"ஹலோ தலைவரே, தி.மு.க. சின்னத்தில் வெற்றி பெற்ற அதன் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் நான்கு பேரின் பதவியைப் பறிக்கணும்னு உயர் நீதி மன்றத்தில் போடப்பட்டிருக்கும் பொதுநல வழக்கு பரபரப்பை ஏற்படுத்திக்கிட்டு இருக்கு''’

""ஆமாம்பா, நானும் பார்த்தேன். கொஞ்சம் விபரமா சொல்லு.''’

444

Advertisment

""நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற கூட்டணிக் கட்சிகளின் பிரமுகர்களான ம.தி. மு.க. கணேசமூர்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் ரவிக்குமார், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சின்ராஜ், இந்திய ஜன நாயகக் கட்சி பாரிவேந்தர் ஆகியோர் தி.மு.க.வின் சின்ன மான உதயசூரியன் சின்னத்திலேயே நின்னு வெற்றி பெற்றிருக்காங்க. அதனால் இவங்களோட எம்.பி. பதவியைப் பறிக்கணும்னு ’தேசிய மக்கள் சக்திங்கிற பெயரில் கட்சி நடத்தும் ரவிங்கிறவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கைத் தொடர்ந்திருக்கார். தேர்தல் நடத்தை விதிகளின்படி ஒரு கட்சியில் உறுப்பினராக இருப்பவர்கள், மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது. அப்படிப் போட்டியிட்டது சட்ட விரோதம்னு சொல்லி யிருக்கார். இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சனோ, இவர்களின் வேட்பு மனுவைத் தேர்தல் அதிகாரிகள்தான் சரிபார்த்து ஏற்றுக் கொண்டார்கள். அது அவர்களின் சுயமுடிவாகும். அதனால் இதைத் தேர்தல் வழக்காகத்தான் கருதவேண்டும். எனவே பொதுநல வழக்காகத் தாக்கல் செய்யப் பட்ட இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யணும்னு வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதியரசர்கள் எம்.சத்தியநாரா யணா, என்.சேஷசாயி அமர்வோ, வழக்கைத் தள்ளுபடி செய்ய மறுத்து சம்பந்தப்பட்ட எம்.பி.க்களுக்கும் தி.மு.க. தலைமைக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கு.''’

""சம்பந்தப்பட்ட எம்.பி.க்கள் என்ன சொல்றாங்க?''’

""ரவிக்குமார் எம்.பி.யிடம் இது பத்தி நாம் கேட்டபோது, "தேர்தல் விதிமுறைப்படியே நாங்கள் நால்வரும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருக் கிறோம். எங்கள் மனுவிலோ வெற்றி யிலோ எந்தக் குளறுபடியும் இல் லை'ன்னு சொல்றார். தி.மு.க. சீனியர்கள் தரப்பில் கேட்டபோது, "ரவிக்குமார் உட்பட இந்த நான்கு பேரும் முறைப் படி தி.மு.க.வில் உறுப்பினர் கார்டைப் பெற்றுத்தான் தேர்தலிலே நின்றார்கள். இப்படியெல்லாம் வழக்கு வரும்னு தெரிஞ்சிதான் எங்கள் கட்சித் தலைமை முன்கூட்டியே கவனமாக செயல்பட்டது' என்கிறார்கள். இந்த வழக்கில் அதிரடித் தீர்ப்பு வருமானால், அது சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வின் இலைச் சின்னத் தில் போட்டியிட்ட தமீமுன் அன்சாரி, நடிகர் கருணாஸ், தனியரசு ஆகியோருக்கும் சிக்கலை ஏற்படுத்தும்னு ஒரு சிலர் இப்பவே சொல்றாங்க. ஆனால் அந்த மூவர் தரப்போ, "என்ன தீர்ப்பு வேணும்னாலும் வரட்டும். இறுதி முடிவெடுக்க வேண்டியவர் சபாநாயகர்தானே'ன்னு சொல்லுது. எது எப்படியோ, இந்த வழக்கின் தீர்ப்பு அரசியல் களத்தில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தப்போகுது''’

Advertisment

""எடப்பாடி அரசு உள்ளாட்சித் தேர்தலுக்கு ரெடியாகுற மாதிரி தெரியுதே?''’

vv

""உண்மைதாங்க தலைவரே, உள்ளாட்சித் தேர்தலை ஏன் நடத்தலைன்னு உயர்நீதி மன்றத்திடம் பலமுறை கடுமையாகக் குட்டு வாங்கியதோடு, இனி தேர்தலை நடத்தாமல் தப்பிக்க முடியாதுங்கிற அளவுக்கு உச்சநீதி மன்றத்தின் கிடுக்கிப் பிடியில் எடப்பாடி அரசு, சிக்கிக்கொண்டதால்தான், நவம்பர்ல தேர்தலை நடத்திடலாம்ங்கிற முடிவுக்கு வந்திருக்கு. அதனால் தேர்தல் அலுவலர்களையும் அதிகாரிகளையும் அங்கங்கே நியமிக்க ஆரம்பியுங்கள்னு மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநிலத் தேர்தல் ஆணையமும் உத்தரவு போட்டிருக்கு. எடப்பாடியும், வாக்காளர்களை சரிபார்த்து, ஒரு அ.தி.மு.க. ஓட்டரைக் கூட விட்டுவிடாமல் வாக்காளர் பட்டியல்ல சேர்க்கணும்னு கட்சியினரை உசுப்பிவிட்டிருக்கார். இந்த நிலையில் எடப்பாடி தரப்புக்கும் ஓ.பி.எஸ். தரப்புக்கும் உள்ளாட்சியில் எத்தனை பர்சன்ட் சீட்டுங்கிற டீலும் சுமுகமா நடந்திருக்குதாம். அந்த மகிழ்ச்சியில்தான் ஓ.பி.எஸ்., என்னையும் எடப்பாடியையும் யாராலும் பிரிக்க முடியாதுன்னு அறிக்கை வெளியிட்டிருக்கார். டீலிங்படி சீட் ஷேரிங் நடக்குமா என்பதைப் பொறுத்துத்தான் இவங்க நட்பும் ஒற்றுமையும் இருக்கும்ன்னு அ.தி.மு.க.வின் சீனியர்கள் நமட்டுச் சிரிப்போடு சொல்றாங்க''’

""காங்கிரசிலும் உள்ளாட்சித் தேர்தல் குறித்த டாக் ஆரம்பிச்சிடுச்சாமே?''’’

""ஆமாங்க தலைவரே, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, வரும் அக்டோபர் 2-ந் தேதி காந்தியடிகளின் 150 ஆவது பிறந்த நாளை ஒவ்வொரு மாநிலத்திலும் விமரிசையா கொண்டாட ணும்னு மாநிலத் தலைமைகளுக்கு கடிதம் அனுப்புச்சு. இதைத் தொடர்ந்து கடந்த 17-ந் தேதி கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்களின் அவசர ஆலோசனைக் கூட் டத்தை மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரான கே.எஸ்.அழகிரி கூட்டினார். இதில் அகில இந்திய காங்கிரஸ் சார்பில், முகுல் வாஸ்னிக்கும், சஞ்சய்தத்தும் கூடக் கலந்துகிட்டாங்க. இதில் பேசிய முன்னாள் மாநில தலைவர்கள் உள்ளாட்சித் தேர்தல் குறித்துத் தங்கள் அதிரடிக் கருத்துக்களை வச்சாங்க. குறிப்பா தங்க பாலு, "உள்ளாட்சித் தேர்தலில் போனமுறை நம் கூட்டணிக் கட்சியான தி.மு.க.விடம் இருந்து 35 சதவிகித சீட்டை வாங்கி நாம் களமிறங்கினோம். இந்த முறையும் அதுக் குக் குறைவில்லாமல் தி.மு.க.விடமிருந்து சீட்டை வாங்கணும்'னு சொன்னார். இதையே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவ னும் வழிமொழிஞ்சி பேசினார். திருநாவுக் கரசரோ, "அதுமட்டு மில்லாமல் நாங்குனேரி இடைத் தேர்தலிலும் காங்கிரஸ்தான் நிற்கணும். அதனால் தி.மு.க.விடம் அந்த தொகுதியைக் கேட்டு வாங்கணும்'னு அழுத் தம் கொடுத்தார். இதைக்கேட்ட அழகிரி, "ஏற்கனவே தி.மு.க.விடம் நாம் நாங்குனேரியைக் கேட்டிருக்கிறோம். இதை எதுக்குப் பொதுவெளி யில் சொல்லணும்னுதான் அமைதியாக இருந் தேன்'னு சொன்னார். ஆனா கூட்டத்தில் கலந்து கிட்ட மாவட்டத் தலைவர்கள் பலரும், "ஒரு சர்க் குலரை அனுப்பவேண்டிய விசயத்துக்கு எதுக்கு இவ்வளவு தூரம் எங்களை சென்னைக்கு வர வழைச்சாங்க'ன்னு புலம்பியதைக் கேட்க முடிஞ்சிது.''’

sasi

""பெங்களூரு பரப்பன ஹள்ளி சிறையில் இருக்கும் சசிகலாவும் புலம்பறாராமே?''’

""திடீர் திடீர்ன்னு அப்செட் ஆகறதும், யாரிடமும் அதிகம் பேசாமல் அமைதி காக்குறதுமா இருந்த சசிகலா, "இப்ப யாரைக் கண்டாலும், எல் லாரும் ஜெயலலிதா அக்கா, செத்துட்டாங்கன்னு நினைக்கிறாங்க. அவங்க ஆன்மா சாகலை. அவங்க என் கூடவேதான் இருக்காங்க. அக்கா எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுதான் இருக்காங்க. தப்பு செய்யும் யாரையும் சும்மா விடமாட்டாங்க. என் காலில் விழுந்து மந்திரி பதவிகளை வாங்கிய ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், காமராஜ், ராஜேந்திர பாலாஜியெல்லாம் என்னை எவ்வளவு இளக்காரமா பேசினாங்கன்னு எனக்குத் தெரியும். நான் வெளியில் வந்ததும் யாரையும் விடமாட்டேன்'னு பல்லைக் கடிச்சபடி, ஓங்கிக் கையால் தரையில் அடிச்சி சபதம் செய்றாராம். அந்த அளவுக்கு அவர் மனம் நொந்து போயிருக்காராம்''’

""ஈஷா மைய ஜக்கி வாசுதேவ் தரப்பிலிருந்தும் புலம்பல் கேட்குதாமே?''’

""உண்மைதாங்க தலைவரே, தன் ‘காவேரி கூக்குரல்’ நிகழ்ச்சியை முன்னிட்டு மரம் நடுவதற் காகப் பொதுமக்களிடம் இருந்து 10 ஆயிரத்து 626 கோடி ரூபாயை வசூலிக்கப்போவதா ஜக்கி வாசு தேவ் அறிவிச்சிருந்தார். இதைப் பார்த்த பெங்க ளூரைச் சேர்ந்த அமரநாதன் என்பவர், ஏழை எளிய மக்களே தங்கள் சம்பாத்தியத்தில் மரங்களை நட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி இருக்க, மிகப்பெரிய சொத்துக்களைக் கொண்ட ஈஷா நிறு வனம், மரம் நடுவதாகச் சொல்லி பொதுமக்களிடம் பணம் வசூலிக்க முயல்கிறது. இதற்கு யார் அனுமதி கொடுத்தது? இந்த வசூலுக்குத் தடை விதிக்க வேண்டும்னு அங்குள்ள உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், ஜக்கியின் மெஹா வசூலுக்கு இடைக்காலத் தடையை விதிச்சதோட, ஈஷா மையத்திடமும் அங்குள்ள அரசிடமும் விளக்கம் கேட்டிருக்கு. இதுதான் ஜக்கி தரப்பை அதிரவும் புலம்பவும் வச்சிருக்கு.''

ssa

""கிரிக்கெட் விளையாட்டு தொடர்பாவும் புகார்கள் கிளம்புதேப்பா?''

""ஆமாங்க தலைவரே, சமீபத்தில் சென்னை யில் நடந்த பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது பெட்டிங் நடந்ததா இந்திய கிரிக்கெட் வாரியமே புகார் தெரிவிச்சிருக்கு. அதனால் அது தொடர்பாக அந்தப் போட்டிகளில் இடம்பெற்ற பிரபல கிரிக்கெட் வீரர்களான அஸ்வின், தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கர் ஆகியோர் உட்பட அணியின் உரிமையாளர்கள் மீதும் விசாரணை நடத்தணும்ங்கிற குரல் வலுத்துக்கிட்டு இருக்கு. இது தொடர்பாக சென்னை கிரிக்கெட் சங்கத்தினரிடம் விசாரித்தபோது, "இது இந்தியா சிமெண்ட் சீனிவாசனைக் குறிவைத்து எழுப்பப்படும் புகார். பி.சி.சி.ஐ. தலைவராக இருக்கும் வினோத் ராய்க்கும் சீனிவாசனுக்கும் ஆகாது. இந்த வினோத் ராய், மத்திய தணிக்கைத் துறை அதிகாரியாக இருந்த போதுதான் 2ஜி குற்றச் சாட்டைத் தொடங்கி வைத்து பரபரப்பாக்கினார். அவர்தான் இப்ப தமிழ்நாடு பிரிமியர் லீக்கைக் குறிவச்சிருக்கார். ஏற்கனவே ஐ.பி.எல். சூதாட்டப் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐ.பி.எல்.லில் 2 வருடத்துக்கு விளையாட முடியாமல் சஸ்பெண்ட் ஆனது. அதுபோல், பிரிமியர் லீக்கையும் சஸ்பெண்ட் செய்வதுதான் அவருடைய நோக்கம்'னு சொல்றாங்க''’

""கோட்டையிலும் பரபரப்பு தெரியுதே?''’

vvv""ஆமாங்க தலைவரே, மத்திய பா.ஜ.க. அரசு, அடிக்கடி கோட்டையில் இருக்கும் தலைமைச் செயலாளரையும், கூடுதல் மற்றும் முதன்மைச் செயலாளர்களையும் தொடர்பு கொள்ளுதாம். அப்படித் தொடர்புகொண்டு, "நாங்க அனுப்பிய நிதி எல்லாம் உரிய முறையில் செலவிடப்படுதா? இல்லை மாநில அரசு அந்த நிதியை வேறு வேறு துறைகளுக்குத் திருப்பி விடுதா? இல்லேன்னா செலவழிக்காமல் அதை சும்மாவே வச்சிருக் குதா'ன்னு விசாரிக்கு தாம். இதனால் டென்ஷ னாகும் கோட்டை அதிகாரிகள், "டெல்லிக் கும் நாங்கள் பதில் சொல்லணுமா? இது மாநில உரிமையில் அநாவசியமாகத் தலையிடுகிற செயல். கலைஞரோ, ஜெயலலி தாவோ முதல்வராக இருந்திருந்தால் இப்படி கிராஸ் எக்ஸாமின் பண்ணும் தைரியம் மத்திய அரசுக்கு வந்தி ருக்குமா'ன்னு கேட்க றாங்க?''’

""நானும் ஒரு முக்கியத் தகவலைச் சொல்றேன். ’முதல்வருடன் வெளிநாட்டு விசிட் டில் முக்கிய துணையாக இருந்த அமைச்சர் விஜயபாஸ்கரை குறிவைத்திருக்கிறதாம் மத்திய அரசு. அவர் தொடர்பான ஊழல் ஃபைல்களை ஏற்கனவே சி.பி.ஐ. பக்காவாகத் தொகுத்து வைத்திருக்கிறதாம். அவர் சம்பந்தப்பட்ட இடங்களில் நடத்திய ரெய்டு டீடெய்ல்களும் தெளிவா இருக்குதாம். அண்மையில் சி.பி.ஐ. அதிகாரிகளை அழைத்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சில ரகசிய உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறாராம். இதைத் தொடர்ந்து எந்த நேரத்திலும் கைதுபடலம் அரங்கேறலாம்னு டெல்லிப் பக்கம் இருந்து ரகசியத் தகவல்கள் வருது.''

_________

இறுதிச் சுற்று

இந்திக்காரர்கள் திணிப்பு!

""தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் குரூப் 4 பணிகளுக்கான 262 இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 16 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 4 பேர் கேரளக்காரர்கள். மீதி இடங்களை பீகார், ராஜஸ்தான் என இந்தி பேசும் வடநாட்டுக்காரர்களே பிடித்திருக்கிறார்கள். 10ம் வகுப்பு, ஐ.டி.ஐ. அளவில் கல்வித்தகுதி உள்ள வேலைகள் இவை. இத்தகைய பணிகளுக்கான விளம்பரங்களில் அந்தந்த மாநிலங்களுக்கே முன்னுரிமை தரவேண்டும். ஆனால், அண்மைக்காலமாக வடமாநிலங் களில் இது குறித்து அதிக விளம்பரம் செய்யப்படுவதால், இந்திக்காரர்களே தமிழ்நாட்டுப் பணிகளில் இடம்பிடிக்கின்றனர். ஏற்கனவே, பொன்மலையில் பழகுநர் இடங்களுக்கான இடங்களில் ஒருவர்கூட தமிழ்நாட்டிலிருந்து தேர்வாகவில்லை. எல்.ஐ.சி. நிறுவனத்தின் உதவியாளர் பணிக்கும் இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தித் திணிப்பு இல்லை என்று சொல்லிக்கொண்டே இந்திக்காரர்களைத் fffதமிழ்நாட்டில் திணித்து ஏமாற்று வேலை செய்யும் மத்திய அரசின் திட்டத்தை தமிழக கட்சிகள் உணரவில்லை'' என்கிறார்கள் மத்திய அரசு பணியாளர்கள்.

-ஜெ.டி.ஆர்.

நீட் மோசடி!

உடை, செருப்பு, கூந்தல், கம்மல் என ஒன்றுவிடாமல் சோதனை போட்டு, நீட் தேர்வு மையத்திற்குள் அனுப்பினார்கள். ஆனால், ஆள் யார் என்பதை சரியாக கவனிக்காத காரணத்தால், ஆள்மாறாட்டம் மூலம் தேர்வெழுதி, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் உதித்சூர்யா என்பவர் சேர்ந்திருப்பது தாமதமாகக் கண்டுபிடிக்கப்பட்டு சர்ச்சையாகியுள்ளது. வெளிமாநில கோட்டாவுக்கான இடத்தில் இந்த நியமனம் நடந்திருப்பதால், நீட் கோச்சிங் மையங்களின் உதவியுடன்தான் இத்தகைய மோசடிகள் நடந்திருக்கும் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெறுகிறது.

-சக்தி