ராங்கால் முதல்வர்-அமைச்சர் மோதல்!

rangcall

""ஹலோ தலைவரே, கோட்டை வட்டாரத்து செய்தியோடு லைனில் வந்திருக்கேன். முதல்வர் எடப்பாடிக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் இடையிலான உரசல் ஓயவேயில்லையாம்.''

""முதல்வர் மேலே எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுனா அவருக்காக சுகாதாரத்துறை அமைச்சர்தானே பதில் கொடுக்கு றாரு?''

""அதெல்லாம் மீடியா முன்னாடி நடப்பது. உள்ளுக் குள்ளே வேற நிலவரம். 27-ந் தேதி பிரதமர் மோடி, எடப்பாடி உள்ளிட்ட மாநில முதல்வர்களோடு, ஊரடங்கை நீடிப்பது குறித்து வீடியோ கான்பரன்ஸில் ஆலோசனை நடத்தினார். அது முடிஞ்சதும், சீனியர் அமைச்சர்கள் சிலரோடு, தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிகரிப்பது குறித்தும், அரசுமீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் எடப்பாடி கவலை யோடு பேசிக்கிட்டிருந்தார். அப்ப, விஜயபாஸ்கரைப் பார்த்து எமோஷனலான எடப்பாடி, "உங்களால் நம்ம கவர்மெண்டுக்கே கொரோனா வந்துடும் போலிருக்கு. நாம இவ்வளவு செஞ்சும், எல்லோரும் ரேபிட் கிட் விவகாரத்தையே பேசறாங்க'ன்னு சொல்ல, இதனால் டென்ஷனான விஜயபாஸ்கர், "அந்த விவகாரத்துக்கு நீங்கதான் காரணம். அதுமட்டுமா? இங்க நடக்கும் கொள்முதல் எல்லாத்திலும், எதிர்பார்ப்போடு தலையிட்டு, நீங்கதானே ஓ.கே. பண்றீங்க'ன்னு, அவர் முகத்துக்கு நேராவே வெடிச்சிட்டார். சக அமைச்சர்கள் முன்பாக தனக்கு எதிரா விஜயபாஸ்கர் பேசியதால், கொதி நிலைக்குப் போன எடப்பாடி, அப்படியே உறைஞ்சிபோய் உட்கார்ந்துட்டாராம்.''

rangcall

""விஜயபாஸ்கர் ஓப்பனா கோபத்தைக் காட்ட என்ன காரணம்?''

""வெளியே வந்த விஜயபாஸ்கர், தன் சக அமைச்சர்கள் சிலரிடம், "பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. முதலமைச்சர் துறை உள்பட எந்தத் துறையிலும் ஊழல் நடக்கலையா? என் னை அவர் ராஜேந்திர பாலாஜின்னு நினைச்சிக்கிட்டு இருக்காரா? என் கைவசம் 25 எம்.எல்.ஏ.க் கள் இருக்காங்க. செப்டம்பர்ல சின்னம்மா சசிகலா ரிலீசாகி வரப்போறாங்க. அப்ப எல்லாத்தையும் பாருங்கன்னு' சொல்லியிருக்காரு.''

""ஊழல் கொரோனாவால எடப்பாடியின் முதல்வர் நாற்காலிக்கு உள்ளுக்குள்ளேயே போட்டியா?''’

""விஜயபாஸ்கர் ஒரு பக்கம்னா, ஜெ. இருக்கும்போதே வருங்கால முதல்வர்னு பேனர் வச்ச மீன்வளத்துறை ஜெயகுமாரும் இப்ப தீவிரமா இருக்காரு. சக அமைச்சர்களிடமே எடப்பாடிக்கு செல்வாக்கு இல்லைன்னு ஜெயக்குமார் நினை

""ஹலோ தலைவரே, கோட்டை வட்டாரத்து செய்தியோடு லைனில் வந்திருக்கேன். முதல்வர் எடப்பாடிக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் இடையிலான உரசல் ஓயவேயில்லையாம்.''

""முதல்வர் மேலே எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுனா அவருக்காக சுகாதாரத்துறை அமைச்சர்தானே பதில் கொடுக்கு றாரு?''

