""ஹலோ தலைவரே, வன்னிய சமூக மக்க ளின் கவனத்தைக் கவரும் வகையில், ராமசாமி படையாச்சியார் மணி மண்டபத்தை 25-ந் தேதி முதல்வர் எடப்பாடியும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சும் கோலாகலமா திறந்து வச்சிருக்காங்க.''’

""ஆனால் அதிகாரப்பூர்வமா திறக்கிறதுக்கு முன்னாடியே, பா.ம.க.வினர் அந்த மணி மண்டபத்தைத் திறந்துட்டாங்களாமே?''’

rr

""தலைவரே, வன்னிய சமூக மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற கட்சி பா.ம.க.தான்னு டாக்டர் ராமதாஸ் தொடங்கி கட்சி நிர்வாகிகள் அனைவரும் தெரிவிக்கும் நிலையில், அந்த சமூகத்தைச் சேர்ந்த ராமசாமி படையாச்சியா ருக்கு எடப்பாடி அரசு மணிமண்டபத்தைக் கட்டி, அபிமானத்தைப் பெற முயல்வதான்னு பா.ம.க.வினரிடம் ஒரு புகைச்சல் இருந்தது. இந்த நிலையில் அரசு சார்பில் மணிமண்டபத்தைத் திறப்பதற்கு ரெண்டு நாளைக்கு முன்பாக, 23-ந் தேதியே பா.ம.க.வின் தலைவர் ஜி.கே.மணி தலை மையிலான ஒரு டீம், கடலூர் மஞ்சக்குப்பத்தில் கட்டப்பட்டிருக்கும் மணிமண்டபத்துக்குப் போய், அதன் கதவுகளை திறந்தது. பின்னர் உள்ளே எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்துவிட்டு, மண்ட பத்தின் உள்ளே நிறுவப்பட்டிருக்கும் படை யாச்சியார் சிலைக்கு முன்பாக கும்பலாக நின்று குரூப் போட்டோ எடுத்துக்கொண்டு அந்த டீம் திரும்பிடிச்சி. இதன்பின் அந்தப் படத்தை அவங்க சமூக வலைத்தளங்கள்ல பரப்ப ஆரம்பிச்சிட்டாங்க. இது அ.தி.மு.க. தரப்பில் சர்ச்சைகளையும் சலசலப்பையும் ஏற்படுத்துச்சு. முதலில் எரிச்சலான முதல்வர் எடப்பாடி, அவங்க அரசியல் நமக்குப் புரியலையே, சரி விடுங்க. நாம் நம்ம பாணியில் திறந்துவைப்போம்ன்னு 25-ந் தேதி ஓ.பி.எஸ்.சோடு போய், மணிமண்டபத்தைத் திறந்து வச்சிட்டார்.''’

Advertisment

""துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி திமிர்வாதம் செய்யறாருன்னும் அவருக்கு நாவடக்கம் தேவைன்னும் ஆளும் கட்சித் தரப்பினர் ’தாம் தூம்ன்னு குதிக்கறாங்களே?''’

""ஆமாங்க தலைவரே, சமீபத்தில் துக்ளக் இதழின் 49 ஆம் ஆண்டுவிழா திருச்சியில் நடந்தது. இதில் பேசிய குருமூர்த்தி, பழைய அரசியல் நிகழ்ச்சிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது, சசிகலா முதல்வராகிற சூழல் ஏற்பட்டது. அப்ப அந்தம்மா ஓ.பி.எஸ்.சைக் கூப்பிட்டு, பதவியேற்பு விழா நடக் குற இடம் சுத்தமா இருக்குதான்னு போய்ப் பாருங் கன்னு சொன்னது. அவர் இதை என்கிட்ட சொன் னப்ப, எதுக்குய்யா நீங்கள்லாம் ஆம்பளையா இருக்கீங்க? அந்தம்மா சமாதியில் போய் தியானம் பண்ணுங்க. ஏதாவது ஒரு வழிபொறக்கும்ன்னு சொன்னேன். அதேபோல் செஞ்சார்னு சொன்னார். இதை சமூக வலைத்தளங்களில் பலரும் பரப்பிவிட, இதுதான் ஆளுங்கட்சித் தரப்பை ஏகத்துக்கும் சூடாக்கிடுச்சி. நாவடக்கம் தேவைன்னு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்தாரு.''

""குருமூர்த்தியும் விளக்கம் கொடுத்திருக்காரே?''

Advertisment

ff

""தான் பேசியதில் முன்னும் பின்னும் இருந்ததை விட்டுட்டு நடுவில் உள்ளதை மட்டும் திரிச்சிப் பேசறது கண்ணியமாகாதுன்னு விளக்கம் கொடுத்திருந்தாரு. அதே நேரத்தில், லோக்கல் பா.ஜ.க.வில் வெளிப்படையா யாரும் குருமூர்த்தி பக்கம் வரலை. ஏன்னா, ஒரு காலத்தில் பா.ஜ.க.வில் தமிழக உயர்சாதியினரின் ஆதிக்கம் இருந்தது. ஆனா மோடியும் அமித்ஷாவும் அவங்களை சுத்தமா ஒதுக்கிட்டதால, குருமூர்த்திக்கு டெல்லியில் பெரிய செல்வாக்கு இல்லையாம். அதனால, இந்த விவகாரத்தில் சிக்கிடக்கூடாதுன்னு தமிழக பா.ஜ.க.வினர் ஒதுங்கி நின்னு கமுக்கமா கவனிக்கிறாங்க.''’

""அவங்கவங்க தொழில்ல கவனமா இருக்காங்கன்னு தெரியுது. இதுக்கிடையில் ஒரு ஐ.ஏ.எஸ்.அதிகாரி முதல்வர் எடப்பாடியின் நம்பிக்கை நாயகரா ஆயிட்டாராமே?''’

""மணல் குவாரிகளின் கட்டுப்பாட்டு அதிகாரியா இருக்கும் அருண் தம்புராஜ் ஐ.ஏ.எஸ்.தான், எடப்பாடியின் ரைட் ஹேண்டா இப்ப செயல்படறார்ன்னு கோட்டை வட்டாரம் சொல்லுது. எடப்பாடியின் அன்றாட வரவு-செலவு கணக்கு முதல், அவருக்கு நெருக்கமானவர்களின் அந்நிய முதலீடுகள் வரை எல்லாமே இவர் மூலம்தான் நடக்குதாம். இப்படி ஒரு நம்பிக்கையை இவர் எப்படி எடப்பாடியிடம் பெற்றார்ன்னு விசாரித்தபோது, மலேசியாவில் இருந்து ஒரு பிரபல நிறுவனம் மணலை இறக்குமதி செய்து, ஆண்டுக்கு லட்சக்கணக்கான கோடிகளுக்கு இங்கே வருமானம் பார்க்குதாம். இதை மேற்பார்வையிட்டு உரிய பங்கு உரிய வகையில் உரிய இடங்களுக்குப் போய்ச் சேர்ந்துவிடும் வகையில் அருண் தம்புராஜ், திறமையாகச் செயல்பட்டாராம். இதில் மனம் குளிர்ந்து போனதால்தான், எடப்பாடி அந்த அதிகாரியைத் தன் நம்பிக்கை நாயகராக ஆக்கிக்கிட்டாராம்.''’

""ஓ...''

