"ஹலோ தலைவரே, தெலுங்கானா கவர்னரான தமிழிசை தமிழ்நாட்டுக்கும் வந்துட்டுப் போயிட்டாரு. ஆனா, அவர் வகித்த தமிழ்நாடு பா.ஜ.க.வுக்கு தலைவரை நியமிக்க முடியலையே?''’

""பல பெயர்கள் அடிபட்டும், யாரும் செலக்ட் ஆகலையா?''’

bbb""பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா உள்பட மேலிடத்தில் 3 முறை ஆலோ சனை நடத்தியும் தமிழ்நாட்டில் பொருத்தமான ஆள் கிடைக்கலையாம். பதவி கேட்டு யாரும் டெல்லிக்கு வரவேணாம்னும் சொல்லிட்டாங்க. இருந்தும் பலரும் பதவிக்கு முண்டியடிக்கிறாங்க. இதில் நயினார் நாகேந்திரனுக்கு அந்தப் பதவியை வாங்கிக் கொடுக்கணும்னு வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன் டெல்லி வரை மல்லுக்கட்டியிருக்காரு. இதை கவனிச்ச பா.ஜ.க. தலைமை, வைகுண்டராஜனுக்கும் நயினாருக்கும் என்ன தொடர்பு? பிசினஸ் கூட்டாளிகளா, முறைகேடுகளில் தொடர்பான்னு தோண்டித் துருவ ஆரம்பிச்சிருக்கு.''jjj

""ஓ''’

Advertisment

""இன்னொரு சிக்கலும் அவரைத் துரத்துது. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியா இருந்த தகில்ரமானி, இடமாற்றல் பிரச்சினையால் தன் பதவியை ராஜினாமா செய்தார். இவர், சிலைக்கடத்தல் வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்டிருந்த நீதிபதி மகாதேவன் தலைமையிலான அமர்வைக் கலைத்தது ஏற்கனவே சர்ச்சையை உருவாக்குச்சு. அந்த சமயத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம், தகில் ரமானியை அடிக்கடி சந்திச்சிப் பேசினாராம். இதுதொடர்பாக நீதிபதிகள் தொடர்பான விவகாரங்களை கவனிக்கும் கொலீஜியத்துக்கு, உளவுத்துறை 5 பக்க ரிப்போர்ட்டை அனுப்பியிருக்கு. தகில்ரமானி தலா 3.8 கோடி ரூபாய்க்கு வாங்கிய இரண்டு குடியிருப்புகள் குறித்தும் சில விபரங்கள் சொல்லப்பட்டிருக்கிறதாம். இதிலும் அமைச்சருக்கு நெருக்கடின்னு டெல்லியிலிருந்து சொல்றாங்க.''’

""இடைத்தேர்தல் களம் எப்படி இருக்குது?''’

""காஞ்சிபுரத்துக்காரரான ரூபி மனோகரனுக்கு நாங்குநேரியில் சீட் கொடுத்ததில் தென்மாவட்ட காங்கிரஸ் தரப்பு அப்செட்டிலேயே இருக்கு. கட்சியின் பெரிய தலைகளை ’வெயிட்டா’ கவனிச்சி, ரூபி சீட் வாங்கிட்டாருன்னு புகார்க் கடிதங்களை ராகுல்காந்திக்கு mmmஅனுப்பிக்கிட்டே இருக்கு. ஆனால் ரூபியோ, பிரச்சாரத்துக்கு ராகுல் வந்தா நிலைமை சரியாயிடும்ன்னு அவரை அழைக்க பெரிய பட்ஜெட்டே போட்டிருக்காராம். சொந்தக் கட்சிக்கரங்களே சும்மா இருக்கும் போது, நாம எதுக்கு வெட்டியா வேலை பார்க்கணும்ங்கிற மனநிலையில் தி.மு.க. உடன்பிறப்புகளும் ஒதுங்கி நிக்கிறாங்களாம்.''’

Advertisment

""நாங்குநேரியில் தி.மு.க. நின்னிருந்தா உடன்பிறப்புகள் வேகம் காட்டியிருப்பாங்களே?''’

""இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பு, நாங்குநேரி நிலவரம் பற்றி தி.மு.க. தரப்பு எடுத்த சர்வேயில், தி.மு.க.வுக்கு அமோக ஆதரவு இருந்திருக்கு. காங்கிரஸுக்கு தொகுதி ஒதுக்கப் பட்ட பிறகு எடுத்த சர்வேயின் முடிவு, ரொம்ப வீக்கா இருந்திருக்கு. இதில் அதிர்ச்சியான அறிவாலயம், நாம நின்னிருந்தா ஜெயிச்சிருக்க லாமேன்னு ஆதங்கப்படுதாம். அதனால் விக்கிர வாண்டியில் முழு பலத்தையும் காட்டியாகணும்னு வேலை செய்யுது. அங்கே அமைச்சர் சி.வி. சண்முகம் அ.தி.மு.க. வேட்பாளருக்காக ஸ்கெட்ச் போட்டு வேலை செய்றாரு.''

""அரிசி கடத்தலைத் தடுப்பதில் சிவில் சப்ளைஸ் போலீசாரின் வேகம் கூடியிருக்குதே?''

""அதைப்பற்றி நான் சொல்றேன்... ரெண்டு நாளைக்கு முன்ன, ஆந்திராவுக்கு அரிசி மூட்டைகளை லாரியில் கடத்திச் சென்ற மாணவர் விடுதி வார்டன்கள் மூணுபேரை திருவண்ணா மலை போலீஸ் மடக்குச்சு. விசாரணையில், ஹாஸ்டல் மாணவர்களைப் பட்டினி போட்டுட்டு, அவங்களுக்கான அரிசி உள்ளிட்ட பொருட்களை கடத்திக்கொண்டு போய் விற்று வருவதும், இதற்குத் தோதா இவர்கள் ’எஸ்.வி. ஹாஸ்டல் வார்டன் சங்கம்’ன்னு திருவள்ளூரை மையமா வச்சி ஒரு சங்கத்தை நடத்திவருவதும் தெரிய வந்திருக்கு. இந்தக் கடத்தல் கும்பலின் தலைவரா செயல்படறது யாருன்னு விசாரிச்ச போலீஸ் டீம், திகைச்சுப் போயிருக்கு. காரணம் அந்த நபர் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமியிடம் பி.ஏ.வாக இருக்கிறாராம்.''’

""பி.ஏ.வின் பின்னணி என்னவாம்?''

""பெண் அமைச்சரை பின்னணியில் இருந்து இயக்குவதே அவரது கணவர் முருகனும், மாமனார் வேலுச்சாமியும்தானாம். அதனால அவங்க உத்தரவுப்படிதான் பி.ஏ. தரப்பும் செயல்படுது. ஹாஸ்டல் மாணவர்களின் சாப்பாட்டு அரிசியைக் கடத்துவதிலிருந்து துறைரீதியான பல மோசடி களிலும் பெண் அமைச்சர் குடும்பம் படுஸ்பீடா இருக்குது. அரிசிக் கடத்தலில் அமைச்சர் பி.ஏ. பெயர் வெளியானதுமே உயரதிகாரிகள் மூலம் பிரஷர் கொடுத்து, பிடிபட்டவங்களை தப்ப வச்சிட்டாங்க.''

""நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தன் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவை நிறுத்தியிருக்காரு ராஜபக்சே. இப்ப அவருக்கு செக்வைக்கும் விதமா, இலங்கையின் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தைச் சேர்ந்த காமினி என்பவர், கோத்தபய நிற்கக்கூடாதுன்னு வழக்குப் போட்டிருக்கார். அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற கோத்தபய, அதை ரத்துசெய்ததா அதிகரப்பூர்வ அறிவிப்பு வரலை. அதனால் இலங்கையின் பிரஜையாக இல்லாத அவரைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாதுன்னு அதில் சொல்லியிருக்கார். இதில் நொந்துபோன ராஜபக்சே, இது தொடர் பாக தன் வழக்கறிஞர் களுடன் கவலையோடு ஆலோசனை செய்துக்கிட்டி ருக்காராம்.''’