""அதெல்லாம் மீடியா முன்னாடி நடப்பது. உள்ளுக் குள்ளே வேற நிலவரம். 27-ந் தேதி பிரதமர் மோடி, எடப்பாடி உள்ளிட்ட மாநில முதல்வர்களோடு, ஊரடங்கை நீடிப்பது குறித்து வீடியோ கான்பரன்ஸில் ஆலோசனை நடத்தினார். அது முடிஞ்சதும், சீனியர் அமைச்சர்கள் சிலரோடு, தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிகரிப்பது குறித்தும், அரசுமீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் எடப்பாடி கவலை யோடு பேசிக்கிட்டிருந்தார். அப்ப, விஜயபாஸ்கரைப் பார்த்து எமோஷனலான எடப்பாடி, "உங்களால் நம்ம கவர்மெண்டுக்கே கொரோனா வந்துடும் போலிருக்கு. நாம இவ்வளவு செஞ்சும், எல்லோரும் ரேபிட் கிட் விவகாரத்தையே பேசறாங்க'ன்னு சொல்ல, இதனால் டென்ஷனான விஜயபாஸ்கர், "அந்த விவகாரத்துக்கு நீங்கதான் காரணம். அதுமட்டுமா? இங்க நடக்கும் கொள்முதல் எல்லாத்திலும், எதிர்பார்ப்போடு தலையிட்டு, நீங்கதானே ஓ.கே. பண்றீங்க'ன்னு, அவர் முகத்துக்கு நேராவே வெடிச்சிட்டார். சக அமைச்சர்கள் முன்பாக தனக்கு எதிரா விஜயபாஸ்கர் பேசியதால், கொதி நிலைக்குப் போன எடப்பாடி, அப்படியே உறைஞ்சிபோய் உட்கார்ந்துட்டாராம்.''

rangcall

""விஜயபாஸ்கர் ஓப்பனா கோபத்தைக் காட்ட என்ன காரணம்?''

""வெளியே வந்த விஜயபாஸ்கர், தன் சக அமைச்சர்கள் சிலரிடம், "பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. முதலமைச்சர் துறை உள்பட எந்தத் துறையிலும் ஊழல் நடக்கலையா? என் னை அவர் ராஜேந்திர பாலாஜின்னு நினைச்சிக்கிட்டு இருக்காரா? என் கைவசம் 25 எம்.எல்.ஏ.க் கள் இருக்காங்க. செப்டம்பர்ல சின்னம்மா சசிகலா ரிலீசாகி வரப்போறாங்க. அப்ப எல்லாத்தையும் பாருங்கன்னு' சொல்லியிருக்காரு.''

""ஊழல் கொரோனாவால எடப்பாடியின் முதல்வர் நாற்காலிக்கு உள்ளுக்குள்ளேயே போட்டியா?''’

""விஜயபாஸ்கர் ஒரு பக்கம்னா, ஜெ. இருக்கும்போதே வருங்கால முதல்வர்னு பேனர் வச்ச மீன்வளத்துறை ஜெயகுமாரும் இப்ப தீவிரமா இருக்காரு. சக அமைச்சர்களிடமே எடப்பாடிக்கு செல்வாக்கு இல்லைன்னு ஜெயக்குமார் நினைக்கிறாராம். கொரோனா நிவாரணத்துக்கு ஒவ்வொரு அமைச்சரும் கணிசமா நிதியை வசூலிச்சிக் கொடுங்கன்னு எடப்பாடி வேண்டு கோள் வச்சும், யாரும் அசைஞ்சி கொடுக்கலையாம். இதையெல்லாம் பார்த்துத்தான், ஜெயக்குமாரும், எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் கட்சியின் சீனியர்களிடம் அடிக்கடி பேசிக்கிட்டு இருக்காராம். இப்ப, தன் தொகுதியில் விநியோகிக்கும் கொரோனா நிவாரணப் பொருட்களுக்கான பையில் கூட, எடப்பாடி படம் இல்லாமல், தன் படத்தை மட்டும் அச்சடிச்சிருக்காராம்.''

""கட்சிக்காரங்க மட்டுமில்லாமல், அரசு ஊழியர்கள் மத்தியிலும் எடப்பாடி மீது அதிருப்தி நிலவுதாமே?''

rr

""அதுவும் உண்மைதாங்க தலைவரே, டெல்லிக்கு முறைவாசல் செய்யும் எடப்பாடி அரசு, மோடி அரசின் பாணியிலேயே, கொரோனா சாக்கில் அரசு ஊழியர்களை யும் ஆசிரியர்களையும் சுரண்டுதுன்னு அவர்கள் தரப்பு புலம்புது. குறிப்பா, அகவிலைப் படியில் எடப்பாடி அரசு கை வைப்பதை அவங்களால் ஜீரணிச்சிக்க முடி யலை. ஆண்டுக்கு இரண்டு முறை தரப்படும் 3 சதவீத அகவிலைப்படி, ஜனவரி வரை தரப்பட மாட்டாதுன்னு அறிவிக்கப்பட்டிருக்கு. இதன் மூலம் 3 உயர்வுகளை அவர்கள் இழக்க நேருது. அரசின் இந்த முடிவை, நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தலைமையிலான குழுவே ஏற்காமல் எதிர்ப்பு தெரிவித்ததாம்.''

""அகவிலைப்படி கட் பற்றி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் என்ன சொல்றாங்க?''

""30 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் முதல் ஒன்னரை லட்சம் சம்பளம் வாங்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வரை அனைவரையும் ஒரே மாதிரி நடத்தறதான்னு கேட்கும் அரசு ஊழியர்கள் தரப்பு, நெருக் கடிக்கு அகவிலைப் படியைப் பிடிங்க. ஆனால் 30 ஆயிரம் வரை சம்பளம் உள்ளவர்களுக்கு மட்டும் அதில் விதிவிலக்கு கொடுங்க. அதே சமயம் 40 முதல் 50 ஆயிரம் வரை சம் பளம் வாங்குபவர் களிடம் 1 சதவீதமும், 50 முதல் 75 ஆயிரம் ரூபாய்வரை சம்பளம் வாங்குவர்களிடம் 2 சதவீதமும், அதற்கு மேல் சம்பளம் வாங் குபவர்களிடம் 3 சதவீதமும் அக விலைப்படி உயர்வைப் பிடிங்கன்னு புள்ளி விபரத்தோட சொல்றாங்க.''

""கொரோனா நிவாரணத்துக்காக தி.மு.க. கையில் எடுத்திருக்கும் ஒன்றிணைவோம் வா’திட்டம் பற்றி எடப்பாடி அரசுக்கு உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்திருக்கு தாமே?''

""தி.மு.க.வுக்கு எதிரான நிலவரம்னு எதாவது ஒரு ரிப்போர்ட்டை எடப்பாடிக்கு அனுப்பி, அவர் மனதைக் அடிக்கடி குளிர வைக்குதாம் உளவுத்துறை. இப்ப, "ஒன்றிணை வோம் வா'ங்கிற திட்டத்தைத் தொடங்கிய தி.மு.க., 5 நாட்களிலேயே 2 லட்சம் பேர், தங்களிடம் கொரோனா நிவாரண உதவியை எதிர்பார்த்துத் தொடர்பு கொண்டதா தெரிவிச்சிருந்தது. இதை சுட்டிக் காட்டிய உளவுத்துறை, தி.மு.க. கொடுத்த ஒரு ஹெல்ப் லைன் மூலம், அதிகபட்சமா 86,400 பேர்தான் தொடர்பு கொண்டிருக்க முடியும்னு தன் ரிப்போர்ட்டில் குறிப்பிட்டிருக்குதாம். இதைப் பார்த்த கோட்டை வட்டார அதிகாரிகள், ஹெல்ப் லைன் மூலம் கால்செண்டர் பாணியில் ஒரே நேரத்தில் ஒரு எண்ணில் பலபேர் பேசமுடியும். அரசின் 108 தொடங்கி, இப்ப குடும்ப வன்முறை புகார்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஹெல்ப் லைனில் ஏராளமானோர் தொடர்புகொள்ளலையா? அப்படியிருக்க உளவுத்துறை எதற்காக முதல்வரை இப்படி குழப்பியடிக்க னும்ன்னு முணுமுணுக்கறாங்க. ஆனாலும், தி.மு.க.வுக்கு எதிரான ரிப்போர்ட்டுகளை உளவுத்துறை தொடர்ந்து அனுப்பிக்கிட்டுத்தான் இருக்குது.''

rr

""ஓ.. அம்மா உணவகங்களில் ஆளும்கட்சியினர் ஆதிக்கம் செலுத்துவது குறித்து தி.மு.க. விமர்சித்து வருகிறது. ஆனால் உளவுத்துறையோ, தி.மு.க.வின் இந்த விமர்சனத்தை மக்கள் மட்டுமல்லாது, தி.மு.க.வினரும் ரசிக்கலைன்னு எடப்பாடிக்கு அனுப்பிய ரிப்போர்ட்டில் குறிப்பிட்டிருக்கு. ஆனால் உண்மையில் அந்தந்த ஏரியா விலும் இருக்கும் ஆளுங்கட்சியினர், அம்மா உணவகங்களைத் தங்கள் கட்சி அலுவலகம் மாதிரியே பயன்படுத்திக் கிட்டிருக்காங்க. ஆனால், ஆளும்கட்சி நிர்வாகிகள், அம்மா உணவக நிர்வாகச் செலவுகளுக்காக நிதி கொடுக்கனும்ன்னு எடப்பாடி வைத்த கோரிக்கையை விரும்பலை. நாங்கள் கொடுக்க நினைக்கும் பணத்தை நாங்களே எங்கள் பகுதி மக்களுக்கு நேரடியாகச் செலவிட்டுக்கறோம்ன்னு சொல்றாங்க.''

""கொரோனா நேரத்தில் ஊரடங் கைத் தொடர்ந்து கடைப்பிடிக்கணும்னு அடிக்கடி தொடர்புகொள்ளும் பிர தமரிடம் தெரிவித்திருப்பதா அன்புமணி ராமதாஸ் ட்வீட் பண்ணியிருந்தாரே, அதுபோல டாக்டர் ராமதாசும் ஊரடங்கு நேரத்தில் மக்கள் வெளியில் வரக்கூடாதுன்னு தொடர்ந்து எச்சரிக்கிறாரே?''

""ட்விட்டர் வழியா கருத்து சொன்னாலும், தைலாபுரத்திலிருந்து இருவரும் வரலைங்கிற கவலையும், வன்னிய சமூக மக்கள் அதிகமுள்ள வட மாவட்டங்களில் கூட நிவாரண உதவிகளை வழங்க பா.ம.க. முன்வரலைங்கிற வருத்தமும், தங்களைக் கூட பெரியய்யாவும் சின்னய்யாவும் விசாரிக்கலைலயேங்கிற ஆதங்கமும் பா.ம.க. நிர்வாகிகளிடம் இருக்குது. தைலாபுரத் தரப்போ, டாக்டர்களான இருவரும் கொரோனாவின் டேஞ்சரசை உணர்ந்ததால்தான் அவங்க ரெண்டுபேரும் தங்கள் பாதுகாப்பை அனுசரிக்கிறாங்கன்னு சொல்லுது. அதோடு, பூரண மதுவிலக்கையும் பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்துதாம்.''

""கொரோனாவுக்காக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை நிரந்தரமா மூடுற ஐடியா அரசாங்கத்துக்கு இருக்குதா?’’

""கொரோனாவால் டாஸ்மாக் கடைகள் இழுத்து மூடப்பட்டதால், கள்ளச் சாராயம்- குக்கர்சாராயம்னு ஆங்காங்கே காய்ச்சப்பட்டாலும், பெரிய அளவுக்கு சட்டம் ஒழுங்கு பாதிப்பு வராததைச் சுட்டிகாட்டும் அன்புமணி, இந்த நிலையைத் தொடரச் செய்து, முழுமையான மதுவிலக்கு அமல்படுத்துங்கள்னு எடப்பாடியிடம் வலியுறுத்திக்கிட்டு இருக்கிறார். தேர்தல் நேரத்தில் அ.தி. மு.க. கூட்டணியைத் தொடர்வதா வேண்டாமாங்கிறதை இந்த மது விலக்கு விவகாரத்தை வைத்துதான் பா.ம.க. முடிவெடுக்குமாம்.''

""வருமான வரித்துறையில் இருக்கும் அதிகாரிகள் டீம் மீது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கோபத்தில் இருக்காராமே?''

rr

""ஆமாங்க தலைவரே, அந்த வருமான வரித்றை டீம், நிர்மலா சீதாராமனிடம், கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியை சமாளிக்க, தொகுதி மேம்பாட்டு நிதிகளிலேயும், அரசு ஊழியர்களின் சலுகை களிலும் கை வைக்கத் தேவையில்லை. இந்தியா வின் மிக முக்கியமான தொழில் நிறுவனங்களி டம் மட்டும் உபரியா 1 சதவீத வரியை வசூலிச்சாலே, 15 லட்சம் கோடி அரசுக்கு கிடைக்கும்னு ஆலோசனை தெரிவிச்சிருக் காங்க. இதைக்கேட்ட நிர்மலா சீதாராமன், எதை எதை எப்படி செய்யனும்னு அரசுக்குத் தெரியும்னு கறாரா சொல்லி அனுப்பிட்டாராம். ஆனால் அந்த அதிகாரிகள் டீமோ, தங்களின் இந்த ஆலோசனையை ஊடகங்கள் மூலம் கசிய விட்டிருக்கு. இதில் கொதிப்படைந்த நிர்மலா சீதாராமன், அதிகாரிகள் டீம் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்காராம்.''

""சாமியார் நித்தியனந்தாவின் நேசப் பார்வை, காங்கிரஸ் பக்கம் திரும்பியிருக் காமே?''’’

""ஆமாங்க தலைவரே, தனது கைலாசா தீவில் கொரோனாவே இல்லைன்னு வீடியோவில் வந்து அலப்பறை பண்ணி, பெண்கள் புடைசூழ ஆட்டமும் போட்டுக் கிட்டு இருக்கார் நித்தி. ஆனால் புலனாய்வு டீமோ, கைலாசானு ஒரு தீவே இல்லை. இதெல்லாம் பழைய வீடியோன்னு சொல்லி, நித்தியைத் துரத்துதாம். பா.ஜ.க.வும், ஆர். எஸ்.எஸ்.சும்கூட நித்தியால் இந்துக்களுக்கு அவமானம்ன்னு ஃபீல் பண்ண ஆரம்பிச்சிடிச்சாம். அதனால் இப்ப நித்தி, கர்நாடக காங்கிரஸ் பிரமுகரான சிவகுமா ரோட பழைய நட்பைப் புதுப் பிச்சி, அவர் மூலம், காங்கிரஸின் ஆதரவைப்பெறும் முயற்சியில் இருக்கிறாராம் ஆனா, காங்கிரஸ் மேலிடத்திலிருந்து சிக்னல் வரலையாம்.''

""கோட்டை ஏரியாவிலிருந்து நானும் ஒரு தகவலைச் சொல் றேன். ஜூலையில் ஓய்வுபெற இருக்கும் தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு, 6 மாத காலம் பணி நீட்டிப்பு தரனும்னு நினைக்கிறார் எடப்பாடி. டெல்லியிலிருந்து இன்னும் க்ரீன் சிக்னல் கிடைக்கலை. புதிய தலைமைச் செயலாளருக்கான பரிந்துரைப் பட்டியலை, மே மாதம் அனுப்பியாக வேண் டிய கட்டயத்தில் இருக்கு அரசு. இந்தப் பதவி யைக் கைப்பற்ற கூடுதல் தலைமைச் செயலா ளர் அந்தஸ்திலுள்ள பத்துக்கும் மேற்பட்ட சீனியர்கள் களமிறங்கி இருக்காங்க. இவர்களில் 85, 86 பேட்ஜ் அதிகாரிகளான ராஜீவ் ரஞ்சனுக்கும், ஹன்ஸ்ராஜ் வர்மாவுக்கும் இடையில்தான் கடும் ஃபைட் நிலவுதாம்.''

___________

இறுதிச்சுற்று

முதல்வருக்குப் பொறியாளர்கள் கடிதம்!

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர் சங்கம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கீழ்க்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளது.

‘கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப் பதற்காக பல்வேறு வகையில் நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) நிதி திரட்டி வருகின்றீர்கள். நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.7000 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யவிருப்பதாக தெரிய வருகிறது. தற்போது, 2019-2020 ஆண்டிற்கான பணிகள்தான் நடந்து வருகின்றன. எனவே, 2020-2021 ஆண்டுக்கு, நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் (ம) பராமரிப்பு பணிகளுக்கு ஒதுக்கக்கூடிய நிதியை மறுபரிசீலனை செய்து, அதனை கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என வேண்டுகிறோம்.’

-டெண்டர்கள் மூலம் நெடுஞ்சாலைத்துறையினர் கொழித்து வரும் நிலையில், பட்டயப் பொறியாளர் சங்கத்தின ரின் இந்தக் கடிதம் கோட்டையில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

-கீரன்

nkn290420
இதையும் படியுங்கள்
Subscribe