் துருவி ஆதாரங்களைத் திரட்டியதோடு, இது தொடர்பாகப் புகார் கொடுக்கவும் வழக்குப் போடவும் வரிந்துகட்ட ஆரம்பிச்சிட்டாங் களாம்.''’’
""என்னிடமும் முக்கியமான செய்தி ஒன்னு இருக்கு. பலமான எதிர்க்கட்சியாக தேர்தல் களத்தில் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டிருக் கும் தி.மு.க.வுக்கு எந்த வகையிலாவது சிக்கல்களை ஏற்படுத்தணும்னு முதல்வர் எடப்பாடி நினைக்கிறாராம். அதனால், சென்னை சிட்டி கமிஷனராக இருக்கும் விஸ்வநாதனுக்கு பதில் அந்தப் பதவியில், டி.ஜி.பி. நாற்காலியை எதிர்பார்த்த ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர்சேட்டை உட்காரவைக்க காய்களை நகர்த்துகிறார். ஒரு காலத்தில் தி.மு.க. தலைமையோடு மிக நெருக்கமான தொடர்பில் இருந்த ஜாபர் சேட்டுக்கு, அவர்கள் பற்றிய ரகசியங்கள் நிறையவே தெரியுமாம். அதனால் அவர் மூலமே தி.மு.க. தலைமைக்கு எதிரான நடவடிக்கைகளை வேகப்படுத்த ப்ளான் பண்ணியிருக்காரு எடப்பாடி. அதற்கேற்ப, காவல்துறை மேல்மட்டத்தில் மூவ் நடக்குது. அதே நேரத்தில், சிட்டி கமிஷனரான விஸ்வநாதன் சக அதிகாரிகளிடமும் பொதுமக்களிடமும் பெயர் வாங்கியிருப்பதால் அவரை டிஸ்டர்ப் செய்வதா என்பது பற்றியும் கோட்டையில் முணுமுணுப்பு கிளம்பியிருக்கு.''’’
___________
இறுதிச் சுற்று
நளினிக்கு சட்டத்துறை ஆதரவு!
ராஜீவ் கொலைவழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக வேலூர் சிறையிலடைக்கப்பட்டுள்ள நளினி, தனது மகள் திருமண ஏற்பாடு களைக் கவனிப்பதற்காக ஒரு மாத பரோலில் ஜூலை 25-ல் வெளியில் வந்தார். வேலூர் சத்துவாச் சேரியில் தங்கி மகள் திருமண ஏற்பாடுகளைக் கவனித்து வரு கிறார். இந்நிலையில் லண்டனி லிருந்து அவரது மகள் இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் தனது பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக் கோரி தமிழக அரசு நிராகரித்த நிலையில் உயர்நீதிமன்றத்தை அணுகினார். 7 பேர் விடுதலை தொடர்பாக டெல்லி வரை பல முயற்சிகளை மேற்கொண்டவர் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். சிறைத்துறைக்கும் அவரே பொறுப்பு. அவரது துறை தரப்பில் சட்டப் படியான ஆதரவு இருந்தது. நளினி யின் மனுவை விசா ரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், நிர்மல்குமார் அமர் வில் விசாரிக்கப் பட்ட நிலையில் மூன்று வார காலத்துக்கு பரோலை நீட்டித்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
எட்டு -குட்டு!
சேலம்- சென்னை இடையே எட்டு வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு, திட்டத்தால் பாதிப்படையும் மக்களிடையே எதிர்ப்பு கிளம் பியது.
நீதிமன்றத்தை அணுகிய தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் முயற்சிகளால் கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி எட்டுவழிச்சாலைக்கு அரசு நிலம் கையகப்படுத் தியது செல்லாதென தீர்ப்பளித் தது உயர்நீதிமன்றம். இந்தத் தீர்ப்புக்கு எதிராக மத்திய நெடுஞ்சாலைத் துறை இயக்குநர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு மீதான விசாரணை ஆகஸ்டு 22-ஆம் தேதி நடைபெற்றது.
அப்போது மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் உச்சநீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பியது. "சென்னை- சேலம் இடையே எட்டுவழிச்சாலை போடப்படுவதன் நோக்கமென்ன, ஏன் திட்டம் குழப்பமாக இருக் கிறது,
சாலைக்காக எதனடிப் படையில் நிலம் கையகப் படுத்தப்பட்டது. சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதா? பாரத் மாலா திட்டத்தின்கீழ் வருமா' என பல கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பியது.
இது எட்டுவழிச்சாலை எதிர்ப்பாளர்களை உற்சாக மடையச் செய்துள்ளது.
-மணி