""ஹலோ தலைவரே, வெளிநாட்டில் பதுங்கியிருக்கிறாரா, உள்நாட்டில் இருந்துக்கிட்டே கண்ணாமூச்சி ஆடுறாரான்னு மக்கள் கேட்கும் அளவுக்கு நித்தியானந்தா விவகா ரத்தில் மத்திய அரசின் செயல்பாடு இருக்குது.''
""குன்ஹா கோர்ட்டில் உள்ள வழக்கைத் தானே மக்கள் எதிர்பார்க்குறாங்க.''
""ஆமாங்க தலைவரே, அதைத்தான் எதிர்பார்க்குறாங்க.. தன் மேல இருக்கும் எந்த வழக்கைப் பற்றியும் கவலைப்படாம, புகார் கொடுத்தவங்களை கிண்டலடிச்சிக்கிட்டிருந்த நித்திக்கு, இந்தியாவில் இருந்து எஸ்கேப் ஆன நிலையிலும் நக்கல் குறையலை. தலைமறைவா இருந்தபடியே நக்கல் வீடியோக்களை வெளியிட்டாரு. ஜனார்த்தன சர்மா மகள்கள் கடத்தல், பாலியல் வழக்கு தீவிரமானதும்தான் வீடியோ வருவது குறைந்தது. இந்த நிலையில்தான், ஜெ.வையே சிறைக்கு அனுப்பிய நீதிபதி மைக்கேல் டி.குன்ஹாவிடம் வசமாகச் சிக்கியிருக்கிறார் நித்தி.''’
""முன்னாள் சீடர் லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கில் என்ன தீர்ப்பு வரும்னு எதிர்பார்ப்பு இருக்குது.''’
""அந்த வழக்கு குன்ஹாவிடம் போயிருப் பதை அறிந்த நித்தி, "அய்யோ அவரா..' என்று அலறினா ராம். இந்த வழக்கின் போது ஆஜரான லெனின் கருப்பன் தரப்பு வழக்கறிஞர் கள், வழக்கைப் பற்றி விவரிக்கத் தொடங் கும் போதே, "இந்த வழக்கு விபரங்கள் எல்லாமே எனக்குத் தெரியும்' என்று நித்தித் தரப்பை வெட வெடக்க வைத்து விட்டார் குன்ஹா. நித்தி வழக்கை ஏற்கனவே விசாரித்த ராம்நகர் நீதிமன்ற நீதிபதியிடம் விளக் கம் கேட்டு உத்தரவு ஒன்றையும் குன்ஹா பிறப்பித்திருக்கிறார்.''
""என்ன உத்தரவு?''
""நித்தி இந்தியாவிலேயே இல்லை என புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னரும், நித்தியானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகாமல், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று காரணம் காட்
""ஹலோ தலைவரே, வெளிநாட்டில் பதுங்கியிருக்கிறாரா, உள்நாட்டில் இருந்துக்கிட்டே கண்ணாமூச்சி ஆடுறாரான்னு மக்கள் கேட்கும் அளவுக்கு நித்தியானந்தா விவகா ரத்தில் மத்திய அரசின் செயல்பாடு இருக்குது.''
""குன்ஹா கோர்ட்டில் உள்ள வழக்கைத் தானே மக்கள் எதிர்பார்க்குறாங்க.''
""ஆமாங்க தலைவரே, அதைத்தான் எதிர்பார்க்குறாங்க.. தன் மேல இருக்கும் எந்த வழக்கைப் பற்றியும் கவலைப்படாம, புகார் கொடுத்தவங்களை கிண்டலடிச்சிக்கிட்டிருந்த நித்திக்கு, இந்தியாவில் இருந்து எஸ்கேப் ஆன நிலையிலும் நக்கல் குறையலை. தலைமறைவா இருந்தபடியே நக்கல் வீடியோக்களை வெளியிட்டாரு. ஜனார்த்தன சர்மா மகள்கள் கடத்தல், பாலியல் வழக்கு தீவிரமானதும்தான் வீடியோ வருவது குறைந்தது. இந்த நிலையில்தான், ஜெ.வையே சிறைக்கு அனுப்பிய நீதிபதி மைக்கேல் டி.குன்ஹாவிடம் வசமாகச் சிக்கியிருக்கிறார் நித்தி.''’
""முன்னாள் சீடர் லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கில் என்ன தீர்ப்பு வரும்னு எதிர்பார்ப்பு இருக்குது.''’
""அந்த வழக்கு குன்ஹாவிடம் போயிருப் பதை அறிந்த நித்தி, "அய்யோ அவரா..' என்று அலறினா ராம். இந்த வழக்கின் போது ஆஜரான லெனின் கருப்பன் தரப்பு வழக்கறிஞர் கள், வழக்கைப் பற்றி விவரிக்கத் தொடங் கும் போதே, "இந்த வழக்கு விபரங்கள் எல்லாமே எனக்குத் தெரியும்' என்று நித்தித் தரப்பை வெட வெடக்க வைத்து விட்டார் குன்ஹா. நித்தி வழக்கை ஏற்கனவே விசாரித்த ராம்நகர் நீதிமன்ற நீதிபதியிடம் விளக் கம் கேட்டு உத்தரவு ஒன்றையும் குன்ஹா பிறப்பித்திருக்கிறார்.''
""என்ன உத்தரவு?''
""நித்தி இந்தியாவிலேயே இல்லை என புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னரும், நித்தியானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகாமல், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று காரணம் காட்டியிருக்கிறார். அவருக்கு உண்மையாகவே உடல்நிலை சரியில்லையா? அவர் எங்கே சிகிச்சை பெற்று வருகிறார்? நீதிமன்றம் ஏன் விசாரிக்கவில்லை? 50 முறை வாய்தாவில் ஆஜராகாத நித்திக்கு ஏன் பிடி வாரண்டைப் பிறப்பிக்கவில்லைன்னு கேள்விகளை அடுக்கியிருக்கிறார். அதேபோல் நித்தி விவகாரத்தை விசாரித்து வரும் கர்நாடக மாநில சி.ஐ.டி. பிரிவு அதிகாரிகளை அழைத்து, சனி ஞாயிறு விடுமுறையெல்லாம் போலீசுக்கு கிடையாது. திங்கட்கிழமைக்குள் சம்மனைக் கொண்டுபோய் நித்தியானந்தாவிடம் கொடுங்கள் என்றும் உத்தரவிட்டார் குன்ஹா. இந்த வழக்கில் புதன் கிழமையன்னைக்கு தீர்ப்பு எதிர்பார்க்கப்படுது.''’
""இனி நித்தி பற்றிய வில்லங்கங்களை எதிர்பார்க்கலாம்னு சொல்லு.''
""ஆமாங்க தலைவரே, அண்மையில் புதுவையில் கொல்லப்பட்ட நித்தியின் சீடர் வஜ்ரவேல் பற்றிய பல முக்கியத் தகவல்கள் இப்போது காவல்துறைக்குத் தெரிய வந்திருக்கிறது. நித்தியின் பண டீலிங்குகளை வஜ்ரவேல் கவனித்து வந்ததோடு, இந்தியாவில் இருந்து நேபாளம் வழியாக அவர் தப்பிச் செல்ல போலி பாஸ்போர்ட்டையும் ஏற்பாடு செய்தாராம். அதேபோல், பிரான்ஸ் நாட்டில் இருக்கும் தொடர்புகள் மூலம், பெலிஸ் நாட்டு பாஸ்போர்ட்டையும் இதே வஜ்ரவேல்தான் நித்திக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார். அண்மையில்தான் நித்தியின் ஆசிரம நிர்வாகிகளில் ஒருவரான ஸ்ரீ ஈஸ்வர பிரியானந்தா என்னும் சதீஷ் செல்வகுமார் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தார். இப்போது வஜ்ரவேல் கொல்லப்பட்டி ருக்கிறார். இப்படித் தொடர்ச்சியா மர்ம மரணங்கள் நடப்பதைக் கூட்டிக் கழித்துப் பார்த்து, நித்தி சாட்சிகளைக் களையெடுக்கத் தொடங்கி விட்டாரோ என்ற சந்தேகம் காவல்துறையிடமே வலுத்திருக்கிறது.''’
""அமைச்சர்கள் பேச்சினால் எடப்பாடிக்கும் தன் ஆட்சியின் நிலைத்தன்மை மீது சந்தேகம் வந்திருக்குதாமே?''
""ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுச் சூழல்துறை ’அமைச்சர் கருப்பணன், ஊராக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. ஜெயித்த தொகுதி களுக்கு குறைவாகத்தான் நிதி ஒதுக்குவோம்ன்னு சொன்னதை, கவர்னரிடம் புகாரா கொடுத்து, பதவியைப் பறிக்கணும்னு கேட்டுக்கிட்டாரு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன். இப்ப அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஹிந்துக்களின் ஓட்டு என்றால் தி.மு.க.வுக்கு இனிக்கிது. அவர்களின் உயிர் என்றால் கசக்குதா? இஸ்லாமியத் தீவிரவாதம் தொடர்ந்தால் இந்துத் தீவிரவாதமும் அதிகரிக்கும். பதிலுக்கு இந்துக்கள் தாக்குவார்கள்ன்னு அதிர்ச்சியூட்டினார். இப்படி ஒரு அமைச்சரே, மதக் கலவரத்துக்கு வித்திடும் வகையில் பேசலாமான்னு மு.க.ஸ்டாலின் கண்டித்திருக்கும் நிலையில், தொடர்ந்து வில்லங்க மாகப் பேசும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பதவியைப் பறிக்கணும்னு 3-ந் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஜெ.அன்பழகனும் மா.சுப்ரமணிய னும் கவர்னரிடம் புகார்மனு கொடுத்திருக்கிறார்கள். ராஜேந்திர பாலாஜியோ, எடப்பாடிக்குத் தெரிந்துதான் நான் பேசுகிறேன். அவர் அனுமதி இல்லாமல் பேசுவேனா? எதிர்க்கட்சிகளுக்கு என் பாணியில் பதில் சொல்வது எப்படி தவறாகும்னு கேட்கிறாராம்.''’
""தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தங்கள் டெல்லித் தலைமை மீதான ஆதங்கத்தை, கட்சிப்பிரமுகர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் கொட்டித் தீர்த்துவிட்டாராமே?''
""தலைவரே! காங்கிரஸ் பிரமுகரும் தங்கபாலு வின் ஆதரவாளருமான தாமோதரனின் பிறந்தநாள் விழா 2-ந் தேதி ஒரு ஓட்டல்ல நடந்தது. இதில் தங்கபாலுவை வைத்துக்கொண்டே பேசிய கே.எஸ். அழகிரி, சுய மரியாதையோடு அரசியல் செய்ய ணும்னு நினைக்கிறேன். அது முடியாது போலி ருக்கிறது. அரசியல்ல யாரையும் அட்டைபோல நாம் ஒட்டிக்கிட்டு இருக்கக்கூடாது. முன்பெல்லாம் காமராஜர் ஆட்சி அமைப்போம்ன்னு சொன் னோம். இப்ப அதை எல்லாம் மறந்துட்டோம். டெல்லியை எப்படிக் கையாளறதுன்னு தங்கபாலுவுக்கு தெரியும். அந்த வித்தை எனக்குத் தெரியலை என்ற ரீதியில் பேசினார். இதைப் பார்த்த கட்சியின் சீனியர்களோ, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போதிய ஒத்துழைப்பு இல்லைன்னு இவர் இஷ்டத்துக்கு தி.மு.க.வை விமர்சிச்சி அறிக்கைவிட்டார். அதை காங்கிரஸ் தலைமையின் கவனத்துக்கு தி.மு.க. கொண்டு போனதும், உடனே வருத்தம் தெரிவிச்சி அறிக்கை விடும்படி அங்கிருந்து உத்தரவு வந்தது. அழகிரி ரெடி பண்ணிய அறிக்கையையும் நாலஞ்சி தடவை தி.மு.க. தலைமையிடம் காட்டி திருத்தம் செஞ்ச பிறகுதான் வெளியிட்டிருக்காங்க. அந்த ஆதங்கத் தைத்தான் இந்தக் கூட்டத்தில் இப்படி கொட்டிட்டார்னு சொல்றாங்க.''’
""சிறையிலிருக்கும் சசிகலா, தன் தம்பி திவாகரன் மீது கடுப்பில் இருக்காராமே?''
