Advertisment

ஒரு லட்சம் பேருக்கு பணி ஆணை! தொழிலாளர் தோழனாக அமைச்சர்!

ss

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப் புக்கு வந்ததிலிருந்தே, தொழி லாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சி.வி.கணேசன் முன்னெடுப் பில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வாயிலாக, தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில், தனியார் நிறுவனங் களோடு கைகோர்த்து, வேலை வாய்ப்பு முகாம்கள் மூலமாக தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு பணி உறுதிசெய்யப்பட்டு வருகிறது.

Advertisment

cc

அந்த வகையில், சென்னை இராயப்பேட்டையிலுள்ள புதுக் கல்லூரி வளாகத்தில், அக்டோபர் 15, சனிக்கிழமையன்று நடை பெற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாமுக்கு தலைமை தாங்

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப் புக்கு வந்ததிலிருந்தே, தொழி லாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சி.வி.கணேசன் முன்னெடுப் பில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வாயிலாக, தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில், தனியார் நிறுவனங் களோடு கைகோர்த்து, வேலை வாய்ப்பு முகாம்கள் மூலமாக தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு பணி உறுதிசெய்யப்பட்டு வருகிறது.

Advertisment

cc

அந்த வகையில், சென்னை இராயப்பேட்டையிலுள்ள புதுக் கல்லூரி வளாகத்தில், அக்டோபர் 15, சனிக்கிழமையன்று நடை பெற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாமுக்கு தலைமை தாங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒரு லட்சமாவது பணி நியமன ஆணையை வழங்கினார். இந்த முகாமில், வேலைவாய்ப்பிற்கான நேர்காணல் நடைபெற்ற அரங்கு களையும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் செயல்பாடு களை விளக்கும் காட்சிக்கூடத் தையும் முதல்வர் பார்வையிட் டார். இந்த முகாமில், 389 தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டன. மொத்தம் 21,623 இளைஞர்கள் பங்கெடுத்த தில், 26 மாற்றுத்திறனாளிகள் உட்பட 2,742 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது. அதோடு, 2477 பேர் முதல்கட்ட நேர்முகத்தேர்வில் தேர்ச்சிபெற்று இரண்டாம் கட்டத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்காக 726 பேர் பதிவு செய்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், தொழிலா ளர் நலன் மற்றும் திறன் மேம் பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன். இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தயாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின் உள் ளிட்ட பலரும் கலந்துகொண்ட னர். வேலைவாய்ப்பு முகாமுக்கு தலைமையேற்று சிறப்புரையாற் றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "எப்போதும் அமைச்சர்கள் தான் வேண்டுகோள் வைப்பார்கள் முதலமைச்சரிடத்தில். நான் இப் போது அமைச்சரிடத்தில் ஒரு வேண்டுகோள் வைக்கப் போகிறேன். என்னைத் தேர்ந்தெடுத்திருக்கக் கூடிய சட்டமன்றத் தொகுதி கொளத்தூர் தொகுதி. அந்தத் தொகுதியில் நீங்கள் வேலை வாய்ப்பு முகாமை விரைவாக நடத்தவேண்டும். என்னைப் பொறுத்த வரைக்கும், ஒரு சாதனை விழா வாக நம்பித் தான் இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். இதற் குக் காரணமான இந்தத் துறையினுடைய அமைச்சராக பொறுப்பேற்றிருக்கக்கூடிய அருமை சகோதரர் கணேசன் அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். ஒரு லட்சம் குடும்பங்களில் விளக் கேற்றுவதற்கு நீங்கள் காரணமாக இருந்திருக்கிறீர்கள். தொழிலாளர் துறை அமைச்சராக மட்டுமல்ல. தொழிலாளர் தோழனாகவே அமைச்சர் கணேசன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதுதான் பாராட்டுக்குரியது.

Advertisment

கடந்த 15 மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங் களில் பெரிய அளவில் 65 வேலை வாய்ப்புப் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்களில், பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பொறியியல் பட்டதாரிகள் வரை வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள். இப்படி வேலை வாய்ப்பைப் பெற்றவர்களில் மாற்றுத்திறனாளி களும், திருநங்கைகளும் இருக்கிறார்கள் என்பதுதான் Social justice.. இதுதான் திராவிட மாடல்'' என்று பெருமிதத்துடன் பாராட்டினார்.

nkn221022
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe