"ஹலோ தலைவரே, பல்வேறு கிரிமினல் வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்தியானந்தா மீது மீண்டும் பகீரூட்டும் கொலைப் புகார் ஒன்னு மையம் கொண்டிருக்கு.''’

""என்னப்பா கொரோனா வைரஸ் பீதியை விடவும் பெரும் பீதியைக் கிளப்புறே. ஏற்கனவே, அவருடைய ஆசிரம நிர்வாகியான சதீஷ் செல்வகுமார், நேபாளத்தில் மர்மமாகக் கொல்லப்பட்ட விவகாரம் வேறு நித்தியைத் துரத்திக்கிட்டு இருக்குதே?''’

""உண்மைதாங்க தலைவரே, நித்தியின் தொண்டர்கள் மத்தியில் இந்தப் பதட்டம் குறையறதுக்கு முன்பாகவே இப்ப, புதுவையைச் சேர்ந்த வஜ்ரவேல் என்கிற நித்தியின் தீவிர சீடர் மர்மமாக கொல்லப்பட்டிருக்கார். ஏம்பலம், வில்லியனூர் பகுதியில் நித்தியின் பேர்ல பேக்கரி நடத்திக்கிட்டிருந்த வஜ்ரவேல், நித்தி மற்றும் ரஞ்சிதா பெயரில் புதுவையிலும் தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் இருக்கும் சொத்துக்களை எல்லாம் நிர்வகித்து வந்தார். இந்த நிலையில் காரில் 2 லட்ச ரூபாய் பணத்தோடு தன் வீட்டிலிருந்து கிளம்பியவர், மாயமாயிட்டார்.''

""அப்புறம்?''

Advertisment

""அவரை எல்லோரும் தீவிரமா தேடிவந்த நிலையில், பாகூரில் அவருடைய கார் கண்டுபிடிக்கப்பட்டிருக்கு. வஜ்ரவேல் தன் காருக்குள்ளேயே பிளாஸ்டிக் உறையால் முகத்தை மூடி மூச்சுத் திணறலுக்கு ஆட்படுத்தப்பட்டு படுகொடூரமாகக் கொல்லப்பட்டிருந் தார். அவர் உடலைப் பார்த்துக் கதறித் துடித்த வஜ்ரவேலின் குடும்பத்தினரும் உறவினர்களும், நித்தி ஆசிரமம்தான் இதுக்குக் காரணம்னு தலையில் அடிச்சிக்கிட்டாங்க. உண்மை நிலவரம் என்னன்னு இன்னும் முழுசா தெரியலை. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கிட்டு இருக்கு.''’

""பாண்டிச்சேரி பார்டரில் அந்த பரபரப்புன்னா தமிழக தலைநகரில் உள்ள கோட்டையிலும் பரபரப்பு தெரியுதே?''

""தலைவரே.. தனக்கு கிடைச்ச முதல்வர் பதவியைக் கெட்டியா பிடிச்சிக்கிட்டு இத்தனை காலம் சிக்கல் இல்லாமல் சமாளிச்ச எடப்பாடியை அரசியல் ராஜதந்திரியா இமேஜ் டெவலப் செய்ற வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு. ஆனா, அவரோட அமைச்சரவையில் இருக்கிறவங்களே ஆப்பு அடிச்சிடுவாங்களோங்கிற பயமும் எடப்பாடிக்கு இருக்குது. பா.ஜ.க.வைப் பற்றி மந்திரி பாஸ்கரன் தாறுமாறா பேசினாரு. பா.ஜ.க. ஆதரவாளரான ராஜேந்திரபாலாஜியோ தி.மு.க.வையும் தி.க.வையும் அடிச்சி விரட்டுங்கப்பான்னு ரஜினி ரசிகர்களை உசுப்பேத் திப் பேசினாரு. மந்திரி கருப்பணனோ, ஊராட்சியில் தி.மு.க. ஜெயிச்ச இடங்களுக்கு உள்ளாட்சி நிதியை ஒதுக்க மாட்டோம்னு ஓப்பனா பேசி னாரு. இது எல்லாமே கடும் விவாதமானதால, போன திங்கட்கிழமையன்னைக்கு அமைச்சர்களைக் கூப்பிட்டு கறாரா பேசினாராம் எடப்பாடி.''

Advertisment

""அப்படி என்ன கறாராம்?''

minister

""சீனியர் அமைச்சர் களான தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், அப்புறம் சுகாதாரம் விஜயபாஸ்கர், போக்குவரத்து விஜயபாஸ் கர், வெல்லமண்டி நட ராசன் இவங்ககிட்ட எல்லாம் தனித்தனியா ஆலோசனை நடத்திய எடப்பாடி, மற்ற அமைச் சர்களை ஒண்ணா உட்கார வச்சி பேசியிருக்காரு. அவங்கவங்க மாவட்டத் துல கோஷ்டி அரசியல் நடத்துனா ஜெயிக்க முடியாது. கட்சியின் மாவட்ட நிர்வாகிகளோடு அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்குங்க. அது உங்க எதிர்காலத்துக்கும் நல்லதா இருக்கும். நடக்குறது அ.தி.மு.க. ஆட்சின்னு கறாரா சொல்லியிருக்காரு எடப்பாடி. ஆனா அமைச்சர்களெல்லாம் தங்கள் மாவட்டத்தோட கட்சி நிர்வாகம் என்ன நிலைமையில் இருக்குன்னு ஒரு ஃபைல் எடுத்துக்கிட்டுப் போயிருக்காங்க. அது பற்றி எதுவும் பேசவிடலைங்கிற வருத்தமும் கோபமும் அமைச்சர்கள்கிட்ட இருக்கு. லோக்கலில் தங்கள் செல்வாக்கை நிலை நிறுத்தினால்தான் அரசியல் பண்ணமுடியும்னு அமைச்சர்கள் சுயநலத்தோடு தான் காய் நகர்த்துறாங்க. இது எடப்பாடிக்கும் தெரியும். பொது நிகழ்வுகளில் அமைச்சர்கள் எகிறுவதால், அவர்களிடம் கறார் குரலில் எடப்பாடி பேசினாலும், டெல்லியை சரிக்கட்டி சமாளிக்குறதுக்குள்ளே உசுரு போய் வருது.. இதிலே இவங்க இப்படி பண்ணுறாங்களேன்னு உள்ளுக்குள்ளே குமுறிக்கிட்டுத்தான் இருக்காராம்.''

""எடப்பாடி உதவியாளர் வீட்டு விசேஷம் பற்றியும் கோட்டையில் குமுறல் கேட்குது போலிருக்குதே!''“

cm

"அதுவும் உண்மைதாங்க தலைவரே, முதல்வர் எடப்பாடியின் உதவியாளரான கிரிதரன் இல்லத் திருமணம் கடந்தவாரம் சென்னை தியாக ராயநகர்ல நடந்துச்சு. அண்மையில் எடப்பாடி வெளிநாட்டுப் பயணம் சென்றபோது, அங்கே பல்வேறு நிறுவனங்களை தொடர்புகொண்டு தொழில் முதலீடு பற்றியெல்லாம் ரூட் போட்டுக் கொடுத்தவர் இந்த கிரிதரன்தான். தமிழகத்தின் பெரும் தொழிலதிபர்கள் பலரோடும் அவருக்கு நெருக்கமான நெருக்கம். அதோடு எடப்பாடி தரப்பினரின் ரகசிய டீலிங்குகள் பலவற்றையும் இவர்தான் கவனித்துக் கொள்கிறாராம். இப்படிப்பட்டவர் இல்லத் திருமணம் என்பதால், எடப்பாடியே மந்திரிகள் புடைசூழ நேரில் போய் வாழ்த்த, ஏகத்துக்கும் ஆடம்பரமா திருமணம் நடத் தப்பட்டிருக்கு. இதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரி களும், தொழிலதிபர்களும் பெருமளவில் குவிஞ் சிருந்தாங்க. கோடிக்கணக்கில் மொய் வசூலான தோட, காஸ்ட்லி பரிசுப் பொருட்களும் மலை மலையா குவிஞ்சிருக்கு. இப்படி குபேர கடாட்சத் தோட எல்லாம் நடந்தாலும், திருமண ஏற்பாட்டா ளர்களில் ஒருவரான தி.நகர் எம்.எல்.ஏ. சத்யா, தன் கண்ட்ரோலில் உள்ள இடங்களில் எல்லாம் இந்தத் திருமணத்தைக் காட்டி மெகா வசூல் நடத்தியிருக் காராம். அதனால இந்தத் திருமண விவகாரம்தான் கோட்டை வட்டாரத்திலே ஹாட் டாக்.''’

""அதிகாரிகளுக்கு இப்போ சுக்கிர திசை போலிருக்கேப்பா...''’

""ஆமாங்க தலைவரே, உயரதிகாரிகளுக்கு அவங்க எதிர்பாராத வகையில் எல்லாம் ஜாக்பாட் அடிக்க ஆரம்பிச்சிருக்கு. அமைச்சர் வேலுமணிக்கு எதிரா, அறப்போர் இயக்கம் தொடர்ந்த ஊழல் வழக்கில், அந்த இயக்கம் அடுக்கிய ஊழல் புகார்கள் எல்லாம் உண்மையானவையான்னு உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறையை விசாரிக்கச் சொன்னது. அந்த வகையில் இதை எஸ்.பி. பொன்னி விசாரித் துக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் உத்தம பாளையத்தில் ஆர்.டி.ஓ.வாக இருக்கும் அவர் சகோதரர், பொள்ளாச்சிக்கு டிரான்ஸ்பர் ஆக விரும்பினார். உடனே அமைச்சர் தரப்பின் கவனத் துக்கு இதுபோக, அவரை பொள்ளாச்சிக்கு அனுப்பி வச்சி, தன் அன்பைக் காட்டியிருக்கிறார் மந்திரி. இந்தச் சூழலில் எடப்பாடியின் நன்மதிப்பைப் பெற கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருக்கும் 60-க்கும் மேற்பட்ட தி.மு.க. கிளைச் செயலாளர் களை அ.தி.மு.க.வுக்குக் கொண்டுவந்துடணும்னு அவர் அண்டர்டீலிங் நடத்திக்கிட்டு இருக்காராம்.''

""ஓ...''

""அதேபோல், இப்போது ஏ.டி.ஜி.பி., ஐ.ஜி., டி.ஐ.ஜி. அந்தஸ்த்தில் இருக்கும் காவல்துறை உயரதிகாரிகளுக்கு டிரான்ஸ்பர் பட்டியல் தயாராகிக்கிட்டு இருக்கு. இவர்களில் சிலருக்கு பதவி உயர்வும் காத்திருக்குதாம். சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பதவியை ஒருசில அதிகாரிகள் இப்போது குறிவைத்துக் காய்நகர்த்த, முதல்வர் எடப்பாடியோ, புதுசா இந்தப் பதவிக்கு வரும் அதிகாரி, விளம்பரப் பிரியரா இல்லாமல் இருக்கணும். க்ரைம் ரேட்டைக் குறைப்பதில் அக்கறை உள்ளவராவும் இருக்கணும்னு தன் விருப்பத்தைத் தனக்கு நெருக்கமான அதிகாரி களிடம் சொல்லியிருக்கிறாராம்.''’

""டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சிக்காக ரஜினி, சந்தன வீரப்பன் ஏரியாவான பந்திப்பூர் காட்டுக்கு சாகசப் பயணம் போனது பரபரப்பான நேரத்துல, முள்ளு குத்தி அவர் திரும்பி வந்ததும் அதே அளவில் பரபரப்பா பேசப்படுதே?''

""ஆமாங்க தலைவரே, டிஸ்கவரி சேனல்ல இங்கிலாந்தைச் சேர்ந்த பியர் கிரில்ஸ் தயாரித்து வழங்கும் ’"மேன் வெர்சஸ் வைல்ட்'’ நிகழ்ச்சி உலகப் பிரசித்தம். இந்த நிகழ்ச்சிக்காக உலக அளவிலான பிரபலங்களை கிரில்ஸ், ஆபத்து நிறைந்த காடுகளுக்குள் சாகஸப் பயணம் அழைத் துச் செல்வார். பிரபலங்கள் அனுபவிக்கும் இந்த திக்... திக்... நிமிடங்களைப் பார்ப்பதில் மக்களுக்கு ஆர்வம் அதிகம். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா முதல் இந்திய பிரதமர் மோடிவரை சாகஸப் பயணத்தை சந்திச்சிருக்காங்க.''

""ஒரு சில நிகழ்ச்சிகளை நானும் பார்த்திருக் கேம்ப்பா..''

""இந்த நிகழ்ச்சியின் புது வடிவமான "இன் டு தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்'’என்ற நிகழ்ச்சியை கிரில்ஸ் தொடங்குவதால கர்நாடக மாநில புலிகள் காப்பகமான பந்திப்பூர் காட்டுக்குள்தான் பிரில்ஸ் ரஜினியை அழைச்சிக்கிட்டுப் போய், ரெண்டுநாள் முழுக்க படமாக்கியிருக்கிறார். ரஜினியே அந்த அனுபவம் அச்சத்தின் உச்சம்ன்னு வர்ணிச்சிருக் கார். அவரோட எளிமையை பிரில்ஸ் டீம் ரொம்ப பிரமிப்பா பார்த்து பாராட்டியதாம். படப்பிடிப்பில் ரஜினிக்கு விபத்துனு பரபரப்பு செய்தி வந்தது. ஆனால், சாகச ஷூட்டிங் முடித்து திரும்பிய ரஜினி, முள்ளு குத்திடிச்சி வேறொன்றுமில் லைன்னு சொன்னாரு.''

""நானும் கேள்விப்பட்டேம்ப்பா.. இந்த ஷூட்டிங்குக்கு ரஜினியைப் பரிந்துரை செய்தது மோடிதானாமே.. அடுத்ததா, மோடியை தேர்தல் நேரத்தில் பேட்டி எடுத்த இந்தி நடிகர் அக்ஷய் கண்ணா பேரு இந்த நிகழ்ச்சிக்கு அடிபடுதாம்.''’’

""ஆமாங்க தலைவரே.. பா.ஜ.க.வுக்கு சாதகமா வாய்ஸ் கொடுப்பவர்களுக்கு பல சலுகைகள் கிடைக்குதுன்னும் பொதுமக்கள் மட்டத்திலேயே பேச்சு அடிபடுது. 2002-2003 மற்றும் 2003- 04-ஆம் ஆண்டுக்கான வருமான வரி தொடர்பா ரஜினிக்கு ஏற்கனவே அபராதம் போட்டிருந்தது. இது தொடர்பா வழக்கும் நடந்தது. இந்த நிலையில், வருமானம் தொடர்பா ரஜினி கொடுத்த டீடெய்ல்ஸை ஏத்துக்கிட்டதால வழக்கை வாபஸ் பெறுவதா வருமானவரித்துறை அறிவிச்சது. இது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.''

""ஜெயலலிதா தொடங்கி பலருடைய வரு மானவரி வழக்கிலும் அவங்களோட அரசியல் நிலைப் பாட்டை வச்சித்தானே முடிவு எடுக்கப்பட்டிருக்கு.''

rajini

"அதேதான் ரஜினி விஷயத்திலேயும் பா.ஜ.க. கையாண்டிருக்கு. துக்ளக் விழாவில் பெரியாரைப் பற்றி பேசியதும், அதற்காக மன்னிப்பு கேட்கமாட் டேன்னும் ரஜினி சொன்ன நிலையில், இந்த அப ராத வழக்கின் சாதகமான நிலைப்பாடு அரசியல் ரீதியா கவனிக்கப்படுது. சர்ச்சைக்குரிய அந்த வருடத்தில் ரஜினி தரப்பில் 2கோடியே 63 லட்ச ரூபாய் 18% வட்டிக்கு விடப்பட்டு, 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வட்டி வசூலிக்கப்பட்டிருக்கு. அதேபோல, அடுத்த வருசம் அவர் கொடுத்த கடன் தொகை திரும்பி வரலையாம். இது வட்டி பிசினஸ்னு தனக்கு தெரியாதுன்னும், கைமாற்றா கொடுத்த தொகைதான்னும் ரஜினி சொன்ன விளக் கத்தை வருமானவரித்துறை ஏத்துக்கிட்டதால வழக்கு முடிவுக்கு வந்திடிச்சி. ஆனா, மன்னிப்பு கேட்கமாட்டேன்னு ரஜினி சொன்னதை அவரது ஆட்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் பண்ணியதுபோல, வரிகட்டாத ரஜினி, கந்துவட்டி ரஜினின்னும் எதிர்த்தரப்பு மூணு நாளா ட்ரெண்டிங் பண்ணிடிச்சி.''

""ம்.. எல்லா பக்கமும் அரசியல்தான். ரஜினியை காப்பாத்துறதா நினைச்சு வருமானவரி வலை வீசி ரஜினியின் இமேஜை டேமேஜ் பண்ணியிருக்கு பா.ஜ.க.''

""உலக அளவில் மோடி அரசை இழுத்த ஒரு விஷயத்தை நான் சொல்றேன்.. மதரீதியான பாகுபாடு காட்டும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பா 751 எம்.பி.க்களைக் கொண்ட ஐரோப் பிய யூனியனின் நாடாளுமன்றத்தில் விவாதிக்க ணும்னு 560 எம்.பி.க்கள் வலியுறுத்தியிருக்காங்க. உள்நாட்டு விஷயத்தை இன்னொரு கண்டத்தில் விவாதித்தால் இறையாண்மைக்கு சவாலா யிடும்னு மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங் ஆகி யோர் கவலையோடு ஆலோசிச்சாங்க. இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா, ஐரோப்பிய யூனியனுக்கு அவசரக் கடிதத்தை அனுப்பினார். அதனால் மார்ச் மாதத்துக்கு விவாதம் ஒத்திவைக்கப்பட்டதில், மோடி அரசுக்கு கொஞ்சம் நிம்மதி.''’’