""உண்மைதாங்க தலைவரே, ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. எம்.பி. தஞ்சை பழனிமாணிக்கம் இல்லத் திருமண விழாவில் பேசிய சசிகலா சகோதரரான திவாகரன், பெரியாரை விமர்சனம் செய்த ரஜினியைக் கடுமையாக அட்டாக் செய்ததோடு, ஸ்டாலின்தான் ஆட்சியில் அமர் வாருன்னும் பாராட்டிப் பேசினாரு. சசிகலாவோடு எடப்பாடி நெருக்கமாயிட்டார்ன்னு தெரிஞ்சேதான் திவாகரன் இப்படிப் பேசியிருக்கார்னு அ.தி.மு.க.வில் புகைச்சல். சிறையில் இருக்கும் சசி காதுக்கும் எடப்பாடி தரப்பு மூலமே இது போயிருக்கு. அவர் தன் தம்பி மேலே கடுப்பாயிட்டாராம். அ.தி.மு.க. தரப்பில் விசாரிச்சப்ப, பழைய மாதிரி எங்க தரப்பில் இருந்து சரியான ’கவனிப்பும்’ மரியாதை யும் திவாகரனுக்கு கிடைக்கலை. அந்த ஆதங்கத்தில்தான் ஸ்டாலினைப் பாராட்டியிருக்காருன்னு சொல்றாங்க. அடுத்த மாதம் நடக்க இருக்கும் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த்தின் திருமணத்திற்கு சசிகலா பரோலில் வருவாராங்கிறதுதான் அ.தி.மு.க.வினர் எதிர்பார்க்கும் அரசியல் சிக்னல்.''’
""ஒருவழியா பா.ஜ.க.வின் நேரடி உறுப்பினராயிட்டாரே சசிகலாபுஷ்பா?''
""ஜெ. ஆட்சிக்காலத்திலேயே தனி ஆலாபனை செய்த சசிகலா புஷ்பா, பா.ஜ.க.வின் ஆதரவாள ராவே செயல்பட்டு வந்தது ஊரறிஞ்ச ரகசியம். அவர் பதவிக்காலம் வரும் ஏப்ரலில் முடியுது. இந்த நிலையில் தான் 2-ந் தேதி அவர் பா.ஜ.க.வில் ஐக்கியமாகியிருக்கார். இது கட்சித் தாவல் சட்டப்படி நடவடிக்கைக்கு உரியது என்ற போதும், சபாநாயக ரிடம் அவர் மீது புகார் கொடுத்து, பா.ஜ.க.வின் கோபத்தைச் சம்பாதித் துக் கொள்ள விரும்பாத அ.தி.மு.க. தலைமை, புஷ்பா விவகாரத்தைக் கண்டும் காணாதது போல் முகம் திருப்பிக்கொண்டிருக்கிறது. தமிழக பா.ஜ.க. தலைவர் நியமனத்தின் போது, முக்கியமான பதவி தரப்படும்ன்னு பா.ஜ.க. தரப்பு சசிகலா புஷ்பாவுக்கு உறுதிமொழி தந்திருக்குதாம்.''
""நான் ஒரு விளக்க செய்தி யைச் சொல்றேன்.. நம்ம நக்கீரனில் கடந்த இதழில் வெளியான "தமிழகத்தில் லவ் ஜிகாத்தா' என்ற செய்திக் கட்டுரையில், விஜயரகு கொலையில் கைதாகியுள்ள மிட்டாய் பாபுவை உறவினர் வழியில் எஸ்.டி.பி.ஐ. இயக்கத்துடன் தொடர்புபடுத்தி இந்து அமைப் பினர் தெரிவித்திருக்கும் கருத்துக்கு, எஸ்.டி.பி.ஐ. அமைப்பின் மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் ஏ.கே. கரீம் விளக்கத்தையும் மறுப்பையும் தெரிவிச்சிருக்காரு. இந்துத்வா அமைப்பினரின் லவ்ஜிகாத் குற்றச்சாட்டை மறுத்து, எஸ்.டி. பி.ஐ. மீது அவர்கள் அவதூறு பரப்ப நினைப்பதையும் கண்டிச் சிருக்காரு. நம்ம நக்கீரன் செய்தியிலும் இது மதரீதியான தாக்குதல் அல்லன்னு கமிஷனர் சொல்லியிருப்பதைக் குறிப் பிட்டிருக்கோம்.''