"ஹலோ தலைவரே, முதல்வர் எடப்பாடி, நடிகர்களை விமர்சித்துக் கொடுத்த பேட்டிக்கு பல திசையி லிருந்தும் கண்டனம் வந்துக்கிட்டே இருக்கு.''’’
""ஆமாம்பா, கமலை அட்டாக் பண்ண நினைச்சி எடப்பாடி, தங்கள் தலைவியின் தலைவரையே கிண்டல் பண்ணியது போல ஆயிடிச்சே?''’’
""உண்மைதாங்க தலைவரே, சேலம் மாவட்ட ஓமலூரில் செய்தியாளர் களிடம் பேசிய எடப்பாடி, நடிகர் கமலை ஏகத்துக்கும் போட்டுத் தாக்கினார். நடிகர்களுக்கு வய தானால் அரசியலுக்கு வந்துவிடு கிறார்கள். தங்கள் சினிமா செல்வாக்கை வைத்து தலைவர் களா ஆயிடணும்ன்னு நினைக் கிறார்கள். ஆனால் அரசியலுக்கு வரும் நடிகர்கள் எல்லோரும் நடிகர் சிவாஜியைப் போலத்தான் ஆவார் கள்னு கிண்டலா சொன்னதோட, கமலுக்கு அரசியலைப் பற்றி என்ன தெரியும்ன்னு நேரடியாவே அட்டாக் கொடுத்தார். முதல்வரின் இந்த விமர்சனம், கமல், ரஜினி ரசிகர்களை மட்டுமல்லாது சிவாஜி ரசிகர் களையும் ஏகத்துக்கும் சூடாக்கிடுச்சி. முதல்வருக்கு பதிலடி கொடுக்க வரிஞ்சி கட்டிய சிவாஜி சமூக இலக்கிய பேரவையினர், காங்கிர ஸோடு அ.தி.மு.க. கூட்டு வைத் திருந்தபோது, அ.தி.மு.க.வினரின் வெற்றிக்காக சிவாஜி, தமிழகம் முழுதும் பிரச்சாரம் செய்தாரே, அதை மறந்து விட்டீர்களா? நடிகர்கள் வயதானால் அரசியலுக்கு வந்துவிடுகிறார்கள் என்று எடப்பாடி சொன்னது அவர்களின் தலைவர் எம்.ஜி.ஆருக்கும் பொருந்துமான்னு கேட்டு அவரை ஏகத்துக்கும் காய்ச்ச ஆரம்பிச்சிட் டாங்க. இப்படிப் பல பக்கமிருந்தும் அட்டாக் வரத்தொடங்கியதால், வாயக் கொடுத்து புண்ணாக்கிக்கற கதையாயிடிச்சேன்னு எடப்பாடி நொந்து போயிட் டாராம்.''’’
""இந்தக் குழப்படிக்கு நடுவில், தமிழக அரசியலில் நிலவும் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்ன்னு மு.க.அழகிரி, போற போக்கில் ஒரு பரபரப்புக் குண்டை வீசியிருக்காரே?''’’
""ஆமாங்க தலைவரே, கலைஞர் இறந்த சமயம், தமிழகத்தில் நல்ல தலைவர்களுக்கு வெற்றிடம் ஏற்பட்டிருக்குன்னு முதல்ல பேசியவர் ரஜினிதான். அதுக்கு கலைஞர் பிறந்தநாள் விழாவிலேயே, பதில் கொடுத்த மு.க.ஸ்டாலின், கலைஞரின் வெற்றிடத்தை நிரப்ப நான் இருக்கேன்னு அழுத்தம் திருத்தமா சொன் னார். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய அளவில் வெற்றியும் பெற்றது. ஆனாலும் ரஜினி, அண்மையில் தன் போயஸ் தோட்ட வீட்டில் நிருபர் களிடம் பேசியபோதும், இன்னும் அந்த வெற்றிடம் நிரப்பப்படாமலே இருக்குன்னு அதே கருத்தை ரிபீட் அடிச்சார். அப்படி எந்த வெற்றிடமும் இல்லைன்னு அவருக்கு முதல்வர் எடப்பாடி உள்ளிட்டோர் பதில் சொன்ன நிலையில்தான், 13-ந் தேதி சென்னை ஏர்போர்ட் டில் நிருபர்களின் பார்வையில் சிக்கிய மு.க.அழகிரி, அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்ன்னு மார்தட்டிட்டுப் போனார். அதே நேரத்தில், ரஜினி கட்சி ஆரம்பிச்சா நீங்க சேருவீர்களான்னு கேட்டதுக்கு அழகிரி எந்த பதிலும் சொல்லலை. ரஜினியைப் பொறுத்தவரை, புதிய அரசியல் கட்சியைத் தொடங்கும் முடிவை தள்ளிவச்சிக்கிட்டே போறார். காரணம், அவரைக் குறிவைக்கும் பா.ஜ.க.தான் அவரைப் புதுக்கட்சியைத் தொடங்காமல், தங்கள் கட்சியில் எப்படியாவது இணையணும்னு நிர்பந்தங்களைக் கொடுத்து அவரைக் குழப்பியடிக்கிது.''’’
