மிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள, திருச்சி தி.மு.க. மாநாட்டில் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் 7 முக்கிய அறிவிப்புகளை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில் "குடும்பப் பெண்களுக்கான உரிமைத் தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்' என்ற அறிவிப்பு, தமிழகப் பெண்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றார். பெண்களை மிகவும் கவர்ந்த குடும்பப் பெண்களுக்கான உரிமைத் தொகையை வழங்கும் திட்டத்திற்கான கணக்கெடுப்பு பணி தற்போது துவங்கியுள்ளது.

mm

Advertisment

மாவட்டவாரியாக உள்ள உணவு வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த கணக்கெடுக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வரும் நிலையில், குடும்ப அட்டைதாரர்களில் எல்லாருக்கும் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தமிழகப் பெண்களிடம் உள்ளது. ஆனால் குடும்ப அட்டையில் சில குறிப்பிட்ட குறியீடுகள் உள்ள அட்டைகளுக்கு மட்டும் வழங்கப்படும் என்றும் மற்ற அட்டைகளுக்கு வழங்கப்படாது என்ற செய்தி பரவியதால், தற்போது பரபரப்பாக இதுகுறித்து பலரும் பேசிவருகின்றனர்.

தமிழ்நாட்டில் 5 வகை ரேஷன் கார்டுகள் உள்ளன. அவை குடும்பத்தின் வருவாயைப் பொறுத்து மாறும். எல்லா ரேஷன் கார்டுகளும் ஒன்றுபோலவே இருந்தாலும், இந்தக் குறியீடு கள் ஒவ்வொரு வகை குடும்ப அட்டைக்கும் என்ன முன்னுரிமை, என்ன சிறப்பு, என்ன வரம்புகள் உள்ளன என்பதைக் குறிப்பதாகும்.

உங்கள் ரேஷன் கார்டில் PHH என்று குறிப்பிடப்பட்டிருந்தால், நியாயவிலைக் கடையில் அரிசி உட்பட அனைத்துப் பொருட் களையும் வாங்கமுடியும். அரசின் அனைத்து நிவாரண உதவிகளும் இவர்களுக்கு உண்டு.

Advertisment

ரேஷன் கார்டில் PHH - AAY என்று குறிப்பிட்டு இருந்தால் மத்திய அரசு திட்டத்தின் கீழான 35 கிலோ அரிசி உட்பட அனைத்துப் பொருட்களையும் பெறலாம். மேற்கண்ட இரண்டும் முன்னுரிமை உள்ள கார்டுகள்.

mm

உங்கள் ரேஷன் கார்டில் NPHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாயவிலைக் கடையில் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களை வாங்க முடியும்.

ரேஷன் கார்டில் NPHH-S எனக் குறிப்பிட்டு இருந்தால் அரிசியைத் தவிர்த்து சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை மட்டும் வாங்கலாம்.

ரேஷன் கார்டில் NPHH-NC என்ற குறியீடு இருந்தால் எந்த ஒரு பொருளும் கிடைக்காது. ஒரு அடையாள அல்லது முகவரிச் சான்றாக மட்டுமே பயன்படுத்த முடியும்.

அதில் பி.எச்.எச். (பிரையாரிட்டி ஹவுஸ் ஹோல்ட்ஸ்) என்று சொல்லப்படும் இந்த ரக அட்டையானது தங்குமிடம் இல்லாமல், வறுமைக் கோட்டின்கீழ், பழமையான, பழங்குடியின, வீடுகள் இல்லாத, விதவை ஓய்வூதியம் பெறுபவர்கள், 40 சதவீதத்திற்கும் அதிகமான உடல்குறைபாடு உள்ளவர்கள் என்ற வரையறையின் கீழ் கணக்கெடுக்கப்பட்டு அத்தகையவர்களுக்கு இந்த அட்டை வழங்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக வருவது பிஎச்எச்-ஆஆவ (பிரையாரிட்டி ஹவுஸ் ஹோல்ட்ஸ் அந்தியோ தயா அன்ன யோஜனா) இந்த வகை குடும்ப அட்டையானது நிலையான வருமானம் இல் லாதவர்களுக்கும். தனியாக வாழும் 65 வயதுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண், ரிக்சா இழுப் பவர்கள், கூலிகள், தினசரித் தொழிலாளர்கள் போன்றவர்களைக் காப்பாற்ற இந்த வகையான அட்டை வழங்கப்படுகிறது. ஒரு கோடி குடும்பங்கள் உணவு தானியங்களை கடைகளில் வாங்கும் வருமானத்தில் இல்லை. அவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கும் உணவு வழங்க இந்த ரக அட்டைகள் பயன்படுத்தப் படுகின்றன.

