""ஹலோ தலைவரே, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துக்குள் முகமூடி அணிந்த குண்டர் கள் புகுந்து மாணவர்களையும் பேராசிரியர்களையும் தாக்கி யிருக்காங்களே..''
""ஆமாம்பா, குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்துப் போராட்டம் நடத்திய டெல்லி மாணவர்கள் மேலே மறுபடியும் குறி வைக்கப்பட்டிருக்கு. விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையில், முகமூடி அணிந்த மர்மநபர்கள் தாக்கியிருப்பது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு. பா.ஜ.க. ஆதரவு மாணவர் அமைப்பான ஏ.வி.பி.வி.யினர்தான் தாக்குதலை நடத்தியதாக மாணவர்கள் குற்றம் சாட்டறாங்க''’
"டெல்லி தொடர்புகளை விசாரிச்சேங்க தலைவரே.. குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு இந்தியா முழுக்க கடும் எதிர்ப்பு நிலவி வருவதால் அது குறித்து மத்திய மந்திரிகள் அனைவரும் வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்யணும்னு உள்துறை அமைச்சரான அமித்ஷா உத்தரவிட்டிருக்கிறாராம். டெல்லி லாஸ்ட் வர்த் நகரில் அமித்ஷாவே பிரச்சாரத்தில் களமிறங்கி இருக்கிறார். அந்த ஏரியாவில் வங்க தேசத்தில் இருந்து வந்திருக்கும் இந்துக்களும் , சீக்கியர்களும் அதிகம். ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஒருவர் வீட்டில் அமித்ஷா பிரச்சாரம் செய்தபோது, மாடியிலிருந்து எதிர்ப்பு வந்திருக்குது. அப்செட்டான அமித்ஷா, இந்த எதிர்ப்புக்குக் காரணம். அந்த வீட்டில் இருக்கும் நேரு பல்கலைக் கழக மாணவர்தான்னு தெரிஞ்சிக்கிட்டாராம். இதன்பின் தான் ஒரு பெரிய கும்பல் கம்புக் கட்டைகளோட பல்கலைக் கழக வளாகத்துக்குள் ஆவேசமாக நுழைஞ்சிருக்குன்னு சொல்றாங்க. டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதல், இந்தியா முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்த ஆரம்பிச்சி, அது சென்னை வரை எதிரொலிக்கிது. இந்தத் தாக்குதலைக் கண்டிச்சி 6ஆம் தேதி உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய சென்னை பல்கலைக் கழக மாணவர்களை கனிமொழி எம்.பி. சந்திச்சி ஆதரவு தெரிவிச்சிருக்கார்''’’
""தமிழகத்தில் பா.ஜ.க. நடத்தும் போராட்டங்களுக்கு டெல்லி ரியாக்ஷன் என்னவாம்?''
""தமிழறிஞர் நெல்லை கண்ணனுக்கு எதிரா மெரினா காந்தி சிலையருகே பா.ஜ.க. தலைவர்கள் நடத்திய போராட்டம் பற்றிய செய்தி டெல்லி தலைமையை எட்டிய போது, மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா, பா.ஜ.க.வின் தேசிய செயல்தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட சீனியர்களோடு தீவிர அரசியல் ஆலோசனையில் இருந்தாராம். நம்மைப் பார்த்து இப்ப இந்தியாவே மிரண்டுபோயிருக்கு. இந்த நேரத்தில் ஏழெட்டு பேர் போராட்டம் நடத்திக்
""ஹலோ தலைவரே, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துக்குள் முகமூடி அணிந்த குண்டர் கள் புகுந்து மாணவர்களையும் பேராசிரியர்களையும் தாக்கி யிருக்காங்களே..''
""ஆமாம்பா, குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்துப் போராட்டம் நடத்திய டெல்லி மாணவர்கள் மேலே மறுபடியும் குறி வைக்கப்பட்டிருக்கு. விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையில், முகமூடி அணிந்த மர்மநபர்கள் தாக்கியிருப்பது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு. பா.ஜ.க. ஆதரவு மாணவர் அமைப்பான ஏ.வி.பி.வி.யினர்தான் தாக்குதலை நடத்தியதாக மாணவர்கள் குற்றம் சாட்டறாங்க''’
"டெல்லி தொடர்புகளை விசாரிச்சேங்க தலைவரே.. குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு இந்தியா முழுக்க கடும் எதிர்ப்பு நிலவி வருவதால் அது குறித்து மத்திய மந்திரிகள் அனைவரும் வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்யணும்னு உள்துறை அமைச்சரான அமித்ஷா உத்தரவிட்டிருக்கிறாராம். டெல்லி லாஸ்ட் வர்த் நகரில் அமித்ஷாவே பிரச்சாரத்தில் களமிறங்கி இருக்கிறார். அந்த ஏரியாவில் வங்க தேசத்தில் இருந்து வந்திருக்கும் இந்துக்களும் , சீக்கியர்களும் அதிகம். ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஒருவர் வீட்டில் அமித்ஷா பிரச்சாரம் செய்தபோது, மாடியிலிருந்து எதிர்ப்பு வந்திருக்குது. அப்செட்டான அமித்ஷா, இந்த எதிர்ப்புக்குக் காரணம். அந்த வீட்டில் இருக்கும் நேரு பல்கலைக் கழக மாணவர்தான்னு தெரிஞ்சிக்கிட்டாராம். இதன்பின் தான் ஒரு பெரிய கும்பல் கம்புக் கட்டைகளோட பல்கலைக் கழக வளாகத்துக்குள் ஆவேசமாக நுழைஞ்சிருக்குன்னு சொல்றாங்க. டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதல், இந்தியா முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்த ஆரம்பிச்சி, அது சென்னை வரை எதிரொலிக்கிது. இந்தத் தாக்குதலைக் கண்டிச்சி 6ஆம் தேதி உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய சென்னை பல்கலைக் கழக மாணவர்களை கனிமொழி எம்.பி. சந்திச்சி ஆதரவு தெரிவிச்சிருக்கார்''’’
""தமிழகத்தில் பா.ஜ.க. நடத்தும் போராட்டங்களுக்கு டெல்லி ரியாக்ஷன் என்னவாம்?''
""தமிழறிஞர் நெல்லை கண்ணனுக்கு எதிரா மெரினா காந்தி சிலையருகே பா.ஜ.க. தலைவர்கள் நடத்திய போராட்டம் பற்றிய செய்தி டெல்லி தலைமையை எட்டிய போது, மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா, பா.ஜ.க.வின் தேசிய செயல்தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட சீனியர்களோடு தீவிர அரசியல் ஆலோசனையில் இருந்தாராம். நம்மைப் பார்த்து இப்ப இந்தியாவே மிரண்டுபோயிருக்கு. இந்த நேரத்தில் ஏழெட்டு பேர் போராட்டம் நடத்திக் கைதாகி, நம்ம கட்சியையே காமெடியாக்கி இருக்காங்க. அவங்களை வார்ன் பண்ணுங்கன்னு கோபப்பட்டிருக்கார். இதைத் தொடர்ந்து, பொன்னாரையும் ஹெச்.ராஜாவையும் தொடர்புகொண்ட நட்டா, ரொம்பவே அவர்களைக் கடிந்துகொண்டதாகத் தகவல்''’
""தமிழக பா.ஜ.க தலைவர் நியமனம் தொடர்பா 5ஆம் தேதி கமலாலயத்தில், மாநில துணைத் தலைவர் குமாரராவ் தலைமையில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் தேசிய இணை அமைப்புச் செயலாளர் சிவப்பிரகாசமும், தேசிய செய்தித் தொடர்பாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான நரசிம்மராவும் அகில இந்திய பா.ஜ.க. சார்பில் கலந்துக்கிட்டாங்க. இந்தக் கூட்டத்தில் தன் பெயரை யாருமே பரிந்துரைக்க மாட்டாங்கன்னு புரிஞ்சிக்கிட்ட பொன்னார், கூட்டம் தொடங்கும் முன்பாகவே, அகில இந்தியப் பிரதிநிதிகளிடம் தான் தலைவர் பதவியை விரும்புவதாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். எதிர்பார்ப்பும் நம்பிக்கையுமாக காத்திருந்தார் நயினார் நாகேந்திரன். பேசிய பலரும், சீனியர்களுக்கு தலைவர் பதவி கொடுங்க. ஆனால் மற்ற கட்சியில் இருந்து வந்தவங்களுக்குக் கொடுக்காதீங்கன்னு பேச, நயினாரும் அப்செட்.''’
