Advertisment

நக்கீரன் முன்னெடுப்பில் உலக சாதனை! ஐம்பொன் நடராஜர் சிலை!

sss

கும்பகோணம் அருகே உள்ள திம்மக்குடி கிராமத்தில், 23 அடி உயர பிரம்மாண்ட ஐம்பொன் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு, செப்டம்பர் 12ஆம் தேதி, திங்கட்கிழமை நடைபெற்ற பூர்த்தி விழாவில், இந்த சிலை வடிவமைப்பதற்கு தொடக்கத்திலேயே நிதியுதவி செய்து ஆதரவளித்த நக்கீரன் ஆசிரியர் அவர்களுக்கும், தொடர்ந்து சிலை முற்றுப்பெற பெருமளவு நிதியுதவி அளித்த வேலூர் சக்தி அம்மா நாராயணி பீடத்தின் டிரஸ்டிக்கும், சிலையின் வடிவமைப்பாளர்களுக்கும், தெலுங்கானா & புதுச்சேரி ஆளுநர் திருமதி.தமிழிசை சவுந்தரராஜன் சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

Advertisment

ff

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திம்மக்குடி கிராமத்தில், வரதராஜன் என்பவர், கடந்த 25 ஆண்டுகளாக சிற்பச்சாலை ஒன்றை நடத்திவருகிறார். இவர் தனது கைவண்ணத்தில், இந்தியாவிலுள்ள பல மாநிலங்களுக்கும், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடவுள் சிலைகளை வடிவமைத்துக் கொடுத்துள்ளார். இவருக்கு, உலகின் மிகப்பெரிய ஐம்பொன் ஆனந்தத் தாண்டவ நடராஜர் சிலையை உருவாக்க வேண்டுமென்ற ஆர்வம் நீண்டகாலமாக இருந்துவந்தது. ஏற்கெனவே இவர் செய்துகொடுத்த 11 அடி உயர நடராஜர் சிலையே உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலையாக இருந்த நிலையில், அந்த சாதனையை அவரே முறியடிக்க விரும்பினார்.

அவர் விரும்பிய உலக சாதனை ஐம்பொன் நடராஜர் சிலையை வடிவமைப்பதற்கான செலவுகள் அதிகமாக இருக்கவே அதற்கு உதவக்கூடிய ஸ்பான்சரை தேடியலைந்துள்ளார். அத்தருணத்தில், நக்கீரன் ஆசிரியரைச் சந்தித்த வரதராஜன், தனது எண்ணத்தை வெளிப்படுத்த, நடராஜர் சிலை உ

கும்பகோணம் அருகே உள்ள திம்மக்குடி கிராமத்தில், 23 அடி உயர பிரம்மாண்ட ஐம்பொன் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு, செப்டம்பர் 12ஆம் தேதி, திங்கட்கிழமை நடைபெற்ற பூர்த்தி விழாவில், இந்த சிலை வடிவமைப்பதற்கு தொடக்கத்திலேயே நிதியுதவி செய்து ஆதரவளித்த நக்கீரன் ஆசிரியர் அவர்களுக்கும், தொடர்ந்து சிலை முற்றுப்பெற பெருமளவு நிதியுதவி அளித்த வேலூர் சக்தி அம்மா நாராயணி பீடத்தின் டிரஸ்டிக்கும், சிலையின் வடிவமைப்பாளர்களுக்கும், தெலுங்கானா & புதுச்சேரி ஆளுநர் திருமதி.தமிழிசை சவுந்தரராஜன் சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

Advertisment

ff

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திம்மக்குடி கிராமத்தில், வரதராஜன் என்பவர், கடந்த 25 ஆண்டுகளாக சிற்பச்சாலை ஒன்றை நடத்திவருகிறார். இவர் தனது கைவண்ணத்தில், இந்தியாவிலுள்ள பல மாநிலங்களுக்கும், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடவுள் சிலைகளை வடிவமைத்துக் கொடுத்துள்ளார். இவருக்கு, உலகின் மிகப்பெரிய ஐம்பொன் ஆனந்தத் தாண்டவ நடராஜர் சிலையை உருவாக்க வேண்டுமென்ற ஆர்வம் நீண்டகாலமாக இருந்துவந்தது. ஏற்கெனவே இவர் செய்துகொடுத்த 11 அடி உயர நடராஜர் சிலையே உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலையாக இருந்த நிலையில், அந்த சாதனையை அவரே முறியடிக்க விரும்பினார்.

