விஜய்க்கும் ஆதவ் அர்ஜுனாவுக்கும் இடையே மிகக் கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. இதைப்பற்றி லாட்டரி அதிபர் மார்ட்டின், முதல்வர் மு.க.ஸ்டாலினிடமே சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார் என்கிறது த.வெ.க. வட்டாரங்கள். விஜய் நடத்திய பொதுக் குழுவில் கரூரில் இறந்த 41 பேர் புகைப்படமும் மேடையில் வைக்கப்பட வேண்டும். பொதுக்குழு அரங்க வாசலில் வைக்கப்படும் இறந்தவர்களின் புகைப்படங்களுக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தவேண்டும். பொதுக்குழு மேடையில் விஜய் அஞ்சலி செலுத்த வேண்டும். அவர்களின் குடும்பத் தினரை பொதுக்குழுவுக்கு அழைத்து நடிகர் விஜய்க்கும் கரூர் மரணங்களுக்கும் தொடர்பில்லை என பேசவைக்க வேண்டும். ஊடகங்களுக்கு அவர்கள் மூலமாகவே பதில் சொல்ல வைக்க வேண்டும்' என அருண்ராஜும், வியூக அமைப்பாளர் ஜான் ஆரோக்கியமும் திட்டமிட்டார்கள். 

Advertisment

இதுபற்றி ஒரு பெரிய விவாதம் புஸ்ஸி ஆனந்த் மற்றும் புதிய செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரிடம் நடத்தப்பட்டது. தொலைபேசியில் நடந்த இந்த விவாதத்திற்கு ஆதவ் அர்ஜுனா மட்டும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார். அவரது எதிர்ப்பு விஜய்யிடம் கொண்டுசெல்லப்பட்டது. அதைப்பற்றி விஜய் ஒன்றும் கருத்து சொல்லவில்லை. கரூரில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு, பொதுக் குழுவிற்கு வருபவர்கள் மரியாதை செலுத்தும் நிகழ்வையும் அவர்களின் படங்களுக்கு விஜய் அஞ்சலி செலுத்தும் நிகழ்வையும் பொதுக்குழுவுக்கு மொத்தமாக செலவு செய்து ஏற்பாடுகள் செய்த ஆதவ்அர்ஜுனா தவிர்த்து விட்டார். இந்த சம் பவமும் விஜய்யின் கவனத்திற்கு கொண்டுசெல்லப் பட்டது. அதை நான் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறியவர், அவரது பேச்சு முழுவதையும் பதினைந்து நிமிடம் கரூர் சம்பவத்தைப் பற்றி மட்டுமே பேசி, கரூர் சம்பவம் எவ்வளவு முக்கியம் என்பதை விஜய் உணர்த்தி விட்டார். 

Advertisment

அதேபோல பொதுக்குழு தீர்மானங்களை விஜய்யின் வியூக அமைப்பாளர் ஜான் ஆரோக்கியம் எழுதினார். அந்தத் தீர்மானங்களில் ஒன்றிய அரசை எதிர்த்து ஒன்றிய அரசின் நஒத நடவடிக்கைகளை விமர்சித்து தீர்மானங்கள் எழுதப்பட்டன. அதற்கும் ஆதவ்அர்ஜுனா எதிர்ப்புத் தெரிவித்தார். அதை விஜய் கண்டுகொள்ளவில்லை. ஆதவ்வின் எதிர்ப்பை மீறி மீனவர் பிரச்சினையில் ஒன்றிய அரசு சரிவர நடந்துகொள்ளவில்லை என ஜான்ஆரோக்கியம் அவர் எழுதிய தீர்மா னத்தில் குறிப்பிட்டார். அருண்ராஜை பொதுக் குழுவில் ஒன்றிய அரசை எதிர்த்து  கடுமையாகப் பேசவைத்தார் ஜான். அருண்ராஜ் பேசுவதையும் விஜய் கண்டுகொள்ள வில்லை. விஜய்யை மேடையில் வைத்துக் கொண்டே ஒன்றிய அரசு இஸ்லாமியர்களுக்கு எதிராக ஈஆஆ சட்டம் கொண்டுவந்தது. வாக்குப் பட்டியலில் திருத்தம் என்று நஒத நடவடிக்கை களை எடுக்கிறது என மக்கள் விரோத பா.ஜ.க. அரசு என ஒரு பிடி பிடித்தார் அருண்ராஜ். 

ஆனால், ஆதவ்அர்ஜுனா அவரது பேச்சில் எந்த இடத்திலும் மத்திய அரசை எதிர்க்கவில்லை. விஜய் கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து தி.மு.க.விற்கு ஓட்டுப் போட்டார் என ஆதவ் சொன்னதையும் விஜய் ரசிக்கவில்லை. கலைஞர் கைதின்போது ஸ்டாலின் ஓடி ஒளிந்தார்... அன்பில் மகேஷ், செந்தில்பாலாஜி,  உதயநிதி ஆகி யோரை கடுமையான சொற்களில் ஆதவ் பேசியதோடு செந்தில் பாலாஜியை ரவுடி என வர்ணித்து அடுத்த ஆறு மாதத்தில் அவர்களுக்கு பாடம் புகட்டுவதாக ஆதவ் சொன்னதையும் விஜய் ரசிக்கவில்லை. விழா முடிந்தவுடன் இவன் அதிகமாகப் பேசுகிறான் என ஆதவ்வை எகிறியிருக்கிறார் விஜய். கடந்த ஒரு வாரமாகவே ஆதவ்வுக்கும், விஜய்க்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லை. 

Advertisment

ஆதவ் நேரடியாக எடப் பாடியிடம் பேசுகிறார். “ஆதவ்வுக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை. ஆதவ் பேசுவதை சீரியஸாக எடுத்துக் கொள்ள முடியாது”என எடப்பாடி தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்கிறார் என்கிறது விஜய் தரப்பு. ஆதவ்வுக்கு அவர் கேட்ட எம்.பி. சீட்டை தி.மு.க. தரவில்லை. அதற்காக அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குப் போனார். அங்கும் அவருக்கு எம்.பி. சீட் கொடுக்கவில்லை என்பதால், நான் யார் எனக் காட்டுகிறேன் என தி.மு.க.விற்கு பாடம் புகட்டும் வன்மம்தான் ஆதவ்விடம் இருக்கிறது. அவர் செலவு செய்யும் தொகை என்பது, அவரும் அவரது மனைவியும் நடத்தும் தனியார் வங்கியிலிருந்து எடுத்து செலவு செய்யப்படுவது என்பதும் பிரச்சினை தான் என்பது ஆதவ் பற்றிய அ.தி.மு.க.வின் கணிப்பு. இந்த வங்கி செய்தி தி.மு.க. பக்கமும் போக, ஆதவ்வின் செயல்பாடுகளுக்கு காரணம் லாட்டரி மார்ட்டினின் ஊக்குவிப்புதான் என முடிவு செய்த தி.மு.க., மார்ட்டினின் மகன் சார்லஸ் புதுச்சேரியில் முதலமைச்சராக முயற்சி செய்வதை எதிர்த்து, ஜெகத்ரட்சகனை பாண்டிச்சேரியில் களமிறக்கியது. புதுச்சேரியில் தி.மு.க. ஆட்சி அமையுங்கள், நீங்கள் முதல்வர் ஆகுங்கள் என ஜெகத்துக்கு அசைன்மெண்ட் கொடுத்து மார்ட்டினுக்கு தி.மு.க. செக் வைத்தது. 

ஆதவ்வின் செயல்பாடுகளால் தி.மு.க.வின் எதிரியாவதை மார்ட்டின் விரும்பவில்லை. அவர் தனது நேரடித் தொடர்புகள் மூலம்  முதல்வர் ஸ்டாலினிடம் பேசினார். ஆதவ்வின் தி.மு.க. எதிர்ப்பு வன்மத்துக்கும், எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் ஆதவ்வுடன் பேசியே பல மாதங்கள் ஆகிவிட்டன. அவன் எனது மகளை ஏமாற்றி பணத்தை வாங்கி கூத்தடித்துக் கொண்டிருக்கிறான் என லாட்டரி மார்ட்டின் முதல்வரிடம் சரணாகதியடைந்தார் என தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. ஆனாலும் முதல்வர் ஸ்டாலின், ஜெகத்ரட்சகனின் புதுச்சேரி ஆபரேஷன்களுக்கு ஓ.கே. சொல்லிவிட்டார். அதைப்பற்றி ராகுல்காந்தியிடமும் பேசி ஒப்புதலும் வாங்கிவிட்டார் என்று தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய்க்கும், ஆதவ்வுக்கும் இடையே பொதுக்குழு முடிந்ததும் பெரிய சண்டை வெடித்திருக்கிறது. அப்போது விஜய் "வாடா போடா' என்று பேசி ஆதவ்வை தெறிக்கவிட்டார் என்கின்றனர் த.வெ.க. பொதுக்குழுவினர்.