""ஹலோ தலைவரே, பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ரத்துன்னும், தேர்வை எழுத இருந்த மாணவர்கள் அனைவரும் "ஆல் பாஸ்'ன்னும் எடப்பாடி அரசு இறங்கி வந்து அறிவிச்சதில், மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட ஆரம்பிச்சிருக்காங்க.''
""ஆமாம்பா, மாணவர்களின் உயிருக்கு யார் பொறுப்புன்னு உயர்நீதி மன்றம் கிடுக்கிப்பிடி போட்ட நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் கடுமையா கண்டிச்சிருந்தாரு. சொந்த புத்தியும் சொல்புத்தியும் இல்லாமல் செயல்படுவதையும் விட்டுவிட்டு மக்களுக்கும் மாணவர்களுக்கும் ஆபத்து இல்லாமல் பொதுத்தேர்வை ரத்து பண்ணுங்கன்னு ஸ்டாலின் சொன்னதோடு, 10ந் தேதி தோழமைக் கட்சிகளுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம்னும் அறிவிச்சாரே... 9ந் தேதி தேர்வு ரத்து-ஆல் பாஸ்னு எடப்பாடி அறிவிச்சாரு.''’
""மாணவர்கள் பாஸ். அரசாங்கம் பெயில் என்பதுதான் உண்மை. ஊரடங்கில் ஏற்படுத்தப்பட்ட தளர்வுகளால் தான் கொரோனாவின் வேகம் கடுமையாச்சுன்னு ஒரு பக்கம் மருத்துவ ஆய்வாளர்கள் சொல்றாங்க. தமிழகம் விரைவில் மகாராஷ்டிராவாக மாறப் போகுதுன்னு இன்னொரு பக்கம் மக்கள் கவலையோடு புலம்பறாங்க. இதுக்கிடையில் சென்னை மிகவும் மோசமான நிலைக்குப் போய்க்கிட்டிருக்கு. 8-ந் தேதி, சுகாதாரத் துறையினரும், மருத்துவக் குழுவினரும், கொடுத்த எச்சரிக்கை அறிக்கையின் அடிப்படையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களையும் முழுமையாக ரெண்டு வாரத்துக்கு சீல் வச்சிடலாமாங்கிற ஆலோசனையில் இருக்காராம் எடப்பாடி.''
""கொரோனாவை விடவும் சக அமைச்சர்கள் தரப்பு நெருக்கடிதான் எடப்பாடிக்கு ரொம்ப தர்மசங்கடமா இருப்பதா கோட்டை வட்டாரத்திலிருந்து தகவல் வந்ததே?''
""உண்மைதாங்க தலைவரே, அ.தி.மு.க.வையே அமைச்சர் வேலுமணி தன் ஆக்டோபஸ் கரங்களால் வளைக்கப் பார்க்கறார்னு எடப்பாடித் தரப்பு கவலைப்படுது. அதுக்குக் காரணம், எம்.எல்.ஏக்கள் பலரும் தன் ஆதரவாளர்கள் என்றும், பெரும்பாலான மா.செ.க் கள்தான் சொல்வதைத்தான் கேட்பார்கள்னும், அடுத்து புதிதாக நியமிக்கப்படும் மா.செ.க்களும் தன் ஆதரவாளர்களாகத்தான் இருப்பார்கள்னும், அதனால் அடுத்த முதல்வர் வேட்பாளரேதான் தான்னும் எடப்பாடியின் காதுக்குப் போகும்படி யாகவே டயலாக் அடிக்கிறாராம் வேலுமணி.''’’
""காவல்துறை தன் கையில் இருக்கும் தைரியமும், ஜக்கி வாசுதேவ் மூலம் டெல்லியின் ஆசிர்வாதத்தைப் பெற்றுவிடலாம்ங்கிற நம் பிக்கையும்தான் வேலுமணியை அப்படிப் பேசவைக்குதாமே?''
""ஆமாங்க தலைவரே, புதிதாக உருவாக்கப் படவிருக்கும் மா.செ. பதவியை நோக்கி நகர்த்தப்படற பலரும் வேலுமணி ஆதரவாளர் கள்தானாம். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்றேன். தஞ்சை மாநகர மா.செ.பதவியை நோக்கி அவரால் நகர்த்தப்படும் அறிவுடை நம்பி, 9 இடங்களில் விதிகளைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் மணலை வாரிக்கொண்டிருக்கிறார். அவர் வாகனங்கள் எ
""ஹலோ தலைவரே, பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ரத்துன்னும், தேர்வை எழுத இருந்த மாணவர்கள் அனைவரும் "ஆல் பாஸ்'ன்னும் எடப்பாடி அரசு இறங்கி வந்து அறிவிச்சதில், மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட ஆரம்பிச்சிருக்காங்க.''