அவர் விரும்பிய உலக சாதனை ஐம்பொன் நடராஜர் சிலையை வடிவமைப்பதற்கான செலவுகள் அதிகமாக இருக்கவே அதற்கு உதவக்கூடிய ஸ்பான்சரை தேடியலைந்துள்ளார். அத்தருணத்தில், நக்கீரன் ஆசிரியரைச் சந்தித்த வரதராஜன், தனது எண்ணத்தை வெளிப்படுத்த, நடராஜர் சிலை உருவாக்கத் திருப்பணிக்கு தானே நிதியுதவி செய்வதாகச் சொல்ல, வரதராஜன் மிகுந்த மகிழ்ச்சியோடு உடனே சிலை செய்வதற்கான பணியில் இறங்கியிருக்கிறார். 2010-ல் தொடங்கிய இந்த திருப்பணி, விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்க செலவுத்தொகை திட்டமிட்டதைவிட அதிகரிக்கத் தொடங்கியது. எனவே இந்த அருட்பணியில் அடுத்ததாக, வேலூர் நாராயண சக்தி பீடத்தினரும் இணைந்து ஒத்துழைக்க, கிட்டத்தட்ட பத்தாண்டு கால உழைப்பில், 23 அடி உயரம், 15,000 கிலோ எடை கொண்ட உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை மிகச்சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டது. பிரமாண்ட ஐம்பொன் நடராஜர் சிலைக்கு கடந்த திங்கள் மாலையில் திம்மக்குடியில் நடைபெற்ற பூர்த்தி விழாவில் அபிஷேகம் நடைபெற்றது. இதில், தெலுங்கானா & புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், நக்கீரன் ஆசிரியர், வேலூர் நாராயண பீடத்தின் டிரஸ்டி சுரேஷ் பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisment

dd

நக்கீரன் ஆசிரியரின் தொடக்க கால உதவியை அன்புடன் நினைவு கூர்ந்த சிற்பி வரதராஜன், "நாங்கள் கோவில்களுக்கும், பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும், பஞ்சலோக விக்கிரகங்களையும், சிலைகளையும் செய்துவருகிறோம். கோனேரி ராஜபுரம் என்ற ஊரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செய்த எட்டடி உயர நடராஜர் சிலைதான் உலகிலேயே பெரிய நடராஜர் சிலையாக இருந்தது. நாங்கள், 2003ஆம் ஆண்டில், 11 அடி உயரத்துக்கு நடராஜர் சிலையைச் செய்து, இந்திய அரசின் அனுமதியுடன் ஸ்விட்சர்லாந்து நாட்டிலுள்ள அணு ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பினோம். இந்தியாவின் சார்பாக, அப்துல்கலாம் ஐயாவின் மூலமாக அந்த நடராஜர் சிலை வழங்கப்பட்டது. நானும் என் தம்பியும் அங்கே சென்று, அந்த சிலையை நிறுவிவிட்டு வந்தோம். நம்முடைய நாட்டில் பல்வேறு தலைவர்களின் சிலைகள் பிரமாண்டமாக இருந்தாலும், சிற்பத்துக்கே ராஜாவான நடராஜரின் சிலை பெரிதாக எங்கும் இல்லை. கடவுள் சிலைகள், தனித்தனி ஜாய்ன்டாக இல்லாமல் ஒரே வார்ப்பாகச் செய்யப்பட்டால்தான் ஆகம விதிப்படி பவர்ஃபுல்லாக இருக்கும். எனவே 23 அடி உயரத்தில் ஒரே வார்ப்பாக நடராஜர் சிலையைச் செய்யத் தீர்மானித்து, திட்டமிட்டு அப்பணியில் இறங்கினோம்.

dddd

இந்த சிலைக்கான செலவுகளை ஏற்றுக் கொள்ள ஸ்பான்சர்களைத் தேடியபோது, 2010ஆம் ஆண்டில் நக்கீரன் கோபால் அண்ணனைச் சந்தித்தோம். நான் அவரிடம் வேறொரு ஸ்பான்ச ருக்காகத் தேடிப் போனபோது, "நீங்க ஏன் தேடி அலையறீங்க, இந்த திருப்பணிக்காக நானே நிதியுதவி கொடுக்கிறேன்' என்று மனமுவந்து ஏத்துக்கிட்டாங்க. அவங்க நிதி உதவியால்தான் இந்த அரும்பணியை முதலில் தொடங்கினோம். அதற்கடுத்ததாக, சக்தி அம்மா, நாராயணி பீடத்தின் அறிமுகம் கிடைத்தது. அதன்பின்னர் அவங்களும் இணைந்து ஊக்கப்படுத்தியதில் நல்லபடியாக எங்கள் பணி நிறைவடைந்துள்ளது. தற்போது அதற்கான பூர்த்தி விழாவில் தெலுங் கானா & புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் கலந்துகொண்டார்கள். சிலைக்கு முதல் அபிஷேகம் அவர்களின் கையால் செய்யப்பட்டது. அடுத்து, நாராயணி பீடத்தாலும், நக்கீரன் அண்ணனாலும், பின்னர் என்னாலும் அபிஷேகம் செய்யப்பட்டது. நடராஜர் சிலைக்கு சந்தன அபிஷேகம், பால் அபிஷேகம், விபூதி அபிஷேகம், பன்னீர் அபிஷேகமெல்லாம் செய்து, பூர்த்தி விழா வெகுசிறப்பாக நிறைவடைந்தது'' என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

