2020, மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த லாக்டவுன் போடப்பட்டது. கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்ற மருத்துவப்பணிகளுக்காக எம்.பி, எம்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை வழங்கி னார்கள். கொரோனா சிகிச்சைக்காக மருத்துவ மனைகளில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. புதிய மருத்துவர்கள், செவிலியர்கள், டெக்னீஷி யன்களென ஒவ்வொரு மாவட்டத்திலும் நூற்றுக் கணக்கான வர்கள் தற் காலிகப் பணியாளர் களாக நியமிக்கப் பட்டனர்.

fake

திருவண்ணாமலை மாவட்டத்தில், செய்யார் சுகாதார மண்டலத்தில், 53 இரண்டாம் நிலை சுகாதார ஆய்வாளர்கள் பணிக்கு, 2020 செப்டம்பர் மாதம் நேர்காணல் நடத்தி, பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் நியமனம் செய்தார். அப்படி நியமிக்கப்பட்டவர் களில் பலர் போலியான கல்விச் சான்றிதழ்களை தந்து பணியில் சேர்ந்துள்ளார்கள் என சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சங்கீதா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அனுப்பினார். இந்த புகார்மீது மாவட்ட குற்றப்பிரிவு விசாரணை நடத்திவருகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள், சுகாதார பணிகள் துணை இயக்குநராகயிருந்த அஜிதாதான் நேர் காணல் நடத்தி பணி நியமனம் செய்தார். பணி நிய மனத்துக்கு முன்பு அவர்களின் சான்றிதழ்களைச் சரிபார்த்ததும் அவரது அலுவலகம்தான். பணிக் காக வந்த நூற்றுக்கணக்கான மனுக்களில் பாரத் சேவா என்னும் கல்வி நிறுவனத்தில் படித்ததாக 32 பேர் நேர்காணலின்போது சான்றிதழ் தந்துள்ளார்கள். அப்படியொரு கல்வி நிறுவனம் சுற்றுவட்டாரத்தில் இருப்பதாக தெரியவில்லை. அதேபோல் 17 பேர், அங்கீகாரமில்லாத மருத்துவக் கல்வி நிறு வனத்தில் படித்ததாகச் சான்றிதழ் தந்துள்ளார்கள்.

Advertisment

fake

சான்றிதழைப் பார்க்கும்போதே சந்தேகப் பட்டு விசாரித்திருக்க வேண்டும் அல்லது நேர்காணலில் இதுகுறித்து விசாரித்திருந்தால் தெரிந்திருக்கும். வேலைப்பளுவால் நேர்காணலைச் சரிவர நடத்தவில்லையென்று சொல்வதாகக் கொண்டாலும்கூட, பணிக்குச் சேர்ந்தபின், அவர்களுக்கு எந்த டெக்னிக்கல் ஒர்க்கும் தெரியவில்லையென மருத்துவர்கள் புகாரளித்த போதாவது விசாரித்திருக்க வேண்டும். இப்படி யாகத் தொடர்ந்து கண்டுகொள்ளாமல் விட்டதால் அவரும் இதில் உடந்தையோ எனச் சந்தேகிக்கத் தோன்றுகிறது. புதியதாக வந்த டி.டி.எச். சங்கீதா, இந்த புகார்களையும், ஆவணங்களையும் பார்த்து அதிர்ச்சியாகி, உயரதிகாரிகளைக் கலந்தாலோசித்த பின்பே புகாரளித்தார். புகார் தந்த அவரையே திடீரென இடமாற்றம் செய்துவிட்டார்கள் என்றார்கள். இதுபற்றி எஸ்.பி பவன்குமாரிடம் கேட்டபோது, "ஒவ்வொருவரின் சான்றிதழையும் ஆய்வு செய்கிறோம். இதுகுறித்த விசாரணை போய்க்கொண்டிருக்கிறது, விரைவில் முடிவுக்கு வரும்'' என்றார்.

சுகாதாரத்துறையில் மட்டுமல்ல, ஊரக வளர்ச்சித்துறையிலும் போலிச் சான்றிதழ்கள் தந்து பணியில் சேர்ந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஊராட்சியிலும் பஞ்சாயத்துச் செயலாளர்களை (கிளர்க்) ஊராட்சிமன்றத் தலைவர்கள் நியமனம் செய்கின்றனர், அதிகாரிகள் அதனை அங்கீகரிக் கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு அது சாதாரணப் பணியாக, சம்பளம் குறைவாகயிருந்தது. அதன்பின் அவர்களைக் கால முறை ஊதியத் துக்குள் கொண்டுவந்துள்ளது. கடந்த 2017 முதல் 2019 வரை ஊராட்சிகள் தனி அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, இந்த கிளர்க்குகளின் அத்துமீறல்கள், ஊழல்கள் அளவுக்கதிகமாக இருந்தன. மேலும், உள்ளூர் அரசியல் பிரமுகர்களையும் மிரட்டியதால் அவர்கள்மீது கடுப்போடு இருந்தனர். 2019-ல் உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின்பும், கிளர்க்குகளின் அட்டகாசம் குறையவேயில்லை. இதனால் கடுப்பானவர்கள், தற்போது, கிளர்க்குகளின் போலிச்சான்றிதழ் குறித்த புகார்களை மேல்மட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி மாட்டிவிட்டுள்ளார்கள்.

Advertisment

fake

அதுபோக, பணி நிரந்தரம், பதவி உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக இவர்களின் கல்விச் சான்றிதழ்களை ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில், வேலூர் மாவட்டத்திலுள்ள 247 பேரில் 240 ஊராட்சி செயலாளர்களின் கல்விச் சான்றிதழ்கள் ஆய்வின் ஒரு பகுதி வெளிவந்தது. அதில், பேரணாம்பட்டு, காட்பாடி, குடியாத்தம் ஒன்றியங்களில் பலரும் போலிக் கல்விச் சான்றிதழைக் கொடுத்தது தெரியவந்துள்ளது. முதல் கட்டமாக, குடியாத்தம் ஒன்றியம், மோர்தானா ஊராட்சிச் செயலாளர் விநாயகம், பேரணாம்பட்டு ஒன்றியம், பரவகல் ஊராட்சிச் செயலாளர் லோகநாதன், பாலூர் ஊராட்சிச் செயலாளர் பாஸ்கரன், காட்பாடியை அடுத்த ஏரந்தாங்கல் ஊராட்சிச் செயலாளர் ராஜா போன்றோரை ஊரகவளர்ச்சித்துறை இயக்கு நரகம் டிஸ்மிஸ் செய்துள்ளது. காட்பாடி, குடியாத்தம் ஒன்றியத்தில் மட்டும் மேலும் 15 பேரின் பதவி பிடுங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் ஆர்த்தி, ஊரக வளர்ச்சித் திட்ட அலுவலர் புருஷோத்தமனிடம் பேசியபோது, "அரசு உத்தரவுப்படியே ஊராட்சிச் செயலாளர் களின் கல்விச் சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்படு கிறது. இந்த பணி, தமிழ்நாடு முழுவதுமே நடக்கிறது. சான்றிதழ் முடிவுகள் வரவர, போலிச் சான்றிதழ்களால் பணியில் சேர்ந்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்கிறார் கள். கடந்த 10 ஆண்டுகளில் காலியாக இருந்த இடங்களில் அப்போது ஆளும்கட்சியாக இருந்த அ.தி.மு.க. பிரமுகர்கள், லட்சங்களில் பணம் வாங்கிக்கொண்டு ஊராட்சிச் செயலாளர்களை நியமித்து கல்லா கட்டினார்கள். அதில் போலிச் சான்றிதழ் தந்து பணியில் சேர்ந்தவர்கள் மீது மட்டுமல்லாமல், துணை நின்ற அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.