Advertisment

பணி நிரந்தரம்! போராடும் நகை மதிப்பீட்டாளர்கள்!

ss

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் வழங்கப் படும் பல்வேறு கடன்களில், நகைக்கடனும் ஒன்று. நம்மிட முள்ள நகையை வங்கியில் அடமானம் வைத்து, அதன் மதிப்பீட்டைப் பொறுத்து நகைக்கடன் பெற இயலும். அப்படியாக நகைகளை அடமானம் வைக்கவோ, அடமானம் வைத்த நகையை மீட்கவோ செல்லும்போது, நம்முடைய நகையை ஒரிஜினலா, டூப்ளிகேட்டா எனச் சரிபார்த்து, அதன் எடையையும் துல்லியமாகக் கணக்கிட்டு, நகையை மதிப்பீடு செய்யும் நகை மதிப்பீட்டு ஆய்வாளர்களை நாம் பார்த்திருப்போம். நகைக்கடன் வாங்குவதில் இவர்களின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

Advertisment

hh

மற்ற கடன்களிலிருந்து நகைக்கடன் ஒருவகையில் மாறுபட்டது. எப்படியெனில், நகை அடமானத்தின் மூலம் கடன் வழங்குவது, வங்கிகளுக்கு மிகவும் பாதுகாப்பானது. எந்தச் சூழலிலும் வாராக்கடன் என்ற சிக்கலை வங்கிகள் எதிர்கொள்ள வேண்டியிருக்காது. வாராக்கடனாக இருக்கும்பட்சத்தில், அடமானம் வைக்கப்படும் நகையின் மூலமாக, கொடுக்கப்பட்ட கடன் தொகையை ஈடுகட்ட முடியும். மற்ற தொழிற்கடன்களில் வாராக்கடன் பிரச்சனை பெ

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் வழங்கப் படும் பல்வேறு கடன்களில், நகைக்கடனும் ஒன்று. நம்மிட முள்ள நகையை வங்கியில் அடமானம் வைத்து, அதன் மதிப்பீட்டைப் பொறுத்து நகைக்கடன் பெற இயலும். அப்படியாக நகைகளை அடமானம் வைக்கவோ, அடமானம் வைத்த நகையை மீட்கவோ செல்லும்போது, நம்முடைய நகையை ஒரிஜினலா, டூப்ளிகேட்டா எனச் சரிபார்த்து, அதன் எடையையும் துல்லியமாகக் கணக்கிட்டு, நகையை மதிப்பீடு செய்யும் நகை மதிப்பீட்டு ஆய்வாளர்களை நாம் பார்த்திருப்போம். நகைக்கடன் வாங்குவதில் இவர்களின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

Advertisment

hh

மற்ற கடன்களிலிருந்து நகைக்கடன் ஒருவகையில் மாறுபட்டது. எப்படியெனில், நகை அடமானத்தின் மூலம் கடன் வழங்குவது, வங்கிகளுக்கு மிகவும் பாதுகாப்பானது. எந்தச் சூழலிலும் வாராக்கடன் என்ற சிக்கலை வங்கிகள் எதிர்கொள்ள வேண்டியிருக்காது. வாராக்கடனாக இருக்கும்பட்சத்தில், அடமானம் வைக்கப்படும் நகையின் மூலமாக, கொடுக்கப்பட்ட கடன் தொகையை ஈடுகட்ட முடியும். மற்ற தொழிற்கடன்களில் வாராக்கடன் பிரச்சனை பெரிதும் உள்ளது. வங்கிகளுக்கு பாதுகாப்பான நகைக்கடன் வழங்குவதில் பணியாற்றக்கூடிய நகை மதிப்பீட்டு ஆய்வாளர்கள், வங்கி ஊழியர்களாக அங்கீகரிக்கப்படாத சூழலில், பணிப்பாதுகாப்பு, மாதாந்திர ஊதியம், இதர பணிச்சலுகைகள் ஏதுமின்றி பல்லாண்டு களாகப் பணியாற்றிவருகிறார்கள்.

இவர்களுக்கு ஊதியமென் பது, நகைக்கடன் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் பெறப் படும் நகை மதிப்பீட்டுக் கட்டணம் என்ற தொகையே ஆகும். இந்தத் தொகையானது, அந்தந்த நாளில் நகை மதிப் பீட்டுக்காக வங்கியை அணுகும் வாடிக்கையாளர்களின் எண் ணிக்கை, அவர்கள் அடமானம் வைக்கும் நகைகளின் மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடக்கூடியது. வங்கியில் தொழில்நுட்பக் கோளாறு, ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் அன்றைய தினம் நகைக்கடன் வழங்குவது நிறுத்தப்படும். அப்படியான நாட்களில் இவர்களுக்கு எந்த ஊதியமும் கிடைக்காது. ஆக, தினக்கூலித் தொழிலாளர்களைப் போலதான் வங்கிகளில் பணியாற்றுகிறார்கள்.