""எனக்கும் திருவள்ளுவருக்கும் பா.ஜ.க. காவி சாயத்தைப் பூச நினைக்கிது. ஆனால் நானும் சிக்கமாட்டேன். திருவள்ளுவரும் சிக்கமாட்டார்ன்னு அதிரடியா சொன்ன ரஜினி, அடுத்த ஒரு மணி நேரத்தில் மீடியாக்கள்தான் காரணம்னு சொல்லிட்டாரே?''’’
""இதுக்கும் பா.ஜ.க.தரப்பின் நிர்பந்தம்தான் காரணங்க தலைவரே, டெல்லி பா.ஜ.க. தலைமை, தொடர்ந்து பலர் மூலம் அவரை பா.ஜ.க.வில் சேரச் சொல்லி நிர்பந்தம் கொடுக்குது. அமித்ஷா பேசிப் பார்த்தும் ரஜினி பிடி கொடுக்காமல் நழுவினார். அடுத்து ரஜினியின் நெருங்கிய நண்பர்கள் வட்டம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மூலம் பிரஷர் கொடுக்கப்பட்டும் பா.ஜ.க.வில் ஐக்கியமாகும் எண்ணத்துக்கு ரஜினி வரலை. அதுக்குக் காரணம், வேறு யாருமல்ல, கமல்தான்.''’’
""என்னப்பா சொல்றே?''’’
""உண்மைதாங்க தலைவரே, இதே பா.ஜ.க. கமலையும் ஆரம்பத்தில் குறிவச்சிது. ஆனால் கமலோ, தமிழகத்தின் தட்பவெப்ப நிலையைப் புரிஞ்சவர் என்பதால், பா.ஜ.க. வின் கிடுக்கிப் பிடியில் இருந்து நழுவிட்டார். அடுத்துதான் ரஜினியை பா.ஜ.க. குறி வச்சிது. முதலில் ரஜினியும் பா.ஜ.க. இழுத்த இழுப்புக்கெல்லாம் போக ஆரம்பிச்சார். இதைப் பார்த்த கமல், ரஜினியிடம் தனிப் பட்ட முறையில் பழைய நட்போடு பேசி யிருக்கார். தமிழகத்தில் மதவாதத்தை மையமா வச்சி எந்தக் காலத்திலும் யாரும் அரசியல் பண்ண முடியாது. ஏன்னா, இது பெரியார் பூமி. அதனால் அவங்க வலையில் எந்த வகையிலும் சிக்கிடாதீங்கன்னு கமல் திரும்பத் திரும்ப அறிவுறுத்தி இருக்கார். மேலும், முடிந்தால் நல்ல நண்பர்களான நாம் எதிர்காலத்தில் அரசியலில் கைகோக்க முயல்வோம். மக்களுக்கு துவேஷம் இல்லாத ஒரு புதுமாதிரி அரசியலை அறிமுகப்படுத்து வோம். அதனால் எக்காரணம் கொண்டும் நாம் மதவாத சக்திகளோட ஐக்கியமாயிடக் கூடாதுன்னு சொல்லியிருக்கார்.''
""ஓ...''
""அண்மையில், ராஜ்கமல் படத் தயாரிப்பு அலுவலகத்தில் பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவின் போதும், ரஜினி யிடம் இதே கருத்தை கமல் வலியுறுத்தி இருக்கார். ரஜினியும் இதைத் தெளிவா புரிஞ்சிக்கிட்ட தால்தான், பா.ஜ.க. என்மேல் காவிச் சாயம் பூசப் பார்க்குது. நான் சிக்க மாட்டேன்னு போல்டா சொன் னார். ஆனால், பா.ஜ.க.வோ, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் சிலர் மூலம், ரஜினியின் குடும்ப உறுப்பினர்களிடம் பேசி, ரஜினிக்கு மெசேஜ் பாஸ் செய்தது. அதனால்தான் அவர், காவி சாயத்தை மீடியாவினர் என்மேல் பூச நினைக்கிறாங்கன்னு மழுப்பலா சொல்லி, பல்டி அடிச்சார். ஆனாலும் கமலுடன் நடத்திய ரகசிய ஆலோசனையில் புது வியூகம் வகுத்த ரஜினி, பா.ஜ.க.வில் எந்தக் காலத்திலும் இணைவதில்லை என்பதில் உறுதியாகவே இருக்கார். இதை அவருடைய நெருங்கிய நண்பர்களும் உறுதிப்படுத்தறாங்க.''’’
""தமிழகத்தில் எதையாவது செய்து ஆட்சி பீடத்தில் ஏறியே தீரணும்னு நினைக்கும் பா.ஜ.க., இன்னொரு பக்கம் இங்க இருக்கும் எல்லா அரசியல் கட்சியையும் மிரட்டித் தன் முன்னால் கையக்கட்டி உட்காரவைக்கத் திட்டமிடுது போலிருக்கே?''’’
""அதுவும் உண்மைதாங்க தலைவரே, தன் தோழமைக் கட்சிகளை மட்டுமல்லாது, தன் அரசியல் எதிரிகளையும் தன்வசம் உள்ள பவர்ஃபுல் புலனாய்வு அமைப்புகள் மூலம் அடக்கி ஆளப்பார்க்குது பா.ஜ.க. அதேபோல் மத்திய நிதி அமைச்சரா நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்ற தும், வருமான வரித்துறை தீவிரமா முடுக்கிவிடப் பட்டிருக்கு. அண்மையில் அமைச்சர் செங்கோட் டையனின் பினாமியான சிறுமுகை சுப்பிர மணியன் அசோக்குமார் என்பவரை மடக்கியது வருமான வரித்துறை. இவர் அன்னை இன்பரா டெவலப்பர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரை ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு வழக்கில் கைது செய்த வருமான வரித்துறை, அவர் தொடர்பான இடங்களில் ரெய்டை நடத்தி, அவர் வெளிநாடுகளில் 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் செய்திருப்பதைக் கண்டுபிடித்து, ஆளும்கட்சித் தரப்புக்கே பகீரூட்டி இருக்கு. இதேபோல் சசிகலா தரப்பின் 9 போலி கம்பெனிகளைக் கண்டுபிடித்து ஏறத்தாழ 1600 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கி வைத்து, அந்தந் தரப்புக்கும் ஷாக் கொடுத்திருக்கு.''’’’
""மற்ற கட்சிகளையும் விட்டு வச்சிருக்க மாட்டாங்களே?''’’
""தமிழகத்தின் பிரதான எதிர்க் கட்சியான தி.மு.க.வையும் இது விட்டுவைக்க வில்லை. அண்மையில் முன்னாள் மத்திய அமைச்சரான ஜெகம் புகழும் பெயர் கொண்டவரின் கல்வி நிறுவனங்களில் ரெய்டு நடத்தி, 200 கோடி ரூபாய்க்கான முறைகேடுகளைக் கண்டுபிடித்த தோடு, கணக்கில் வராத 20 கோடி ரொக்கத்தையும் கைப்பற்றினர். அந்த மாஜி மந்திரியோ, தனக்குத் தெரிந்த ஒரு மருத்துவர் மூலம், வருமான வரித்துறையைச் சேர்ந்த ஒரு முன்னாள் அதிகாரிக்கு 20 ’சி’ வரை மொய் எழுதி, சிக்கலில் இருந்து தப்பிக்கும் போராட்டத்தில் இருக்கிறார். ஆனால் டெல்லி பா.ஜ.க. தரப்பின் கவனத்துக்கு இது போக, மாஜியை விட்றாதீங்க என கறார்க்குரலில் சொல்லியிருக்கிறதாம்.''’’
""கட்சித் தலைமைக்கும் செக் வைக்க ப்ளான் இருக்குமே?''’’
""ஆமாங்க தலைவரே, மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசனைத்தான் முதலில் கண்காணித்தார்கள். சபரீசனோடு படித்து இப்போது நட்பில் இருப்பதா சொல்லப்படும் சர்வேஸ் என்ற காவல்துறை அதிகாரியை மத்திய புலனாய்வு அமைப்புக்கு அழைத்துக் கொண்டது டெல்லி. பின்னர் சபரீசனின் ஓ.எம்.ஜி. குரூப்பில் இருந்த சர்வேஸின் தம்பியை அள்ளிக்கொண்டு சென்றது அதிகாரிகள் டீம். சித்தரஞ்சன் சாலை பணம், மாஜி மந்திரி எ.வ.வேலு மூலம் வெவ்வேறு வகைகளில் முதலீடு செய்யப்படுகிறதாமே? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி அவரைத் துருவிக்கொண்டு இருக்கிறார்களாம். இப்படி எதையாவது ஒரு அதிகார ஆயுதத்தைக் கையில் வைத்துக்கொண்டு தி.மு.க. தரப்பையும், தன் விருப்பம் போல் ஆட்டிவைப்பதுதான் பா.ஜ.க.வின் திட்டமாம். இதேபோல் ஐ.என்.எக்ஸ். நிறுவன விவகாரத்தில் கைதான காங்கிரஸ் மாஜி மந்திய மந்திரி ப.சிதம்பரத்தை, அந்த வழக்கில் அவர் பெயில் பெற்றதைத் தொடர்ந்து, அமலாக்கப் பிரிவின் மூலம் சொத்துக்குவிப்பு வழக்கை தீவிரமாக்கி, அவரை ரொம்பவே நோகடித்து வருகிறது டெல்லி. திகார் வாசற்படியைக் கூட மிதித்து விடக் கூடாது என ஆரம்பத்தில் போக்குக்காட்டிய ப.சி.யை, ஏறத்தாழ நிரந்தர திகார் வாசியாகவே வைத்துக்கொள்ள நினைக்கிறதாம் டெல்லி. இப்படி எல்லோரையும் தன் அதிகார அங்குசத்தைக் காட்டிக் காட்டியே அடக்கி வைப்பதுதான் பா.ஜ.க.வின் மாஸ்டர் வியூகமாம்.''’’
""எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கூட எதிர்த்துக் குரல் கொடுக்கக் கூடாதுன்னு டெல்லி நினைக்குதே?''’’
""உண்மைதாங்க தலைவரே, ’நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் பா.ஜ.க.வுக்கு பலம் பெருகிடிச்சி. வரும் 18-ந்தேதி கூடும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரைக் கூட, எந்தவித அமளியும் இல்லாமல் அமைதியா நடத்தணும்னு பிரதமர் மோடி நினைக்கிறாராம். அரசைக் கடுமையாக விமர்சித்து யாராவது குரல் கொடுத்தால், அவர்கள் மீது சபாநாயக ரின் நடவடிக்கை பாயுமாம். இதேபோல், ராஜ்யசபாவில் எதிர்த்துக் குரல் கொடுக்கும் உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்யும் அதி காரம், ராஜ்யசபா தலைவரான தனக்கும் வேணும்ன்னு நினைக்கிறாராம் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு. அதனால், அதற்கு வழிவகை செய்யும் அக்னிஹோத்ரி கமிட்டியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தலாமா?ன்னு பிரதமர் மோடியுடன் ஆலோசித்து வருகிறாராம் வெங்கையா.''’
""நானும் ஒரு முக்கியத் தகவலைச் சொல்றேம்பா. உள்ளாட்சித் தேர்தல் வரப்போகுது என்றதும், ஆளும்கட்சிப் பெரும்புள்ளிகள் பலரும், சீட் வாங்கித் தர்றேன்னு சொல்லி, இப்பவே விறுவிறுப்பா கல்லா கட்ட ஆரம்பிச்சிட்டாங்களாம். குறிப்பா சென்னையில் இருக்கும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வான தி.நகர் சத்யாவின் அலு வலகத்தில் இதுக்காக ஒரு நீண்ட கியூவே நிக்கிதாம். இதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்ட முதல்வர் எடப்பாடி, இப்படி எல்லாம் நம்ம ஆளுங்க வசூல் பண்ணிப் பேரைக் கெடுத்துக் கிட்டாங்கன்னா, எப்படிய்யா சட்டமன்றத் தேர்தலை நம்மால எதிர்கொள்ள முடியும்? பேசாம யாராவது வழக்கு போட்டுத் தேர்தலுக்கு ஸ்டே வாங்கினா, நாமும் நிம்மதியா நம்ம பொழப்ப பார்க்கலாம்ன்னு புலம்பறாராம்''’
___________
இறுதிச்சுற்று
யாருக்காக?
"வன்னியர் குரு' என அச்சமூகத்தினரால் அழைக்கப்பட்ட வர் ஏ.கே.நடராஜன். வன்னியர்களின் நலன்களுக்காகவும் உரிமைகளுக் காகவும் பாடுபட்டவர். வன்னியர்கள் மத்தியில் ராமதாசின் வளர்ச்சிக்கு உரமாக இருந்தவர். தமிழக அரசியல்கட்சிகளின் தலைவர்கள் பலருக்கும் ஏ.கே.நடராஜன் மீது மரியாதையும் மதிப்பும் உண்டு. சென்னை தி.நகரில் வசித்துவந்த அவர் கடந்த 10-ந்தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவர் காலமானதை தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைமைக்கு உடனடியாக தகவல் தந்தார் ஏ.கே.நடராஜனின் நம்பிக்கைக் குரியவராக இருந்த கண்ணன் சத்ரியர். தி.மு.க. பொதுக்குழுவில் பிஸியாக இருந்தபோதும் தகவல் அறிந்து உடனடியாக இரங் கல் அறிக்கை வெளி யிட்ட தி.மு.க. தலைவர் ஸ்டாலின், பொதுக்குழு முடிந்ததும் ஜெகத்ரட்ச கன் எம்.பி., எம்.எல். ஏ.க்கள் பொன்முடி, ஜெ.அன்பழகன் உள் ளிட்ட தி.மு.க.வினர் சகிதம் சென்று ஏ.கே.நடராஜனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி னார். பா.ஜ.க. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ் ணன் தொடங்கி பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல். ஏ.க்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத் தினர். ஆனால், இரங்கல் அறிக்கை தரக்கூட யோசித்தார் எடப்பாடி.
ஸ்டாலின் அறிக்கை தந்திருப்ப துடன் நேரிலும் செல்கிறார் என அறிந்ததும், வன்னியர்களின் அதிருப்தியை எதிர்கொள்ள நேரிடும் என சொல்லப்பட்டதன் பேரிலும் கடைசியில் இரங்கல் அறிக்கை தந்த எடப்பாடி, நேரில் சென்று அஞ்சலி செலுத்த மறுத்துவிட்டார். இது குறித்து நம்மிடம் பேசிய அ.தி. மு.க.வினர், ""தன்னை வளர்த்த ஏ.கே. நடராஜனுக்கு அஞ்சலி செலுத்த நேரில் செல்லவில்லை ராமதாஸ். அதனையறிந்தே எடப்பாடியும் செல்ல வில்லை. ராமதாசுக்காக வன்னியர் தலைவரை எடப்பாடி புறக்கணித் துள்ளதன் பலன் உள்ளாட்சித் தேர்தலில் தெரியும்'' என்கிறார்கள்.
-இளையர்