"ஹலோ தலைவரே, குடியரசு தின விழாவையே, குடியுரிமைக்கு திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிரான போ ராட்ட வடிவமா நினைச்சி, அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையுடன் கைகோத்து கொண்டாடி இருக்காங்க.''’

""ஆமாம்பா, அதே சமயம் கவர்னர் மாளிகை தேநீர் விருந்துகளில் பல்வேறு சிக்கல்களும், சின்னச் சின்ன சங்கடங்களும் அரங்கேறி யிருக்கே?''’

""ஆமாங்க தலைவரே, புதுவை துணை நிலை ஆளுந ரான கிரண்பேடி, தேநீர் விருந்து கொடுத்தார். இதில் முதல்வர் நாராயணசாமியும் கலந்துக்கிட்டார். ஆனால் நிகழ்ச்சி நிரல் தொடர்பா தனக்கு எதுவும் முறையா தெரிவிக்கப்படாததால் கோபமாகி கவர்னர் மாளிகை அதிகாரிகளிடம் உரிமைக்குரல் எழுப்பி, பாதியிலேயே திரும்பி விட்டார்.''’

""ம்...''

Advertisment

ops""இங்கேயும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், குடியரசு தினத்துக்காக ராஜ்பவனில் கொடுத்த தேநீர் விருந்திலும் சில சங்கடங்கள் இருக்கு. பொதுவா கவர்னர் மாளிகை கொடுக்கும் விருந்தில், ஆளுமகட்சி, எதிர்க் கட்சிங்கிற பேதங்கள் மறந்து, சகலரும் மனம்திறந்து உரை யாடுகிற போக்குதான் இருக்கும். இந்த வருடம் சர்ச்சைகளுக்கு எண்ட்ரன்ஸிலேயே வழியமைச்சிட்டாங்க. வி.வி.ஐ.பி.க்களுக்கான முதல் எண்ட்ரன்ஸில், அரசு பதவியில் இல்லாத பா.ஜ.க. பிரமுகர்கள் தேநீர் விருந்துக்கு அனுமதிக்கப்பட்டிருக்காங்க. அடுத்த பாதை வழியா சமூக செயல்பாட்டாளர்கள் போன்ற முக்கியஸ்தர்கள் அனுமதிக்கப் பட்டாங்க. மூன்றாம் வரிசையில்தான் சுதந்திர போராட்ட பென்ஷன் வாங்கும் தியாகிகள் அனுமதிக்கப்பட்டிருக்காங்க. இதே தர வரிசைப்படிதான் உள்ளே இருக்கைகளும் தனித் தனியா பிரித்துப் பிரித்துப் போடப்பட்டிருந்துச்சாம். அமைச்சர்கள் உட்கார்ந்திருந்த முன் வரிசையில் பா.ஜக. பிரமுகர்கள் உட்கார வைக்கப் பட்டிருந்தாங்க. அடுத்து அதி காரிகள் வரிசை. அதற்கடுத்த மூன்றாவது வரிசைதான் தியாகிகளுக்கும் சமூக சேவகர் களுக்கும். இதில் ஒரு வரிசை யில் இருப்பவர்கள் இன்னொரு வரிசைப் பக்கம் போய் விடாதபடி தடுக்க, மப்டி காவலர்களும் நியமிக்கப்பட்டி ருந்தாங்களாம். விழா தொடங் கும் முன்பாகக் கலைநிகழ்ச்சி கள் நடந்தபோது, முன் வரிசையினருக்கு மட்டுமே ரோஸ்மில்க் போன்ற குளிர் பானங்களும் விநியோகிக்கப் பட்டிருக்கு. மற்ற வரிசைகளுக்கு அதுவும் இல்லை.''

""குடியுரிமை திருத்தச் சட் டம்ங்கிற பேரில் ஒற்றுமையாக இருக்கும் இந்திய குடிமக்களுக் கிடையில் பிரிவினையை உண் டாக்கப் பார்ப்பது போல், குடியரசு தின விழாவிலும் பிரிவினையான்னு அங்கே போன தியாகிகள் நொந்துட்டாங்க.''’

""சரிப்பா... சாமியார் நித்தியானந்தா போனமுறை நாம பேசுன அதே நாட்டில்தான் இருக்காரா? அங்கிருந்தும் எஸ்கேப்பா?''’

Advertisment

""பெலிக்ஸ் நாட்டு பாஸ் போர்ட்டை வாங்கிய நித்தி, தீவிரமாகத் தன்னைத் தேடுவதை அறிந்து அங்கிருந்தும் எஸ்கேப் ஆயிட்டாராம். மடகாஸ்கர், கரீபியன் தீவுக் கூட்டங்களில் ஓடி ஓடிப் பதுங்கினாலும், அவரைப் பிடிச்சே ஆகணும்ங்கிற வேகத்தில் இருக்குது மத்திய புலனாய்வுத்துறை. நித்தி பதுங்கி யிருக்கும் இடத்தை கண்டு பிடிக்க, நித்தியின் ஆமதாபாத் ஆசிரமத்தைக் கவனிச்சிக்கிட்டு இருந்த அவரது பெண் சீடரான மா நித்ய அசலானந்தாவை, குஜராத் போலீஸ் டீம் மூலம் தூக்கிய விசாரணை டீம், அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரிச்சிக்கிட்டு இருக்குதாம். இந்த நிலையில், பிடதி ஆசிரமம் தொடர்பான வழக்குகளில் 43 வாய்தாக்களில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்த நித்தியின் பெயிலை, ரத்து செய்யணும்ன்னு, அவரது முன்னாள் சீடரான லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கு நேர்மையான நீதிபதின்னு பெயரெடுத்த மைக்கேல் டி குன்ஹாவிடம் வந்திருக்கு. ஆணானப்பட்ட ஜெயலலிதா வுக்கே சட்டத்தின்படி ஆப்பு வச்சவர் குன்ஹா என்பதால், இவரிடமிருந்து தப்பிக்க முடி யாதேன்னு நித்தித் தரப்பு ரொம் பவே மிரண்டு போயிருக்குதாம்.''’

""துணை முதல்வர் ஓ.பி. எஸ். தரப்பும் நீதிமன்ற பீதியில் இருக்குதாமே?’''

""2017 ல் நடந்த மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் காங் கிரஸ் கட்சி ஜெயித்தும் கூட, அந்தக் கட்சி எம்.எல்.ஏ. ஷியாம் குமாரைக் கவர்ந்து, ஆட்சிக் கட்டிலில் உட்கார்ந்துவிட்டது பா.ஜ.க. அதனால் ஷியாம் குமா ரின் பதவியைப் பறிக்கவேண்டும் என்று அப்போது காங்கிரஸ் எழுப்பிய புகார், சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மீண்டும் இது பற்றி மணிப்பூர் சபாநாயகரிடம் முறையிடவேண்டும் என்றும் அவர் நான்கு வாரத்தில் தன் தீர்ப்பை அறிவிக்க வேண்டும் என்றும் தீர்ப்புரைத்ததோடு, இது போன்ற தருணங்களில் சபாநாய கர்களின் அதிகார வரம்பை, மத்திய அரசு வரையறுக்க வேண்டும் என்றும் ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கு. இது தமிழகத்திலும் அரசியல் ரீதியிலான மிக முக்கிய உத்தர வாகப் பார்க்கப்படுது.''

""முக்கியமானதாச்சே...''

aa

""தமிழகத்தில் ஓ.பி.எஸ். தரப்பைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க் கள், எடப்பாடி அரசு கொண்டு வந்த நம்பிக்கைத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தபோது, அவர் கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உச்சநீதி மன்றம் போயிருக்கும் தி.மு.க., அதே நீதிமன்றத்தின் இப்போ தைய மணிப்பூர்த் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, நீதி கேட்டிருக் கிறது. தி.மு.க.வின் இந்த அதிரடி மூவ், ஓ.பி.எஸ். தரப்பை கலக்கமடைய வைத்திருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் தீவிரமாக டிஸ்கஷன் செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் மத்திய அரசின் சப்போர்ட் தங்களுக்கு உதவிகர மாக இருக்கும் என்பதால், அவர்கள் டெல்லியைத் தொடர்புகொண்டு பேசினார்கள். டெல்லியோ, "கவலை வேண்டாம். உங்கள் ஆட்சிக்காலம் முடிகிறவரை நீங்கள் பதவியில் இருப்பதில் சிக்கல் வராது. அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அதற்கேற்றபடி உங்கள் செயல்பாடும் இருக்க வேண்டும்' என்று கண்டிஷன் தொனிக்க, தைரியம் சொல்லியிருக்கிறது. எனினும், ஓ.பி.எஸ். தரப்பின் கலக்கம் முழுதாகத் தீரவில்லையாம்''’

""ரஜினி ஏரியா ஏக தெம்பில் இருக்கிற தாமே?''’

""மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சரும் ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒவருவருமான நிதின் கட்கரியை 26-ந் தேதி தொடர்புகொண்ட மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா, ரஜினி துணிவாகவும் தான் சொன்ன கருத்தில் உறுதியாகவும் இருக்கிறார். அவர் அழுத்த மான சொற்களைத்தான் எப்போதும் பிரயோ கிக்கிறார்’என்று ரஜினியைப் பாராட்ட, நிதின் கட்கரி, இதை ரஜினியிடமே சொல்லியிருக்கிறார். இதைக்கேட்டுப் பூரித்துப் போன ரஜினி, பெரியார் விமர்சன விவகாரத்தில் இன்னும் தெம்பாகிவிட்டாராம்.''

""மேலிட சப்போர்ட்டுங்கிற தெம்பு இருக்கிற வங்க எதை வேணும்னாலும் செய்யலாம்.''’

ds

""சரியா சொன்னீங்க தலைவரே, போன 25-ந் தேதி தேசிய வாக்காளர் தினத்தையொட்டி ஒரு நிகழ்ச்சியை சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக அரசு நடத்துச்சு. கவர்னர் மற்றும் மாநில தேர்தல் அதிகாரி உள்ளிட்ட பெரிய பெரிய அதிகாரிகள் கலந்துக் கிட்ட இந்த விழாவில் பேசிய தலைமைச் செயலாளர் சண்முகம், சில கட்சிகள் அரசியல் லாபங்களுக்காக சாதி, மதங் களைப் பயன்படுத்துவது அபாயகரமானதுன்னு சொன்னார். ஆளும் கட்சிக் கூட்டணியில் இருக்கும் பா.ம.க.வைத்தான் அவர் இப்படி ஜாடைமாடையாகக் குறிப்பிடறார்ன்னு மத்த அதிகாரிகள் திகைச்சிப் போயிட்டாங்க. அடுத் ததா அவர், ’இப்ப அதிகாரத்துக்கு வர்றதுக்காக அரசியல் கட்சிகள் விளம்பர யுத்தியைப் பயன்படுத்தும் சூழ்நிலை உருவாயிடிச்சி. அரசியல் ஆலோசகர்கள் என்று சிலர் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அரசியல் கட்சிகளுக்கு அதன் தொண்டர்களும் நிர்வாகிகளும் சொல்லா ததையா ஆலோசகர்கள் சொல்லிவிடப் போகிறார் கள்? மக்களுக்கு என்ன தேவை என்று அந்தக் கட்சிகள் மக்களிடமே போய்க் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இதற்கு ஆலோசகர் தேவையா?’ என்றார் அதிரடியாக. அண்மையில் தி.மு.க., தனது அரசியல் ஆலோசகராக, அரசியல் வியூக நிபுண ரான பிரசாந்த் கிஷோரை நியமித்ததையே தலை மைச் செயலாளர் இப்படிக் கிண்டல் செய் கிறார்ன்னு ஏனைய அதிகாரிகள் விறுவிறுப்பா தகவல்கலைப் பகிர்ந்துக்கிட்டதோடு, தலைமைச் செயலாளர் எதற்கு அரசியல் பேசணும்னும் தங்க ளுக்குள் சுடச்சுட விவாதிக்கவும் ஆரம்பிச்சிருக்காங்க''

""நானும் ஒரு முக்கியமான தகவலை உங்ககிட்டப் பகிர்ந்துக்கறேன். 5 ஆம் வகுப்புக் குப் பொதுத்தேர்வை நடத்தும் மத்திய- மாநில அரசுகளைக் கண்டித்து பா.ம.க. நிறுவனர் டாக் டர் ராமதாஸ், 28-ந் தேதி போராட்டம் நடத்தப் போவதாக, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந் தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான செங் கோட்டையனிடம், முதல்வர் எடப்பாடி அது குறித்து ஆலோசிச்சிருக்கார். வடமாவட்டங்கள்ல பா.ம.க.வின் ஒத்துழைப்பு நமக்குத் தேவை. அதனால் பொதுத் தேர்வை நிறுத்த முடியு மான்னு பாருங்கன்னு எடப்பாடி சொல்லியிருக் கார். செங்கோட்டையனோ, இந்த வருடத் தேர்வு அறிவிக்கப்பட்டுவிட்டது. யாரையும் இதில் பெயிலாக்கக் கூடாதுன்னு சொல்லி விட்டோம். இந்தத் தேர்வை அடுத்த ஆண்டு நடத்தாமல் இருக்க முடியுமான்னு முயற்சி பண்றேன்னு சொல்லியிருக்கார். இந்தத் தகவல் அரசுத் தரப்பில் இருந்து ராமதாஸுக்கு சொல்லப்பட, இதைத் தொடர்ந்தே போராட்ட ஒத்திவைப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்காம்.''