""தலைவரே, குட்கா ஊழல் விவகாரத்தை யாராலும் அத்த னை சீக்கிரம் மறந்துவிட முடியாது. இந்த ஊழல் விவகாரத்தில் சிக்கிய முன்னாள் டி.ஜி.பி.யான டி.கே.ராஜேந்திரன், திண்டுக்கல் டி.ஐ..ஜி. நிர்மல்குமார் ஜோஷி, மத்திய சென்னை இணை கமிஷனர் தினகரன், திருச்சி சரக டி.ஐ.ஜி. வரதராஜு, விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் இவங்க ஐந்துபேரையும் டிசம்பர் முதல் வாரம் விசாரணைக்கு வரணும்னு, அமலாக்கத்துறை அதிரடியா சம்மன் அனுப்பியிருக்கு. காரணம் இவர்கள் முறைகேடாகச் சேர்த்த நிழல் வருமானம், எங்கெல்லாம் முதலீடாக ஆக்கப்பட்டிருக்குன்னு அதற் குரிய ஆவணங்களையும் திரட்டி வச்சிக்கிட்டுதான் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருக்குதாம். இந்த விசாரணையில், மந்திரிகள் உள்ளிட்ட எந்தெந்த .வி.ஐ.பி.க்களின் பெயர்கள் வெளியே வரப் போகுதோங்கிற பதட்டமும் கோட்டைத் தரப்பில் இருக்குதாம். இதில் என்ன வேடிக்கைன்னா, இந்த ஐந்து காவல்துறை அதிகாரிகளில் டி.கே.ராஜேந்திரன் தவிர ஏனைய நால்வருக்கும் தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டிருக்குதாம். இந்த விவகாரத்தைக் கூர்ந்து கவனித்து வரும் டெல்லி, நீங்கள் பரிந்துரைத்த அதிகாரிகளின் லட்சணமே இப்படியான்னு எடப்பாடி அரசை பார்த்து கேள்வி எழுப்புதாம்.''’

""தமிழகத்தின் புதிய உள்துறைச் செயலாளர் யார்ங்கிற கேள்வியும் எழுந்திருக்குதே?''’

""உண்மைதாங்க தலைவரே, மாநில நிர்வாகத்தில் தலைமைச் செயலாளருக்கு அடுத்த பவர்ஃபுல் பதவின்னா அது உள்துறைச் செயலாளர் பதவிதான். இப்ப இந்தப் பதவியில் இருக்கும் நிரஞ்சன் மார்ட்டி ஐ.ஏ.எஸ்., இந்த வாரம் ஓய்வுபெறுகிறார். காலியாகும் இவர் நாற்காலியில் உட்கார்ந்துடணும்னு சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரி கள் பலரும் அவங்கவங்க சோர்ஸில் காய் நகர்த் திக்கிட்டு இருக்காங்க. இந்த நிலையில் ராஜ்பவனில் இருந்து மாநில தகவல் ஆணையத்துக்கு தலைமை ஆணையரா வந்திருக்கும் ராஜகோபால் ஐ.ஏ.எஸ்., மத்திய அரசுப்பணியில் இருக்கும் தன் மனைவி மீனாட்சி ராஜகோபாலை அந்தப் பதவியில் உட்கார வச்சிடணும்னு எக்கச்சக்கக் கனவுகளோட பரபரக்கிறார். ஆனால் அவருடைய திருமதியோ, இப்ப இருக்கும் மத்திய அரசுப்பணியே நிம்மதியா இருக்குன்னு நினைக்கிறாராம். அதேபோல் முதல்வர் எடப்பாடி, முன்னாள் நெடுஞ்சாலைத் துறைச் செயலாளரா இருந்த ராஜீவ் ரஞ்சனை அந்தப் பதவியில் உட்காரவச்சா அனுசரணையா இருப்பார்ன்னு நினைக்கிறாராம்.''

""அவரும் மத்திய அரசுப் பணியில்தானே இருக்காரு?''

""ஆமாங்க தலைவரே.. ராஜீவ் ரஞ்சன் இங்கிருந்த காலத்தில்தான் நெடுஞ்சாலைத்துறை ஊழல் விவ காரத்தில் எடப்பாடியின் பினாமி காண்ட்ராக்டர்கள் சிலர் ரெய்டில் சிக்கினார்கள். தான் அதில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே அப்போது அவர் மத்திய அரசுப் பணிக்குச் சென்றார். அதனால் அவரும் மாநிலப் பணிக்குத் திரும்பத் தயாராக இல்லையாம்.. அதனால் அடுத்த உள்துறைச் செயலாளர் யாருங்கிற எதிர்பார்ப்பில் இப்ப விறுவிறுப்பு கூடியிருக்கு.''’

""குமரி மாவட்டத்தில் ஆளுங்கட்சிப் பிரமுகர்களுக்குள் முட்டல் மோதல் எக்குத்தப்பா போகுதாமே?''’

""ஆமாங்க தலைவரே, மாஜி மந்திரியும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியுமான தளவாய் சுந்தரத்துக்கும், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.யான விஜயகுமாருக்கும் இடை யில் லோக்கல் பவர் யுத்தம் தீவிரமா நடந்துக்கிட்டு ssஇருக்கு. அங்குள்ள மாவட்ட மருத்துவமனைக்கு, கருவில் இருக்கும் சிசுக்களின் நோய்த் தொற்றைக் கண்டுபிடிக்கும் சிறப்புக் கருவியை வாங்க, தன் எம்.பி. நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கார் விஜயகுமார். இதையறிந்த தளவாய் சுந்தரம், மாவட்ட கலெக்டரான பிரசாந்த் திடம், அந்தத் தொகையைப் பயன்படுத்தாமல் முடக்கி வையுங்கள்ன்னு சொன்னதோட, சுகாதாரத்துறை அமைச்சரை விட்டும் அதையே சொல்ல வச்சிருக்கார். அதனால் எம்.பி. மருத்துக் கருவிக்கு ஒதுக்கிய நிதி, கோமாவில் முடங்கியிருக்கு.''’

""மந்திரி ஒருத்தருக்கும் முதல்வர் எடப் பாடிக்கும் இடையிலேயே லடாயாமே?''’

""அதுவும் உங்கக் காதுக்கு வந்திருச்சா? எடப்பாடியின் மகன் மிதுன், விருதுநகர்ல ஒரு டீலிங்கில் இறங்கியிருக்கார். இதைக் கேள்விப்பட்ட மாவட்ட மந்திரியான ராஜேந்திர பாலாஜி, என் மாவட்டத்தில் மூக்கை நுழைக்க மிதுன் யாருன்னு ஏகத்துக்கும் கோபமாயிட்டாராம். உடனே முதல்வர் எடப்பாடியைத் தொடர்புகொண்டு, ஒருமையில் பேச ஆரம்பிச்சிருக்கார். எடப்பாடியோ பிறகு ’நிதானமா’ பேசிக்கலாம்னு சொல்லியும் கேட் காமல், அகராதியே அசிங்கப்படும் சொற்களில் வசைமாரி பொழிஞ்சிருக்கார். இதைக்கேட்டு டென்ஷனான எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பி. எஸ்.சைத் தொடர்பு கொண்டு, இனி அவர் என் அமைச்சரவையில் இருக்கக் கூடாதுன்னு சொல்ல, அண்ணே விடுங்க. இதுக்கெல்லாம் சங்கடப்படா தீங்க. அவருக்கே அவர் என்ன பேசினார்னு தெரி யாது. இதையெல்லாம் சாஃப்ட்டாத்தான் ஹேண்டில் பண்ணணும்னு எடப்பாடியை பலவாறாகப் பேசி சமாதானப்படுத்தி னாராம்.''’

sasi""ஒரே கலவரச் செய்தியாவே இருக்கு?''’

""கவலைப்படாதீங்க தலைவரே, மன்னார்குடி தரப்பில் இருந்து ஒரு மங்களத் தகவலைத் தர்றேன். சசி கலாவின் தம்பி திவாகரன் இருக்காரே, அவர் மகன் ஜெய் ஆனந்துக்குத் திரு மணம் நிச்சயமாகியிருக்கு. சசிகலாவின் அக்கா மகனான ஜெயா டி.வி.பாஸ்கரன் மகள் ஜெயஸ்ரீதான் மணமகள். ஒண் ணுக்குள்ள ஒண்ணு சொந்தம்னாலும் இது காதல் திருமணமாம். இவங்க நிச்சயதார்த்த நிகழ்ச்சி, மன்னார்குடிக் குடும்ப சொந்தங்கள் முன்னிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்திருக்கு. குடும்ப உறவுகள் புடைசூழ நடந்த இந்த நிகழ்ச்சிக்கு, பாஸ்கரனின் அண்ணனான அ.ம.மு.க. தினகரனுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படலையாம்.''

""திருமணத்துக்கு சசிகலா வருவாரா? பரோல் கேட்பாரா?''

""தலைவரே.. சசிகலா எப்படியும் ரிலீஸ் ஆயிடு வாருன்னு அவரோட குடும்ப உறவுகள் எதிர்பார்ப் போடு இருக்குது. அவர் தலைமையிலேயே 2020 மார்ச் மாதம் கல்யாணத்தை வச்சிக்கலாம்ன்னு முடிவு பண்ணி, சசிகலா வருகைக்கும் ரெடியாயிட் டாங்க. கல்யாண கலகலப்போடு அரசியல் என்ட் ரிக்கும் சசிகலா ஆயத்தமாயிட்டாராம். இன்னமும் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்படாதவரான சசிகலா, சிறையிலிருந்து ரிட்டன் ஆனதும் பவர்ஃபுல்லான மூவ்களை எடுப்பாருன்னு சொல்றாங்க.''

""நானும் ஒரு முக்கிய தகவலை சொல்றேன். இந்தியாவின் முன்னணி அரசியல் வியூக நிபுணர் களில் ஒருவரான பிரசாந்த் கிஷோர், ரஜினியை சந்திக்க அப்பாயின்மெண்ட் கேட்டிருக்கார். இது பற்றி கமல்கிட்ட ரஜினி பேசியிருக்காரு. கமலோ, அவர் பி.ஜே.பி. மெண்டாலிட்டி கொண்டவர். தமிழ்நாட்டுக்கு செட் ஆகாது. அவர் வகுக்கும் வியூகங்கள் மற்ற மாநிலங்களிலேயே இப்ப செல்லுபடி ஆகறதில்லைன்னு சொல்லியிருக்கார். அதனால், ரஜினி தரப்பில் இருந்து இப்போ தைக்கு நேரமில்லைன்னு பிரசாந்த் கிஷோருக்குச் சொல்லப்பட்டிருக்குதாம்.''’

______________

இறுதிச்சுற்று

தீட்சிதருக்கு உதவும் அமைச்சர்!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி கும்பிடச் சென்ற லதா என்பவரைத் தாக்கியதோடு, அவர்மீது அவதூறு பரப்பி பரபரப்பு கிளப்பினார் தீட்சிதர் தர்ஷன். தர்ஷன்மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதற்குள் கோவிலுக்கு கட்டளைதாரர்களாக இருப்பவர்களின் உதவியுடன், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தயவில் அவர் தலைமறைவாகி விட்டார். காவல்துறையின் தேடுதல் வேட்டையிலும் முன்னேற்றமில்லை. இதுபற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ""தர்ஷன் கைதாகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் தீட்சிதர்கள், அதற்கான எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். செந்தில்நாதன், அன்பரசன், சுந்தரமூர்த்தி ஆகிய மூன்று வழக் கறிஞர்களில் ஒருவர் சார்பில் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத் தை நாடியதாக தெரிகிறது. ஆனால், வழக்குப் பிரிவுகளைத் தவறாக பதிவு செய்ததால், அவர்களே மனுவை வாபஸ் வாங்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள்'' என்கிறார்கள். இதற்கிடையே சிதம்பரத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்த அமைச்சர் சம்பத்திடமும் தர்ஷன் கைதாவதை தடுக்குமாறு முறையிட்டு, க்ரீன் சிக்னல் வாங்கியதாக தகவல் கசிகிறது.

-காளிதாஸ்