திப்புக்குரிய நக்கீரன் கோபால் அவர்களுக்கு,

தங்களின் மகள் உருவாக்கிய "கூச முனிசாமி வீரப்பன்' DOCUMENTARY திரைப்படத்தை நேற்று கண்டேன். மிகச்சிறப்பாக இருந்தது.

Advertisment

உலக அளவில் சிறந்த DOCUMENTARIES பலவற்றை பார்த்திருக்கிறேன். அவைகளில், விஷயத்தைப்பற்றிய ஆழமான ஆராய்ச்சி, உண்மை நிகழ்ச்சி யை தத்ரூபமாக நடத்திக் காட்டுகிற பாங்கு, பிரச்னையின் இரு பக்கங்களையும் அலசுவது, அதேபோல் நீதி, நேர்மை, மனிதாபிமானம், வெளிப்படுகிற திரைக்கதை அமைப்பு முதலானவை காணப்படும். இவை எல்லாம் உட்கொண்டிருக்கிற ஒரு தரமான DOCUMENTARYஐ நீங்கள் தமிழுக்குத் தந்திருக்கிறீர்கள். தமிழில் உலகத்தரம் வாய்ந்த ஒரு GENREஐ அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள்.

Advertisment

kmc

வீரப்பன் என்கிற குழப்பம் மிகுந்த கதாபாத்திரத்தை அவனது நேரடி வாய்மொழி மூலமாகவே பதிவு செய்வது சிறப்பு. பாமர மக்கள் வீரப்பனை எப்படி பார்க்கிறார்கள், போலீஸ் எப்படி பார்க்கிறது, பொதுவானவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதெல்லாம் தெளிவாக பதிவாகியிருக்கின்றன. வீரப்பனைப் பிடிக்கவந்த போலீஸ் படைகள், கிராம மக்களுக்கு செய்த சித்ரவதைகள் கண்டு மனம் பதறுகிறது. மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பதை ஆதாரப்பூர்வமாக நன்கு விளக்கியிருக்கிறீர்கள்.

ஒரு பக்கம் வீரப்பனும், மறுபக்கம் போலீஸும் அந்த கிராம மக்களை படுத்தும் பாட்டை அந்த பாமர மக்களின் வாக்கு மூலமாகவே வெளிப்படுத்தியிருக்கிற விதம் சிறப்பு. வீரப்பனின் பன்முகத் தன்மை, நாட்டு நடப்பு பற்றிய அறிவு முதலானவை ஆச்சரியத்தை தந்தாலும், தன்னைப் பற்றி தகவல் சொல்பவர்களையும், நேர்மையாக செயல்படுகிறவர்களையும் மூர்க்கத் தனமாக கொன்று குவிப்பது -அதுவும் குழந்தை ஒன்றைக் கொல்வது எல்லாம் வீரப்பனை சிலர் தர்க்ஷண்ய் ஐர்ர்க் போன்று சித்தரிக்கிற விதத்தை தவறு என்று உரக்கச் சொல்கிறது.

ஒவ்வொரு காட்சியிலும் படக்குழுவினரின் அயராத உழைப்பு வெளிப்படுகிறது.

படத்தின் ஒளிப்பதிவு, பின்னணி இசை, மிக்சிங், கலை, இயக்கம் முதலான தொழில் நுட்ப அம்சங்களும் சிறப்பாக இருக்கின்றன. காட்சிகளை சித்தரிக்கப் பயன்படுத்திய நடிகர், நடிகையர் அனை வரும் முடிந்தவரை இயற்கை யான நடிப்பை தந்திருக்கின்ற னர். நிறைவான திரை ஆக்கம்.

தொடர் சிறப்பாகத் தொடரட்டும்... வாழ்த்துகள்!