""ஹலோ தலைவரே, தேசமே நெருக்கடியான அரசியல் சூழல்ல இருக்கும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு அடுத்த தலைவர் யாருங்கிற கேள்வி எல்லா மட்டத்திலும் எழுந்திருக்கு.''’
""ஆமாம்பா. பல மாநிலங்களிலும் ஆட்சி அதிகாரத்தை பா.ஜ.க. கைப்பற்றியிருக்கும் நிலையில், பா.ஜ.க.வை சமாளிக்கக்கூடிய வலிமையை காங்கிரஸ் கட்சி இழந்து வருதுன்னு அதன் இமேஜ் டேமேஜ் ஆகிக்கிட்டு இருக்கே. அதை அந்தக் கட்சி சரிசெய்ய வேண்டாமா?''’
""உண்மைதாங்க தலைவரே, ராகுல் ராஜினாமா செய்த பிறகு, அகில இந்திய காங்கிரஸுக்கு இன்னும் தலைவர் தேர்ந்தெடுக்கப் படலை. தற்காலிக தலைவராகத்தான் சோனியாகாந்தி பொறுப்பு வகிக்கிறார். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி சோனியாவுக்குப் பிறந்தநாள் என்பதால், அவருக்கு வாழ்த்து தெரிவிக்க கட்சியின் சீனியர் தலைவர்களான மன்மோகன்சிங், அகமதுபடேல், கபில்சிபில், அபிசேக் சிங்வி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் போயிருந்தனர். அவர்களுடன் இன்றைய அரசியல் நெருக்கடிகள் குறித்து சீரியசாக ஆலோசனை செய்திருக்கிறார் சோனியா. அப்போது, விரைவில் கட்சிக்குப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கனும். தற்காலிக தலைவரே கட்சியை நடத்துவது ஆரோக்கிய மானதல்லன்னு சோனியா சொல்ல, நீங்களே மீண்டும் கட்சியின் தலைவரானால்தான் காங்கிரஸ் தொண்டர்களுக்கு உற்சாகம் பிறக்கும்ன்னு சீனியர்கள் வேண்டுகோள் வச்சிருக்காங்க. சோனியாவோ, தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அதை மறுத்ததோடு, தலைவர் பதவிக்கு ப.சிதம் பரத்தைத் தேர்ந்தெடுக்கலாமேன்னு தன் ஆலோசனையைச் சொல்லியிருக்கார். இதைக்கேட்ட சீனியர் லீடர்கள், இது குறித்து காரியக் கமிட்டியை கூட்டி முடிவெடுக்கறது தான் சரியாக இருக்கும். அதற்குமுன் ராகுலின் கருத்தையும் தெரிஞ்சிக்கணும்னு சொல்லி யிருக்காங்க. அதனால் விரைவில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்கு வந்திருக்கிறது காங்கிரஸ். திகார் சிறைக்குச் சென்று திரும்பிய பிறகு ப.சி. மீதான பார்வை தேசிய அளவில் பதிந்திருப்பதால் ரேஸில் அவர் முன்னிலையில் இருக்காராம்.''’
""தேசிய அளவில் தமிழர் ஒருவர் கவனிக்கப்படும் நிலையில், தமிழக காங்கிரஸில் இருந்து கட்சியின் சீனியர் ராயபுரம் மனோ விலகி யிருக்காரே?''’
""தலைவரே, 30 ஆண்டுகால சீனியரான ராயபுரம் மனோ, காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்திருப்பது, அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கு. அவர் தனக்கும் தன் ஆதரவாளர் களுக்கும் காங்கிரஸில் சில பதவிகளை எதிர்பார்த் திருந்த நிலையில், அவர் தரப்பு புறக்கணிப்பட்டே வந்திருக்கு. இதில் அப்செட்டானதால்தான் மனோ ராஜினாமா செய்திருக்கிறார்ன்னு அவர் தரப்பே சொல்லுது. சென்னையில் காங்கிரஸுக்கு முக்கியமான தூணாக இருந்தவர்கள் கராத்தே தியாகராஜனும் ராயபுரம் மனோவும்தான். இவர்களில் கராத்தேயை, தற்காலிகமாக நீக்கி வைத்திருக்கிறது காங்கிரஸ். இதில் கோபமான கராத்தே மீண்டும் காங்கிரசில் சேரமாட்டேன்னு சொல்லிவிட்டார். இந்த நிலையில் மனோவும் ராஜினாமா செய்திருப்பது காங்கிரஸுக்கு வீக் என்கிறார்கள் அக்கட்சியினரே. இந்த நிலையில் தி.மு.க.வில் இணைவதற்கான முயற்சியை எடுத்திருக் கிறாராம் மனோ. இவருக்காக ஸ்டாலினிடம் தி.மு.க. மா.செ.வான சுதர்சனம் பேசிக்கொண்டிருப்பதாகவும் தகவல். இதற்கிடையே மனோவை பா.ம.க.வுக்குக் கொண்டு செல்லவும் ஒரு முயற்சி நடக்குது.''’
""உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கான சீட் ஷேரிங்கை முடிக்காமல் அ.தி.மு.க. இழுத்தடிச்சிகிட்டிருந்ததே?''’
""இதுபற்றி நம்ம நக்கீரனில் தனி கட்டுரையே வருது. இருந்தாலும் எனக்குத் தெரிஞ்சதை உங்களுக்குச் சொல்றேன். அ.தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை, அதுக்கு பா.ஜ.க.வே தலைமை வகிக்கணும்னு நினைக்குது. அதனால் முதல்வர் எடப்பாடி யிடம் பா.ஜ.க. சார்பில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ்கோயல், நம்ம கூட்டணிக்கு இனி பா.ஜ.கதான் தலைமை வகிக்கும். அதனால் உள்ளாட்சித் தேர்தலுக்கான சீட் ஷேரிங்கையும் நாங்களே நடத்த இருக்கிறோம். இங்கே உங்களுக்கு 52 சதவீத சீட்டுகளை ஒதுக்கறோம். மீதமுள்ள 48 சதவீத சீட்டுக்களையும் நம் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நாங்களே பிரிச்சிக் கிறோம்ன்னு அதிரடியா சொல்லியிருக்கார். இதைக்கேட்டு அதிர்ந்துபோன எடப்பாடி, எங்களுக்கு 65 முதல் 75 சதவீத சீட் வேணும். மிச்சத்தை நீங்க என்ன வேணும்னாலும் பண்ணிக்கங்கன்னு சொல்லியிருக்கார். இதுக்கு பா.ஜ.க. தரப்பு உடன்படலை. அதுக்குப் பதிலா, அ.தி.மு.க. அமைச்சர்கள் உள்பட ஆளுந்தரப்பில் பலர் மீது புகார்கள் இருக்கு. ரெய்டுகள், கைதுகள்னு இல்லாமப் பார்த்துக்கங்கன்னு சொல்லப்பட்டிருக்கு. இதனால் அ.தி.மு.க. தரப்பு வெலவெலத்துப் போயிருக்குதாம். மேயர், நகராட்சித் தலைவர்கள் பற்றியெல்லாம் எதுவும் பேசப்படலையாம்.''’
""உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. உரசல் ஒருபக்கம்னா, அ.ம.மு.க. தினகரனுக்கு சின்னம் விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி வசமா செக் வச்சிருக்காரே?''’
""சரியா சொன்னீங்க தலைவரே, இந்திய தேர்தல் ஆணை யத்தில் அ.ம.மு.க. கட்சியைப் பதிவு செய்த குஷியோடு, உள்ளாட்சித் தேர்த லுக்குத் தனிச் சின்னம் வாங்க முயற்சி செய்தார் தினகரன். காரணம் ஏறத்தாழ 6 ஆயிரம் உள்ளாட்சிப் பதவிகளுக்கு அந்தச் சின்னத்தைக் கட்சியின் பொதுச் சின்னமாக்கி, அ.தி.மு.க.வோடு மோதிப் பார்க்க லாம்ன்னு அவர் நினைச்சிருந்தாரு. ஆனால் எடப்பாடியோ தினகரன் குக்கர் அல்லது பரிசுப்பெட்டி சின்னத்தைத்தான் கேட்பார்ன்னு தெரிஞ்சிக்கிட்டு, மாநில தேர்தல் ஆணையத்தின் லிஸ்டில் இந்த ரெண்டு சின்னமும் இல்லாதபடி செய்து, தினகரன் தரப்புக்கு எடுத்த எடுப்பிலேயே ஹைவோல்ட் அதிர்ச்சி கொடுத்துவிட் டார். இந்த நிலையில், அ.ம.மு.க.வுக்கு தனியாக ஒரு பொதுச்சின்னத்தை எங்களால் ஒதுக்கமுடியாது. இதற்கு அகில இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தைத்தான் அணுக வேண்டும்னு 11-ந் தேதி மாலை மாநிலத் தேர் தல் ஆணையமும் தன் பங்கிற்கு ஷாக் கொடுத்தது. இதன்படி தலைமைத் தேர்தல் ஆணையத்தை அணுகி தனிச் சின்னத்தை வாங்க கால அவகாசம் இல்லாததால், அந்த 6 ஆயிரம் உள்ளாட்சிப் பதவிகளுக்கும் சுயேட்சையாகப் போட்டியிடும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் தினகரன். இதில் அவர் ரொம்பவே அப்செட்டில் இருக்கிறாராம்.''’
""நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மோடி அரசு பிடிவாதமா நிறைவேற்றிவிட்டதே?''’
""பெரும்பான்மை பலம் இருக்குங்கிற தைரியத்தில் விரும் பிய எதையும் சாதிச்சிக்கலாம்ன்னு செயல்படுது மோடி அரசு. அகில இந்திய அளவில் இருக்கும் அத்த னை எதிர்க்கட்சிகளும் எதிர்த்தும், பிடிவாதமாக இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவையி லும் நிறைவேற்றிவிட்டது பா.ஜ.க. தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க. தவிர தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவைக் கடுமையா எதிர்க்குது. இது தொடர்பாகவும் ஒரு தனிக் கட்டுரை நம்ம நக்கீரனில் விரிவாவே இடம்பெறுது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் வந்தபோது, தி.மு.க.வின் நாடாளுமன்றக் குழுத் தலைவரான டி.ஆர்.பாலு, இந்த மசோதாவை எதிர்த்துக் காரசார மாகப் பேசியதோடு, எங்கள் அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில் வெளிநடப்பு செய்கிறோம்ன்னு அறிவிச்சார். இதைத் தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தாங்க. அங்கிருந்து சோனியாவுக்கு பிறந்தநாள் வாழ்த் துச் சொல்ல அவர்கள் சென்றபோது, இந்த மசோதா பற்றிய கவலையை அவர்களிடம் பகிர்ந்துகொண்ட சோனியா, நீங்கள் வெளிநடப்பு செய்ததோடு குடியுரிமை மசோதாவை எதிர்த்து வாக்களியுங்கள்னு கேட்டுக்கிட் டார். நாங்கள் உறுதியாக எதிர்த்து வாக்களிப் போம்ன்னு சோனியாவிடம் சொன்ன தி.மு.க. எம்.பி.க்கள், அதன்படியே செய்தனர். இதில் மசோதாவுக்கு ஆதரவாக 311 வாக்குகளும், எதிர்ப்பாக 80 வாக்குகளும் லோக்சபாவில் பதிவாயின. தி.மு.க. சார்பில் பேசிய மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நோக்கி வைத்த வாதங்கள் முரசொலி மாறனை நினைவுபடுத்துற மாதிரி இருந்தது.''’
""என்னதான் தி.மு.க. உள்ளிட்ட தமிழக கட்சிகள் எதிர்த்தாலும் ராஜ்யசபாவில் இந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதா வெற்றிபெறக் காரணமே அ.தி.மு.க. தானே?''’
""உண்மைதாங்க தலைவரே, இந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் படி ஈழத் தமிழர்களுக்கு இங்கே குடியுரிமை மறுக்கப்படுது. இந்துக்களாக இருந்தாலும் ஈழத்தமிழர்களுக்கான உரிமை மறுக்கப்படுது. முஸ்லிம்களை சுத்தமா இந்த மசோதா ஒதுக்கிடுது. இதனால் அவர்கள் பெரும் நெருக்கடியை சந்திக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கு. அதனால் இப்படிப்பட்ட குடியுரிமை மசோதாவை எதற்காக அ.தி.மு.க. ஆதரிக்கணும்னு தமிழ் ஆர்வலர்களும் சிறுபான்மைச் சமூகத்தினர்களும் கொந்தளிக்கிறாங்க. இது பச்சைத் துரோகம்ன்னு ஹாட்டாவே விமர்சிக்கிறாங்க. முஸ்லிம்களுக்கு சிக்கலை உண்டாக்கும் இந்தத் தீர்மானத்தை, முஸ் லிம் சமூகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் எம்.பி.யான முகமது ஜானும் ஆதரித்து வாக்களித்ததுதான் கொடுமை. ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத முதல்வர் எடப்பாடி, நாம் ஆதரிக்காட்டி ராஜ்யசபாவில் இந்த குடியுரிமை மசோதா தோத்துப் போயிருக்கும்னு பெருமிதம் பொங்க மார்தட்டிக்கிறாராம். அ.தி.மு.க.வினர் எதிர்த்து வாக்களித்திருந்தால் 2 ஓட்டுகளில் மசோதா தோல்வியடைந்திருக்கும். ஆனால், பா.ஜ.க.வின் பிடியில் இருக்கும் போது அவர்களால் எப்படி எதிர்த்து வாக்களித்திருக்க முடியும்?''’
""எஜமானர்களை சமாளிப்பதில் கைதேர்ந்தவரான முதல்வர் எடப்பாடிக்கு அவரோட அமைச்சரவையில் உள்ள ராஜேந்திர பாலாஜியுடன் முட்டிக்கிச்சாமே?''’
""ஆவின் நிர்வாகம் நாள்தோறும் கொள்முதல் செய்ய்யும் பாலில், 7 ஆயிரம் லிட்டர் வரை உபரியாக மிஞ்சுதாம். இந்த உபரிப் பாலை பால் பவுடராக மாற்றிவிடலாம் என்று அதிகாரிகள் சிலர் சொல்ல, பவுடருக்கு மார்க்கெட் குறைவுன்னு இன்னொரு தரப்பு அதிகாரிகள் சொல்லியிருக்காங்க. அதனால், உபரிப் பாலை வெளியே விற்க லாம்ன்னு முடிவாயிருக்கு. இந்த உபரிப் பாலை நான் சொல்லும் நபர்களிடம் டெண்டர் விடுங்கள்னு பால்வளத் துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜி, சுய லாபக் கணக்குப் போட்டு வலியுறுத்த ஆரம்பிச் சிருக்கார். அவருக்கு இசைவாக இருந்த ஆவின் எம்.டி.யான காமராஜ் மாற்றப்பட்டு, இப்போது வந்திருக்கும் புதிய எம்.டி.யான வள்ளலாரோ, அமைச்சரின் முடிவை ஏற்க மறுத்ததோடு, அதை முதல்வர் எடப்பாடியின் கவனத்துக்குக் கொண்டு போயிருக்கார். இதைக்கேட்டு பாலாய்ப் பொங்கிய எடப்பாடியோ, திருட்டுப் பூனைகள் பாலைக் குடிச்சிடாம இ-டெண்டர் விட்டுடுங்கன்னு கறாராகச் சொல்லிவிட்டாராம். இதையறிந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எடப்பாடிக்கு எதிராக ருத்திர தாண்டவம் ஆடியதோடு, நான் யாருன்னு கூடிய விரைவில் காட்டறேன்னு பொருமிக்கிட்டு இருக்காராம்.''’
""நானும் ஒரு முக்கியமான செய்தியைப் பகிர்ந்துக்கறேன்ப்பா. சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கான குத்தகை பாக்கியாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தமிழக அரசுக்கு 2500 கோடி ரூபாய்வரை வைத்திருப்பது குறித் தும், இந்தத் தொகையை குறைக்க சேலத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் மூலம் முதல்வர் எடப்பாடியிடம் டீலிங் நடப்பது குறித்தும் நாம் ஏற்கனவே பேசியிருக்கோம். டீலிங் வெயிட்டாக நடந்து முடிந்ததால், இப்போது ஸ்டேடியத்தின் குத்தகைக் காலத்தை தமிழக அரசு மேலும் 21 ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொடுத்திருக் கிறது. முதல்வருக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஸ்பெஷலா நன்றி தெரிவிச்சிருக்குது. மைதானத்தை மையமாக வைத்து நடந்திருக்கும் பேர விளையாட்டைக் கண்டு கோட்டை வட்டாரமே சிரிக்கிறதாம்.''’