""ஆமாம்பா, மாணவர்களின் உயிருக்கு யார் பொறுப்புன்னு உயர்நீதி மன்றம் கிடுக்கிப்பிடி போட்ட நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் கடுமையா கண்டிச்சிருந்தாரு. சொந்த புத்தியும் சொல்புத்தியும் இல்லாமல் செயல்படுவதையும் விட்டுவிட்டு மக்களுக்கும் மாணவர்களுக்கும் ஆபத்து இல்லாமல் பொதுத்தேர்வை ரத்து பண்ணுங்கன்னு ஸ்டாலின் சொன்னதோடு, 10ந் தேதி தோழமைக் கட்சிகளுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம்னும் அறிவிச்சாரே... 9ந் தேதி தேர்வு ரத்து-ஆல் பாஸ்னு எடப்பாடி அறிவிச்சாரு.''’
""மாணவர்கள் பாஸ். அரசாங்கம் பெயில் என்பதுதான் உண்மை. ஊரடங்கில் ஏற்படுத்தப்பட்ட தளர்வுகளால் தான் கொரோனாவின் வேகம் கடுமையாச்சுன்னு ஒரு பக்கம் மருத்துவ ஆய்வாளர்கள் சொல்றாங்க. தமிழகம் விரைவில் மகாராஷ்டிராவாக மாறப் போகுதுன்னு இன்னொரு பக்கம் மக்கள் கவலையோடு புலம்பறாங்க. இதுக்கிடையில் சென்னை மிகவும் மோசமான நிலைக்குப் போய்க்கிட்டிருக்கு. 8-ந் தேதி, சுகாதாரத் துறையினரும், மருத்துவக் குழுவினரும், கொடுத்த எச்சரிக்கை அறிக்கையின் அடிப்படையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களையும் முழுமையாக ரெண்டு வாரத்துக்கு சீல் வச்சிடலாமாங்கிற ஆலோசனையில் இருக்காராம் எடப்பாடி.''
""கொரோனாவை விடவும் சக அமைச்சர்கள் தரப்பு நெருக்கடிதான் எடப்பாடிக்கு ரொம்ப தர்மசங்கடமா இருப்பதா கோட்டை வட்டாரத்திலிருந்து தகவல் வந்ததே?''
""உண்மைதாங்க தலைவரே, அ.தி.மு.க.வையே அமைச்சர் வேலுமணி தன் ஆக்டோபஸ் கரங்களால் வளைக்கப் பார்க்கறார்னு எடப்பாடித் தரப்பு கவலைப்படுது. அதுக்குக் காரணம், எம்.எல்.ஏக்கள் பலரும் தன் ஆதரவாளர்கள் என்றும், பெரும்பாலான மா.செ.க் கள்தான் சொல்வதைத்தான் கேட்பார்கள்னும், அடுத்து புதிதாக நியமிக்கப்படும் மா.செ.க்களும் தன் ஆதரவாளர்களாகத்தான் இருப்பார்கள்னும், அதனால் அடுத்த முதல்வர் வேட்பாளரேதான் தான்னும் எடப்பாடியின் காதுக்குப் போகும்படி யாகவே டயலாக் அடிக்கிறாராம் வேலுமணி.''’’
""காவல்துறை தன் கையில் இருக்கும் தைரியமும், ஜக்கி வாசுதேவ் மூலம் டெல்லியின் ஆசிர்வாதத்தைப் பெற்றுவிடலாம்ங்கிற நம் பிக்கையும்தான் வேலுமணியை அப்படிப் பேசவைக்குதாமே?''
""ஆமாங்க தலைவரே, புதிதாக உருவாக்கப் படவிருக்கும் மா.செ. பதவியை நோக்கி நகர்த்தப்படற பலரும் வேலுமணி ஆதரவாளர் கள்தானாம். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்றேன். தஞ்சை மாநகர மா.செ.பதவியை நோக்கி அவரால் நகர்த்தப்படும் அறிவுடை நம்பி, 9 இடங்களில் விதிகளைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் மணலை வாரிக்கொண்டிருக்கிறார். அவர் வாகனங்கள் எங்காவது பிடிபட்டால், அதை டி.ஐ.ஜி. லோகநாதன், கண்டுகொள்ளாமல் அனுப்பி வச்சிடுவாராம். இப்படிப்பட்டவர்கள் வேலு மணியின் தளபதிகளா இருக்காங்க. கொஞ்ச நாட்களுக்கு முன்புவரை சேலம் இளங்கோவன் மூலம், கொங்கு மண்டலத்தையே தன் கையில் வைத்திருந்தார் எடப்பாடி. அந்த இளங்கோவன் இப்ப உடல்நலமின்றி இருப்பதால், கொங்கு பகுதியின் ரிமோட் வேலுமணி கைக்குப் போயிடுச் சாம்.''
""வேலுமணியின் பவர் யுத்தத்துக்கு எதிரா, சுகாதாரத் துறை அமைச்சரான விஜய பாஸ்கர் நேரடியாவே வரிஞ்சு கட்டுறாராமே?''
""அதுவும் உண்மைதாங்க தலைவரே, அண்மையில் கொரோனா தொடர்பான ஆய்வுக் கூட்டம் கோட்டையில் தொடங்க இருந்த நிலையில், அமைச்சர் வேலுமணியின் வலதுகையாகச் செயல்படும், சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷைக் குறிவைத்துப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னையில் கொரோனா கட்டுமீறிப் பரவக் காரணம் மாநகராட்சி கமிஷனரின் கவனக் குறைவுதான். அவரோடு சேர்ந்து பயணித்த மாநகராட்சியின் அடிஷனல் டைரக்டருக்கும் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கு. சக அதிகாரிகளோடும் கமிஷனர் ஒத்துழைக்க மறுக்கிறார். அதனால் அவரை உடனடியாக மாற்றனும்ன்னு ஆவேசமாச் சொல்லியிருக் கார்.''
""அதற்கு கூட்டத்தில் என்ன ரியாக்ஷன்?''
""டென்ஷனான அமைச்சர் வேலுமணி, விஜயபாஸ்கரிடம், உங்க டிரைவர் முருகனுக்கே கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கு. அதுமட்டுமா? சுகாதார அமைச்ச ரான உங்க குடும்பமே இப்ப தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கு. அதனால உங்க பதவிக்கு வேற ஆளைப் போட்றலாமா? அதேபோல் முதல்வர் அலுவலகத்துலேயே 5 பேருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கு. அப்ப முதல்வர் அலுவலகத்தை மூடிவிடலாமா? இல்லை. முதல்வரையே மாற்றச் சொல்வீங்களான்னு ஏடாகூடமாக் கேட்டு, எடப்பாடியையும் திகைக்க வச்சிருக்கார். ஒருமையில் பேசக்கூடிய அளவுக்கு நிலைமை போயிருக்கு.''
""வேலுமணியின் அதிரடி மூவ்களை சமாளிக்க, தி.மு.க.வின் ஃபார்முலாவை எடப்பாடி ஃபாலோ பண்ணப் போறார்ன்னு டாக் அடிபடுதே?''
""கேள்விப்பட்டேங்க தலைவரே, தனக்கு எதிரா விசுவரூபம் எடுத்துக்கிட்டிருக்கும் அமைச்சர் வேலுமணியின், மூவ்களைப் புரிஞ்சிக்கிட்ட எடப்பாடி, உள்ளுக்குள் அரண்டுபோனாலும், அவரை எப்படி எல்லாம் தட்டி வைக்கிறதுன்னு வியூகம் வகுத்துக் கிட்டிருக்கார். அதுக்கு அவர் தி.மு.க.வின் ஃபார்முலாவைதான் ஃபாலோ பண்ண முடி வெடுத்திருக்கார். அதாவது, கலைஞர் இருந் தப்ப, கட்சிப் பதவிகளில் சில சீர்திருத்தங் களைச் செய்யனும்னு சொன்ன கனிமொழி, அதை மகளிர் அணி சார்பில் அவரிடம் அறிக்கையா கொடுத்தார். அதில், ஒவ்வொரு மாவட்டத்தையும் இரண்டாகப் பிரித்து, அவற்றில் ஒரு மாவட்டத்திற்கு அங்குள்ள பெரும்பான்மைச் சமூ கத்தைச் சேர்ந்தவரையும், மற்றொரு மாவட்டத்திற்கு மைனாரிட்டி சமூகத்தைச் சேர்ந்தவரையும் மா.செ.க்களா நியமிக்கலாம். இதே ஃபார்முலாவை கிளைக்கழகம் வரை பின்பற்றினால், பெரும்பான்மைச் சமூகம் புறக்கணிக்கப்படுவதாக எழும் குற்றச் சாட்டுகளையும் தவிர்க்கலாம்ன்னு குறிப்பிட்டிருந்தார்.''
""சரியான ஃபார்முலாதான்.''’
""தி.மு.க.வில் இந்த ஃபார்முலா ஒரு சில மாவட்ட அளவில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. முழுமையா கடைப்பிடிக்கப்படலை. இந்த ஃபார்முலாவை, முன்பு தி.மு.க.வின் அரசியல் ஆலோசனைக் குழுவான ஓ.எம்.ஜி.யில் இருந்த சுனில், இப்ப அ.தி.மு.க.வின் அரசியல் அட்வைசரான நிலையில் எடப்பாடியிடம் எடுத்துச் சொல்லியிருக்கார். நல்ல பாலிஸின்னு சொன்ன எடப்பாடி, இதையே, நம் கட்சியின் மா.செ., ஒ.செ. பதவி நியமனங்களில் நடைமுறைப்படுத்தி, பெரும்பான்மை-சிறு பான்மை சமுதாயங்களின் ஒருங்கிணைப்போடு தேர்தலுக்குள் கட்சியை வலுப்படுத்தனும்ங்கிற முடிவுக்கு வந்துட்டாராம். இந்த ஃபார்முலா வேலுமணியை மட்டுமல்ல, தங்கள் பழைய ஆலோசகர் மூலமாகவே எதிர்த்தரப்பிடம் தங்கள் ஃபார்முலா போனது தி.மு.க தரப்பையும் அதிர வச்சிருக்காம். அதனால், தி.மு.க. சைடிலும் தொடர்ந்து டிஸ்கஷன் நடக்குது.''
""அ.ம.மு.க தினகரனும் தி.மு.க.வை ஃபாலோ பண்ணப் போறாராமே?''
""ஆமாங்க தலைவரே, சசிகலா ரிலீசாகறதுக்குள் தங்கள் கட்சியைப் பலப் படுத்தியாகணும்னு நினைக்கும் தினகரன், கட்சி நிர்வாகிகளோடு மனம்விட்டு பேச விரும்பறார். அதையறிந்த அவர் கட்சியின் ஐ.டி.விங் நிர்வாகிகள், இந்த ஊரடங்கு காலத்தில் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் முடங்கினாலும், தி.மு.க மட்டும் இதில் விதிவிலக்கா இயங்கிக்கிட்டு இருக்கு. அங்க ஸ்டாலின் ஸூம் செயலியைக் கையில் எடுத்து, காணொலி வழியாக மா.செ.க்களை தன் பார்வையில் வைத்துக்கொண்டு பரபரப்பா இயங்கறார். அந்த ஃபார்முலாவை நாமும் கையில் எடுக்கலாம்ன்னு சொல்லியிருக்காங்க. இதையே கட்சிப் பிரமுகர்களும் சொல்ல, அது குறித்து யோசிக்க ஆரம்பிச்சிருக்காராம் தினகரன். அதனால் விரைவில் அவர் அதிரடி கிளப்புவார்னு அவர் தரப்பு எதிர்பார்க்குது.''
""சரிப்பா, மின் வாரியத்திலும் அதிரடிகள் நடந்திருக்கே?''
""ஆமாங்க தலைவரே, மின்சார வாரிய சேர்மனாக இருந்த விக்ரம் கபூர் ஐ.ஏ.எஸ். அதிரடியாக மாற்றப்பட்டு, அவருக்கு பதில், மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் மெட்ரோ பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பாராம். டெல்லியின் செல்வாக்கு பெற்ற விக்ரம்கபூர் டிரான்ஸ்பரில் தூக்கியடிக்கப் பட்டிருப்பது கோட்டை வட்டாரத்தையே பரபரப்பாக்கி இருக்கு. எரிசக்தித் துறையின் முதன்மைச் செயலாளராக இருந்த விக்ரம் கபூர், மத்திய அரசின் பிரஷரால்தான் 2018 ஏப்ரலில், மின்வாரிய சேர்மனாக நியமிக்கப்பட்டார். அவர் மூலம்தான் மின்வாரியம் மற்றும் எரிசக்தி துறையில் மத்திய பா.ஜ.க. அரசு, தான் விரும்பியதை எல்லாம் சாதிக்க ஆரம்பிச்சிது.''
""ஓ...''
""டெல்லியின் செல்லப் பிள்ளையாக இருந்த விக்ரம் கபூர், துறை அமைச்சரைப் பற்றிக்கூட கவலைப்படாமல், தன்னிச்சையாக செயல்பட ஆரம்பிச்சார். குறிப்பாக, முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட துறை சார்ந்த உபகரணக் கொள்முதல்களுக்கான பல கோடி ரூபாய்க்கான பில் தொகை நிலுவையிலேயே இருந்திருக்கு. அதையெல்லாம் விக்ரம் கபூர், தன்னிசையாகவே ரிலீஸ் செய்தாராம். இதை விஜிலென்ஸ் அதிகாரிகள் எடப்பாடியின் கவனத்துக்குக் கொண்டு போக, நெருக்கடி நேரத்தில் இப்படியான்னு ஷாக்கான எடப்பாடி, தன் செயலாளர் சாய்குமார் மூலம் அந்த விவகாரத்தை உறுதிப்படுத்திக்கிட்டார்.''’’
""விக்ரம் கபூரின் தன்னிசைப் போக்கை முன்னதாகவே கண்டுபிடிச்சதால்தான், அவருக்கு இன்னொரு அதிகாரி மூலம் செக் வைக்கப் பட்டதா?''
""ஆமாங்க. தலைவரே, விக்ரம் கபூருக்கு செக் வைக்க, மின்வாரியத்தில் இணை நிர்வாக இயக்கு நர்னு ஒரு பதவியையே உருவாக்கி அதில் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஸ்ரீதர் உட்காரவைக்கப்பட்டார். வாரியத்தில் நடக்கும் அனைத்து விசயங்களையும் ஸ்ரீதர், முதல்வர் எடப்பாடிக்கும் துறை அமைச்சரான தங்கமணிக்கும் அவ்வப்போது ரிப்போர்ட் கொடுக்கத் தொடங்கினார். அந்த ரிப்போர்ட்டில் இந்த பில் விவகாரமும் இருந்தது. இதை அறிந்து எரிச்சலான விக்ரம் கபூர், ரெண்டு மாதங்களுக்கு முன்பு 15 நாள் லீவு போட்டார். கொரோனா காலத்தில் லீவான்னு தலைமைச் செயலாளர் தயங்கியும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் அவர் போய்ட்டார். இதனால்தான் எரிச்ச லின் உச்சத்துக்குப் போன எடப்பாடி, அதிரடியாக சுற்றுலாத்துறைக்கு விக்ரம் கபூரைத் தூக்கியடிச்சிருக்கார். அதே நேரத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வட்டார மோ, விக்ரம் கபூர் ஒரு அதிகாரிக்குரிய அந்தஸ் துடன் தனியார் நிறுவனங்களிலிருந்து மின்சாரம் கொள்முதலில் உறுதியான நடவடிக்கை ளை கடைபிடித்தார். அது ஆட்சியாளர்களுக்கு தேர்தல் லாபக் கணக்குகளில் சிக்கல் ஏற்படுத்தியதால் அவரை மாற்றிவிட்டார்கள் என்கிறார்கள்.''
""இந்த மோதல் சுவாரஸ்யத்தில், மக்களைப் பத்திக் கவலைப்படாமல், அவங்களுக்கு மின் கட்ட ணத்தின் மூலம் ஷாக் கொடுத்திருக்காங்களே?''
""உண்மைதாங்க தலைவரே, ஊரடங்கு காலத்தில் மக்கள் அவரவர் வீடுகளில் இருப்பதால் மின்சாரப் பயன்பாடு கொஞ்சம் உயர வாய்ப்பிருக்கு. ஆனால், மின் கட்டணமோ பலருக்கும் மூன்று, நான்கு மடக்கு அதிகமா இருந்திருக்கு. உதாரணமா, நடிகர் பிரசன்னா, தனக்கு 70 ஆயிரம் ரூபாய் மின்கட்டணம் வந்திருப்ப தாகத் சமூக வலைத்தளத்தில் அதிர்ச்சியை வெளிப்படுத்தியதோடு, ஊரடங்கு காலத்தில் மின்வாரியம் மக்களிடம் கொள்ளை யடிப்பதாகக் கருதுகிறீர் களான்னு மக்களிடம் கேள்வி எழுப்பி யிருந்தாரு. இதற்கு மின்வாரியம், மொத்தமாக கட்டணம் நிர்ணயிக்கப்படுவதில்லை. முதலிரண்டு மாதங்களின் பயன்பாட்டுக் கட்டணத்தைக் கழித்துதான் கணக் குப் போடப் படுகிறதுன்னு சொன்ன தோடு, பிரசன்னாவைக் கண்டிப்பதாகவும் அறிக்கை விட்டது.''’
""அந்த நடிகரையும் அரசியலுக்கு இழுத்துடுவாங்க போலிருக்குதே?''
""அளவுக்குமீறிய மின்கட்டணம் பொது மக்களுக்கு திணறலை உண்டாக்கும்னு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் குரல் கொடுத்தாங்க. குறிப்பா அ.ம.மு.க.தினகரன், 2 மாத மின் கட்டணத்தையே ரத்து செய்யனும்னு கோரிக்கை வச்சிருக்கார். ஊரடங்கு நேரத்தில் மக்களிடம் மின் வாரியம் கொள்ளையடிக்கக் கூடாதுன்னு வைகோ தன் குரலை உயர்த்தியிருக்கார். மு.க.ஸ்டாலினோ, கேள்வி எழுப்பிய நடிகர் பிரசன்னாவுக்கே அரசியல் ரீதியாக பதில் தருவதான்னு கண்டனம் தெரிவிச்சதோடு, ஊரடங்கு நேரத்தில் முந்தைய மாத கட்டணங்களைப் பேரிடர் நிவாரணமாக அறிவிக்க வேண்டும் என்றும், தொழிலகங்களுக்கு ஆறு மாதங்களுக்காவது கட்டண சலுகைகளை மின்வாரியம் தரனும் என்றும் வேண்டுகோள் வச்சிருக்கார்.''
""ஜெயலலிதாவின் சொத்துகளைப் பற்றி முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் எம்.பி.யுமான திருநாவுக்கரசர் திடீர்னு கருத்து தெரிவிச்சிருக்காரே?''
""ஆமாங்க தலைவரே, நானும் இதைப்பற்றி ஒரு முக்கியமான தகவலைச்சொல்றேன். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதாவுக்கு பொருளுதவி செய்கிறஅளவுக்கு, அவரது வலதுகரம் போல்இருந்தவர் திருநாவுக்கரசர். ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபாவும் தீபக்கும் அவரது வாரிசுகள்னுஉயர்நீதிமன்றம் அறிவித்திருக்கும் நிலையில், உயர்நீதிமன்றம் அறிவித்திருக்கும் நிலையில், ஜெ வின் சொத்துக்களைப் பற்றி ஒரு அதிரடிக் கருத்தை அவர் முன்வச்சிருக்கார். அதிரடிக் கருத்தை அவர் முன்வச்சிருக்கார். அதிரடிக் கருத்தை அவர் முன்வச்சிருக்கார்.அது என்னன்னா, ஜெயலலிதாஅரசியலுக்கு வர்றதுக்கு முன்பு அவரிடம்எந்தெந்த சொத்துக்கள் இருந்ததோ, எந்தெந்த சொத்துக்கள் இருந்ததோ,அதுக்கு மட்டும்தான் அவருடைய வாரிசுகள் உரிமை கொண்டாடனும். அரசியலுக்கு வந்த பிறகு சேர்க்கப்பட்ட சொத்துக்களை எல்லாம் அரசு எடுத்துக்கனும்ன்னு சொல்லியிருக்கார்.
_________
இறுதிச்சுற்று
தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு பா.ஜ.க. மருந்து!
தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது என 8ந் தேதி ரேலா மருத்துவமனை அறிக்கை வெளியிட்ட நிலையில், தெலங்கானா கவர்னரும் தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவருமான தமிழிசை சௌந்திரராஜன் மருத்துவமனை நிர்வாகத்திடம் நிலவரம் கேட்டதுடன், புதிய மருந்தையும் அனுப்பியுள்ளார். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவர்கள் கொரோனா கட்டுப்படுத்தலுக்கு கண்டறிந்துள்ள மருந்தைத்தான் அங்குள்ள காந்தி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குகிறார்கள். அமெரிக்கா மற்றும் இத்தாலி நாடுகளில் இந்த மருந்தினை மருத்துவ வல்லுநர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்த நிலையில்தான், ரேலா மருத்துவமனை நிர்வாகம் வைத்த கோரிக்கையினை ஏற்று உடனடியாக அந்த மருந்தினை அனுப்பி வைத்து உதவி செய்துள்ளார் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்.
-இளையர்