Advertisment

இப்படியான சூழலில், இந்தியன் வங்கியில் மட்டும் நகை மதிப்பீட்டு ஆய்வாளர்களுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் கட்டணத்தைத் தவிர்த்து, மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட சிறு தொகையும் மாதச்சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தங்களுக்கு வங்கி ஊழியர்களைப்போல் தங்கள் பணிக்கேற்ற மாத ஊதியம் வழங்கப்பட வேண்டுமென்றும், பணி நிரந்தரம் வழங்க வேண்டுமென்றும் பல்லாண்டுகளுக்கு முன்னர் நீதிமன்றத்துக்கு சென்றபோது, உச்ச நீதிமன்றமானது, வங்கிகளிலிருந்து மாத ஊதியமென்று சிறு தொகையை வழங்குவதால், இவர்களும் வங்கி ஊழியர்கள் தானென்றும், இவர்களை பகுதி நேர ஊழியர்களாகக் கருத வேண்டுமென்றும் தீர்ப்பளித்தது. அதோடு, அவர்களுக்கு வங்கி ஊழியர்களைப்போல் அனைத்து சலுகைகளும் வழங்கப்பட வேண்டுமென்றும் உத்தரவிட்டது. அத்தீர்ப்பின் அடிப்படையில் சுமார் 360 பேர் வரை பலனடைந்து, பணி ஓய்வுக்குப்பின் ஓய்வூதிய பலன்களையும் பெற்றார்கள். ஆனால், அவர்களுக்குப்பின் பணியில் சேர்ந்த நகை மதிப்பீட்டு ஆய்வாளர்களுக்கு அத்தீர்ப்பின்படி பணி வழங்காமல், வாடிக்கையாளர்களின் கட்டணத்தையே ஊதியமாகப் பெறக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, தங்களுக்கான பணி நிரந்தரத்துக்காகப் பல்லாண்டுகளாக இவர்கள் போராடி வருகிறார்கள்.

இதுகுறித்து பொதுத்துறை வங்கியொன் றின் நகை மதிப்பீட்டு ஆய்வாளரிடம் கேட்டபோது, "எங்களுக்கு +2 படிப்போடு, நகை மதிப்பீட்டுக்கான பயிற்சி பெற்றிருப் பதையும், குறைந்தது ஐந்தாண்டு காலம் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டுமென் பதையும் தகுதியாக வைத்துதான் இந்தப் பணிக்கு எடுக்கிறார்கள். எங்களைத் தகுதிப்படுத்திக்கொண்டு பணியில் சேர்ந்தாலும், எங்களுக்கு பணி நிரந்தரம் வழங்குவதில்லை. இதை எதிர்த்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றும் நகை மதிப்பீட்டு ஆய்வாளர்கள், 1986ஆம் ஆண்டில் தொழிலாளர் தீர்ப்பாயத்தில் முறையிட்டபோது, பகுதிநேர ஊழியர்கள் என்ற அங்கீகாரத்தை வழங்கியது. முழுநேர ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டுமென்று உயர்நீதி மன்றத்தில் முறையிட்டபோது, உயர்நீதி மன்றமும், பகுதிநேர ஊழியர்கள் என்பதையே ஏற்றுக்கொண்டது. அதற்கடுத்ததாக உச்ச நீதிமன்றத்தை அணுகியபோது, முதலுக்கே மோசம் என்பதுபோல எங்களை வங்கி ஊழியர்கள் என்றே கருத முடியாதென்று அறிவித்துவிட்டது. பகுதிநேர ஊழியர்கள் என்பதையும் ஏற்கவில்லை. இது எங்களுக்கு பேரிடியாக விழுந்தது!

எங்களுக்கு ஊதியத்தை, 1000 ரூபாய்க்கு 3 ரூபாய் கமிஷன் என்ற விகிதத்தில், வாடிக்கையாளர்கள் அடமானம் வைக்கும் நகைகளின் மதிப்புக்குத்தக்க நிர்ணயித்தார்கள். அதிலும்கூட ஒரு வாடிக்கையாளரிடமிருந்து அதிகபட்சம் 300 ரூபாய் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டுமென்று வரையறையும் செய்யப்பட்டது. தற்போது அந்த கமிஷன் தொகை, ஆயிரம் ரூபாய்க்கு 5 ரூபாய் என்று உயர்த்தியிருக்கிறார்கள். ஒரு வாடிக்கையாளரிடம் அதிகபட்சம் 500 ரூபாய் வரை வசூலிக்கலாமென்று வரம்பை உயர்த்தியிருக்கிறார்கள். இந்த கமிஷன் தொகை வங்கிக்கு வங்கி மாறுபடும். மற்றபடி, நிரந்தரப் பணியோ, ஊதியமோ இல்லாமல், காப்பீடு, ஓய்வூதியம், பி.எஃப் உள்ளிட்ட எவ்விதப் பணிப்பலன்களும் இல்லாமல்தான் பணியாற்றுகிறோம், எங்களுக்கு பணி நிரந்தரம் செய்ய மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்'' என்று கூறினார்.

நகை மதிப்பீட்டு ஆய்வாளர்களின் நியாயமான கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்குமா?

nkn131124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe