""ஹலோ தலைவரே, கொரோனாவின் விறுவிறு வேகத்தால் இந்தியாவே பெரும் அச்சத்தில் மூழ்கியிருக்கு. கொரோனா தடுப்புப் பணிகள்ல ஈடுபடுறவங்களும் அதன் கோரப் பிடியில் சிக்கிவருவது, திகிலைப் பல மடங்கா ஆக்கியிருக்கு.''

""ஆமாம்பா. சிகிச்சை தரும் மருத்துவர்கள், செவிலியர்கள்னு மட்டும் இல்லாமல், உயிரைத் துச்சமா எண்ணி செய்தி சேகரிக்கும் பத்திரிகை யாளர்களுக்கும், இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கே?''

’""உண்மைதாங்க தலைவரே, டெல்லியில் பணியாற்றி வந்த, நம் தமிழகத்தைச் சேர்ந்த தொலைக் காட்சிச் செய்தியாளர்

tt

Advertisment

ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கு. இது, ஊடகத்துறையினரை ரொம்பவே பயமுறுத்தியிருக்கு. இந்த நிலையில், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் பலரும் தங்கள் நட்பில் இருக்கும் செய்தியாளர்களைத் தொடர்பு கொண்டு, கவனமாக இருங்கன்னும், இப்போதைய சூழலில் வீட்டில் இருந்தே பணிபுரியும் சூழலை உருவாக்கிக்கங்கன்னும் அக்கறையோட அறிவுறுத்திக்கிட்டு இருக்காங்க. அதேபோல், இப்ப உள்ள நிலையில், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை, ரத்து செய்யனுங்கிற கோரிக்கையும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் வலுத்திருக்கு.''’’

""ஆமாம்பா, பொதுத் தேர்வை ரத்து செய்வது பற்றி முதல்வர் எடப்பாடிதான் முடிவெடுக்கனும்ன்னு கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சொல்லியிருக்காரே?''’’

""உண்மைதாங்க தலைவரே, தேர்வை ரத்து செய்யனும்ங்கிற கோரிக்கை பத்தி, தன் துறை அதி காரிகளிடம் ஆலோசிச்ச கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அதே சூட்டோடு, முதல்வர் எடப்பாடியிடம் இது பற்றி விவாதிச்சார். எடப் பாடியோ, மேற்படிப்புக்கும் வேலை வாய்ப்புக்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சிங்கிறது ரொம்ப முக்கிய மானதா இருக்கு. அதனால் தேர்வையே நடத்தா மல் ஆல் பாஸ்ங்கிற முடிவை நாம் எடுக்கமுடி யாது. கொரோனாவின் தாக்கம் குறைஞ்சதும், ஏப்ரல் இறுதியிலோ அல்லது மே இரண்டாவது வாரத்திலோ தேர்வை நடத்தப் பார்ப்போம். அதுவும், தேர்வெழுதும் மாணவர்கள் அவங்கவங்க பகுதியிலேயே தேர்வை எழுதுறதுக்கான முயற்சி யையும் நாம் எடுப்போம்ன்னு சொல்லியிருக்கார்.''

Advertisment

""நல்ல சிந்தனைதான். அதே சமயம், இங்கே எடப்பாடி அரசு டாஸ்மாக்கை மூடினாலும், எல்லாப் பக்கமும் சரக்கு விற்கப்படுதாமே?''

""ஆமாங்க தலைவரே, டாஸ்மாக்கை மூடி யதும் தமிழகம் முழுக்க, கட்டுப்படுத்த முடியாத அளவுக்குக் கள்ளச்சாராயம், ஆறா பெருக்கெடுத்து ஓட ஆரம்பிச்சிடுச்சி. அது மட்டுமில்லாம, மது பிரியர்களும் தள்ளாட்டமில்லாம அல்லாட ஆரம் பிச்சிட்டாங்க. சிலர் மனநலம் பாதிக்கப்படுவதாக வும் செய்திகள் வந்திருக்குது. அதனால் திகைச்சுப்போன எடப்பாடி, டாஸ்மாக் விவகாரத்தில் லிபரலா நடந்துக்கங்கன்னு போலீஸýக்கு க்ரீன் சிக்னல் கொடுத்துட் டாராம். அதனால், இப்ப டாஸ்மாக் பணியாளர்கள் மூலம், அரசாங்கச் சரக்கே கள்ள மார்க்கெட்டில் ஏக போகமா விற்கப்பட்டு வருது. 100 ரூபா விலையுள்ள சரக்கை 500 ரூபாய்க்கும், 500 ரூபா சரக்கை 3 ஆயிரம் ரூபாய்க்கும்னு ஆளாளுக்கு இஷ்டத்துக்கு விலையை ஏத்தி விக்கிறாங்க.''

rang

""அடக்கொடுமையே...''

