Advertisment

பணி நிரந்தரம்... 10 ஆண்டு போராட்டம்! வேதனையில் ஆசிரியர்கள்!

teachers

மிழ்நாட்டில் ஆசிரி யர்கள் அரசு வேலை பெற தினசரி போராட்டங்களை சந்தித்து வருகின்றனர். 2013-ல் டெட் தேர்ச்சி பெற்ற இடை நிலை ஆசிரியர்கள், இரவு பகலாக போராடியும் எந்த பயனும் இல்லை. பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேர், 10 வருடங்களாக தொடர்ந்து கோரிக்கை மேல் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதே தான் மேல்நிலைப்பள்ளி தொழில்கல்வி ஆசிரியர்கள் 171 பேரின் நிலை. 2010ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்காலத் தில் பணி நிரந்தரத்திற்காக சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட நிலையில்,இன்றுவரை மாத சன்மானம

மிழ்நாட்டில் ஆசிரி யர்கள் அரசு வேலை பெற தினசரி போராட்டங்களை சந்தித்து வருகின்றனர். 2013-ல் டெட் தேர்ச்சி பெற்ற இடை நிலை ஆசிரியர்கள், இரவு பகலாக போராடியும் எந்த பயனும் இல்லை. பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேர், 10 வருடங்களாக தொடர்ந்து கோரிக்கை மேல் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதே தான் மேல்நிலைப்பள்ளி தொழில்கல்வி ஆசிரியர்கள் 171 பேரின் நிலை. 2010ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்காலத் தில் பணி நிரந்தரத்திற்காக சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட நிலையில்,இன்றுவரை மாத சன்மானம் ரூ.2 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.6 ஆயிரம் வரை வாங்கிக்கொண்டு பாடம் நடத்தி வருகின்றனர். தற்போது அந்த தொழிற்கல்விப் படிப்பு களையும் நிறுத்தச்சொல்லி கல்வி அதிகாரிகள் வாய்மொழி உத்தரவுகளை விடுத்துள்ளது இவர்களைப் பதட்டமாக்கி யுள்ளது.

Advertisment

teachers

இதுதொடர்பாக, தொழிற்கல்வி ஆசிரியர்கள் புவனேஷ்வரி, சாமிநாதன், சிங்காரவடிவேல், திருச்செல்வம் ஆகியோரை தஞ்சாவூரில் சந்தித்த போது, "கடந்த 2002ஆம் ஆண்டு முதல், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் அந்தந்த பள்ளி நிர்ண யம் செய்த மாத ஊதியம் ரூ.2 ஆயிரம். சில பள்ளிகளில் மாதம் ரூ.3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை கொடுக்கிறார்கள். இந்த நிலையில் தான் 2010ஆம் ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்தபோது, எங்கள் கோரிக்கையை ஏற்று, 9.2.2007-க்கு முன்பு பணிக்கு வந்தவர்களை பணி நிரந்தரம் செய்ய, 171 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கச் செய்த நிலையில் ஆட்சி மாற்றம் வந்துவிட்டது. அதன்பிறகு இன்றுவரை எங்களை பணி நியமனம் செய்யக் கோரி நூற்றுக்கணக்கான மனுக் களைக் கொடுத்துவிட்டோம். பல்வேறு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியும் எந்த பயனும் இல்லை.

Advertisment

கொரோனா காலத்தில் பள்ளிகள் திறக்கப்படல, எங்க ளுக்கு சம்பளமும் இல்லை. ஒருவேளை சோற்றுக்கு நாங்க பட்ட கஷ்டத்தை வெளியில் சொல்ல முடியாது. கொரோனா முடிந்தபிறகும் நிதிப் பற்றாக் குறையால் சம்பளம் கொடுக்க முடியாதென்று சொன்னபோது, எப்படியும் பணி நிரந்தரம் வந்துவிடுமென்ற எண்ணத்தில் சம்பளமில்லாமலும் பணியாற்றி னோம். அரசாங்கம் எங்களைக் கைவிடாதென்ற நம்பிக்கையில் வேறு வேலைக்குச் செல்லாமல் எப்படியோ சமாளித்து வருகிறோம். எங்களில் சிலர் மன உளைச்ச லில் இறந்தேபோனார்கள். இச்சூழலில், ஒவ்வொரு பள்ளியிலும் தொழிற்கல்வி படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க வேண்டாமென்று அதி காரிகள் சொல்லிவருகிறார் கள்.

இது மேலும் அச்சமூட்டு கிறது. கலைஞரின் மகனான முதல்வர் மு.க.ஸ்டாலின், எங்கள் எதிர்காலம் இருண்டுபோகாமல் காப்பாற்றுவாரென நம்பிக் கையோடு காத்திருக்கிறோம்'' என்றனர் சோகத்துடன். கைக்கு எட்டியது வாய்க்கு எட் டாததுபோல், சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட நிலையில், நிரந்தரமாக்கப்படாமல் தவிக்கும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் துயர் துடைக்குமா அரசு?

nkn050423
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe