வெளிநாடு வேலை... பெண்களைத் துரத்தும் ஆபாச ஆபத்துகள்! -பதறவைக்கும் உஷார் ரிப்போர்ட்!

ss

வெளிநாட்டு வேலை என்று ஆசை காட்டி அழைத்துச் செல்லப்படும் பெண்களில் சிலருக்கு எப்படிப்பட்ட மோசமான அனுபவங்கள் கிடைக்கின்றன என்பதை அறிய நேர்கையில் நமக்கு பகீரானது.

அரேபியாவிலிருந்து பதட்டத்தோடு நம்மை தொடர்புகொண்டவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து அங்கு சென்றிருக்கும் கவிதா, கன்னியாகுமரியைச் சேர்ந்த தர்ஷினி மற்றும் களியக்காவிளையைச் சேர்ந்த அனுஷா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ஆகியோர் ஆவர். ஒரு வழக்கறிஞரின் வழி காட்டுதலில் நம்மிடம் பேசுவதாகத் தெரி வித்தனர். அவர்கள் சொன்னது இதுதான்...

fj

"நாங்க 3 பேரும் கோயம்புத்தூர் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி. நர்சிங் முடித்துவிட்டு சவுதி அரேபியாவிலுள்ள ஒரு மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வருகிறோம். லட்சத்தில் கை நிறைய நாங்கள் வாங்கும் சம்பளத்தால், எங்கள் குடும்பங்கள் நிம்மதியோடு உள்ளது. ஆனால் நாங்க மட்டும் மனநிம்மதியை இழந்து படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறோம். இங்க வரும் எங்களைப் போன்ற இளம்பெண்களைக் குறிவைத்து வீழ்த்துவது நம்ம இந்திய இளைஞர்கள் தான். நம் தமிழகப் பெண்களிடம் போலித்தனமான காதலைப் பிரயோகித்து, வீழ்த்துகிற அவர்கள், நெருங்கிப் பழகி, ஏடாகூடமான வீடியோக் களையும் புகைப்படங்களையும் எடுத்து வைத்துக்கொண்டு, அதைக்காட்டி மிரட்டியே பாலியல் டார்ச்சர் கொடுத்து வருகிறார்கள். அதோடு, சம்பாத்தியத்தையும் பறித்துக் க

வெளிநாட்டு வேலை என்று ஆசை காட்டி அழைத்துச் செல்லப்படும் பெண்களில் சிலருக்கு எப்படிப்பட்ட மோசமான அனுபவங்கள் கிடைக்கின்றன என்பதை அறிய நேர்கையில் நமக்கு பகீரானது.

அரேபியாவிலிருந்து பதட்டத்தோடு நம்மை தொடர்புகொண்டவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து அங்கு சென்றிருக்கும் கவிதா, கன்னியாகுமரியைச் சேர்ந்த தர்ஷினி மற்றும் களியக்காவிளையைச் சேர்ந்த அனுஷா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ஆகியோர் ஆவர். ஒரு வழக்கறிஞரின் வழி காட்டுதலில் நம்மிடம் பேசுவதாகத் தெரி வித்தனர். அவர்கள் சொன்னது இதுதான்...

fj

"நாங்க 3 பேரும் கோயம்புத்தூர் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி. நர்சிங் முடித்துவிட்டு சவுதி அரேபியாவிலுள்ள ஒரு மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வருகிறோம். லட்சத்தில் கை நிறைய நாங்கள் வாங்கும் சம்பளத்தால், எங்கள் குடும்பங்கள் நிம்மதியோடு உள்ளது. ஆனால் நாங்க மட்டும் மனநிம்மதியை இழந்து படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறோம். இங்க வரும் எங்களைப் போன்ற இளம்பெண்களைக் குறிவைத்து வீழ்த்துவது நம்ம இந்திய இளைஞர்கள் தான். நம் தமிழகப் பெண்களிடம் போலித்தனமான காதலைப் பிரயோகித்து, வீழ்த்துகிற அவர்கள், நெருங்கிப் பழகி, ஏடாகூடமான வீடியோக் களையும் புகைப்படங்களையும் எடுத்து வைத்துக்கொண்டு, அதைக்காட்டி மிரட்டியே பாலியல் டார்ச்சர் கொடுத்து வருகிறார்கள். அதோடு, சம்பாத்தியத்தையும் பறித்துக் கொள்கிறார்கள்''’என்று தேம்பி னார்கள்.

அவர்களில் மனம் திறந்துபேசிய கவிதா, "நான் வேலை பார்க்கும் மருத்துவ மனையில் கேரளா பாலக்காட்டைச் சேர்ந்த வினித் என்பவனும் நர்சாக இருக்கிறான். அவனிடம் சகஜமாக பழகி வந்தேன். நாளடைவில் அவன் என்னை நேசிப்பதாக உருகி உருகிப் பேசினான். நானும் அவன் பேச்சில் மயங்கி என்னை அவனிடம் பறிகொடுத்தேன். அவனோடு நெருக்க மாக இருந்தபோது அடம்பிடித்து ஏடாகூடமாக வீடியோ எடுத் தான். ரெண்டு பேரும் கல்யாணம் செய்துக்கத்தானே போறோம்னு நானும் அமைதி காத்தேன். இந்த நிலையில் ஊரில் வீடு கட்டப் போவதாகச் சொல்லி, கைமாத் தாக 5 லட்ச ருபாய் கேட்டான். நான் 3 லட்சம் மட்டும் கொடுத் தேன். அதன் பிறகு இரண்டு மாதம் கழித்து மேலும் 3 லட்சம் வாங்கினான். அதோடு, என் 7 பவுன் தங்க நகைகளையும் வாங் கிக்கொண்டான். ஒரு கட்டத்தில் மேலும் 5 லட்சம் கொடுத்தால் தான் நம் நட்பு இருக்கும்னு மிரட்டினான். நான் அப்போது தான் அவன் நோக்கத்தைப் புரிந்துகொண்டு, பணம் கொடுக்க மறுத்தேன். பணம் தராவிட்டால் உன்னுடைய நிர்வாண வீடியோக் களை எல்லாம் இந்த ஆஸ்பத்திரி யில் இருப்பவர்களுக்கு அனுப்பி விடுவேன்னு மிரட்டினான். அவன் ஏற்கனவே இதேபோல் வேறொரு பெண்ணிடம் நடந்த தகவலும் அப்போதுதான் எனக்குத் தெரியவந்தது. இந்த நிலையிலும் அவனுடைய மிரட்டல் தொடர்கிறது. என்ன செய்வதென்றே தெரிய வில்லை''’என்றார் கலக்கமாய், தர்ஷினியோ, "என் னுடன் வேலை பார்க்கும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ரம்யா, என் ரூமிலேயே தங்கியிருந் தார். நாங்க ரெண்டு பேரும் நெருங்கிய தோழி களாக இருந்தோம். இந்த நிலையில் ரம்யாவின் பர்த்டே பார்ட்டிக்கு வந்த திருவனந்தபுரத் தைச் சேர்ந்த ஸ்ரீஜித் என்பவனை ரம்யா எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவன் இன் னொரு மருத்துவமனை யில் அனஸ்தீசியா அசிஸ்டென்டாக வேலை பார்க்கிறான். இந்த நிலையில் என்னிடம் இருந்து நம்பர் வாங்கிய அவன் தினமும் மெசேஜ் செய்வான். என்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக சொல்ல ஆரம்பித்தான். ரம்யாவும் அவனுக்கு சப்போர்ட்டாகப் பேசினார். ஒரு கட்டத்தில் நானும் அவனை நம்பினேன். கடைசியில் அவனிடம் என்னைப் பறிகொடுத்தேன். இந்த நிலையில் அவன் கேட்டதால், லோன்போட்டு அவனுக்கு 4 லட்சம் கொடுத்தேன். ஒருநாள் அவன் செல்போனைப் பார்க்கும்போது அவனும் ரம்யாவும் நெருக்கமாக இருக்கும் வீடியோவைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இதேபோல் என் வீடியோவை ரம்யாவுக்கும் அவன் அனுப்பியது தெரியவந்தது. இந்த சம்பவத்துக்குப் பிறகு ரம்யா அந்த வீடியோவைக் காட்டி என்னை மிரட்டத் தொடங்கினாள். அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்தாள். நான் வேறொரு அறைக்கு மாறியும்கூட அவள் மிரட்டல் தொடர்ந்தது. அதனால், நான் வேலை பார்க்கும் மருத்துவமனையின் நர்ஸ் சூப்பிரண்ட்டெண்டிடம் கூறினேன். அந்த அக்காவும் கேரளாக்காரர் என்பதால் அவரும் கண்டுகொள்ளவில்லை. இப்போது ரம்யாவிடம் சிக்கிக்கொண்டு அல்லல்படுகிறேன்''’என்று திகைப்பூட்டினார்.

cc

அனுஷாவும் இதேபோன்ற ஒரு பகீர் அனுப வத்தைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

"நானும் ஒரு பெண்ணால்தான் பாதிக்கபட்டிருக்கிறேன். நான் ஏற்கனவே தங்கியிருந்த ரூமில் 5 பேரில் ஒருத்தி சுமா. அவளுக்குத் திருமணமாகிவிட்டது. இருந்தாலும் அங்கே ஒரு பாய்ஃபிரண்டை வைத்திருக்கிறாள். இந்த நிலையில் சுமாவின் நடவடிக்கை எனக்கு பிடிக்காததால் நான் வேற ரூமுக்கு மாறினேன். அதற்கு முன்பே எனக்குத் தெரியாமல் நான் குளிப்பதையும், துணி மாற்றுவதையும் அவள் வீடியோ எடுத்து வைத்திருக்கிறாள். ஒருநாள் அவள் என்னைத் தொடர்புகொண்டு, "உன்னுடைய நிர்வாண வீடியோ என்னிடம் இருக்கிறது. எனக்கு கொஞ்சம் பணம் தந்தால் அதை அழித்துவிடுவேன்' என்று கூறி அந்த வீடியோவை எனக்கு அனுப்பினாள். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த நான், "நீ இப்படியெல்லாம் செய்யலாமா? எனக்கு கல்யாணமும் பேசி வச்சிருக்காங்க. உன்மீது நான் கம்ப்ளைன்ட் செய்வேன்''னு சொன்னேன். உடனே அவள் அஞ்சாறு போட்டோவைக் காட்டினாள். அதில் அவளும் அவளுடைய பாய் ஃபிரண்ட்டும் அசிங்கமாக இருக்கிற போட்டோவில் அவள் முகத்தை எடிட்டிங் செய்துவிட்டு என்னுடைய முகத்தை அதில் வைத்திருந்தாள். அரண்டுபோன என்னிடம் பேரம் பேசினாள். 2 லட்ச ரூபாயை அவளிடம் தூக்கி எறிஞ்சிட்டு ஊருக்கு வந்துட்டேன். ஆவணி மாசம் எனக்குக் கல்யாணம். இந்த மட்டமான மோசடிக்கு உடந்தையாக கேரளா பொண்ணுங்க மட்டுமல்ல, நம்ம ஊரு பொண்ணுங் களும் இருக்கிறாங்க. இவர்களைப் பற்றிப் புகார் கொடுக்கலாம்னா, அது வீட்டுக்கு தெரிஞ்சுடுமேன்னு பயமா இருக்கு''’என்றார் பதட்டம் குறையாமல்.

இந்த வில்லங்க விவகாரம் குறித்து சைபர் க்ரைம் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “"இந்த மாதிரி சம்பவங்கள் நடப்பது உண்மைதான். கொரோனா முடிஞ்ச நேரத்திலேயே பெயர், முகவரி இல்லாமல் இ-மெயிலில் இதுபோன்ற புகார்கள் வந்தன. அதில் மருத்துவமனையின் பெயர்களும் கூட இல்லை. இதனால் எந்த நடவடிக்கையையும் எங்களால் எடுக்க முடியலை. பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். புகார் தருபவர்களின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும். இந்த விவகாரங்கள் குறித்து எங்கள் மேலதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுசெல்கிறேன்''’என்றார் கவலையாய்.

எங்கு சென்றாலும் பெண்களை இதுபோன்ற ஆபத்துக்கள் துரத்துவது கொடுமையானது. வெளிநாடு செல்லுபவர்கள், இவர்களின் கண்ணீர்க் கதையை பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் இப்படிப்பட்ட ஆபாச ஆபத்துக்களில் சிக்காமல் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும். மிரட்டல்கள் வந்தால் தைரியமாகப் புகாரளிக்க வேண்டும். அப்போதுதான் இப்படிப்பட்ட கிரிமினல்களைத் தண்டிக்க முடியும்.

nkn240824
இதையும் படியுங்கள்
Subscribe