""அதுமட்டும் இல்லீங்க தலைவரே, இப்படி டாஸ்மாக் சரக்கை ஏகத்துக்கும் விலைவச்சி விக்கிறதால், கொலை, கொள்ளைன்னு இப்ப க்ரைம் ரேட் அதிகரிக்க ஆரம்பிச்சிடுச்சி. சென்னை எண் ணூர் பகுதியில், டாஸ்மாக் சரக்கு வாங்க கூடுதலா ரூபா வேணும்ன்னு தன் மனைவியை அடிச்சி உதைச்ச ஒருத்தரை, அவர் மகன்களே வெட்டிக் கொன்னுட்டாங்க. இது சாராயத்துக்காக நடந்த கொலைன்னு தெரிஞ்சும், அதைக் குடும்பப் பிரச் சினையால் ஏற்பட்ட கொலைன்னு, போலீஸ் உண் மையை மறைச்சிடுச்சி. இதுபோல் டாஸ்மாக் சரக்கை ஓவர் ரேட்டில் கள்ள மார்க்கெட்டில் வாங்க றதுக்காகவே குடிமகன்கள் பலரும் வழிப்பறி, கொள்ளைன்னு க்ரைம் நடவடிக்கைகளில் இறங் கிட்டாங்களாம். இதையெல்லாம் போலீஸýம் கை யைக் கட்டி வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கு.''

""என்னப்பா நீ? ஊரடங்கை நிலைநாட்ட வெயில்லயும் மழைலயும் தூக்கம் சாப்பாடு மறந்து உழைக்கிற காவலர்களை, இந்த நேரத்தில் குறைசொல்லலாமா?''

r

""நீங்க சொல்றது ஒருவகையில் நியாயம்தாங்க தலைவரே, ரோட்டில் நின்று ஊரடங்கு பணி செய்கிற காவலர்களின் நிலை ரொம்ப பரிதாபம். கீழ்நிலையில் உள்ள காவல்துறையினரும், அவர் களைவிட சற்று மேலே உள்ள அதிகாரிகளும், வெயில்லயும் மழைல யும் கஷ்டப்படறது உண்மைதான். ஆனால் நான் சொல்றது மேல் மட்டத்தில் இருக்கும் காவல்துறை உயர் அதிகாரிகளை. நல்ல சரக்கையும், கள்ளச் சரக்கை யும் விக்கிறவங்க, மேல்மட்ட அதிகாரிகளை வெயிட் டாவே கவனிச்சிடறாங்க. அதேபோல், பெரிய பெரிய கடைகள், ஓட்டல்கள் எல்லாம் இவங்க தயவால், எல்ல நேரமும் திறந்து வைக்கப்படுது. சட்டவிரோத பிஸ்னஸ்களில் இருப்பவர் களும் எந்த சிரமும் இல்லாம அவங்க வேலையை ஜரூராப் பார்த்துக்கிட்டுதான் இருக்காங்க. இதுபோன்ற சமூக விரோதச் செயல்களால், வரு மானம் மாமூலா கிடைக்குது. ஆனா, நம் கண்ணுக் குத் தெரியறவங்க யாருன்னா, ஊரடங்கிலும் சாப்பிடாமத் தூங்காம வேலை பார்க்கிற காவலர்களும், தடியடிவரை நடத்தற போலீஸýம், செமையா உதைபடுற பப்ளிக்கும்தான்.''

""தி.மு.க, அ.தி.மு.க மாதிரி இப்ப கொரோனா நிவாரண உதவிப் பணிகள்ல ஆர்.எஸ்.எஸ்.சும் களம் இறங்கியிருக்கே?''

""ஆமாங்க தலைவரே, ஆளும்கட்சி அமைச்சர்களும், மா.செ.க்கள் உள்ளிட்ட பிரமுகர்களும் அங்கங்கே தங்களால் முடிஞ்ச அளவுக்கு, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நிவாரணப் பொருட்களை விநியோகிக்கிறாங்க. அவங்கக் கட்சிக்காரங்களுக்கு அது அதிகமாவே கிடைக்கிது. அதேபோல் எதிர்க்கட்சியினரான தி.மு.க. மா.செ.க்களும் பிரமுகர்களும், ஸ்டாலினின் உத்தரவை ஏற்றுக் கொண்டு, rrஏழை எளிய மக்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், பாதுகாப்பு உபகரணங்கள், சாப் பாடுன்னு விநியோகிச்சிக்கிட்டு இருக்காங்க. இதை எல்லாம் பார்த்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள், சரசரன்னு களமிறங்கி வசதியான மார்வாடிகளையும், ஹோல் சேல் வியாபாரிகளையும் முற்றுகையிட்டு, ஜி.எஸ்.டி. விவகாரத்தில் சிக்கிக்காதீங் கன்னு அன்பா எச்சரிச்சி, பெருமளவு பொருட்களை யும் கரன்ஸியையும் வாங்கி, பிராமணக் குடும்பங் களுக்கு மட்டும் விறு விறுப்பா விநியோகிச்சிக்கிட்டு இருக்காங்க. அதை பெருமையாவும் அறிவிச்சிருக்காங்க. இதனால் மார்வாடிகள், வியாபாரிகள் தரப்பு, கொரோனாவை விட இவங்க மோசமா இருக்காங்களேன்னு ஏகத்துக்கும் குமுறிக்கிட்டு இருக்கு,''

""கொரோனா நிவாரணத் துக்கான செலவினங்களை யோசிச்சி, எம்.பி.க்களின் சம்பளத்தை 30% குறைப்பதோட, அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை, இரண்டு வருசத்துக்கு நிறுத்தப் போவதாகவும் மத்திய அரசு அதிரடியாச் சொல்லியிருக்குதே?''

""உண்மைதாங்க தலைவரே, எம்.பி.க்களின் சம்பளக் குறைப்பு, தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தம்ன்னு அதிரடி காட்டும் மோடி அரசு, தங்கள் தரப்பின் ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்த முன் வருமான்னு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முனுமுனுக்கறாங்க. அதேபோல், கம்யூனிஸ்ட் தரப்பினர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் பயணங்களுக் குத் தனி விமானங்களை ஏற்பாடு செய்வதால், பலகோடி செலவாகுதேன்னு சுட்டிக்காட்டினர். அதனால் வி.வி.ஐ,.பி.க்களின் தனி விமானப் பயணங்களை நிறுத்தும் முடிவுக்கு வந்திருக்கும் மோடி அரசு, மத்திய அமைச்சர்களும் மூணு மாதங்களுக்கு வெளி மாநிலப் பயணங்களைத் தவிர்க்கனும்ன்னு அறிவுறுத்தியிருக்கு.''

er

""ஊரடங்கு நீடிச்சா கிடுகிடுன்னு சரிஞ்சிக்கிட்டிருக்கும் இந்தியப் பொருளாதார நிலைமை மேலும் மோசமாயிடுமே?''

""அதுவும் உண்மைதாங்க தலைவரே, கொரோனாவுக்காக கொண்டுவரப்பட்ட ஊரடங்கின் பாதிப்பால், இந்தியத் தொழில் நிறுவனங்கள், இதுவரை ஏறத்தாழ 8 லட்சம் கோடிவரை இழப்பைச் சந்திச்சிருக்கு. அதனால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் ஒட்டுமொத்த பொருளா தாரமும் சரிஞ்சிடும்ன்னு பொருளாதார நிபுணர்கள், மத்திய நிதி அமைச்சகத்துக்கு எச்சரிக்கை விடுத்திருக்காங்க. அதனால் அதற்கு மாற்று வழி என்னங்கிறது பற்றி நிபுணர்களுட னும், நிதித்துறை அதிகாரிகளுடனும் வீடியோ கான்ஃப்ரன்சில் விவாதிக்க, பிரதமர் மோடியிடம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அனுமதி கேட்டிருக்காராம்.''

""அன்புமணிக்கு டெல்லி சைடில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுதே?''

""ஆமாங்க தலைவரே, இதை அரசியல் தாண்டிய முக்கியத்துவம்ன்னு சொல்லலாம். கொரோனா பற்றிய பல்வேறு தகவல்களை அன்புமணி, தினசரி மோடிக்கு அனுப்புவதை வாடிக்கையாக வச்சிருக்கார். முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர்ங்கிற முறையிலும், டாக்டர்ங்கிற முறையிலும் இவர்கொடுக்கும் தகவல்களுக்கு அதிக முக்கியத்துவத்தைப் பிரதமர் அலுவலகம் தருது. மோடியின் அட்வைஸ்படி, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ரெண்டு நாளைக்கு ஒருமுறையாவது அன்புமணியைத் தொடர்புகொண்டு, நிலைமை குறித்து விவாதிக்கிறாராம். இது பா.ம.க தரப்பை உற்சாகப்படுத்தியிருக்கு.''

""தமிழக எம்.பி.க்கள் மீதும் உளவுத்துறையின் கொரோனா கண்காணிப்பு இருந்ததே?''

""ஆமாங்க தலைவரே, ராஜஸ்தான் மாஜி முதல்வரான வசுந்தரராஜே சிந்தியாவின் மகனான துஷ்யந்த்சிங், இப்ப எம்.பி.யாக இருக்கார். பாடகி கனிகா கபூரின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துக்கிட்டாரு. கனிகா கபூருக்கு கொரோனாத் தொற்று பாசிட்டிவ்னு வந்ததால், துஷ்யந்த் தன்னைத் தனிமைப்படுத்திக்கிட்டார். தொற்று உறுதி செய்யப்படாத சூழலில் அவர் நாடாளுமன்றக் கூட்டத்திலும், அங்குள்ள நிலைக்குழு கூட்டத்திலும் கலந்துக்கிட்டார். அந்தக் கூட்டங்களில் அவருக்கு அருகில் இருந்த எம்.பி.க்கள் பலரையும் மத்திய உளவுத்துறை கண்காணிக்கிது. நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தின்போது துஷ்யந்துடன் இருந்த தமிழக எம்.பி. ஒருவர் இன்னமும் பயம் விலகாமத் தான் இருக்கார். அதேபோல, துஷ்யந்த் சிங்குக்கு தமிழக எம்.பி. ஒருவர் தன் வீட்டில் விருந்து கொடுத்திருக்கார். அவரும் மிரட்சியில் இருந்தார். இவங்களுக் கெல்லாம் பாதிப்பு இருக்கான்னு ரகசியமா உளவுத்துறை மூலம் கண்காணிச்சிது மத்திய அரசு. அவங்களுக்குத் தொற்று இல் லைன்னு தெரிஞ் சதும் டெல்லி, நிம்மதியடைஞ் சிருக்கு.''

""திவாகரன் மகன் ஜெய் ஆனந்தத்தின் திருமணம் போன மாசம்தான் நடந்துச்சு. திருமணம் முடிஞ்ச கையோட, இந்தப் புதுமணத் தம்பதிகள், ஹனிமூனுக்காக ஐரோப்பிய நாடுகளுக்குப் போறதுக்கான பயண ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. ஆனா, கொரோனா பீதியால், ஹனிமூன் டூரை மறந்துட்டு அந்தத் தம்பதிகள், இப்போ வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்குறாங்களாம்.

""சொர்க்கமே என்றாலும் அது நம் வீடு போல வருமான்னு நினைச்சிக்க வேண்டியதுதான். கொரோனா காலம் முடிந்ததும் உலகையே சுற்றி வரலாமே.''

""நான் ஒரு தகவல் சொல்றேன்.. தெலங்கானா, ஒடிசா, மத்தியபிரதேசம், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட பல மாநில முதல்வர்களும் பிரதமருடனான ஆலோசனையில் ஊரடங்கு நீட்டிப்பு பற்றி அழுத்தமா எடுத்துச் சொன்னாங்க. ஆனா, அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் ஊரடங்கு பற்றி அழுத்தம் கொடுக்கப்படலை. தமிழகத்துக்கான நிதி குறித்து, தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு கொடுத்த அழுத்தத்தைக்கூட அ.தி.மு.க. சைடில் கொடுக்கலை. மத்திய அரசு சொல்றபடி நடந்துக்குவோம் என்பது மட்டும்தான் எடப்பாடியின் நிலையாக உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு ஊரடங்கை நீடித்தால் நாமும் உடனே 144ஐ நீடிக்கலாம்னு முதல் வரிடம் டி.ஜி.பி. திரிபாதி முன் கூட்டியே சொல் லிட்டாரு.''