""ஹலோ தலைவரே, காஞ்சி சங்கர மடத்தின் சார்பில் டெல்லி யில் வேதங்களைப் பரப்புவதற்கான "காஞ்சி பீட கலாச்சார மையம்'ங்கிற அமைப்பு, வேத கோஷங்கள் முழங்க டிசம்பர் 1-ந் தேதி கோலாகலமா திறக்கப்பட்டிருக்கு''’’
""சங்கரமடம் ஏகப்பட்ட சிக்கல்களில் இருக்கும் நிலையில், இது ஆறுதலான நிகழ்ச்சின்னு சொல்லப்படுதே?''’’
""உண்மைதாங்க தலைவரே, மறைந்த ஜெயேந்திர சங்கராச்சாரிக்கு வேண்டிய ஜெயகவுரியின் நிர்வாகத்தில், கேரள மாநில திருவனந்தபுரத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி இயங்கிக்கிட்டு இருக்கு. இந்த சொத்து தொடர்பாக துக்ளக் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்திக்கும் சங்கரமடத்துக்கும் இடையில் பிரச்சினை இருந்தது. இந்த நிலையில், இனி சங்கரமட நிர்வாகத்தில் எந்த வகையிலும் மூக்கை நுழைக்கக் கூடாதுங்கிற நிபந்தனையோடு, குருமூர்த்தியுடன் சங்கரமடத் தரப்பு ஒரு ஒப்பந்தத்தை அண்மையில் போட்டிருக்கு. அதன்படி, காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் போகும் வழியில் உள்ள சங்கரமடத்தின் பிராஞ்சான கலவை மடம், அதன் சொத்து பத்துக்களோடு குருமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்குதாம்.''’’’
""அதுசரி, ஆனாலும் குருமூர்த்திக்கு எதிராக ஆளும்கட்சி தொடங்கிய அட்டாக், இன்னும் நிக்கலை போலிருக்கே?''’’
""ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க.வில் ஆம்பளைங்க இருக்காங்களாங்கிற ரீதியில் துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேசியது, ஓ.பி.எஸ்.சை மட்டுமல்லாது முதல்வர் எடப்பாடியையும் ஏகத்துக்கும் எரிச்சலடைய வைத்திருக்கிறதாம். அதனால் அவர் தன் நட்பு வட்டத்தினரிடம் குருமூர்த்தியைப் பற்றி ஏக வசனத்தில் திட்டித் தீர்க்கிறாராம். குருமூர்த்திக்கு எப்பவுமே வாய்த்திமிர் அதிகம். சங்கரராமன் கொலை விவகாரத்தில் ஜெயேந்திரரை நம்ம அம்மா ஜெ.’ கைது செய்தப்ப, அடங்காத ராட்சசின்னு குருமூர்த்தியும் சோவும் திட்டித் தீர்த்திருக்காங்க. இது அம்மா கவனத்துக்குப் போன தும், அப்போதைய காஞ்சிபுரம் எஸ்.பி.பிரேம்குமாரைக் கூப்பிட்டு, குருமூர்த்தியைத் தூக்குங்கன்னு அப்பவே அம்மா உத்தரவு போட்டாங்க. இதைக்கண்டு மிரண்டு போன குருமூர்த்தி, நேரா டெல்லி தொடர்புகள் மூலம் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சிய தோடு, நேரில் வந்து அம்மா காலிலேயே விழுந்து மன்னிப்பும் கேட்டுக்கிட்டார். அப்படி அம்மாவின் காலில் விழுந்த அந்த ஆள்தான், நம்மையெல்லாம் கேவலமா விமர்சிச்சிருக்கார்னு எடப்பாடி தனது ஆற்றாமையையும் ஒருமைச் சொற்களையும் தேவை யான இடங்களில் கலந்து வெளிப்படுத்திக்கிட்டு இருக்காராம். குருமூர்த்தியின் இந்த டாக் பற்றி எடப்பாடியின் மகன் மிதுன், அமித்ஷா மகன் ஜெய்ஷா வரை புகார் கொண்டு போக, அவரெல்லாம் ஒரு ஆளான்னு அங்கிருந்து பதில் கிடைச்சிருக்கு.''’
""பா.ஜ.க மாநில .துணைத் தலைவர் பி.டி. அரசகுமார் ஒரு வெடிகுண்டை வீசி இருக்காரே?''’
""ஆமாங்க தலைவரே, தி.மு.க. மா.செ. புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு மகள் திருமண விழா மு.க.ஸ்டாலின் தலைமையில் ஞாயிறன்று நடந்தது. இதில் மணமக்களை வாழ்த்த வந்த பா.ஜ.க அரசகுமார், தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான். கூவத்தூர் காலக்கட்டத்தில் அவர் நினைத்திருந்தால் முதல்வராகி இருக்கலாம். ஆனால் குறுக்கு வழியில் முதல்வராகக் கூடாதுன்னு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து அரசியல் செய்கிறார். எனவே தமிழகத்தின் அடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தான்னு பேசினார். இது அ.தி.மு.க. தரப்பில் பலத்த சலசலப்பை ஏற்படுத்திக்கிட்டு இருக்கு. குருமூர்த்தி ஒரு பக்கம் நம்மைத் தாக்கறார். பா.ஜ.க. அரசகுமார் இன்னொரு பக்கம் ஸ்டாலின்தான் முதல்வர்ன்னு சொல்றார். ஆக பா.ஜ.க. நம்மை விட்டு விலகப் பார்க்கு தான்னு எடப்பாடியே அ.தி. மு.க. சீனியர்களிடம் கேட்கிறா ராம். சுதாரித்துக்கொண்ட அரசகுமார், நான் அந்த அர்த்தத்தில் பேசலைன்னு மறுப்புச்சொல்ல, அதேநேரம் தமிழக பா.ஜ.க. பிரமுகர்கள், அரசகுமார் பேச்சு குறித்து டெல்லித் தலைமைக் குத் தகவல் அனுப்பியிருக்காங்க. ஆனால் இந்த விசயத்தில் பா.ஜ.க. தலைமை அமைதியாவே இருக்குதாம். லோக்கல் பாஜ.க.வினரோ, அரச குமார், அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலைத் தொகுதியைச் சேர்ந்தவர். இருந்தும் எந்த ஒரு விழாவுக்கும் அவரை அமைச்சர் அழைப்பதில்லை. அந்த ஆதங்கத்தைத்தான் தி.மு.க. மா.செ. வீட்டு திருமண விழாவில் கொட்டித் தீர்த்துவிட்டார் என் கிறார்கள். இருப்பினும் அ.தி.மு.க. மீது பா.ஜ.க.வின் எரிச்சல் பார்வை இப்போது தீவிரமாகியிருக்குது.''’’’
""பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. மீது திடீர் எரிச்சல் வர என்ன காரணம்?''’’
""உள்ளாட்சித் தேர்தலில் 80 சதவீத இடங்களில் அ.தி.மு.க.வே நிற்கவேண்டும் என்றும், மீதமிருக்கும் 20 சதவீத இடங்களை மட்டுமே கூட்டணிக் கட்சிகளுக்குப் பிரித்துத் தரவேண்டும் என்றும் அ.தி.மு.க. தலைமை முடிவெடுத்திருக்கு தாம். இதுதான் பா.ஜ.க. தரப்பை எரிச்சலடைய வைத்திருக்கிறது. அதனால் இனி அ.தி.மு.க.வை நம்பாமல் தமிழகத்தில் புதிய வியூகங்களை வகுக்கும் முடிவில் அது இறங்கியிருக்கு. இந்த நிலையில் டெல்லியில் மோடி, அமித்ஷா போன்ற பா.ஜ.க. மேல்மட்ட தலைவர்களை சந்தித்து விட்டு வந்திருக்கும் பா.ம.க. எம்.பி. அன்புமணி, வரும் சட்ட்டமன்றத் தேர்தலில் பா.ம.க. ஆட்சியைப் பிடிக் கும்ன்னு அழுத்தம் கொடுத்துப் பேச ஆரம் பிச்சிருக்கார். அண் மையில் சென்னை யில் நடந்த பா.ம.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அன்புமணி, விரைவில் பா.ம.க. ஆட்சி அமையும். இதை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும். என்னிடம் இதற்கு ஒரு மந்திரம் இருக்கிறது. அது என்ன மந்திரமென்று இப்போதைக்குச் சொல்ல மாட்டேன்னு புதிர் போட்டுச் சொன்னார். டெல்லியில் பா.ம.க.வோடு பா.ஜ.க. சேர்ந்து வகுத்திருக்கும் வியூகம்தான் அன்புமணியின் இந்தப் பேச்சுக்குக் காரணம்ன்னு பா.ம.க. பிரமுகர்களே சொல்றாங்க''’’
""தமிழக பா.ஜ.க.வுக்குப் புதிய தலைவரை விரைவில் நியமிக்க போறதா சொல்லிக்கிட்டே இருக்காங்களே?''’
""தமிழக பா.ஜ.க. தலைவர் நாற்காலியில் உட்காரும் ரேஸில் வானதி சீனிவாசன், கே.டி. ராகவன், கட்சியின் சீனியர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் இருக்காங்க. இவர்களில் சி.பிஆர். நம் சீனியாரிட்டியைப் பார்த்து தலைமையே தலைமைப் பதவி தந்தால் ஏற்போம்ங்கிற மனநிலையில் இருக்கிறாராம். ராகவனுக்கு டெல்லியில் செல்வாக்கு இருக்குதாம். வானதியின் கணவரான சீனிவாசன் மீது சில நிதி மோசடிப் புகார்கள் இருப்பதால, அவர் அபயம் புகுந்திருப்பது நிதியமைச்சரான நிர்மலா சீதாராமனிடமாம். நிர்மலாவின் சிபாரிசோடு தலைவர் ரேஸில் வானதி ஓடிக்கொண்டி ருக்கிறார்னு கமலாலயத்தில் சொல்றாங்க.''’’
""மகாராஷ்டிராவில் அகில இந்திய இந்துத்துவாக் கட்சியான பா.ஜ.க.வுக்கு, மாநில இந்துத்துவாக் கட்சியான சிவசேனா அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கத் தொடங்கியிருக்கே?''’’
""மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வோடு கைகோத்திருந்த சிவசேனா, அங்கு ஏற்பட்ட குழப்படியான அரசியல் நிலவரங்களால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங் கிரஸின் ஆதரவோடு, குறைந்தபட்ச செயல் திட் டத்தின் அடிப்படையில் ஆட்சியில் அமர்ந்திருக்கு. துணை முதல்வர் யார் என் பதைக் கூட திங்கட்கிழமை வரை முடிவுசெய்ய முடியாத நிலை இருந்தாலும் முதல்வர் பொறுப்பேற்றிருக்கும் உத்தவ் தாக்கரே, பதவியில் அமர்ந்ததுமே பா.ஜக.வுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்கும் வகையில், நீதிபதி லோயா விவகாரம் விசாரிக்கப்படும்ன்னு அறிவிச்சிருக்கார். இதற்கான அமித்ஷா தொடர்புடைய சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி லோயாவின் மர்ம மரணம் குறித்த ஃபைலைத் தூசு தட்டி எடுக்கச் சொல்லியிருக்கிறார். அது அவர் மேஜைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அமித்ஷா சம்பந்தப்பட்ட போலி என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்தவரான நீதிபதி லோயா, விருந்து ஒன்றில் கலந்து கொண்ட போது, அவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். அப்போதே அவரது மரணத்தில் பலமாக சந்தேகம் கிளப்பப்பட்டது. இதை விசாரிக்கும்படி எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. இந்த நிலையில்தான் இப்போது மீண்டும் அந்த ஃபைலை கையில் எடுத்திருக்கிறார் முதல்வர் உத்தவ் தாக்கரே. அதேபோல் முன்னாள் பா.ஜ.க. முதல்வர் பட்னாவிஸிற்கு எதிரான ஊழல் புகார்களையும் எடுக்கச் சொல்லியிருக்கிறாராம் உத்தவ்''’’
""இலங்கை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் போர்க்குற்றவாளி கோத்தபய ராஜபக்சேவுக்கு ரத்தினக்கம்பள வரவேற்பு கொடுத்திருக்கிறாரே பிரதமர் மோடி?''’’
""கோத்தபய, மூன்று நாள் பயணமாக டெல்லி வந்துவிட்டுப் போனார். இந்தியா வலியுறுத்தி அழைத்ததன் பேரில் வந்த அவரை அன்பொழுக வரவேற்ற மோடி, அவர் எந்த கோரிக்கையும் வைக்காத நிலையிலேயே, இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியமைக்க 2,800 கோடி ரூபாயைக் கடனாகவும், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்காக 350 கோடி ரூபாயை இலவசமாகவும் இலங்கைக்கு வழங்குவதாக அறிவித்திருக்கிறார். இதுதான் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் கொதிப்படைய வைத்திருக்கிறது. இந்தக் கோபத்தை பகிரங்கமாக எதிரொலித்திருக்கும் வைகோ, இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கும் தமிழகத்துக்கு இது மோடி செய்யும் துரோ கம்ன்னு விமர்சிச்சிருக்கார்.''’’
""தமிழகத்தின் புதிய உள்துறைச் செயலாளரா எஸ்.கே.பிரபாகர் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டிருக்காரே?''’
""ஆமாங்க தலைவரே, இந்தப் பதவியைக் குறிவச்சி நடந்த முயற்சிகள் பத்தி நாம ஏற்கனவே பேசி இருக்கோம். இந்த நிலையில்தான் நெடுஞ் சாலைத் துறையின் முதன்மைச் செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகரை, உள்துறைச் செயலாளராக ஆக்கியிருக்கிறார் எடப்பாடி. இவர் உள்துறைச் செயலாளர் பதவிக்குக் கொண்டுவர நினைத்த ராஜீவ் ரஞ்சன், மத்திய அரசுப்பணியில் இருந்து வரவிரும்பலைன்னு சொல்லிட்டார். அதனால் அவரைப் போலவே தன் எண்ணங்களை அறிந்து செயலாற்றுவதில் வல்லவர்ன்னு நினைக்கும் பிரபாகர் பெயரையே எடப்பாடி டிக் அடித்துவிட்டாராம். இவருக்கு மேலே கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் சீனியர்கள் பலர் இருந்தும், முதன்மைச் செயலாளர் அந்தஸ்திலிருக்கும் பிரபாகருக்கு இந்தப் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. இவரை சிட்டிங் தலைமைச் செயலாளர் சண்முகத்தின் சிஷ்யர் என்று வர்ணிக்கிறது கோட்டை வட்டாரம்.''’’
""சாமியார் நித்தி விரைவில் பிடிபடுவார்ன்னு எதிர்பார்ப்பு நிலவுதே?''’’
""ஆமாங்க தலைவரே, தன் இரண்டு மகள்களை நித்தியானந்தா கடத்தி வைத்துக் கொண்டு பாலியல் ரீதியில் டார்ச்சர் செய்துவருவதாக, நித்தியின் முன்னாள் சீடர் ஜனார்த்தன சர்மா, குஜராத்தில் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கைகள் வேகமெடுத்திருக்கு. குருகுலப் பள்ளிங்கிற பெயரில் பல மாநிலங்களிலும் பள்ளிக்கூடம் நடத்திய நித்தி, அதற்கான அப்ரூவலை கர்நாடகத்தில்தான் வாங்கியிருந்தா ராம். ஆனால் 2016லேயே இந்த அப்ரூவல் ரத்து செய்யப்பட்டுவிட்டதாம். இதைத் தெரிந்து கொண்ட குஜராத் போலீஸார், அங்கே அகமதாபாத் அருகே ஹீராபூரில் நித்தி தரப்பு நடத்திவந்த குருகுலப் பள்ளியை 2-ஆம் தேதி அதிரடியாக இழுத்து மூடிவிட்டனர். மேலும் குஜராத் உயர்நீதிமன்ற அனுமதியின் பேரில், இண்டர்போல் போலீஸ் உதவியுடன் ஈக்வெடார் நாட்டில் பதுங்கியிருக்கும் நித்தியானந்தாவை சுற்றிவளைக்கும் முயற்சியில், அங்குள்ள காவல்துறை இறங்கியிருக்கிறது. நித்தி மீதான, மைனர் குழந்தைகளை செக்ஸ் வேட்கைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டை குஜராத் போலீஸ் சீரியஸாக எடுத்துக்கொண்டதால்தான் இத்தனை வேகமாம். எந்த நேரத்திலும் நித்தியானந்தா பிடிபடலாம் என்கிறார்கள் அங்குள்ள காக்கிகள்''’
""நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். மூன்று நாட்களுக்கு முன்பு, கர்நாடக சிறையில் இருக்கும் சசிகலாவை, இளவரசி மகன் விவேக், நடராஜனின் தம்பி பழனிவேல் உள்ளிட்டோருடன் சந்தித்திருக்கிறார் தினகரன். அ.தி.மு.க. பொதுக்குழுவில் பேசப் பட்ட விசயங்கள் பற்றி சசிகலாவிடம் முழுமையாக எடுத்துச்சொல்லியிருக்கிறார். இதைக்கேட்ட சசிகலா, காலம் நமக்கு விரைவில் கனியும். துரோகிகளுக்கு விரைவில் தக்க பாடம் புகட்டுவோம்ன்னு இறுகிய முகத்தோடு சொல்லியிருக்கிறார். பின்னர், விவேக்கிடம் ஜெயா டி.வி. நிர்வாகம் குறித்தும், மிடாஸ் நிறுவன வருவாய் குறித்தும் பல விபரங்களை கேட்டிருக்கிறார். இதேபோல் பழனிவேலிடமும் அவருடன் சென்ற ஜோதிடர் ஒருவரிடமும், தன் கணவர் நடராஜன் பெயரில் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை பற்றிய விபரங்களையும் விசாரித்திருக்கிறாராம்.''’