""ப.சி.க்கும் அவர் மகன் கார்த்திக் சிதம்பரத்துக்கும் மறுபடியும் போதாத நேரம் வருது போலிருக்கே?''’
""ஐ.என்.எக்ஸ். மீடியா தொடர்பான வழக்கில் ப.சி. கைதாகி, திகாரில் ஏறத்தாழ 3 மாதம் இருந்துவிட்டு அண்மையில்தான் வெளியில் வந்திருக்கார். அதற்குள் மீண்டும் அரைக் கைது செய்ய, இன்னொரு வில்லங்க விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறது அமலாக்கத்துறை. கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமானங்களைக் கொள்முதல் செய்ததில் பெரும் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை ஒரு கோப்பை ரெடி பண்ணியிருக்கு. அப்ப, காங்கிரஸ் ஆட்சியில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த பிரபுல் படேல், விமானத்துறை அமைச்சராக இருந்தார். ஏர் இந்தியா நிறுவனத்துக்காக டிரீம் லைனர் விமானங்களைக் கொள்முதல் செய்திருக்கிறார்கள். வழக்கமா லீசுக்கு எடுக்கும் இந்தவகை விமானங்களை, கொள்முதல் செய்வதற்கு அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் ஜெய்ராம் ரமேஷ் போன்ற அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்தும் கூட, கார்த்தி சிதம்பரம் நிறுவனம் ஒன்றின் டீலிங்கால் ட்ரீம் லைனர் விமானங்களையே கொள்முதல் செய்திருக்கிறார்கள்.''’
""ஓஹோ..''’
""இந்த வகையில் மட்டும் 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை சொல்கிறது. அதனால், இந்த ஊழல் விவகாரத்தில் ப.சி., அவர் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரைக் கைது செய்வதோடு, அடுத்தடுத்து அப்போதைய அமைச்சர் பிரபுல் படேல் மற்றும் சரத்பவார் ஆகியோரைக் கைது செய்யவும் ரூட் போட்டுகொண்டிருக் கிறார்களாம் அதிகாரிகள். அண்மையில் இது தொடர்பாக பிரபுல் படேலை விசாரித்த அமலாக்கத்துறையினர், ப.சி.யிடமும் அண்மையில் 6 மணி நேரம் விசாரணை நடத்தி இருக்கிறதாம்.''’
""ஓ''
""5-ந் தேதி பா.ம.க. அணிகளின் கூட்டம் தைலாபுரத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமை யில் நடந்தது. அது முடிந்த சூட்டோடு, பா.ம.க.வின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்த வைத்தி தூக்கப்பட்டு, அவருக்கு பதில் திருமாவளவன் என் பவர் நியமிக்கப்பட்டி ருக்கிறார். வன்னியர் சங்கத் தலைவரா இருந்த காடுவெட்டி குருவின் தீவிர விசுவாசி வைத்தி. அவர் செல்வாக்கோடு வளர்ந்து வரு கிறார்ன்னு சிலர் அன்புமணியிடம் சொல்லியிருக்கிறார்கள். அதனால்தான் அவரை தூக்கிட்டாங்கன்னும், அவருக்கு பதில் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டிருக்கும் திருமாவளவன், குருவுக்கு எதிராக அரசியல் செய்தவர், கட்சி மாறி வந்தவர்னும் குற்றம்சாட்டுறாங்க. பா.ம.க.வுக்குள் இது சலசலப்பை உண் டாக்கியிருக்குது.''’
""ரஜினி மக்கள் மன்றத்தினர் பல இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் நடத்தியிருக்காங்களே..''
""ரஜினி, தன் புதுக்கட்சியை வரும் மே, ஜூனில் தொடங்கலாம்ங்கிற மனநிலையில் இருந்தார். இப்ப, அக்டோபர் வாக்கில் கட்சியைத் தொடங்க லாமாங்கிற ஆலோ சனையில் இருக் காராம். எப்படியும் எடப்பாடி அரசு முழு ஆட்சிக் காலத்தை நிறை வேற்றிடும்னும், தேர் தல் நேரத்தில் கட்சியை ஆரம்பிப் பதைவிட அக்டோபர் வாக்கில் கட்சியை ஆரம்பித்தால் அடுத்த ஆறேழு மாதத்தில் கட்சியின் கிளைகளை வளர்த்திடலாம்னு நெருக்கமான நண்பர்களிடம் சொல்லி விவாதித்து வருகிறாராம் ரஜினி''
""நானும் ஒரு முக்கியமான தகவலை பகிர்ந் துக்கறேன். சென்னை அமிஞ்சிக்கரை நெல்சன் மாணிக்கம் சாலையில், எம்.ஜி.எம். ஹெல்த் கேர்ங்கிற பெயரில் சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயங்கிக்கிட்டு இருக்கு. ஏறத்தாழ மூன்றரை லட்சம் சதுர அடியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கார்ப்பரேட் மருத்துவமனையில் 400-க்கும் மேற்பட்ட பெட்டுகளும், கிரிட்டிகல் கேர் யூனிட்டில் 100 பெட்டுகளும் இருக்குதாம். அதோட 12 ஆபரேசன் தியேட்டர்களையும், 30-க்கும் மேற்பட்ட துறைகளையும் கொண்ட இந்த அதி நவீன மருத்துவமனையில் 250-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் இருக்காங்களாம். இதில் விவகாரம் என்னன்னா, இந்த மருத்துவமனைக்குப் போய் சிகிச்சை அளியுங்கள்ன்னு தமிழகத்தின் பிரபல மருத்துவர்கள் நிர்பந்திக்கப்படறாங்களாம். அதைக்கண்டு கொள்ளாத டாக்டர்களுக்கு கடும் மிரட்டல்களும் சுகாதாரத்துறையில் இருந்தே போகுதாம். காரணம் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டிக் கொட்டி இழைக்கப்பட்டிருக்கும் இந்த மருத்துவமனையின் முக்கிய பார்ட்னரா, சுகாதாரத் துறையின் மிகமிக முக்கியமான பவர் புள்ளியே இருக்கிறாராம்''’
_______________________
அ.தி.மு.க.விற்கு பிரேக் போட்ட அ.ம.மு.க.!
"அ.ம.மு.க.வெல்லாம் ஒரு கட்சியா' என மேடைகளிலும் விவாதங்களிலும் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. புள்ளிகள் பேசினாலும், உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வின் தோல்விக்கு அ.ம.மு.க.வும் முக்கிய காரணம் என்பதை நெருக்கமாக பேசும்போது ஒத்துக்கொள்கின்றனர். ""பாராளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.க. களம் கண்டது, அ.தி.மு.க. தோற்றது. விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடவில்லை. அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்றது. இப்ப உள்ளாட்சித் தேர்தலில் அ.ம.மு.க. நின்றதும் அ.தி.மு.க. பாதிக்கப்பட்டிருக்கு'' என்கிறார்கள்.
""உள்ளாட்சித் தேர்தலில் அ.ம.மு.க.விற்கு பொதுவான சின்னம் இல்லை என வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள்தான் சொன்னார்கள். அதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யக்கூட எங்களுக்கு நேரம் தரவில்லை. கட்சி சார்பாக போட்டியிடும் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கு சின்னங்களில்தான் போட்டியிட்டோம்'' என்கிறார் அ.ம.மு.க.வின் வழக்கறிஞரான ராஜா செந்தூர்பாண்டியன்.
""மொத்தம் 5040 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 4710 பதவிகளுக்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்தோம். அதில் 94 பதவிகளில் நாங்கள் வெற்றிபெற்றோம். கடலூரில் ஐந்து பேர், திருவண்ணாமலையில் 6 பேர், தேனியில் 5, புதுக்கோட்டையில் 5, மதுரையில் 7, சிவகங்கையில் 8, தஞ்சாவூரில் 10, தூத்துக்குடியில் 14 என தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அ.ம.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இது தவிர ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் 16 முதல் 19 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளோம்'' என்கிறார் அ.ம.மு.க. தலைவர்களில் ஒருவரான வெற்றிவேல்.
திவாகரனின் அ.தி.க.வும் உள்ளாட்சித் தேர்தலில் 8 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அ.ம.மு.க.வினரை வளைக்க அ.தி.மு.க. வலைவீசி வருகிறது.
-தாமோதரன் பிரகாஷ்
______________________
கொங்கு மண்டலம்! எடப்பாடி மீது பாசம் காட்டும் தி.மு.க.!
ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளால் அ.தி.மு.க.வினர் உற்சாகமடைந்த பகுதி என்றால் அது கொங்கு மண்டலம்தான். இதுபற்றி கொங்கு மண்டலத்தில் உள்ள சீனியர் தி.மு.க. உடன்பிறப்புகள் வேதனையோடு நம்மிடம் பேசியது...
""எம்.ஜி.ஆர். காலம் தொடங்கி இன்றுவரை கொங்கு மண்டலம் என்றால் அது அ.தி.மு.க.வின் கோட்டை என அக்கட்சியினர் கூறிவந்தனர். இது மறைந்த ஜெயலலிதா காலம் வரை பெரும்பாலும் அப்படித்தான் இருந்தது. தி.மு.க. இங்கு கொஞ்சம் பலவீனமான அமைப்பாகத்தான் இருந்தது. ஆனால் தலைவர் கலைஞர் மறைவிற்கு பிறகு தளபதி ஸ்டாலின், கட்சித் தலைமைப் பொறுப்புக்கு வந்து சந்தித்த, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அ.தி.மு.க.வின் கோட்டையை தி.மு.க. சுக்கு நூறாக உடைத்தது என்பது உண்மைதான்.
இந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காததற்கு காரணம், முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி மீது இந்த பகுதியில் உள்ள தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் பலரும் பாசம் வைத்திருப்பதாகத்தான் தெரிகிறது. கட்சியின் வெற்றி மட்டுமே ஒரே நோக்கம் என்று உழைக்காமல் தேர்தலில் போட்டியிடுபவர்கள் அவர்களே தங்கள் வெற்றிக்காக உழைக்கட்டும் என ஒதுங்கி விட்டனர். இதனால்தான் இந்தப் பகுதியில் தி.மு.க. அதிகப்படியான தோல்வியை சந்தித்திருக்கிறது.
கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி இந்த 7 மாவட்டங்களும் தி.மு.க.விற்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளன. இதில் ஒரு ஆறுதலான விஷயம், ஈரோடு தெற்கு மாவட்டத்தில் கிடைத்த வெற்றிதான். மா.செ. சு.முத்துசாமியின் உழைப்பால் தெற்கு மாவட்டத்தில் உள்ள நான்கு மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் மூன்று தி.மு.க.வுக்கு வந்துள்ளது. அதேபோல் ஐந்து ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளில் 3 தி.மு.க.வுக்கு வந்துள்ளது. தெற்கு மாவட்டத்தில் தி.மு.க. அ.தி.மு.க.வை விட கூடுதலாக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இதே ஈரோடு மேற்கு மாவட்டத்தில் சொல்லும்படி எதுவுமே இல்லை. கட்சித் தலைமை இனிமேலாவது எடப்பாடி பழனிச்சாமி மீது பாசம் வைத்துள்ள தி.மு.க. நிர்வாகிகள் மீது கண் வைக்கும் என நம்புகிறோம்'' என்றனர்.
-ஜீவாதங்கவேல்