முன்னுரிமை அல்லாத ஹவுஸ் ஹோல்ட்கள் (சடஐஐ) மானிய விலையில் உணவு தானியங்களைப் பெறத் தகுதியற்றவை. கிராமப்புற மக்களில் 25% மற்றும் நகர்ப்புற மக்களில் 50% பேர் இலக்கு வைக்கப்பட்ட பொது விநியோக முறை (படஉந) இன் கீழ் மானிய விலையில் உணவு தானியங்களைப் பெறுவதில் இருந்து விலகுவர். அவர்கள் ரேஷன் கார்டுகளைப் பெறுவார்கள், ஆனால் முன்னுரிமை ரேஷன் கார்டுகள் (பி.எச்.எச்) கிடைப்பதால் மானியமில்லாத உணவு தானியங்கள் எதுவும் கிடைக்காது.

தற்போது பெரும்பாலான குடும்ப அட்டைகளில் இந்த இரண்டு குறியீடுகளே அதிகம் உள்ளது. அதில் திரா விட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் குறிப் பிடப்பட்டபடி, கொரோனா நிவாரண உதவித் தொகையும், 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டது.

பெண்களுக்கான உரிமைத்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங் கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தொகை தற்போது பி.எச்.எச். என்று குறியீடு உள்ள ரேசன் அட்டைகளுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் வசதியான, நடுத்தர மக்களும்கூட இந்த பி.எச்.எச். என்ற அட்டை வைத்திருக்கின்றனர். என்.பி.எச்.எச். என்ற அட்டையும் வைத்திருந்தும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் இருக்கிறார்கள். எனவே உரிமைத் தொகை வழங்குவதில் பாரபட்சமின்றி வழங்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

என்.பி.எச்.எச். அட்டை வைத்திருப்பவர் களில் ஏழ்மையானவர்கள் அதிகம் என்பதால் பாரபட்சம் காட்டாமல், கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டதுபோல, அரிசி கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

உரிமைத் தொகை வழங்கப்படும்போது, ஒரு தரப்புக்குக் கொடுக்கப்பட்டு, மற்றொரு தரப்பு விடுபட்டால் தேவையற்ற முணுமுணுப்புகள் எழுவதோடு... எதிர்மறையான தாக்கங்களும் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பிரச்சினையில் அரசு என்ன வகையான தீர்வை யோசித்து வருகிறதென உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்களிடம் தொடர்புகொண்டு பேசியபோது, “""அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பாரபட்சமின்றி உரிமைத்தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும். கணக்கெடுக்கும் பணி முடிந்தவுடன் முதல்வரோடு ஆலோசனை செய்து விரைவில் அதற்கான அறிவிப்பை வெளியிடுவோம்''’என்று பதிலளித்தார்.

தி.மு.க. அரசு விரைவில் முழுமையான பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும்போது, அதில் ரக வாரியான குடும்ப அட்டைப் பிரச்சினை களுக்குத் தீர்வு காணப்பட்டு, பட்ஜெட் அறிவிப்பில் மகளிர் உரிமைத் தொகைக்கு முன்னுரிமை அளித்து, முதல்வர் ஸ்டாலின் நல்லதொரு அறிவிப்பைச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அத்துடன் வருமான வரம்பு -வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் குறித்து புதிய -உண்மையான கணக்கெடுப்பு அவசியம் என்பதும் வலியுறுத்தப்படுகிறது.