ff

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தெலுங் கானா & புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன், "சாதாரணமாகவே நடராஜர் எனக்கு ரொம்ப விருப்பமான இறைவன். எல்லா இறைவனையும் எனக்கு பிடிக்கும். நடராஜர் மீது தனி ஈடுபாடு உண்டு. ஏனென்றால் நடராஜர் இயங்கிக்கொண்டே இருப்பார். அவரைப் போல் எப்போதும் இயங்கிக்கொண்டே இருப்பதுதான் எனக்கு பிடிக்கும். அவர் இயங்கிக் கொண்டிருப்பதனால் தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை நம்மிடம் இருக்கிறது. சிதம்பரத்தில் இருக் கும் நடராஜர்தான் உலகின் மத்திய புள்ளி என்று சொல்லப்படுகிறது. ஆக, அப்படிப்பட்ட நடராஜரின் திருவுருவச் சிலையைக் கண்டு இங்கே மிகவும், விவரிக்க முடியாத ஒரு மகிழ்ச்சியிலும், ஆச்சர்யத்திலும் நான் இருக்கிறேன். நம்மைப் படைத்த இறைவனை நம்மாலும் பிரமாண்டமாகப் படைக்க முடியும் என்று இந்த சகோதரர்கள் நிரூபித்துக் காண்பித் திருக்கிறார்கள். சிவன் மீது எனக்கு கொஞ்சம் அதிக ஈடுபாடு உண்டு. வெள்ளி, செவ்வாய் தவிர எல்லா நாளும் அசைவம் சாப்பிடும் வழக்கமுள்ள நான், சிவனை நினைத்து திங்கட்கிழமையும் அசைவத்தைத் தொடவே மாட்டேன். சின்ன வயதிலிருந்தே இதை ஈடுபாட் டோடு கடைப் பிடித்து வருகிறேன். நான் பிறந்ததும் ஒரு திங்கட்கிழமைதான். பெண்கள் 10 மாதம் சுமந்தால், ஒரு குழந்தை, இவர்கள் 10 வருடம் ஒரு குழந்தையை வடிவமைத்துள்ளனர். எல்லாம் வல்ல இறைவன், எல்லோ ருக்கும் அருள்புரிந்து காப்பார்'' என்று பாராட்டினார்.

ff

பத்தாண்டு கால கடின உழைப்பில், சிற்பி வரதராஜனின் கைவண்ணத்தில், ஒரே வார்ப் பாக உருவாக்கப்பட்ட, உலகிலேயே மிகப்பெரிய ஐம்பொன் நடராஜர் சிலை, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இதன்மூலம் இந்தியாவின் சிற்பக் கலைக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

_________

சிலையின் சிறப்பம்சம்!

திம்மக்குடி நடராஜர் ஐம்பொன் சிலையானது, 23 அடி உயரத்தில், ஒரே வார்ப்பினால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் பீடம் 6 அடி உயரம். அதற்கு மேல், 17 அடி உயரம், 17 அடி அகலத்தில் நடராஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மொத்த உயரம், 23 அடியாக உள்ளது. இந்த சிலையின் மொத்த எடை 15 டன் (15,000 கிலோ). இந்த சிலையின் திருவாச்சியில், முதல் வரிசையில் 52 சிம்மங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு அடுத்தபடியாக 56 பூதகணங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுக்கு மேலே 103 தாமரை மலர்கள், 2 மகர பறவைகள், 34 நாகப்பாம்புகள் இருப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ளன. இச்சிலையில், 51 சிவ அட்சரங்களைக் குறிக்கும் வகையில் 51 தீச்சுடர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலையை உருவாக்க சுமார் 4 கோடி ரூபாய் தேவைப்பட்டுள்ளது. இந்த நடராஜர் சிலை, பழமையான நடராஜர் ஆலயங்களில் உள்ள நடராஜரின் உருவமைப்பிலும், சோழர் காலத்து சிறப்பம்சத்துடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட சிலையின் விவரங்களை கின்னஸ் சாதனைக்காக அனுப்பியுள்ளனர். உலகின் மிகப்பெரிய, ஒரே வார்ப்பிலான ஐம்பொன் நடராஜர் சிலை என்ற கின்னஸ் சாதனையை இச்சிலை பெறவுள்ளது.

nkn210922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe