Advertisment

அற்புதம்’ அம்மா! ஒரு தாயின் சபதம்! - 31 ஆண்டு போராட்ட வெற்றி!

dd

லகளவில் பிரபலமானது ரஷ்ய எழுத்தாளரான மாக்சிம்கார்க்கி எழுதிய தாய் நாவல். ரஷ்யாவில் தொழிலாளர்களின் போராட்டத்தை முன்னின்று நடத்தினார் பாவெல் பிலாசவ். தொழிலாளர்களை ஒன்றிணைத்து போராடியபோது அரசு, ஆட்சியாளர்கள், முதலாளிகள் தந்த நெருக்கடியென பல நெருக்கடிகளைத் தாங்கிக்கொண்டு பாவெல்பிலாசவ் நடத்திய போராட்டத்துக்கு அவனின் தாய் எப்படியெல்லாம் மகனுக்கு துணையாக இருந்தார், அவர் சந்தித்த நெருக்கடி, துயரங்களை விவரிப்பதே தாய் நாவல்.

Advertisment

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் 2022 மே 18-ஆம் தேதி விடுதலை என அறிவித்ததும் செய்தியாளர்கள் சந்திப்பில் தாய் நாவலில் வரும் பெலகேயாவுடன் தனது தாய் அற்புதம்மாளை ஒப்பிட்டு உணர்ச்சியுடன் பேசினார் பேரறிவாளன்.

dd

அற்புதம்மாள் நடந்துவந்த பாதை

வட ஆற்காடு மாவட்டத்தில் பிரபலமானது தங்கவேல் பீடி. ஜோலார்பேட்டையை சேர்ந்த தங்கவேல் - சின்ராசு இருவரும் பீடி கம்பெனியின் உரிமையாளர்கள். அண்ணன், தம்பிகளான இரு வரும் திராவிடர் கழகத்தில் இருந்தனர். தங்கவேலுக்கு மூன்று மகன்கள் அதில் ஞானசேகரன் உயரமாக வாட்டசாட்டமாக இருப்பார். பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிக்கு சேர்ந்த வர், என்.சி.சி மாஸ்டராக இருந்தார், பின்னர் தமிழாசிரி யராக மாறினார். பாரதி தாசன் மீதான பற்றால் குயில் தாசன் என புனைப்பெயர் வைத்துக்கொண்டார்.

காட்பாடி அடுத்த கழிஞ்சூர்மோட்டூர் கிரா மத்தை சேர்ந்தவர் திருவேங் கடம். விருதம்பட்டில் விறகு மண்டி வைத்திருந்தார். திரா விடர் கழகத்தில் இயங்கி வந்தார். வேலூர் திமுக பிரபலங்களுடன் நெருக்கமாக இருந

லகளவில் பிரபலமானது ரஷ்ய எழுத்தாளரான மாக்சிம்கார்க்கி எழுதிய தாய் நாவல். ரஷ்யாவில் தொழிலாளர்களின் போராட்டத்தை முன்னின்று நடத்தினார் பாவெல் பிலாசவ். தொழிலாளர்களை ஒன்றிணைத்து போராடியபோது அரசு, ஆட்சியாளர்கள், முதலாளிகள் தந்த நெருக்கடியென பல நெருக்கடிகளைத் தாங்கிக்கொண்டு பாவெல்பிலாசவ் நடத்திய போராட்டத்துக்கு அவனின் தாய் எப்படியெல்லாம் மகனுக்கு துணையாக இருந்தார், அவர் சந்தித்த நெருக்கடி, துயரங்களை விவரிப்பதே தாய் நாவல்.

Advertisment

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் 2022 மே 18-ஆம் தேதி விடுதலை என அறிவித்ததும் செய்தியாளர்கள் சந்திப்பில் தாய் நாவலில் வரும் பெலகேயாவுடன் தனது தாய் அற்புதம்மாளை ஒப்பிட்டு உணர்ச்சியுடன் பேசினார் பேரறிவாளன்.

dd

அற்புதம்மாள் நடந்துவந்த பாதை

வட ஆற்காடு மாவட்டத்தில் பிரபலமானது தங்கவேல் பீடி. ஜோலார்பேட்டையை சேர்ந்த தங்கவேல் - சின்ராசு இருவரும் பீடி கம்பெனியின் உரிமையாளர்கள். அண்ணன், தம்பிகளான இரு வரும் திராவிடர் கழகத்தில் இருந்தனர். தங்கவேலுக்கு மூன்று மகன்கள் அதில் ஞானசேகரன் உயரமாக வாட்டசாட்டமாக இருப்பார். பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிக்கு சேர்ந்த வர், என்.சி.சி மாஸ்டராக இருந்தார், பின்னர் தமிழாசிரி யராக மாறினார். பாரதி தாசன் மீதான பற்றால் குயில் தாசன் என புனைப்பெயர் வைத்துக்கொண்டார்.

காட்பாடி அடுத்த கழிஞ்சூர்மோட்டூர் கிரா மத்தை சேர்ந்தவர் திருவேங் கடம். விருதம்பட்டில் விறகு மண்டி வைத்திருந்தார். திரா விடர் கழகத்தில் இயங்கி வந்தார். வேலூர் திமுக பிரபலங்களுடன் நெருக்கமாக இருந்த திருவேங்கடத்தின் மகள்தான் அற்புதம். பத்தாவது வரை படித்திருந்த அற்புதத்தை ஞானசேகரனுக்கு திருமணம் செய்து வைத்தனர். இந்த தம்பதிக்கு அன்பு, அருள் என இரண்டு மகள்கள், அறிவு என ஒரு மகன். 30-7-1971ஆம் தேதி பிறந்த அறிவு என்கிற பேரறிவாளன் 10-ஆம் வகுப்பு முடித்துவிட்டு ஐ.டி.ஐ. மெக்கானிக் படித்தார். பேரறிவாளன் தாத்தா, தனது பேரனை சினிமா இயக்குநர் ஒருவரிடம் உதவியாளராக சேர்த்துவிட்டிருந்தார். பிறகு, பெரியார் திடலில் தங்கி விடுதலை நாளிதழின் கணினி பிரிவில் பணியாற்றி வந்தார். ஈழப்போராளிகளுக்கு உதவிகள் செய்வதும், ஈழப்போராட் டங்களில் கலந்து கொள்வதும் அவர் வழக்கம்.

1991-ல் நாடாளுமன்ற -தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த காங்கிரஸ் தலை வரும், முன்னாள் பிரதமருமான ராஜீவ்காந்தி மனித வெடி குண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்குக்காக சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. 1991 ஜூன் 11-ஆம் தேதி அறிவு என்கிற பேரறிவாளனை சி.பி.ஐ. தேடிக் கொண்டு ஜோலார்பேட்டை சென்றது. பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தனது 19 வயதான மகன் பேரறிவாளனை சி.பி.ஐ. சிறப்பு பிரிவிடம் ஒப்படைத்தார். இல்லீகல் கஸ்டடியில் வைத்து விசாரித்த சி.பி.ஐ., "மனித வெடிகுண்டுக்கு பேட்டரி வாங்கித் தந்தார்' என ஜுன் 18-ஆம் தேதி கைதுசெய்து, ஜுன் 19-ஆம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

"விசாரித்துவிட்டு அனுப்புகிறோம்' எனச் சொன்னதை நம்பி மகனை அனுப்பிய அற்புதம்மாவுக்கு, தன் மகன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால் அதிர்ச்சியானார். பேரறிவாளன் கைது செய்யப்பட்டபோது அவரது அக்கா அன்புவிற்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 1991 செப்டம்பர் 1-ஆம் தேதி திருமணம். பேரறிவாளன் கைதால் மகளின் திருமணம் கேள்விக்குறியாகிவிடுமோ என்கிற பயம் ஒரு பக்கம், கைது செய்யப்பட்ட மகனை இன்னும் என்ன செய்யப்போகிறார்கள் என்கிற பயம் போன்றவற்றால் கலங்கி னார் அற்புதம்மாள். பாசமாக வளர்க்கப் பட்ட மகன், சி.பி.ஐ. கஸ்டடியில் அடித்து உதைக்கப்படுகிறார் என வந்த தகவலால் தன் மகனை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என விசாரணை அலுவலகமான மல்லிகை கட்டடத்தின் வாசலில் கண்ணீரோடு வந்து நிற்பார். பகல் எல்லாம் அழுதுகொண்டிருப்பார். இரவானதும் துரத்திவிடுவார்கள். இது தினம், தினம் நடக்கும். சில வாரங்களுக்கு பின்னர் உருக்குலைந்த மகனை பார்த்த போது அற்புதம்மாள் அழுத அழுகை பிரசவத்தின்போது கூட அழாதது.

Advertisment

dd

1998, ஜனவரி 28-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் ராஜீவ்காந்தி கொலை வழக் கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் உட்பட 26 பேருக்கு தூக்குத்தண்டனை வழங்கியது. மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம், சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய நால்வரின் தூக்குதண்டனையை மட்டும் உறுதி செய்தது. தீர்ப்புக்கு பிறகு, “"அந்த கொலைக்காரனின் ஆத்தா இதுதான்'’ என அற்புதம்மாள் காதுபடவே பலரும் பேசினர். நெருங்கிப் பழகியவர்கள் கூட சந்திக்கவே பயந்தனர். உறவினர்கள் அற்புதமாளை தங்கள் குடும்ப விசேஷங்களுக்கு அழைப்பதில்லை. மனம் உடைந்துப்போனார் பேரறிவாளன் அப்பா குயில்தாசன். நோய்களால் வீட்டுக்குள் முடங்கிப் போன கணவர் ஒருபுறம், தூக்குதண்டனை கைதியாக சிறையில் துன்புறும் மகன் மறுபுறம் என அற்புதம்மாள் கலங்கினாலும், வேட்டைக்காரனின் குறிபோல் மகனின் விடுதலை மட்டுமே தனது லட்சியம் என்பதில் தெளிவாயிருந்தார். என் மகனை நான் தூக்கு கயிற்றிலிருந்து மீட்பேன் என்று சபதமிட்டார். அதற்காக உறுதியுடன் உழைத்தார். "வாய்ப்பேயில்லை' என்று சிலர் சொன்னபோதும், அவரது நம்பிக்கை தளரவில்லை. "என் மகனை மீட்பேன்' என உறுதியாக பேசினார்.

மரண தண்டனை பெற்றவர்கள் 2000, ஏப்ரல் 26-ஆம் தேதி குடியரசுத்தலைவருக்கு கருணை மனுக்கள் அனுப்பினர். ஆண்டுகள் ஓடியது, குடியரசு தலைவர்கள் மாறினார்கள், கருணை மனு மீது மட்டும் முடிவெடுக்கவில்லை. மனுக்கள் மீது முடிவெடுங்கள் என கையெழுத்து இயக்கம் நடத்தினார் அற்புதம்மாள். மகனுக்காக அவர் சந்திக்காத தலைவர்களில்லை, ஏறாத மேடைகளில்லை. கொள்கை எதிரியாக இருந்தாலும் மகன் பக்கமுள்ள நியாயத்தைச் சொல்லி தன் மகனின் விடுதலையுடன் மற்ற ஆறு பேரின் விடுதலையையும் பேசவைத்தார்.

மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத் தலைவரான உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் கிருஷ்ணய்யரின் அறிமுகம், சட்டரீதியான வழிகாட்டுதல் மூலம் உயர்நீதிமன்றம், உச்சநீதி மன்றம் என மகனின் சட்டப்போராட்டத்தை நடத்தினார் அற்புதம்மாள். இதற்காக டெல்லிக்கு சென்றும் போராடினார். 2005-ஆம் ஆண்டு தூக்கு கொட்டடியிலிருந்து ஓர் முறையீட்டு மடல் என்கிற தலைப்பில், தன்மீது போடப்பட்ட வழக்கு ஜோடிக்கப்பட்டது என்பதனை ஆவணங்கள் அடிப்படையில் பேரறிவாளன் எழுதிய புத்தகத்தை அற்புதம்மாள் எடுத்துச்சென்று, மக்களிடம் தந்து தன் மகன் பக்கம் உள்ள நியாயத்தையும், நிரபராதி என்பதையும் வலியுத்தினார்.

2011, ஆகஸ்ட் மாதம் முருகன், சாந்தன், பேரறிவாளன் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்தார். வேலூர் மத்திய சிறையில் தூக்கிலிடுதவற்கான பணிகளை அப்போதைய ஜெயலலிதா அரசு செய்தது. இதனைக் கண்டித்து அற்புதம்மாளோடு இணைந்து பலதரப்பினரும் போராடிக் கொண்டிருந்த சமயத்தில் காஞ்சிபுரத்தில் செங்கொடி என்கிற இளம்பெண், மூவரையும் விடுதலை செய்யவேண்டும் என தீ குளித்து மரணத்தை தழுவினார்.

2013, நவம்பர் 23-ஆம் தேதி "உயிர் வலி' என்கிற தலைப்பில் பேரறிவாளன் குறித்த ஆவணப்படம் வெளியானது. ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சி.பி.ஐ. எஸ்.பி.யாக இருந்த தியாகராஜன் ஓய்வு பெற்று ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் வசித்துவந்தார். அவரை பலமுறை சந்தித்து, "மனசாட்சிப்படி பேசுங்கள்' என அற்புதம்மாள் கேட்டுக்கொண்டார். மனதைத் திறந்த தியாகராஜன், "பேரறிவாளன் தந்த வாக்குமூலத்தை நான்தான் பதிவு செய்தேன், அப்படி பதிவு செய்யும்போது சில வார்த்தைகளை நான் மாற்றி எழுதினேன். நான் செய்த அந்த தவறுதான், அவர் குற்றவாளியாக காரணம் என்றார். அந்த வாக்குமூலம் நீதிபதிகளின் மனசாட்சியை உலுக்கியது.

2017-ஆம் ஆண்டு முதன்முதலாக பரோலில் வந்தார் பேரறிவாளன். அதற்கு முன்புவரை 20 ஆண்டுகளாக ஒவ்வொரு வாரமும் வேலூர் மத்திய சிறை வாசலில் மகனை சந்திக்க மனு போட்டுவிட்டு சிறைவாசலில் காத்திருப்பார் அற்புதம்மாள். சிறைத்துறை அதிகாரிகள் வேண்டுமென்றே காக்க வைப்பார்கள். அதிகாரிகளிடம் மல்லுக்கட்டி தன் மகனை சந்தித்து சில நிமிடங்கள் பேசுவார். மகனுக்கு நம்பிக்கை தருவார், மகன் தாய்க்கு ஆறுதல் சொல்வார்.

ஆயிரத்துக்கும் அதிகமான மேடைகளிலும், மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டங்களி லும் கலந்துகொண்டு, 31 ஆண்டு கால அயராத முயற்சியால், தன் மகனை சட்டப்படி விடுதலை அடைய செய்து வெற்றிபெற்று, தன் சபதத்தை நிறைவேற்றியுள்ளார் தாய்க் காவியமாய்த் திகழும் அற்புதம்மாள்.

nkn210522
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe