Advertisment

பெண்களின் உரிமையும்... உரிமைத் தொகையும் உயரும்! -முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

புதுப்பிக்கப்பட்டது
tnscheme

மிழகத்தின் சாதனைப் பெண்களின் வெற்றிக் கொண்டாட்டத்தை, "வெல்லும் தமிழ்ப் பெண்கள்' எனும் தலைப்பில் பிரமாண்டமாக நடத்திக்காட்டியிருக்கிறது தி.மு.க. அரசு. 

Advertisment

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியின் கடந்த நாலரை ஆண்டுகளில், பெண்களுக்காக செயல்படுத்தும் முன்னோடித் திட்டங்களின் சாதனைகள், அந்த திட்டங்களில் பயன்பெற்ற பெண்களின் அனுபவங்கள், தமிழகத் தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண் சாதனையாளர்கள் உள்ளிட்ட பலரையும் ஒருங்கிணைத்து, வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் 12-ந்தேதி நடந்தது. 

Advertisment

பெண்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி பெண்களின் வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்படு கிறது. முதல்கட்டமாக இந்த திட்டத்தில் 1.13 கோடி பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்தார் துணை முதல்வர் உதயநிதி. இத

மிழகத்தின் சாதனைப் பெண்களின் வெற்றிக் கொண்டாட்டத்தை, "வெல்லும் தமிழ்ப் பெண்கள்' எனும் தலைப்பில் பிரமாண்டமாக நடத்திக்காட்டியிருக்கிறது தி.மு.க. அரசு. 

Advertisment

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியின் கடந்த நாலரை ஆண்டுகளில், பெண்களுக்காக செயல்படுத்தும் முன்னோடித் திட்டங்களின் சாதனைகள், அந்த திட்டங்களில் பயன்பெற்ற பெண்களின் அனுபவங்கள், தமிழகத் தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண் சாதனையாளர்கள் உள்ளிட்ட பலரையும் ஒருங்கிணைத்து, வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் 12-ந்தேதி நடந்தது. 

Advertisment

பெண்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி பெண்களின் வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்படு கிறது. முதல்கட்டமாக இந்த திட்டத்தில் 1.13 கோடி பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்தார் துணை முதல்வர் உதயநிதி. இதனையடுத்து, திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான நடைமுறைகளை அதிகாரிகள் தொடங்கினர். பலன்பெறும் தகுதி வாய்ந்த பெண்கள் அடையாளம் காணப்பட்டனர். 

அதன்படி, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை முதல்வர் ஸ்டாலினும், துணைமுதல்வர் உதயநிதியும் இந்த மாநாட்டில் தொடங்கிவைத்தனர். இதன் மூலம், 16 லட்சத்து, 94 ஆயிரத்து 339 குடும்பத் தலைவி களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கிறது. இதற்கு அடையாளமாக, 10 பெண்களுக்கு விழா மேடையில் வங்கியின் ஏ.டி.எம். கார்டுகளை வழங்கினார் ஸ்டாலின். இரண்டுகட்டமாக நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்த திட்டத்தின் மூலம் இனி, 1 கோடியே 31 லட்சம் பெண்கள் பயனடைவார்கள். 

இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசின் உயரதிகாரிகள், தமிழகத்தில் சிறந்து விளங்கும் ஆளுமைகள், பல்துறை பிரபலங்கள் மற்றும் ஏராளமான சாதனைப் பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். 

சமூக அநீதிகளுக்கு எதிராக காந்திய வழியில் போராடியவரும் பத்மபூஷன் விருது பெற்ற வருமான சமூகசேவகி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், பேட்மிண்டன் வீராங்கனையும் பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றவருமான செல்வி துளசிமதி முருகேசன், நடிகைகள் தேவயானி, ரோஹிணி, திரைப்பட இயக்குநர்கள் வசந்தபாலன், ராஜுமுருகன்,  உள்பட பலரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். 

காவல்துறையின் பெண் கமாண்டோக்களின் சாகச நிகழ்ச்சிகள் விழாவில் நடந்தன. அதனை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், அவர்களின் திறமைகளைப் பாராட்டி மகிழ்ந்தார். எதிர்பாராத விபத்தில் கைகளை இழந்த பீகார் மாநில இளைஞர் ஒருவருக்கு குறுக்கு கைமீள் இணைப்பு மறுசீரமைப்பு நுண் அறுவை சிகிச்சை கொடுத்து கைகளை செயல்பட வைத்த ராஜீவ்காந்தி மருத்துவமனையின் டாக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான பெண் மருத்துவர்கள் குழுவினர், 10 மணி நேரம் போராடி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்திமுடித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.  

tnscheme1

விடியல் பயணத்திட்டத்தில் பலன்பெற்ற பெண்கள், விடியல் பேருந்து பயணம் தங்களுக்கு பேருதவியாக இருப்பதையும், பேருந்து பயணத்திற்கான மாதச் செலவுகள் மிச்சமாவதையும், அதனை குடும்பத் தின் இதர செலவுகளுக்கு பயன் படுத்துவதையும் நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டனர்.  அதேபோல, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற்றுவரும் பெண்கள், வங்கியில் செலுத்தப்படும் இந்த தொகை, எங்களின் பணச் சிக்கல்களைத் தீர்த்துவருகிறது. கடன் வாங்கும் சூழலிலிருந்து நாங்கள் விடுபட்டி ருக்கிறோம் என்று பெருமிதமாக விவரித்தனர். 

பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் பேசும்போது, "மாற்றுத்திறனாளியான உன் மகளை விளையாட்டுகளுக்கு அனுப்பி இன்னொரு கையையும் உடைக்கப்போறீயான்னு என் அப்பாவை பார்த்து பலரும் கேட்டார்கள். கடவுளே வரமாக வந்தால்தான் இப்படிப்பட்ட பெண் குழந்தைகள் பிறப்பார்கள் என அப்பா பதிலடி கொடுத்தார். என் அப்பா ஒரு தினக்கூலி. காஞ்சிபுரத் தில் வெயிலுக்கும், மழைக்கும் பயந்து வாழக்கூடிய வாழ்வா தாரத்திலிருந்து வந்தவள் நான். ஆனாலும், காஸ்ட்லியான பேட்மிண்டன் விளையாட்டை கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்தி னார் என் அப்பா. அதிக கட்டணம் வசூலிக்கும் பயிற்சி மையத்துக்கு நான் போகவில்லை. அரசு பயிற்சி மையத்தில் தான் கற்றுக்கொண்டேன். 13 வருடங்களில் 19 தங்கப் பதக் கங்கள், 14 வெள்ளிப்பதக்கங்கள், 8 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளேன். நிறைய தோல்விகளும், அவமானங்களும் நிறைந்தது என் வாழ்க்கை. கனவை நோக்கி ஓடும் ஒவ்வொ ருவருமே சிங்கப்பெண்கள்தான்''’என்று உணர்ச்சிப்பூர்வமாக தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்.  

விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "எல்லோருடைய பேச்சையும் கேட்டு நான் மகிழ்ந்தேன் என்பதைவிட நெகிழ்ந்தேன் என்றுதான் சொல்வேன். அந்தளவுக்கு சாதனை புரிந்திருக்கிறீர்கள். ஒரு திட்டத்தின் உண்மையான வெற்றி என்பது, அதை மக்கள் எந்தளவுக்கு  பயன்படுத்தி, தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. அந்தவகையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. ஜார்கண்ட், மத்திய பிரதேசம், இமாச்சல் பிரதேசம், ஒடிசா, மே.வங்கம், சிக்கிம், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் நம்முடைய இந்தத் திட்டத்தை செயல்படுத்துகின்றனர் என்பதே இந்தத் திட்டத்தின் வெற்றியின் உச்சம். தலைநிமிரும் தமிழ்நாட்டில், பெண்கள் உயர்ந்த நடைபோட நிச்சயம் உரிமைத்தொகையும் உயரும், பெண்களின் உரிமையும் உயரும்''’என்றார்.

nkn171225
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe