புதியதாய் உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சியில், மொத்தமுள்ள 51 மாநகராட்சி வார்டுகளில் ஒரு வார்டு வேட்பாளர் தற்கொலை செய்துகொள்ள, மீதமுள்ள 50 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில், தி.மு.க. கூட்டணி 32 வார்டுகளிலும், அ.தி.மு.க. 9, பா.ம.க. 2, பா.ஜ.க. 1 வார்டிலும், சுயேட்சைகள் 6 வார்டுகளிலும் வெற்றிபெற்றனர்.

gg

ஏற்கனவே நமது இதழில் கூறியதுபோல மேயர் பதவிக்கு தி.மு.க.வில் 6 முனைப் போட்டி யிருந்தது. இதில் காஞ்சிபுரத்தைப் பொறுத்தவரை வெற்றியைத் தீர்மானிப்பது பெரும் பான்மையான முதலியார் வாக்கு தான். ஆனால் தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினரும், மாவட்டச் செயலாளர் சுந்தர் மற்றும் பொருளாளர், ஒன்றியச் செயலாளர் ஆகியோர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஓர் முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கே மேயர் சீட்டு என்ற கோரிக்கை எழுந்தது.

ff

எனவே அந்த சமுதாயத்தைச் சேர்ந்த சீனியர்களான சன் பிராண்டு ஆறுமுகம் மகள் சசிகலா, ராமகிருஷ்ணன் மனைவி சித்ரா, எஸ்.கே.பி.சீனிவாசனின் மனைவி சாந்தி, யுவராஜின் மனைவி மகாலட்சுமி ஆகியோருக்கே வாய்ப்பு என்று இருந்தது. இதில் பண பலத்தில் யுவராஜைத் தவிர மற்றவர்கள் செல்வாக்கானவர்கள். மேலும், மேலிடச் செல்வாக்கும் இருப்பதால், மாவட்டச் செயலாளர் சுந்தருக்கும், ச.ம.உ. எழில்அரசனுக்கும் நம்பிக்கைக்குரிய யுவராஜ் மனைவி மகாலட்சுமியை மேயர் பதவிக்கு பலமாக பரிந்துரை செய்ய, தலைமையும் அவûரையே டிக் அடித்தது. தலைமை அறிவித்த மேயர் வேட்பாளரை எதிர்த்து வன்னியர் சமுதா யத்தைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஷோபன்குமார், தன் மனைவி சூரியாவை, எதிர்த்து மேயர் பதவிக்கான வாக்கெடுப்பில் களமிறக்கி னார்.

மொத்தமுள்ள 50 கவுன்சிலர்களில் தி.மு.க. கூட்டணி 32 கவுன்சிலர்கள், மற்றும் சுயேட்சைகளாக வெற்றிபெற்று மீண்டும் தி.மு.க.வில் இணைந்த 4 பேரையும் சேர்த்து 36 கவுன்சிலர்கள் இருந்த போதிலும், தலைமை அறிவித்த வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட ஷோபன்குமார் தரப்பு, அ.தி.மு.க. மா.செ. சோமசுந்தரத்துடன் கைகோர்த்துக்கொண்டு, அ.தி.மு.க. ஆதரவுடன் 20 வாக்குகளைக் கைப்பற்றினார். இதில் தி.மு.க.வை எதிர்த்து தி.மு.க. கவுன்சிலர்களே ஆறு பேர் ஓட்டு போட்டுள்ளனர்.

ஒருவழியாக தி.மு.க. தலைûமை அறிவித்த மகாலட்சுமியே மேயராகத் தேர்வு பெற்றார். எனினும் தி.மு.க. தரப்பில் 36 வாக்குகள் இருந்தும் 29 வாக்குகளை மட்டுமே வாங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தலைமையை மதிக்காதவர்கள் மீது இதுவரை ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்ததாக, நான்கு மண்டலக்குழுத் தலைவர் பதவிக்கான பேரமும் மா.செ. சுந்தர் தலைமையில் பேசப்பட்டு வருகிறது.

Advertisment