"ஹலோ தலைவரே, கைகோத்துக்கிட்டு நடக்கவேண்டிய துறை களான சட்டமும், சட்டம்- ஒழுங்கும் இப்ப ஒன்றை யொன்று தாக்கிக்கொண்டு, நாடு முழுக்கப் பதட்டப் பரபரப்பை ஏற்படுத்திக் கிட்டு இருக்கு.''’

""ஆமாம்பா, டெல்லியில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் நடக்கும் முட்டல் மோதல் பெரும் கவலையை ஏற்படுத்துதே.''’

police protest

""டெல்லியில் இருக்கும் தீஸ் ஹசாரே நீதிமன்றத்தில், வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடை யில் மூண்ட வாய்த் தகராறு, அடிதடியா மாறி, பெரும் கலவரமா வெடிச்சிது. இதில் காவல்துறையைச் சேர்ந்த 20 பேரும், வழக்கறிஞர்கள் 8 பேரும் படுகாயம் அடைஞ்சிருக்காங்க. தங்களுக்குப் பாதுகாப்பு இல்லைன்னு போலீஸ்காரர்கள், காவல்துறைத் தலைமையகத்தில் கூடி ஆர்ப்பாட்டத்தில் குதிக்க, வழக்கறிஞர்களோ உச்சநீதிமன்றம் முன்பாகத் திரண்டு, எங்களுக்கு நீதி வேண்டும்ன்னு போராட்டத்தில் இறங்கினாங்க. நிலைமை விபரீத நிறத்துக்குப் போவதைப் பார்த்த டெல்லி உயர்நீதிமன்றம், தானே இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்குச்சு. நிலைமையைக் கட்டுப்படுத்தத் தவறியதா குற்றம் சாட்டி 2 காவல்துறை உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், நடந்த கலவரம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பி.கார்க்கே தலைமையில் ஒரு குழுவையும் நியமிச்சிருக்கு.'' ’

Advertisment

""தமிழக அமைச்சரவைக் கூட்டம் 7-ந் தேதி அவசரமா கூடுச்சே?''’

rr

""ஆமாங்க தலைவரே, மத்திய அரசு, தமிழகத்தில் செயல்படுத்த பல திட்டங்களை உருவாக்கி, அதுக்கு நிதியையும் ஒதுக்கியிருக்குதாம். ஆனால் அந்தத் திட்டங்கள் எல்லாம் உரிய முறையில் செயல்படுத்தப் படலைன்னு குற்றம்சாட் டியதோடு அதற்கான நிதி எல்லாம் என்ன நிலையில் இருக்குன்னு மத்திய அரசு கறார்க் குரலில் கேள்வி எழுப்பியிருக்கு. இது தொடர்பா ராஜ்பவன் தரப்பிலிருந்தும் நெருக்கடி வந்ததால், முதல்வர் எடப்பாடி அமைச்சரவையைக் கூட்டினாராம். அதேபோல் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாக பொதுப்பணித்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, உள்ளாட்சித் துறை, போக்குவரத்துத்துறை, எரிசக்தித்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் சில திட்டங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறவேண்டிய நிலை இருந்ததாம். அதற்காகவும் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதுன்னு கோட்டை வட்டாரம் சொல்லுது. அந்தக் கூட்டத்தில் மேயர், சேர்மன் பதவிகளுக்கு நேரடியாக மக்கள் ஓட்டுப் போடாமல் கவுன்சிலர் மூலம் தேர்வு செய்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டிருக்கு.''’

Advertisment

""ஆளுங்கட்சி இப்பவே உள்ளாட்சித் தேர்தலுக்கு விறுவிறுப்பா வியூகங்களை வகுக்கத் தொடங்கிடிச்சி போலிருக்கே?''’

""உண்மைதாங்க தலைவரே, அ.தி.மு.க.வின் தலைமைக்கழக நிர்வாகிகள் மற்றும் மா.செ.க்களின் ஆலோசனைக் கூட்டம் 6-ந் தேதி நடந்துச்சு. கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள் பலரும் இந்தக் கூட்டத்தில் உற்சாகமா கலந்துக்கிட்டாங்க. எல்லோரும் அமைச்சரவை மாற்றம் பற்றி ஏதாவது அறிவிப்பு வரும்ன்னு காத்திருக்க, எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் அது பற்றி வாயையே திறக்கலை. அப்ப வைத்திலிங்கம் எம்.பி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் இப்போதைக்கு உள்ளாட்சித் தேர்தலை நாம் நடத்த வேண்டாம். நடத்தினால் அது தி.மு.க.வுக்குதான் சாதகமாக அமையும்னு தங்கள் பயத்தை வெளிப்படுத்தி இருக்காங்க. உடனே ஓ.பி.எஸ். எழுந்து, நீதிமன்றத்தை இனியும் நம்மால் சமாளிக்க முடியாது. அதனால் டிசம்பருக்குள் உள்ளாட்சித் தேர்தலை நாம் நடத்தியே ஆகவேண்டும். தேர்தலுக்கான நோட்டிபிகேஷன் இன்னும் ரெண்டு வாரத்தில் வெளியாகப்போகுது. இடைத்தேர்தலில் வியூகம் வகுத்து நாம் வெற்றிபெற்றது போல் உள்ளாட்சித் தேர்தலிலும் நாம் அமோக வெற்றியினைப் பெற்றாகணும்னு வலியுறுத்தி இருக்கார். அப்ப சிலர் எழுந்து, உள்ளாட்சித் தேர்தலிலும் நமது இப்போதைய கூட்டணியே தொடருமான்னு கேள்வி எழுப்ப, இதுக்கும் பதில் சொன்ன ஓ.பி.எஸ்., இதே கூட்டணி தொடர வாய்ப்பிருக்குன்னு புன்னகையோட சொல்லியிருக்கார்.''’

""எடப்பாடி வீட்டிலும் சீனியர்கள் தனியா ஆலோசனை நடத்தியிருக்காங்களே?''’

""அந்த ரகசியக் கூட்டத்தில் எல்லோரும் முதல்வர் எடப்பாடியின் முகத்தையே பார்க்க, அவர், உள்ளாட்சித் தேர்தலை நம் மாநில அரசின் கீழ் இருக்கும் மாநிலத் தேர்தல் ஆணையம்தான் நடத்துது. மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிச்சாமியிடம் இது குறித்து நான் ஆலோசிச்சப்ப, அ.தி.மு.க. அமோக வெற்றியைப் பெறணும்ன்னா, உள்ளாட்சித் தேர்தலை ஒரேகட்டமா நடத்தாமல், 3-ல் இருந்து 5 கட்டமா நடத்துவதே சரியாக இருக்கும்ன்னு கருத்து சொன்னார். எனக்கும் இதுதான் சரின்னும் படுது. அப்பதான் தி.மு.க.வின் தேர்தல் வியூகத்தை எல்லாம் நிதானமா நம்மால் முறியடிக்க முடி யும். அதேபோல் நவம்பர் 24-ல் அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தை நாம் நடத்த இருக் கிறோம்ன்னு சொல்லியிருக்கார். கூட்டணிக் கட்சிகள் அதிகத் தொகுதிகளைக் குறிவைத்தாலும் நாம் 50 சத இடத்துக்கு மேல் நின்றாக வேண் டும்னும் அவர் அழுத்தம் கொடுத்துச் சொல்லி யிருக்கார்.''’

""கூட்டணிக் கட்சிகள் என்ன சொல்லுதாம்?''

rr

""பா.ஜ.க.வும் பா.ம.க.வும் மேயர் பதவி உட்பட பல போஸ்டிங்குகளை எதிர்பார்த்து ஷேரை அதிகப்படுத்துறாங்க. தே.மு.தி.க.வும் வெயிட்டா எதிர்பார்க்குது. கூட்டணிக் கட்சியை சமாளித்தாலும், ஓ.பி.எஸ். கோஷ்டி ஆட்கள் இ.பி.எஸ். தரப்புக்கு செக் வைப்பதால் உள்ளடி வேலை களை நினைச்சி அ.தி.மு.க. மேலிடம் கவலைப்படுது''

""தி.மு.க.வின் உள்ளாட்சித் தேர்தல் வியூகம் எப்படி இருக்கு?''’

""ரொம்பவும் கவனமா தேர்தல் களத்தில் காலெடுத்து வைக்கணும்னு தி.மு.க. தலைமை நினைக்கிது. வழக்கமா சட்டமன்றத் தேர்தல் முடிஞ்சி ரெண்டு மூணு மாசத்தில் உள் ளாட்சித் தேர்தல் நடக்கறதுதான் வழக்கம். ஆனால் சட்டமன்றத் தேர்தல் வர இன்னும் ஒன்றரை ஆண்டுகாலம் இருக்கும் நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி அரசு இருப்பதால், அதிக கவனம் தேவைன்னு தி.மு.க. தலைமை கருதுது. உள்ளாட்சித் தேர்தலில் பெருவாரியான வெற்றியைக் குவிப்பது, சட்ட மன்றத் தேர்தலை எதிர்கொள்ள உதவும்ன்னு ஸ்டாலின் நினைக் கிறார். இதில் அ.தி.மு.க.வின ரிடம் உள்ளாட்சிக் களத்தில் வெற்றியைப் பறிகொடுக்க நேர்ந்தால், அடுத்து சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தாலும், நிர்வாகச் சிக்கல் தான் ஏற்படும் என்பதை தி.மு.க. நல்லாவே உணர்ந்திருக்கு. அதே சமயம் கட்சிப் பிரமுகர்கள் பலரும் சட்டமன்றத் தேர்தலில் காட்டுகிற வேகத்தை இடைத் தேர்தல் வரும் போதும் உள்ளாட்சித் தேர்தல் வரும் போதும் காட்டமாட்டேங் கறாங்க என்கிற ஆதங்கமும் தி.மு.க. தலைமைக்கு இருக்கு.''’

""சரிதானே''’

""தி.மு.க. பிரமுகர்கள் பலரும் லோக்கலில் ஆளும் கட்சியினரோடு டை அப் வச்சிக்கிட்டு டெண்டர், கட்டிங்னு காரியம் சாதிப்பதையும் தி.மு.க. தலைமை கவனிச்சிக்கிட்டுதான் இருக்கு. உதாரணமா மாஜி மந்திரி பொன்முடி, லோக்கல் மந்திரி சி.வி.சண்முகத்தோடு நட்பு பாராட்டியதால், அவர் மகன் கௌதம சிகாமணி கள்ளக்குறிச்சி மக்களைவைத் தேர்தலில் வெற்றிபெற்றார். அதேபோல் கடந்த சட்டமன்றத் தேர்தலில் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் நின்றபோது, அவருக்கு வசதியாக அங்கிருந்து விலகி பொன்முடி திருக்கோவிலூர் தொகுதியில் களமிறங்கி வெற்றிபெற்றார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பொன்முடி யின் வேட்பாளரை தூக்கிச் சாப்பிட்டார் சண்முகம். இதேபோல்தான் கே.கே.எஸ்.எஸ்.ஆர், சாத்தூருக்கு இடைத்தேர்தல் வந்தபோது பெருசா கவனம் செலுத்தலை. அதனால் அங்கே அ.தி.மு.க. வென்றது. இரு கழகங்களுக்குள்ளும் காலை வாருராங்க போல..''

""இவங்க அரசியல் ஃபார்முலாவே புரியமாட்டேங்கு தேப்பா.''’

""தென் மண்டல முக்குலத்தோர், கொங்கு மண்டல கவுண்டர், வடக்கு மண்டல வன்னியர் என்றெல்லாம் சமூக ரீதியில் ஆளுங்கட்சியோடு அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு அரசியல் பண்றாங்க. உதாரணமா அண்மையில் நடந்த நாங்குநேரி இடைத்தேர்தலில், அங்கே தேர்தல் பொறுப்பை ஏற்றிருந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, அங்கே அதிருப்தியா இருந்த தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சரி பண்ணலை. முக்குலத்தோர் லாபியிலேயே கவனமா இருந்தாரு. அதனால காங்கிரஸ் தொகுதியில் காங்கிரஸ் தோற்றுப்போச்சு. இப்படிப்பட்ட குளறுபடிகளை சரி செய்யும் வகையில் வரும் 10-ந் தேதி கூடவிருக்கும் தி.மு.க.வின் பொதுக்குழு அமையுமாங்கிற எதிர்பார்ப்பு தொண்டர்களிடம் இருக்கு''’

""எல்லா கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தல் பத்தி விவாதிக்கிற நேரத்தில், காங்கிரஸில் மட்டும் லோக்கல் பாலிடிக்சால் ஏகப்பட்ட சலசலப்பாமே?''’

cc

""உண்மைதாங்க தலைவரே, பா.ஜ.க. அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நாடு தழுவிய அளவில் தொடர்ந்து 10 நாட்கள் நடத்தப்போகுது அகில இந்திய காங்கிரஸ். இந்தப் போராட்டங் களை வழிநடத்த மாநிலத்துக்கு ஒரு பொறுப்பாளரை அது நியமிச்சிருக்கு. கேரள காங்கிரஸ் பிரமுகரான தாமஸ்தான் தமிழக பொறுப்பாளர். 4-ந் தேதி சத்தியமூர்த்திபவனில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பேசிய டாக்டர் ஜெயக்குமார் எம்.பி., "ஒருத்தருக்கு ஒரு பதவிதான் இருக்கணும்'னு சொல்லி, எம்.பி.க்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் நானும் வசந்தகுமாரும், விஷ்ணுபிரசாத்தும் எங்களிடம் உள்ள, கட்சியின் செயல் தலைவர் பதவியை ராஜினாமா பண்ணணும்னு சிலர் நம் டெல்லித் தலைமைக்குப் புகார் கடிதம் அனுப்பறாங்கனு குமுறித் தள்ளிட்டார்.''’

""நானும் ஒரு முக்கியமான தக வலைப் பகிர்ந்துக்கறேன். பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தையும் இந்த நிலையில் கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கைதான சயான், மனோஜ் ஆகியோர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தையும் உயர் நீதிமன்றம் 6-ந் தேதி ரத்து செய்திருக்கு. இருவரும் எடப்பாடிக்காகத்தான் எல்லாம் செய்தோம் என விசாரணைக் கமிட்டியிடம் சொன்னதுதான் குண்டாஸ் ரத்தாக காரணம். அவர்களின் இந்த வாக்குமூலப் பதிவு எடப்பாடித் தரப்புக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கு. மேலும் தாங்கள் வெளியே வந்ததும், தாங்கள் மீடியாக்களிடம் பேச எடப்பாடி தரப்பு வாங்கி வைத்திருக்கும் நீதிமன்றத் தடை உத்தரவை உடைக் கவும், உச்சநீதிமன்றத்திலும் எடப்பாடிக்கு எதிரா மேல்முறையீடு செய்யவும் சட்டரீதியான முயற்சியில் இருக்காங்களாம்.''’

_________________

கொடூரனுக்கு தூக்கு! உறுதி செய்த உச்சநீதிமன்றம்!

rr2010 ஆம் ஆண்டு கோவையையே நடுநடுங்க வைத்தது துணிக்கடை அதிபரின் சிறுவயது மகனும் மகளும் கடத்திக் கொல்லப்பட்ட நிகழ்வு. இந்த வழக்கை விசாரித்த காவல்துறை, பத்து வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது வாடகைக் கார் ஓட்டும் மோகன்ராஜ், அவரது நண்பன் மனோகரன்தான் என்பதைக் கண்டறிந்தது. இவர்களைக் கைதுசெய்யும் முயற்சியில் போலீஸைத் தாக்கிய மோகன்ராஜ் சுட்டுக்கொல்லப்பட, மனோகரன் கைதுசெய்யப்பட்டார். இவ்வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்றம் 2012-ல் மனோகரனுக்கு தூக்குத்தண்டனை விதித்தது. சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தூக்குத் தண்டனை உறுதிசெய்யப்பட்டது. உச்சநீதிமன் றத்தில் நீதிபதிகள் பாலி நாரிமன், சூரியகாந்த் தூக்குத்தண்டனையை உறுதிசெய்தபோதும் மற்றொரு நீதிபதி மாற்றுக் கருத்து தெரிவித்ததால், மனோகரன் மேல்முறையீடு செய்ய, மனோ கரனின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்து தூக்குத் தண்ட னையை உறுதிசெய்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

-க.சுப்பிரமணியன்